|
News | |
-PM to open Tamil Nadu's new assembly complex-HC stays TV channels from telecasting Nityananda video -India, Russia sign two nuclear pacts, boost ties -Can't take back retired women officers: Air force, army -No more class 8 board exams in Himachal -Left slams Govt, protests against rising prices -Women's Reservation Bill should be passed without hiccups: Jayalalithaa -Mukesh Ambani, Lakshmi Mittal among world's 5 wealthiest -Israel Restricts Entry to Disputed Jerusalem Holy Place -Suicide blasts kill 45 in Pakistan's Lahore |
-Full convertibility of rupee only gradually: Mukherjee-India to rush 40 ITBP commandos to Afghanistan -Inflation may decline to 6-7 % by second-half of next fiscal -Google Prepares to Stop Censoring in China -Afridi, Akmals in Pakistan's World Twenty20 squad -IPL-III kicks off with grand opening ceremony -Hockey WC: Germany eye hat trick, Australia the title after 24 years -Archery: Tarundeep, Deepika win golds; India finish with 13 medals -5th Commonwealth Boxing Championships kickstarts in Mumbai |
![]() |
1. மகோதைக் கரையிலே... பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பதுபோல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக்கூட அந்தச் சங்கமத் துறையே படைத்துக் கொடுத்தது. அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானியாற்றின் கரையோரமாகவே சென்றால் சேர நாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளூரை அடைந்து விடலாம். கரையோரமாக தென்மேற்கே பத்துநாழிகைப் பயணத்தில் வஞ்சிமா நகரம் இருந்தது. கொடுங்கோளூரை ஒட்டிக் கடலோரமாகவே இருந்த முசிறியில் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பூட்டும் பயங்கரச் செய்தியொன்று பரவிப் பொதுமக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேற்குக் கடலின் கொடிய கொள்ளைக்காரனாகிய கடம்பர் குறுநில மன்னன் ஆந்தைக்கண்ணன் முசிறியைக் கொள்ளையிடப் போகிறான் என்ற செய்திதான் காட்டுத் தீப்போலப் பரவிக் கொண்டிருந்தது. பெரு மன்னராகிய கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவ வேந்தர் ஊரிலிருந்தால் கவலை இல்லை. அவரும் பெரும் படைகளோடு இமயத்திற்கும் குயிலாலுவத்திற்கும் சென்றிருந்தார். கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் கூட அதிகமான படைவீரர்கள் இல்லை. முசிறியிலிருந்த போர்க்கலங்களையும், கடற்படையையும் கொண்டு ஆந்தைக்கண்ணனை எதிர்க்க முடியுமா? என்பதும் தெரியவில்லை. மகோதைக் கரையின் இருபது காத தூரமும் இதைப்பற்றியே பேச்சாக இருந்தது. கொடுங்கோளூர்க் கோட்டையின் நாற்பக்கத்து வாயில்களையும் கூட அடைத்துவிட்டார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவாக்கப்பட்டன. குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளைய சேரர் இளங்கோ அடிகள் அரச காரியங்களில் ஆலோசனை கூறும் வழக்கமின்மையால் அவரையும் அணுகிக் கேட்க முடியாமலிருந்தது. கொடுங்கோளூர்க் கோட்டைப் பாதுகாப்புப் படைத்தலைவன் குமரன் நம்பிக்கு நிலைமையை எப்படி எதிர்கொள்வதென்ற சிந்தனை எழுந்தது. மகோதைக் கரையின் இருபது காத தூரத்தில், பேரியாறு, பொன்வானி, அயிரை போன்ற பல நதி முகத்துவாரங்கள் அங்கங்கே இருந்ததனால் ஒவ்வொரு முகத்துவாரத்திற்கும் பாதுகாப்பு அவசியமென்று தோன்றியது. முகத்துவாரங்களின் வழியாகக் கொள்ளைக்காரர்களின் படகுகளோ, கப்பல்களோ உள்ளே புக முடியுமானால் குட்ட நாட்டு நகரங்கள் எல்லாவற்றையுமே சூறையாடிவிட முடியும். பொன்னும், மணியும், முத்தும், பவளமும் நிறைந்த மகோதைக்கரை நகரங்களின் கதி என்ன ஆகுமோ என்ற பீதி எங்கும் பரவத் தொடங்கியிருந்தது. http://www.chennailibrary.com/parthasarathy/vanchimaanagaram/vn.html |
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |