9 சித்திரை மாத வெயிலின் கொடூரத்தைத் தணிப்பதற்காக இயற்கை ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்க் கொருதரம் சூரியன் மேகத்தில் மறைவதும் வெளி வருவதுமாயிருந்தது. காற்றின் ஓசையே உலகத்திலிருந்து மறைந்து விட்டது போலிருந்தது. பறவைகள் கூட அஞ்சிக் கூண்டோடு பதுங்கிக் கிடந்தன.
ஆகாயத்தில் மேகங்கள் நன்கு சூழ்ந்து கொண்டது. மழைக் காற்றும் செந்தூள், கருந்தூள் எழும்ப வீசியது. முத்தாயாள் ஒரு கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் புறப்பட்டாள். ஊர் தாண்டும் வரையிலும் நல்ல வேளையாக யாரும் எதிர்ப்படவில்லை. மந்தை வெளியில் ஆள் உயரத்திற்கு எருக்கலைப் பூக்கள் மலர்ந்திருந்தன. யாரும் அவைகளை பறிப்பாரைக் காணோம். வாடி வதங்கிய பூக்கள் காற்றில் இங்குமங்கும் பறந்தன. சிறு பிராயத்தில் இந்தப் பூக்களை எடுத்து மாலை தொடுத்து புருஷன், மனைவி விளையாட்டு விளையாடியது முத்தாயாளுக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இன்று அந்த விளையாட்டுப் புருஷன் எங்கே? அதற்கப்புறம் பெரியோர்களால் தேடிக் கொடுத்த நிஜப் புருஷன் தான் எங்கே? இதுவும் விளையாட்டா? உலகமே விளையாட்டுத்தானா? சே சே! காலையில் குப்பண கவுண்டன் கூறியது விளையாட்டல்ல! அதைக் கேட்டு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கை தட்டிச் சிரிப்பது விளையாட்டல்ல. இவளும் மனமுடைந்து நிற்பது விளையாட்டல்ல! நிஜமே நிஜம். கருவளை அணிந்த கரங்களின் ஸ்பரிச சுகத்தை அறியாமலேயே இப்பூக்கள் மண்ணோடு மண்ணாய் விடலாம். ஆனால் அப் பூக்களின் கோமளத் தன்மையை உயிர் போமளவும் அச்செடி தாங்கித்தானே நிற்கும்? அது போல இந்த உலக முழுதும் அவளை ஏசினாலும், ஏளனம் செய்தாலும் கடைசி வரையிலும் ஒருவர் மட்டும் - கருப்பண கவுண்டர் மட்டும் - அவளை கைவிட மாட்டார். நடந்து போய்க் கொண்டே இருந்தவள் திடீரென என்ன நினைத்தாளோ என்னவோ ‘கோ’வென அழுதாள். ஏற்கெனவே அழுது அழுது கண்கள் ரத்தச் சிவப்பேறியிருந்தது. இரு கன்னங்களும் வீங்கிப் போயிருந்தன. பெண்; ஆம், ஒரு பெண்ணைத்தான், களங்கமுள்ளவளாகச் சந்தேகித்தால் அவள் மனம் என்ன பாடு படும் என்பதை முத்தாயாளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். தோட்டத்துக் கடவைத் தாண்டி உள்ளே நுழைந்தாள். இன்று இந்தத் தோட்டம் அவள் கண்ணிற்கு இன்பமளிக்கவில்லை. வரப்பின் மீது நடக்கும் போது இரண்டொரு தடவை சறுக்கிச் சறுக்கி விழப் போனாள். தோட்டத்து சாளையில் கூடையைக் கொண்டு போய் வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்தாள். மனித குலத்தின் மாளாத்துயர் அனைத்தும் தன் தலையிலே தாங்கியவளைப் போல் சோர்ந்து நிற்கிறாள் அச் சுந்தரி. பிரகிருதியும் பெண் இனந்தானே? அம்மா, இயற்கைத் தாயே! அதோ துவண்டு துடிக்கும் அம் மெல்லியலாளை உனது மடியிலே இரண்டற ஆர்வத்தோடு அணைத்துக் கொள் அம்மா! இந்த மனித வர்க்கத்தின் முகத்திலே விழிப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் உன் மடியில் தலை சாய்த்துக் கொள்ள விரும்புகிறாள்... அம்மா, தேவி, ஆளை அனாதரவாக விட்டு விடாதே தாயே! ஒரு தரம் முத்தாயா கண்ணெடுத்துப் பார்த்தாள். எங்கும் ஒரே அந்தகார மயமாகத் தோன்றியது. அந்த இருண்ட வழியில் தான் அவள் ஒளியைத் தேடி அலைய வேண்டும். அந்த அலைச்சல் வீண் முயற்சிதானா? யார் கண்டார்கள்? அதோ தூரத்திலே தெரிகிறதே, அந்தச் சிறு கோவில் - மாகாளி கோவில், அங்கே முதன்முதலில் புது மணக் கோலத்துடன், பூமணத்துடன் பர்த்தாவின் கரம் பிடித்து இதயம் பொங்கி நின்றாளே, அன்று அவளுக்கு மாகாளி எந்த விதம் காட்சி அளித்தாள்? காளி கோவில் மட்டுமா? காடும், கழனியும், சுற்றுப்புறம் எங்குமே ஒரு இன்ப சுகம் சூழ்ந்திருந்ததாகத் தோன்றியதே. இன்று அதெல்லாம் பனியைப் போல் மறைந்து விட்டதா? தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கையா? அல்லது அதுவே தான் ஒரு விளங்காத விடுகதையோ? ஆனால், பிராணனை மாய்த்துக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை! அது என்னவோ வாஸ்தவம் தான். பாவம், தந்தை என்ன ஆவார்? தான் ஒருத்தியே சகலமும் என்று நம்பி இருக்கும் ஆருயிர்த் தந்தையின் நிலைமை என்ன? தனக்குப் பிறகு தகப்பனைப் பாங்காகப், பணிக்கையாகக் கவனித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? ஆனால், ஆனால்... தன்னைப் பெற்றெடுத்த பயனைப் பூரணமாக அவர் அனுபவித்து விட்டார் போலும்! போதும்... இதை விட மகளால் வேறு என்ன கீர்த்தி அப்பனுக்கு வேண்டும்? கேட்க வேண்டியதெல்லாம் - அடைய வேண்டியதெல்லாம் - இந்த அருமை மகளால் அடைந்தாகி விட்டது... தோட்டங் காடுகளை கண்கொண்ட மட்டும் பார்த்தாள். நெடுமூச்சு வாங்கியது. பாழும் இந்தப் பூமியால் தான் இத்தனையும் வந்தது என்பதை நினைக்கவும் அவள் முகமெங்கும் ரத்தம் பரவியது. கேவலம் மனிதனுடைய ஆசாபாசங்களையும், கீழ்த்தர உணர்ச்சிகளையும் நேருக்கு நேராக அறிய வேண்டுமானால் அதற்கு ஒரு கையகலம் பூமியே போதும் போல் இருக்கிறதே! கேவலம்... இதைப் போன்ற கேவலம் உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது. இரண்டு நாளைக்கு முன்பு தான் வேலியோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் சக்கிலிப் பெண் ஒரு வள்ளம் தவசம் கேட்டாள். கம்போ, ராகியோ அப்போது அவளுக்குக் கொடுக்க முத்தாயாளுக்கு நேரம் இல்லை. இப்போதுதான் அவள் பரிபூரண நேரத்தில் பேரமைதியில் ஆழ்ந்து விட முடிவு பண்ணி விட்டாளே! என்ன நினைத்தாளோ என்னவோ, கூப்பிட்டாள். கூப்பிடுமுன் அந்தப் பெண் ஓடி வந்துவிட்டாள். ஒரு வேளை அந்தப் பெண்ணும் ஒரு ‘குரலை’ எதிர்பார்த்துத்தான் இருந்தாளோ? “உனக்கு நல்லா இருக்குதா? இது?” என்ன எதையோ நினைத்துக் கொண்டு அவளிடம் கேட்டாள். அந்தப் பெண் மிரள மிரள விழித்தாள். ஒன்றும் அவளுக்கு அர்த்தமாகவில்லை! பிறகு, முத்தாயா குடிசைக்குள் போய் நாலு வள்ளம் கம்பைக் கொண்டு வந்து, அவள் மாராப்புச் சேலையை விரிக்கச் சொல்லி, அதில் கொட்டிய போதும் அந்தப் பெண்ணுக்கு அர்த்தமாகவில்லை! முந்திய நாள் முத்தாயா இரண்டொருபடி போடவேண்டித்தான் இன்னும் ரண்டு நாள் பொறுத்துக் கொள் என்று சொல்கிறாளாக்கும் என அந்தப் பெண் நினைத்தாள். ஒன்றுக்கு நாலாக இன்று கிடைத்தால் என்ன நினைப்பாள்? காற்று ‘பிசு பிசு’ வென்று அடித்துக் கொண்டிருந்தது. தென்னம்பாளை தூரத்தில் சீவிக் கொண்டிருப்பதன் மணம் மனோகரமாக புலன்களில் வந்து மோதியது. அந்தி வேளையின் ஆனந்தம் முழுவதுமே அதில் நிறைந்திருப்பது போல் இருந்தது. எதிர் பக்கத்தில் ‘கரு கரு’வென்று அரளிச் செடி இரண்டாள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. செக்கச் செவேல் என்று இடையிடையே பூத்து நிற்கும் பூக்கள் சற்றைக்கொரு தரம் இளங்காற்றில் அசைந்தாடும் போது, அவள் உள்ளத்தைப் படம் பிடிக்க முயற்சி செய்வது போல் பட்டது அவள் மனசுக்கு. அது மட்டுமா? அரளிச் செடி, “வா, வா” என்று தன்னை வருத்தி அழைப்பது மாதிரி நினைத்துக் கொண்டாள். எதற்காக? கிராமத்திலே எத்தனையோ பேர் - தங்கள் தாங்கொணாத் துயரத்தை அந்தச் செடியைத் தஞ்சம் என்று அடைந்ததின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்களே! அரளி வேருடன் கொஞ்சம் நல்லெண்ணையைக் கலந்து கொள்ள வேண்டியது தான். இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டால் பிறகு உடலுக்கும் உயிருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை! அந்த நிமிஷமே ஆவி பறந்தோடிவிடும்! அதற்குப் பக்கத்திலே தாழ மடலும் ‘கருகும்’ என்றிருந்தது. அழகிகளை விட தாழம்பூக்களிடம் சர்ப்பங்களுக்கு அதிகப் பிரியமாம! தாழமடலோடு மடலாக தலைவைத்துப் படுத்திருக்குமாமே. ஏன், தாழம் பூ எடுப்பவள் போல் அங்கு போனால் என்ன? பூவோடு பூவாக ஒரு... தன் துக்கத்திற்கு ஒரு மருந்து கிடைத்து விடாதா? இந்தப் பொல்லாத மனசு இருக்கிறதே இன்னும் என்னவெல்லாமோ படாத பாடு அவளைப் படுத்திற்று. அவளும் சற்றும் சளைக்காமல் ஆயிரம் ஆயிரம் யோசனைகள் செய்தபடியே சோர்ந்து போய்ப் படுத்துக் கொண்டிருந்தாள். இந்த வேளை யாராகிலும் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்? துளிக்கூட அலுப்புச் சலிப்பில்லாமல் ஓடியாடி வேலை செய்யும் முத்தாயாளா இப்படி மூர்ச்சித்து விட்டாள் என்று தான் நினைப்பார்கள். ஆனால், அவளுடைய மூர்ச்சைக்குத் தூபம் போடுவது சாமான்யப் பொருள்களா? திக்குத் திகந்தமே அக்காரியத்தில் மும்முரமாக முனைந்திருக்கும் போது பாவம், அந்த பேதைப் பெண்ணால் அதை எவ்வாறு தாங்க முடியும்? மீண்டும் மீண்டும் தந்தையின் நினைவேதான் வந்து வந்து அலைமோதியது. அவர் வாழ்வின் வெற்றி தோல்விகள் என்ன? வழுக்கு மரம் ஏறுவது போல் ஒரு அடி ஏறினால் இரண்டு அடி சறுக்கும். இருந்த போதிலும் அவர் சலித்தாரா? என்ன கல் நெஞ்சராக இருந்திருக்க வேண்டும். அப்படியே தானும் வைராக்கியத்துடன் வாழ்ந்தால் என்ன? என்னவோ யாரோ எப்படியோ சொல்லிக் கொண்டு போகட்டும். அதற்காக இப்படி முடிவுக்கு வந்து விடுவதா? அதே சமயம் கும்பலாக இட்டேறியில் இரண்டு மூன்று பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டு போனார்கள். அவர்களில் ஒருத்தி, இந்தப் பக்கம் திரும்பி “யாரு, நம்ம முத்தக்காளாட்ட இருக்குகா?” என்றாள். கூடவே, “ஐயோ பாவம், இந்த அறியா வயசிலே இவளுக்கு இப்படியா நேரோணும்” என்று ஒருத்தி சொல்வது நன்றாகக் கேட்டது. முத்தாயா இவைகளைக் கேட்டாள். கேட்டு, கண்ணில் வழியும் கண்ணீரையும் துடைத்துக் கொள்ளாமல், உள்ளுக்குள்ளாகவே அவர்களைச் சபித்துக் கொண்டாள். குரல் அவளுக்குப் பழக்கமானதுதான். சொந்த ஊர்க்காரிதான். இரண்டு வருஷத்துக்கு முன்புதான் அந்தப் பெண்ணுக்குக் கலியாணம் ஆயிற்று. அப்போது அவள் சொன்னது இன்னம் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “நாம ரண்டு பேரும் சேமலைக்கு ஒண்ணாப் போவோணும்” என்று அந்தப் பெண் சொல்லி இருந்தாள். இன்று அவள் வாயிலிருந்தே “ஐயோ” என்னும் அனுதாபம் மட்டும் தொடர்ந்து வருகிறது. மற்றப்படி ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை. இந்த உலகம் இருக்கிறதே உலகம், எடுத்த எடுப்பிலே ‘அனுதாபத்தை’ முன்னால் வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு கஷ்டம் வந்துவிட்டால், ஒருவனுக்கு இன்னல் விளைந்து விட்டால், அதைக்கண்டு “ஐயோ” என்று சும்மா அனுதாபப்படச் சொல்கிறதே தவிர, அதைத் தவிர்க்க, அதைப் போக்க யாராவது முந்துகிறார்களா? அந்த இக்கட்டிலிருந்து தீர்த்துவிட யாருமே வருவதில்லை. இருந்த போதிலும், முத்தாயா மீண்டும் இரண்டு எட்டு வைத்தாள். நடக்க முடியா விட்டாலும் தொண்டை ஏன் இப்படி வரண்டு போகிறது? ‘துக், துக்’ என்று நெஞ்சு ஏன் தான் இப்படி அடித்துக் கொள்கிறதோ? மெள்ள மெள்ள அரளிச் செடியருகே வந்தாள். தூரத்திலே மங்கலாக ஊர் தெரிந்தது. மாலையும் கதிர்களைக் கொஞ்சங் கொஞ்சமாக அடக்கியதால், இருளும் கவிந்தது. செடியின் பக்கத்திற்குப் போனதும், இனியும் அங்கு நீண்ட நேரம் இருக்கக் கூடாதென்று விரைவில் ஒரு பெரிய வேரை பறித்து எடுத்தாள். மடிக்குள் மறைத்துக் கொண்டு குடிசைக்கு வந்தாள். தயாராக வைத்திருந்த நல்லெண்ணெய்க் கிண்ணம் ‘பளிச்’சென மின்னிக் கொண்டிருந்தது. இனி... இனி... அந்த வேருடன் எண்ணெயைக் கலக்க வேண்டியதுதான். சற்று நேரத்தில், இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்கும் என்பதை எண்ணவும் முத்தாயாளுடைய மனம் கூசியது! ஊம்... அப்போது தெரியும் அல்லவா? எல்லோருக்குமே தெரியுமல்லவா? உண்மை ஒரு ஆயிரம் வருஷம் பொறுத்துத் தெரிந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், என்றைக்கோ ஒரு நாளைக்கு உண்மை துலாம்பரமாக வேண்டும். அவ்வளவுதான். தனக்குத் தெரிந்த எல்லோரையும் ஒரு தரம் முத்தாயா ஞாபகப் படுத்திக் கொண்டாள். சின்னஞ்சிறு வயசிலிருந்து இன்று வரை, அறிமுகமான எல்லோரையுமே ஞாபகமூட்டிக் கொண்டாள். ...மெள்ள மெள்ள ஒவ்வொரு உருவமாக மறைந்து தன் தந்தையின் தோற்றம் கண் எதிரே வந்து நின்றது. ‘ஐயா’ என்று மார்போடு கட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. வெள்ளப் பெருக்குப் போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது... உம்... கடைசியாக அந்தக் கிண்ணத்தை முத்தாயா கையில் எடுத்து விட்டாள். முகத்திற்கு எதிரில் வைத்துக் கொண்டும் ஒரு நிமிஷம் யோசனை; நல்ல யோசனை! இப்போதுதான் யோசித்துக் கொண்டிருப்பதாக்கும். கடைசியாக முத்தாயா குடித்தே தீர்த்து விட்டாள். ஆம், எண்ணந்தான் வென்றது... உணர்ச்சி தான் வெற்றி பெற்றது... அறிவு, மங்கிவிட்டது. |
புலன் மயக்கம் - தொகுதி - 3 ஆசிரியர்: ஆத்மார்த்திவகைப்பாடு : இசை விலை: ரூ. 170.00 தள்ளுபடி விலை: ரூ. 155.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
அதே வினாடி ஆசிரியர்: நாகூர் ரூமிவகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 188.00 தள்ளுபடி விலை: ரூ. 175.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|