நாககுமார காவியம் ... தொடர்ச்சி ... நான்காம் சருக்கம் சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல் சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன் செப்பு வன்மை செயவர்மராசன்தன் ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன் செப்பு நேர்முலையாள்நல் செயவதி. 102 மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர் மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள் பக்க நோன்புடை பரம முனிவரர் தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான். 103 இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம் மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத் திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார். 104 முனிவர் மன்னனுக்கு உரைத்தவை புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக் கண்திறந்து உந்திடும் காவலன்தனை அண்டிநல் சேவையார் ஆவராம்எனப் பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின். 105
செயவர்மன் புதல்வரின் அரசாட்சி மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன் மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன் நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர் தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள். 106 சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல் நல்அருந்தவச் சோமப் பிரபரும் எல்லை இல்குண இருடிகள் தம்முடன் தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின் நல்ல காவின் நயந்துஇருந்தார்களே. 107 செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன் செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே. 108 செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல் வேறு என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார் இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன் குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே. 109 அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித் கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும் விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார் கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில். 110 ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல் அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும் தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின் நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார். 111 கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல் அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான் அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான். 112 அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின் மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும் சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப் பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே. 113 நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே. 114 நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல் வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக் கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப் போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும் நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே. 115 கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம் சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள் உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான். 116 நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல் வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின் வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே. 117 முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல் வேறு முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே. 118 கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள் இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே. 119 அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள் திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய் எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே. 120 வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால் துணைஇனிய தோழன்மார் சூழ்ந்ந்து உடன்இருந்தபின் கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான். 121 செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன் வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும் நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள். 122 அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம் நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும் இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும் நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே. 123 வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக் கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன் கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன் வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன். 124 வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தௌபிந்தபின் நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன் போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே. 125 நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும் அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும் அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன் செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான். 126 நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும் இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன் பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள். 127 அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல் அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர் உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம் அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீந்யாம் சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி. 128 பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும் நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில் சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள் நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே. 129 அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும் சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின் நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும். 130 மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும் அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன். 131 மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல் மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில் உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில் வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன் பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன். 132 மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல் அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன் பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின் வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான் எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன். 133 வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல் பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம் புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன் நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார் அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன். 134 நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின் மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல் கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன் சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர். 135 ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல் ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின் திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத் தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள். 136 ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல் அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர் வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக் கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே. 137 எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன் எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும் அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன். 138 வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல் அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின் அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர் தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள். 139 கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல் கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன் துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை. 140 நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால் வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும் தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான் நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ. 141 கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல் கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள் திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன் பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன் இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே. 142 இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள் மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால் அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின் தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ. 143 நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல் ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின் ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல் ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே. 144 ஐந்தாம் சருக்கம் நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின் மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக் காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன் தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே. 145 மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும் வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப் புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம். 146 நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான் பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர் இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே. 147 நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில் ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே. 148 தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே. 149 அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும் எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான். 150 நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல் திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல் பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில் அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே. 151 இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால் இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப் பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே. 152 முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல் என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன் நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான். 153 நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல் அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும் இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும் இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே. 154 மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல் வேறு தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான் ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும் போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார். 155 நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும் வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார் சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான் பற்றுஅறச் செயந்ந்தரனும் பார்மகன்மேல் வைத்தான். 156 நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப் போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான். 157 பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல் இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான் பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள். 158 நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும் வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான் ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக் சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான். 159 இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல் இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான் மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன் தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர் ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான். 160 நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல் புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும் அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான். 161 மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல் அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில் பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான். 162 அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும் துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள். 163 நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல் வேறு நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட உறுதவம் தரித்துக்ந் கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள் மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும் இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே. 164 வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும் நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே. 165 அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம் இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார் மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம் திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே. 166 நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே. 167 மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய் அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார் உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே. 168 நூற் பயன் இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும் புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப் பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே. 169 உலகிற்கு அறவுரை அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும் மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும் திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே. 170 நாக குமார காவியம் முற்றிற்று. |
அரசு கட்டில் ஆசிரியர்: கௌரிராஜன்வகைப்பாடு : வரலாற்று புதினம் விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
தனிமனித வளர்ச்சி விதிகள் 15 ஆசிரியர்: ஜான் மேக்ஸ்வெல்மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|