1 மாரியம்மன் கோவில் சாவடியில் இன்று கூட்டம் ஏராளமாகக் கூடியிருந்தது. கீரனூர்க் கிராமத்தைச் சேர்ந்த பனிரண்டு பாளையத்திலுள்ள முக்கியமான கவுண்டர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். பொன்ன பண்டாரம் கோவில் கிணற்றிலிருந்து ஒரு தோண்டி தண்ணீர் கொண்டு வந்து வைத்திருந்தான். அதனருகில் ஒரு பித்தளை டம்ளரும் வைத்திருந்தான். இடுப்பு வேஷ்டியை முழங்காலுக்கு மேல் இழுத்துக் கோவணம் போட்டுக் கட்டியிருந்தான். அதற்கு மேல் மேல்துண்டை சுற்றிக் கொண்டிருந்தான். அவன் சுமார் ஆறடி உயரம் இருந்தாலும், அங்கு சற்றுமுன் குனிந்து கைகட்டி நின்று கொண்டிருந்தான். இரண்டு மூன்று நாளைக்கு முன் தான் முகக்ஷவரம் செய்து கொண்டிருப்பான் போலிருக்கிறது. அதற்குள் உதட்டிற்கு மேல் சுண்ணாம்பு பூசியது போல வெள்ளை வெளேரென ரோமம் அரும்பிக் கொண்டிருந்தது. வயது ஒன்றும் அதிகமாகப் போய்விடவில்லை. இருந்தாலும் நரை சற்று முன்னாடியேதான் வந்துவிட்டது. மூப்பே பால்யத்தில் திரும்பும்போது நரை வருவதில் ஆச்சரியம் என்ன? இடதுகன்னம் வீங்கியது மாதிரி இருப்பது உண்மையில் வீக்கம் அல்ல; புகையிலைதான் அது. வெற்றிலை போட்டு புகையிலை போட்டிருந்தால் சுலபத்தில் யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் வெறும் புகையிலையை மட்டும் போட்டிருப்பானாதலால், யாரும் முதலில் வீக்கம் என்று தான் நினைப்பார்கள். தாகத்தோடு வந்து தண்ணீர் கேட்பவர்கள் யாரும் இல்லை. பொன்னான் அங்கு தண்ணீருடன் நிற்பதைக் காண்பவர்கள், “அடே பொன்னா, தண்ணி கொடடா!” என்று வாங்கி வாயிலிருக்கும் புகையிலையைக் கீழே துப்பிவிட்டு வாயை அலம்பிக் கொண்டு போவார்கள். அவ்வளவுதான். சாயங்காலம் மணி ஐந்திருக்கலாம். வந்தவர்களெல்லாம் தங்களுக்குள் கேலியும், தமாஷும் பேசிக் கொண்டிருந்தார்கள். யாரும் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைக் கூட நினைக்கவில்லை. ஆனால் எல்லோருமே அப்படி இருக்க முடியுமா? அதற்குள் பண்ணாடி குரலை சற்று உயர்த்தி, “ஏண்டா பொன்னா! மணியாரரு வளவில யாடா? நம்மளெ எல்லாம் வரச் சொல்லிட்டு, அவுங்க பாட்டுக்கு எங்காச்சும் வண்டியைக் கட்டிக்கிட்டு போயிட்டாங்களா? என்னமோடா?” என்றார்.
“என்னுங்க மாப்பிளெ இப்படிச் சொல்றீங்க! இப்படியும் மணியாரரு பண்ணுவாங்களா? நீங்க சொன்னாச் செரி!” என்றார் சுள்ளிவலசுக் கருப்பண கவுண்டர். “செரியிங்க ஐயா, உங்க மணியாரரெப் பின்னக் காணமுங்களா? நீங்க தான் போய்க் கூட்டிட்டு வரோணுமுங்க. எதுக்கும் உங்களை எல்லாம் நம்பக் கூடாதுங்களாக்கும். சம்யத்திலே காலைவாறி உட்டுடுவீங்க. போன வருஷம் சாமி சாட்டினாப்பலதான்” என்றார் பண்ணாடி. கருப்பண கவுண்டர் ஏதோ சொல்ல வாயைத் திறந்தார். ஆனால் வார்த்தை வாயிலிருந்து புறப்படுமுன், இதுவரையிலும் சேமித்து வைத்திருந்த புகையிலை ரசம் வெளியே புறப்பட்டுவிட்டது. ஆகையினால் அவரால் வேறு ஒன்றும் பேச முடியவில்லை. இருபுறமும் வழிந்து வரும் எச்சிலை இரு கையாலும் துடைத்தார். இதற்குள் மீதிச் சாரம் தொண்டைக்குள் இறங்குவதைத் தடுக்க முயன்றார். அதனால் அருகிலிருந்தவர்கள் பேரில் சிறு தூறல்கள் விழத்தான் செய்தது. இந்தக் கோலத்தைக் கண்டு பக்கத்திலிருப்பவர்கள் கை தட்டிக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார்கள். கருப்பண கவுண்டரும் இனி இங்கு உட்கார்ந்திருந்தால் நிலைமை இன்னும் ஆபத்தாகப் போய்விடும் என்று கருதி வெளியே ஓடி வாசலில் நின்று கொண்டு, “அடே பொன்னா! தண்ணி கொண்டாடா!” என்றார். பொன்னான் அவசர அவசரமாகத் தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்தான். கருப்பண கவுண்டர் வாயை நன்கு அலம்பிக் கொண்டு முகத்தில் புன்னகை தவழ, “மாப்புளே!” என்று கூப்பிட்டார். இவர் கோயில் வாசலில் நின்று கொண்டு கூப்பிடவே, கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த பலர் தங்களைத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு “ஏனுங்க?” என்றார்கள். கருப்பண கவுண்டர் தளர்ந்திருந்த இடுப்பு வேஷ்டியை தொப்புளுக்குக் கீழே நன்கு இறுக்கிக் கட்டினார். பிறகு இரு தலைப்புகளில் ஒன்றை இருகாலுக்கும் மத்தியில் முழங்காலுக்கு மேல் தொங்கவிட்டு, மற்ற தலைப்பை இழுத்து கோவணம் போட்டுக் கட்டிக் கொண்டார். பிறகு தமது வெள்ளி அரைஞாண் கயிறை இடுப்பு வேஷ்டிக்குமேல் எடுத்துப் போட்டுக் கொண்டு பொன்னான் கையில் கொடுத்திருந்த வெற்றிலைப் பெட்டியை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு மீசையை இருபுறமும் ஒதுக்கிவிட்டுக் கொண்டார். அதன் பின், “இன்னும் கொஞ்சம் தண்ணி குடு” என்று கூறிவிட்டுக் கிழக்கே திரும்பிப் பார்த்தார். “அடே மணியாரு வண்டி வெகு வேகமாக வருதா!” என்று கூறினார். உடனே எல்லோரும் வண்டி வரும் திக்கை நோக்கினார்கள். ஆம். மணியகாரர் வண்டிதான் வந்தது. நேரமாய்விட்டது என்று வண்டிக்காரனை ஊருக்குப் பக்கத்தில் வந்து காளைகளைத் துரத்தச் சொல்லியிருக்கிறார் என்பது யாருக்குத் தெரியும்! கருப்பண கவுண்டர் வண்டியைக் கண்ட பிறகு மண்டபத்திற்குள் போகவில்லை. அவரையும் கையோடேயே கூட்டிக் கொண்டு போகலாமென அங்கேயே நின்றுகொண்டார். மணியகாரரும் அவசர அவசரமாக வண்டியை விட்டு இறங்கினார். முன்னால் நின்று கொண்டிருந்த கருப்பண கவுண்டர், “வாங்கண்ணா!” என்றார். அங்கு உட்கார்ந்திருந்த அனைவரும் மணியகாரரை ‘வாங்க, வாங்க’ என்று கேட்கத் தவறவில்லை. மணியகாரருக்குப் பின்னால் வந்த கருப்பண கவுண்டர் தமது பழைய இடத்திலே போய் உட்காரவில்லை. மணியகாரருக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டு, “ஏனுங்க மாப்புளே! நாம் போயிக் கூட்டிக்கிட்டே வந்திட்டனுங்கல்ல!” என்றார். உடனே அங்கிருந்த அனைவரும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினார்கள். சிறிது நேரம் வந்திருந்தவர்கள் எல்லோரும் தங்கள் சேம லாபத்தைப் பற்றிப் பேசினார்கள். கடைசியாக மணியகாரரே பேச்சை ஆரம்பித்தார். “இந்த வருசம் எப்படியும் மாரியாத்தா கோயிலைக் கட்டீடோணுமுங்க. சும்மா போட்டு வைச்சிருந்தா அப்படியேதானுங்க கெடக்கும். அதுக்கு ஒரு வழி பண்ணவாண்டாமுங்களா?” என்றார். “அப்படி உடலாமுங்களா! ஏதோ ஒரு வழி பண்ணித் தான் ஆகோணுமுங்க” என்று பண்ணாடி ஆமோதித்தார். “அப்படியானா இந்த வருசத்திலே, ஊரிலே கள்ளுக்கடை, சாராயக் கடையைக் கட்டுமானம் பண்ணிடலாமுங்க. அதிலே வர்ற பணத்தையும் போட்டு அதோடே தலைக்குக் கொஞ்சமாப் போட்டுடலாமுங்க” என்றார் மணியகாரர். “ஏப்பா! கள்ளுத்தண்ணி வித்த காசிலயா ஆத்தா கோயில் கட்றது? ஆத்தா இதைப் பொறுப்பாளா?” என்று ஒரு குரல் மண்டபத்திற்கு வெளியிலிருந்து வந்தது. அனைவரும் குரல் வந்த திக்கை நோக்கினார்கள். பவளாக்கவுண்டர் (மணியகாரர் முத்துசாமிக் கவுண்டரின் தகப்பனார்) கையில் ஒரு பழைய பஞ்சாங்கத்தையும் ஒரு ஜாதக ஏட்டையும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார். முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் மரியாதையாக அவர் போவதற்கு வழி விட்டார்கள். ஆனால் பவளாக் கவுண்டர் உள்ளே போகாமல் அங்கேயே ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டார். உள்ளே மணியகாரருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ராமசாமிக் கவுண்டர் எழுந்து வந்து, “நீங்க எங்க மாமா பொசுக்குணு வந்தீங்க?” என்றார். “யாரு, நம்ம ராமண்ணணா? வா வா! இங்கே கோயில் ஐயரு ஊட்டு வரையிலும் போயிருந்தேன். அங்கே யாரோ ஒரு சோசியகாரெ வந்திருக்கான்னு ஐயரு ஆள் உட்டாங்க. அதுக்கோசரம் நம்ம செல்லாயா சாதகத்தை எடுத்துக்கிட்டு வந்தனப்பா! அவளுக்கு இது பேறு மாசமல்ல” என்றார். “இனி ஐயனுக்குக் கொளந்தை பொறக்கற வரைக்கும் தூக்கமேது?” என்றான் பக்கத்திலிருந்த செல்லப்பன். “அட போடா, தொண்டு நாயே! என்னமோ அப்படி வளத்திட்டே. ஏப்பா ராமணா, மாரீப்பெ திருப்பூர் போனவெ ஏன் இன்னும் வல்லெ?” என்றார் பவளாக் கவுண்டர். “அது ஏனுங்களோ! செல்லாத்தாளைக் கேளுங்க சொல்லுவா. நம்ம கிட்டத்தா சொல்லீட்டுப் போறானுங்களா? நம்ம காலத்திலெ இப்படியா யிருந்தமுங்க! மூணு புள்ளைக்குத் தகப்பனானப்பறம் கூட எங்காச்சும் போறதுன்னா, ஐயங்கிட்டச் சொல்லாது போனதில்லீங்க! என்னமோ இந்தக் காலத்திலே இப்படிப் புள்ளெகளா இருக்குதுங்க” என்று குறைபட்டுக் கொண்டார். “அது கெடக்குது. நீங்க தான் கள்ளுத் தண்ணி வித்த காசிலே ஆத்தா கோயிலுக்குச் செலவு செய்யறதுன்னு கூடிப் பேசுறீங்களெ. இது நல்லதுக்கா?” என்றார். “போயி உங்க மகங்கிட்டக் கேளுங்க, எங்களை ஏங் கேக்கறீங்க?” என்றார் ராமசாமிக் கவுண்டர். ராமசாமிக் கவுண்டருக்கு இது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் பத்துப்பேர் பார்த்துச் சொல்லும் போது நாம் ஏன் குறுக்கே பேச வேண்டும் என்று இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு ஒரு ஆள் பக்க பலத்திற்கு வரவே, பவளாக் கவுண்டரை விட்டு தமது பழைய இடத்துக்கே வந்து “ஐயஞ் சொல்றதைக் கேட்டீங்களா?” என்றார். உடனே பண்ணாடி, “அது செரியுங்க, ஐயன் சொல்றபடியே வைச்சுக்கலாமுங்க. இடிஞ்ச கோயிலச் சரிப்படுத்தி சுத்தியும் மதில் கட்டோணுமின்னா குறஞ்சது ஆயிரம் ரண்டாயிரம் செலவாகுமே! இது ஆரு, ஐயெ குடுக்கறாங்களான்னு கேளுங்கோ?” என்றார். பவளாக் கவுண்டர் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு சுவரில் சாத்தியிருந்த கைத்தடியைக் கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, “மனமிருந்தா வழி இல்லாமலா போவும்? இந்தக் கள்ளுக்கடையிலிருந்து வர்ர காசு நாம் கொடுக்கிறதுதானே? சரி ஒரு வருசம் முழுக்க குடிக்கறதிலே தலைக்குப்பாதி ஆத்தாளுக்குக் கொடுத்திடரது. ஒருத்தரும் கள்ளுக் குடிக்கிறதில்லைன்னு ஆத்தாளுக்கு முன்னாலே சத்தியம் பண்ணிடச் சொல்லுங்க; ஆறுமாசத்திலே கோயில் எப்படி ஆயிடுதுன்னு பாருங்க. ஊருக்குள்லேயும் சண்டை சச்சரவில்லாமலிருக்கும்” என்றார் பவளாக் கவுண்டர். இதைக் கேட்டுக் கூடியிருந்த அனைவரும் சிரித்தார்கள். “ஐயன் ரோசனையைப் பாத்தீங்களா? எவனாச்சும் குடிக்க வேண்டாமின்னாக் கேப்பானுங்களா?” என்றார் கருப்பண கவுண்டர். “அடப் போங்கடா பொளப்பு கெட்டவனுகளா? குடிகாரருக்குக் கோவில் எனத்துக்கடா?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து எழுந்து வேகமாகச் சென்றுவிட்டார். சூரியன் அடிவானத்தில் மறையும் தருணத்தில் இருந்தான. மண்டபத்துள் சிறிது வெளிச்சம் மங்க ஆரம்பித்தது. மணியகாரர்தான் முன்பு பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடங்கினார். “ஏலமும் கிட்ட நெருங்கிட்டதுங்க. யாரோ ஒருத்தர் போயி ஏலத்தைக் குறைந்த தொகைக்கு எடுத்துக்கிட்டு வந்துடலாமுங்க. அப்புறம் இங்கு வந்து பொது ஏலமா உட்டுடலாம். இஷ்டப்பட்டவங்க எடுத்துக்கிட்டுங்க. என்னுங்க மாப்புளே பேசாதிருக்கறீங்க?” என்று ராமசாமிக் கவுண்டரைப் பார்த்து மணியகாரர் கேட்டார். “அது செரியுங்க, நீங்க எப்படிச் சொன்னாலும் செரியுங்க” என்றார் ராமசாமிக் கவுண்டர். அதற்கப்புறம் ஒவ்வொருவராக மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். மணியகாரர் வண்டி ஏறும் போது அருகில் நின்று கொண்டிருந்த ராமசாமிக் கவுண்டரைப் பார்த்து “என்னுங்க நீங்களும் தான் வாங்களே; ஊருக்கு வந்திட்டு வந்தாப் போகுதுங்க” என்றார். “ஆனாத்தான் வந்தாப் போகுதுங்க. செல்லாயாளையும் பார்த்து நாளாச்சுங்க” என்று கூறிவிட்டு வண்டிக்குள் ஏறினார். வண்டி சிறிது தூரம் சென்ற பிறகு கருப்பண கவுண்டர் அருகிலிருந்த நாச்சப்பனிடம், “பார்த்தாயா! நான் பக்கத்திலேயே நிக்கெற. மணியகாரெ என்னை ஏண்டானு ஒரு பேச்சுக்கூடக் கேக்கலெ! சமந்தியும் சமந்தியும் வண்டியிலே போறாங்களே. போயிட்டு வாரமின்னு ஒரு பேச்சுச் சொன்னா ஆகாதா? இருக்கட்டும் பாத்துக்கறேன்!” என்று மீசைமேல் கைபோட்டார். நாச்சப்பன் என்னவோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் அதற்குள் பொன்ன பண்டாரம் அருகில் நிற்பதைப் பார்த்துவிட்டு, “சரி, நாம போலாமுங்களா?” என்றான். கருப்பண கவுண்டர் கண் சிவந்திருந்தது. ஆனால் இப்போது புதிதாகப் பார்ப்பவர்கள் கோபத்தால் கண் சினந்திருக்கிறது என்று நினைப்பார்கள். கருப்பண கவுண்டனுக்கு வயது நாற்பதுக்கு பக்கமாக ஆகிறது. ஏறக்குறைய ஒரு இருபதினாயிரம் ரூபாய்க்கு அவனை மதிக்கலாம். இந்தச் சொத்து முழுதும் அவனாக கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததுதான். முதலில் அவன் கள்ளுக்குடம் தூக்குபவனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தான். பிறகு மெள்ள மெள்ள கள்ளுவிற்பவனாக உத்தியோக மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் இவனும் ஒரு பங்குதாரனானான். கடைசியில் இப்போது சில வருஷங்களுக்குள்ளேயே கருப்பண கவுண்டன் ஒருவனே கள்ளுக்கடை லைசென்ஸ் தாரனாக இருக்கிறான். அவன் கள்ளுக்கடை மூலமாகத்தான் பணம் சம்பாதித்ததெல்லாம். இப்போது கையில் காசு ஏறிய பிறகு மணியகாரரையும் இன்னும் அவரைப் போன்ற பரம்பரைப் பணக்காரரையும் ‘மாமன், மச்சான், அண்ணன், தம்பி’ என்று வரிசையுடன் அழைக்க ஆரம்பித்தான். ஆனால் அவர்களுக்கு இது ஒன்றும் மனதிற்கு பிடிப்பதில்லை. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. அவனும் பணக்காரனாக இருக்கிறான். அவனுடைய தயவிற்காகவும் நாலு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்திலே அவன் சொல்வதைக் கேட்பதற்கும் பத்துப்பேர் தயாராக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ‘நாம் பரம்பரைக் கவுண்டர், அவன் குடியானவன் தானே’ என்று அலட்சியம் செய்யவும் முடியவில்லை. அதோடு பணம் உடையவன் கவுண்டன்! இல்லாதவன் குடியானவன் தானே! கருப்பண கவுண்டன் அப்படி என்ன ஏழையா? அவன் மகனுக்குச் செல்லப்பம்பாளையம் முத்துக்கவுண்டர் மகளை அல்லவா கலியாணம் செய்திருக்கிறான். இப்போது முத்துக் கவுண்டர் குடும்பம் நொடிந்து போனாலும் அவர் பரம்பரைக் கவுண்டர் தானே? அப்படி இருக்கும் போது உள்ளூரில் மணியகாரரும், ராமசாமிக் கவுண்டரும் தன்னை அலட்சியம் செய்வது கருப்பண கவுண்டன் மனதில் அளவு கடந்த துவேசத்தை வளர்த்திருந்தது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
உயிர் காக்கும் உணவு மருத்துவம் வகைப்பாடு : மருத்துவம் இருப்பு உள்ளது விலை: ரூ. 230.00தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |