கல்லாடர்

அருளிய

கல்லாடம்

... தொடர்ச்சி - 4 ...

76. அயல் அறிவு உரைத்து அழுக்கம் எய்தல்

ஆடகச் சயிலத்து ஒருடல் பற்றி
கலிதிரைப் பரவையும் கனன்றெழு வடவையும்
அடியினும் முடியினும் அணைந்தன போல
பசுந்தழைத் தோகையும் செஞ்சிறைச் சேவலும்
தாங்கியும், மலர்க்கரம் தங்கியும் நிலைத்த 5

பேரொளி மேனியன் பார்உயிர்க்கு ஓருயிர்
மாவுடைக் கூற்றம் மலர்அயன் தண்டம்
குறுமுனி பெறும்மறை நெடுமறை பெறாமுதல்
குஞ்சரத் தோகையும் குறமகட் பேதையும்
இருந்தன இருபுறத்து எந்தை என்அமுதம் 10

பிறந்தருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற
மாதவக் கூடல் மதிச்சடைக் காரணன்
இருபதம் தேறா இருள்உளம் ஆமென
இவள்உளம் கொட்ப அயல்உளம் களிப்ப
அரும்பொருட் செல்வி எனும்திரு மகட்கு 15

மானிட மகளிர் தாமும்நின் றெதிர்ந்து
புல்இதழ்த் தாமரை இல்அளித் தெனவும்
உலகுவிண் பனிக்கும் ஒருசய மகட்கு
தேவர்தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து
வீரம்அங்கு ஈந்துபின் விளிவது மானவும் 20

இருளுடல் அரக்கியர் கலைமகட் கண்டு
தென்தமிழ் வடகலை சிலகொடுத் தெனவும்
நீரர மகளிர் பாந்தள் அம் கன்னியர்க்கு
ஆர்எரி மணித்திரன் அருளியது எனவும்
செம்மலர்க் குழலிவள் போய்அறி வுறுத்தக் 25

கற்றதும் கல்லாது உற்றன ஊரனை
அவள்தர இவள்பெறும் அரந்தையம் பேறினுக்கு
ஒன்றிய உவமம் இன்றிவண் உளவால்
மற்றவள் தரநெடுங் கற்பே
உற்றிவள் பெற்றாள் என்பதும் தகுமே. 30

77. பிரிந்தமை கூறல்

மலரவன் பனிக்கும் கவினும் குலமீன்
அருகிய கற்பும் கருதிஉள் நடுங்கித்
திருமகள் மலர்புகும் ஒருதனி மடந்தையின்று
இருகடல் ஓருழி மருவிய தென்னச்
செருப்படை வேந்தர் முனைமேல் படர்ந்தநம் 5

காதலர் முனைப்படை கனன்றுடற் றெரியால்
முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த
நெடுஞ்சால் போகிக் கடுங்கயல் துரக்கும்
மங்கையர் குழைபெறு வள்ளையில் தடைகொண்டு
அவர்கருங் கண்எனக் குவளை பூத்த 10

இருள் அகச் சோலையுள் இரவெனத் தங்கிய
மற்றதன் சேக்கையுள் வதிபெறும் செங்கால்
வெள்ளுடல் ஓதிமம் தன்னுடைப் பெடைஎனப்
பறைவரத் தழீஇப்பெற் றுவைஇனக் கம்பலைக்கு
ஆற்றாது அகன்று தேக்குவழி கண்ட 15

கால்வழி இறந்து பாசடை பூத்த
கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்து
எழில்மதி காட்டி நிறைவளை சூல்உளைந்து
இடங்கரும் ஆமையும் எழுவெயில் கொளுவும்
மலைமுதுகு அன்ன குலைமுகடு ஏறி 20

முழுமதி உடுக்கணம் காதலின் விழுங்கி
உமிழ்வன போல சுரிமுகச் சூல்வளை
தரளம் சொரியும் பழனக் கூடல்
குவளை நின் றலர்ந்த மறைஎழு குரலோன்
இமையவர் வேண்ட ஒருநகை முகிழ்ப்ப 25

ஓர் உழிக் கூடாது உம்பரில் புகுந்து
வானுடைத் துண்ணும் மறக்கொலை அரக்கர்முப்
பெருமதில் பெற்றன அன்றோ
மருவலர் அடைந்தமுன் மறம்கெழு மதிலே? 29

78. கலக்கங் கண்டு உரைத்தல்

பெருந்துயர் அகற்றி அறம்குடி நாட்டி
உளச்சுருள் விரிக்கும் நலத்தகு கல்வியொன்று
உளதென குரிசில் ஒருமொழி சாற்ற
பேழ்வாய்க் கொய்யுளை அரிசுமந் தெடுத்த
பல்மணி ஆசனத்து இருந்துசெவ் வானின் 5

நெடுஞ்சடைக் குறுஞ்சுடர் நீக்கிஐந் தடுக்கிய
ஆறுஐஞ் நூறொடு வேறுநிரை அடுத்த
பல்மணி மிளிர்முடி பலர்தொழக் கவித்து
பலதலைப் பாந்தள் சுமைதிருத் தோளில்
தரித்துலகு அளிக்கும் திருத்தகு நாளில் 10

நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த
நெடுஞ்சடை உக்கிரற் பயந்தருள் நிமலன்
மற்றவன் தன்னால் வடவையின் கொழுந்துசுட்டு
ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும்
விளர்த்துநின் றணங்கி வளைக்குலம் முழங்கும் 15

கருங்கடல் பொரிய ஒருங்குவேல் விடுத்து
அவற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன்
வெம்மையும் தண்மையும் வினைஉடற்கு ஆற்றும்
இருசுடர் ஒருசுடர் புணர்விழி ஆக்கிமுன்
விதியவன் தாரா உடலொடு நிலைத்த 20

முத்தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள்
கனவிலும் காணாக் கண்ணினர் துயரும்
பகுத்துண்டு ஈகுநர் நிலைத்திரு முன்னர்
இல்லெனும் தீச்சொல் இறுத்தனர் தோமும்
அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர் 25

கோறலென் றயலினர் குறித்தன குற்றமும்
நன்றறி கல்வியர் நாட்டுறு மொழிபுக்கு
அவ் அரண் இழந்தோர்க்கு அருவிடம் ஆயதும்
ஒருகணம் கூடி ஒருங்கே
இருசெவி புக்கது ஒத்தன இவட்கே. 30

79. முன்பனிக்கு நொந்து உரைத்தல்

கடல்மகள் உள்வைத்து வடவைமெய் காயவும்
மலைமகள் தழல்தரு மேனிஒன்று அணைக்கவும்
மாசறு திருமகள் மலர்புகுந்து ஆயிரம்
புறஇதழ்ப் புதவடைத்து அதன்வெதுப்பு உறைக்கவும்
சயமகள் சீற்றத் தழல்மனம் வைத்துத் 5

திணிபுகும் வென்றிச் செருஅழல் கூடவும்
ஐயர் பயிற்றிய விதிஅழல் ஓம்பவும்
அவ் அனற்கு அமரர் அனைத்தும்வந்து அணையவும்
முன்இடைக் காடன் பின்எழ நடந்து
நோன்புறு விரதியர் நுகரஉள் இருந்தென் 10

நெஞ்சகம் நின்று நினைவினுள் மறைந்து
புரை அறும் அன்பினர் விழிபெறத் தோற்றி
வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
பதுக்கைசெய் அம்பலத் திருப்பெரும் பதியினும்
பிறவாப் பேர்ஊர்ப் பழநக ரிடத்தும் 15

மகிழ்நடம் பேய்பெறும் வடவனக் காட்டினும்
அருமறை முடியினும் அடியவர் உளத்தினும்
குனித்தருள் நாயகன் குலமறை பயந்தோன்
இருந்தமிழ்க் கூடல் பெருந்தவர் காண
வெள்ளியம் பலத்துள் துள்ளிய ஞான்று 20

நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
கையினில் கொள்ளவும் கரிவுரி மூடவும்
ஆக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
ஆங்கவர் துயர்பெற ஈன்றஎன் ஒருத்தி
புகல்விழும் அன்புதற்கு இன்றி 25

மகவினைப் பெறலாம் வரம்வேண் டினளே. 26

80. மறவாமை கூறல்

மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பி
பசுந்தாள் தோன்றி மலர்நனி மறித்து
நெட்டெறி ஊதை நெருப்பொடு கிடந்து
மணிபுறம் கான்ற புரிவளை விம்மி
விதிப்பவன் விதியா ஓவம் நின்றெனஎன் 5

உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்
உவணக் கொடியினன் உந்திமலர்த் தோன்றிப்
பார்முதல் படைத்தவன் நடுத்தலை அறுத்து
புனிதக் கலன்என உலகுதொழக் கொண்டு
வட்டம் முக்கோணம் சதுரம் கார்முகம் 10

நவத்தலை தாமரை வளைவாய்ப் பருந்தெனக்
கண்டன மகம்தொறும் கலிபெறச் சென்று
நறவு இரந்தருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளாக் கொலைதரு நவ்வியும்
விதிர்ஒளி காற்றக் கனல்குளிர் மழுவும் 15

இருகரம் தரித்த ஒருவிழி நுதலோன்
கூடல்ஒப்பு உடையாய் குலஉடுத் தடவும்
தடமதில் வயிற்றுள் படும்அவர் உயிர்க்கணம்
தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிதெனப்
போக்கற வளைந்து புணர்இருள் நாளும் 20

காவல் காட்டிய வழியும்
தேவர்க் காட்டும்நம் பாசறை யினுமே. 22

81. ஊடி உரைத்தல்

மதியம் உடல்குறைத்த வெள்ளாங் குருகினம்
பைங்கால் தடவிச் செங்கயல் துரந்துண்டு
கழுக்கடை அன்னதம் கூர்வாய்ப் பழிப்புலவு
எழில்மதி விரித்தவெண் தளைஇதழ்த் தாமரை
மலர்மலர் துவட்டும் வயல்அணி ஊர 5

கோளகைக் குடிலில் குனிந்திடைந் தப்புறத்து
இடைநிலை அற்றபடர் பெருவெளி யகத்து
உடல்முடக்கு எடுத்த தொழிற்பெரு வாழ்க்கைக்
கவைத்தலைப் பிறைஎயிற் றிருள்எழில் அரக்கன்
அமுதம் உண்டிமையா அவரும் மங்கையரும் 10

குறவரும் குறவத் துணையரும் ஆகி
நிலம்பெற் றிமைத்து நெடுவரை இறும்பிடை
பறவைஉண் டீட்டிய இறால்நறவு அருந்தி
அந்நிலத் தவர்என அடிக்கடி வணங்கும்
வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்தொரு 15

தேவனும் அதன்முடி மேவவும் உளனாம்
எனப்புயம் கொட்டி நகைத்தெடுத் தார்க்க
பிலம்திறந் தன்ன பெருவாய் ஒருபதும்
மலைநிரைத் தொழுங்கிய கரம்இரு பத்தும்
விண்ணுடைத் தரற்றவும் திசையுட்கி முரியவும் 20

தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரல் தலைநக நுதியால்
சிறிதுமலை உறைத்த மதிமுடி அந்தணன்
பொன்அணி மாடம் பொலிநகர்க் கூடல்
ஆவண வீதி அனையவர் அறிவுறில் 25

ஊருணி அன்னநின் மார்பகம் தோய்ந்தஎன்
இணைமுலை நன்னர் இழந்தன அதுபோல்
மற்றவர் கவைமனம் மாழ்கி
செற்றம்நிற் புகைவர்இக் கால்தீண்டலையே. 29

82. தோழி பொறை உவந்து உரைத்தல்

உலர்கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும்
வீசுகோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர
திரைவிழிப் பருந்தினம் வளைஉகிர்ப் படையால்
பார்ப்பிரை கவரப் பயனுறும் உலகில்
கடனுறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் 5

தழல்உணக் கொடுத்த அதன்உண விடையே
கைவிளக்கு எடுத்துக் கரைஇனம் கரைய
பிணம்விரித் துண்ணும் குணங்கினம் கொட்ப
சூற்பேய் ஏற்ப இடாகின கரப்ப
கண்டுளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி 10

பிறைநுதல் நாட்டி கடுவளர் கண்டி
இறால்நறவு அருவி எழுபரங் குன்றத்து
உறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றினள்
ஒருபால் பொலிந்த உயர்நகர்க் கூடல்
கடுக்கைஅம் சடையினன் கழல்உளத்து இலர்போல் 15

பொய்வரும் ஊரன் புகலரும் இல்புக
என்உளம் சிகைவிட்டு எழும்அனல் புக்க
மதுப்பொழி முளரியின் மாழ்கின என்றால்
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும்
கைவரல் ஏற்றும் கனவினுள் தடைந்தும் 20

திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும்
பொருட்கான் தடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் இறந்தும்
காவலில் கவன்றும் கல்வியில் கருதியும்
வேந்துவிடைக்கு அணங்கியும் விளைபொருட்கு உருகியும் 25

நின்ற இவட்கு இனிஎன்ஆம்
கன்றிய உடலுள் படும்நனி உயிரே? 27

83. கலவி கருதிப் புலத்தல்

நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி
வான்தவழ் உடற்கறை மதியெனச் சுருங்கி
புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுடன் அழியும்
சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை
கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து 5

புலனறத் துடைத்த நலனுறு வேள்வியர்
ஆரா இன்பப் பேரமுது அருந்தி
துறவெனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்
வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப்
பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன் 10

மண்திரு வேட்டுப் பஞ்சவற் பொருத
கிள்ளியும் கிளையும் கிளர்படை நான்கும்
திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட
எரிவாய் உரகர் இருள்நாட்டு உருவக்
கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து 15

மறியப் புதைத்த மறம்கெழு பெருமான்
நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும்
கல்வியும் திருவும் காலமும் கொடியும்
மாடமும் ஓங்கிய மணிநகர்க் கூடல்
ஆல வாயினில் அருளுடன் நிறைந்த 20

பவளச் சடையோன் பதம்தலை சுமந்த
நல்இயல் ஊரநின் புல்லம்உள் மங்கையர்
ஓவிய இல்லம்எம் உறையுள் ஆக
கேளாச் சிறுசொல் கிளக்கும் கலதியர்
இவ்வுழி ஆயத் தினர்களும் ஆக 25

மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய்
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தஇத்
திருமணம் கொள்ளாச் சேக்கையது ஆக
நின்வுளம் கண்டு நிகழ்உணவு உன்னி 30

நாணா நவப்பொய் பேணியுள் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனும் நீயும்
திருப்பெறும் அயலவர் காண
வரப்பெறு மாதவம் பெரிதுடை யேமே. 34

84. வரும்புனம் கண்டு வருந்தல்

உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியும்
அளவாத் திருமணி அளித்த லானும்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத்து இளங்கா நிலைத்த லானும் 5

பாசடை உம்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானும்
நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி
உடையா அமுதம் உறைத லானும்
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் 10

வாடாத் தேவர்கள் மணத்த லானும்
நூறுடை மகத்தில் பேறுகெமண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்எயில் எறிந்த
மணிவேற் குமரன் திருவளர் குன்றம்
பேரணி உடுத்த பெருநகர்க் கூடல் 15

கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்றம்
அருந்தவக் கண்ணினோடு இருந்தமா முனிபால்
பேரிருள் மாயைப் பெண்மகவு இரக்க
உவர்முதல் கிடந்த சுவையேழ் அமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய 20

எழுநீர்ச் சகரர்கள் ஏழ்அணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க
பல்முக விளக்கின் பரிதியில் தோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு அரும்பிய மிடற்றோன் 25

எறிந்துவீழ் அருவியும் எரிமணி ஈட்டமும்
உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுதுறைக்கும்
திருமுத் தமிழும் பெருகுதென் மலையத்து
ஆரப் பொதும்பரி அடைகுளிர் சாரல்
சுரும்புடன் விரிந்த துணைமலர்க் கொடியே 30

விண்விரித்து ஒடுக்கும் இரவிவெண் கவிகைக்கு
இட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதம் சினைத்த சிறைமயிற் குலமே!
நீலப் போதும் பேதையும் விழித்த
பொறிஉடல் உழையே! எறிபரல் மணியே! 35

பாசிழைப் பட்டு நூல்கழி பரப்பிய
கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே!
மைந்தர்கண் சென்று மாதர்உள் தழைத்த
பொழிமதுப் புதுமலர்ப் போர்க்குடைச் சுரும்பே!
வெறிமுதிர் செம்மலர் முறிமுகம் கொடுக்கும் 40

சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளைஅம் சுகமும் குருவியும் கடிய
இருகால் கவணிற்கு எறிமணி சுமந்த
நெடுங்கால் குற்றுழி நிழல்வைப்பு இதணே!
நெருநல் கண்டஎற்கு உதவுழி இன்பம் 45

இற்றையின் கரந்த இருள்மனம் என்னை?
இவண்நிற்க வைத்த ஏலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கும்
ஈங்கிவை கிடக்க என்நிழல் இரும்புனத்து
இருந்தொளிர் அருந்தேன் இலதால் நீரும் 50

நின்புனம் அல்லஎன்று என்புலம் வெளிப்பட
அறைதல் வேண்டும் அப்புனம் நீரேல்
முன்னம் கண்டவன் அன்றென்று
உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே. 54

85. நெஞ்சொடு வருந்தல்

வடமொழி மதித்த இசைநூல் லழக்குடன்
அடுத்த எண்நான்கு அங்குலி யகத்தினும்
நாற்பதிற் றிரட்டி நால்அங் குலியினும்
குறுமையும் நெடுமையும் கோடல்பெற் றைதாய்
ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து 5

கோடி மூன்றில் குறித்து மணிகுயிற்றி
இருநிலம் கிடத்தி மனம்கரம் கதுவ
ஆயிரத் தெட்டில் அமைத்தன பிறப்பு
பிறவிப் பேதத் துறையது போல
ஆரியப் பதம்கொள் நாரதப் பேரியாழ் 10

நன்னர்கொள் அன்பால் நனிமிகப் புலம்ப
முந்நான்கு அங்குலி முழுஉடல் சுற்றும்
ஐம்பதிற் றிரட்டி ஆறுடன் கழித்த
அங்குலி நெடுமையும் அமைத்து உள்தூர்ந்தே
ஒன்பது தந்திரி உறுந்தி நிலைநீக்கி 15

அறுவாய்க்கு ஆயிரண்டு அணைத்து வரைகட்டி
தோள்கால் வதிந்து தொழிப்படத் தோன்றும்
தும்புருக் கருவியும் துள்ளிநின் றிசைப்ப
எழுஎன உடம்புபெற் றெண்பது அங்குலியின்
தந்திரி நூறு தழங்குமதி முகத்த 20

கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயல்உரி விசித்து
நாப்பண் ஒற்றை நரம்புகடிப் பமைத்து
அந்நரம்பு இருபத் தாறுஅங் குலிபெற
இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்து 25

புறவிரல் மூன்றின் நுனிவிரல் அகத்தும்
அறுபத் திரண்டிசை அனைத்துயிர் வணக்கும்
மருத்துவப் பெயர்பெறும் வானக்கருவி
தூங்கலும் துள்ளலும் துவக்கநின் றிசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற 30

முனிவர்அஞ் சலியுடன் முகமன் இயம்ப
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச
இன்பப் பசுங்கொடி இடப்பால் படர
வெள்ளி அம் குன்றம் விளங்க விற்றிருந்த
முன்னவன் கூடல் முறைவணங் கார்என 35

அரவப் பசுந்தலை அரும்பவிழ் கணைக்கால்
நெய்தற் பாசடை நெடுங்காட்டு ஒளிக்கும்
கண்எனக் குறித்த கருங்கயல் கணத்தை
வெள்ளுடல் கூர்வாய் செந்தாட் குருகினம்
அரவுஎயி றணைத்தமுள் இலைமுடக் கைதைகள் 40

கான்றலர் கடிமலர் கரந்துறைந் துண்ணும்
கருங்கழி கிடந்த கானல்அம் கரைவாய்
மெய்படு கடுஞ்சூள் மின்எனத் துறந்தவர்
சுவல்உளைக் கவனப் புள்இயல் கலிமான்
நோக்கம் மிறைத்த பரிதிகொள் நெடுந்தேர்ப் 45

பின்னொடும் சென்றஎன் பெரும்பிழை நெஞ்சம்
சென்றுழிச் சென்றுழிச் சேறலும் உளவோ
அவ்வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ?
இடைவழி நீங்கிஎன் எதிர்உறுங் கொல்லோ?
அன்றியும் நெடுநாள் அமைந்துடன் வருமோ? 50

யாதென நிலைக்குவன் மாதோ
பேதை கொள்ளாது ஒழிமனம் கடுத்தே. 52

86. கண் துயிலாது மொழிதல்

கடுவினை அங்குரம் காட்டிஉள் அழுக்காறு
எண்திசைச் சாகைகொண் டிருள்மனம் பொதுளி
கொடுங்கொலை வடுத்து கடும்பழிச் சடைஅலைந்து
இரண்டுஐஞ் ஞூறு திரண்டஅக் காவதம்
சுற்றுடல் பெற்று, துணைப்பதி னாயிரம் 5

மற்றதின் நீண்டு மணிவுடல் போகி
ஐம்பது நூறுடன் அகன்றுசுற் றொழுக்கி
பெருங்கவிழ் இணர்தந்து அவைகீழ்க் குலவிய
அடல்மாக் கொன்ற நெடுவேற் குளவன்
குன்றவர் வள்ளிஅம் கொடியொடு துவக்கிப் 10

பன்னிரு கண்விரித்து என்வினை துரக்கும்
அருட்பரங் குன்றம் உடுத்தணி கூடல்
குறும்பிறை முடித்த நெடுஞ்சடை ஒருத்தனைத்
தெய்வம் கொள்ளார் சிந்தைஅது என்னக்
கிடந்தவல் இரவில் கிளர்மழை கான்ற 15

அவலும் உம்பரும் அடக்குபுனல் ஒருவி
தேஅருள் கல்லார் சிந்தையின் புரண்ட
கவலையும் காற்குறி கண்டுபொழில் துள்ளும்
இமையாச் சூரும் பலகண்டு ஒருங்காத்
துடியின் கண்ணும் துஞ்சாக் கண்ணினர் 20

கடியும் துனைவில் கையகன்று எரிமணித்
தொகையிருள் கொல்லும் முன்றில் பக்கத்து
இணைமுகப் பறைஅறை கடிப்புடைத் தோகை
வயிற்றுள் அடக்கி வளைகிடை கிடக்கும்
முழக்கிமெய் கவரும் முகக்கொலை ஞாளி 25

அதிர்குரைப்பு அடக்கி இற்புறத்து அணைந்தநம்
பூம்புனல் ஊரனை பொருந்தா நெடுங்கண்
அன்னையின் போக்கிய அரும்பெருந் தவறு
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும்
மயங்காத் தேவர் மருந்துவாய் மடுக்க 30

முகம்கவிழ் வேலையில் அறம்குடி போகிய
மாயவல் அரக்கர் தட்டிக்
காய்பார் உகுத்த விதிஒத் தனவே. 33

87. தலைவன் வரவு உரைத்தல்

நாற்கடல் வளைத்த நானிலத்து உயிரினை
ஐந்தருக் கடவுள் அவன்புலத் தினரை
நடந்துபுக்கு உண்டும் பறந்துபுக்கு அயின்றும்
முத்தொழில் தேவரும் முருங்கஉள் உறுத்தும்
நோன்தலைக் கொடுஞ்சூர்க் களவுயிர் நுகர்ந்த 5

தழல்வேற் குமரன் சால்பரங் குன்றம்
மணியொடும் பொன்னொடும் மார்பணி அணைத்த
பெருந்திருக் கூடல் அருந்தவர் பெருமான்
இருசரண் அகலா ஒருமையர் உளம்என
சுடர்விளக்கு எடுமின் கோதைகள் தூக்குமின் 10

பூவும் பொரியும் தூவுமின் தொழுமின்
சுண்ணமும் தாதும் துனைத்துகள் தூற்றுமின்
கரும்பெயல் குளிறினம் களிமயில் என்னக்
கிடந்தயர் வாட்குமுன் கிளிர்வினைச் சென்றோர்
உடலுயிர் தழைக்கும் அருள்வரவு உணர்த்த 15

முல்லைஅம் படர்கொடி நீங்கி, பிடவச்
சொரிஅலர் தள்ளி துணர்ப்பொலம் கடுக்கைக்
கிடைதரவு ஒருவி களவுஅலர் கிடத்தி
பூலைஅம் புடைமலர் போக்கி அரக்கடுத்துக்
கழுவிய திருமணி கால்பெற் றென்ன 20

நற்பெருந் தூது காட்டும்
அற்புதக் கோபத் திருவரவு அதற்கே. 22

88. இரங்கல்

பழுதறு தெய்வம் காட்டிப் பண்டையின்
உழுவலின் நலத்தால் ஓருயிர் என்றும்
கடுஞ்சூள் தந்தும் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுடன் உண்டும்
குழமகற் குறித்தும் சிலமொழி கொடுத்தும் 5

கையுறை சுமந்தும் கடித்தழை தாங்கியும்
உயிரினில் தள்ளா இரங்கியும் உணங்கியும்
பனையும் கிழியும் படைக்குவன் என்றும்
இறடியம் சேவற்கு எறிகவண் கூட்டியும்
புனமும் எம்உயிரும் படர்கரி தடிந்தும் 10

அழுங்குறு புனல்எடுத்து அகிற்புகை ஊட்டியும்
ஒளிமணி ஊசல் பரியவிட்டு யாத்தும்
இரவினில் தங்க எளிவரல் இரந்தும்
இருவிஅம் புனத்திடை எறிஉயிர்ப்பு எறிந்தும்
தெரித்தலர் கொய்தும் பொழில்குறி வினவியும் 15

உடலொடும் பிணைந்தகை ஆய்துயில் ஒற்றி
செறிஇருள் குழம்பகம் சென்றுபளிங் கெடுத்த
இற்பொழில் கிடைக்கும் அளவும்நின் றலைந்தும்
பல்நாள் பல்நெறி அழுங்கினர் இன்று
முகன்ஐந்து மணத்த முழவம் துவைக்க 20

ஒருகால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து
மூவுடல் அணைத்த மும்முகத்து ஓர்முகத்து
எண்கடிப்பு விசித்த கல்லலகு எறிய
இருட்குறள் ஊன்றிஎம் அருங்களி ஆற்றி
உருள்வாய்க் கொக்கரை உம்பர்நாட் டொலிக்க 25

கரம்கால் காட்டி தலையம் இயக்கி
இதழ்அவிழ் தாமரை எனும்தகு ணிச்சம்
துவைப்ப நீள்கரத்துக் கவைகள் தோற்றி
கரிக்கால் அன்ன மொந்தைகலித் திரங்க
துடிஎறிந்து இசைப்ப துகளம் பரப்பி 30

வள்ளம் பிணைத்தசெங் கரடிகை மலக்க
எரியகல் ஏந்திவெம் புயங்கமிசை ஆக்கி
எரிதளிர்த் தன்ன வேணியில் குழவிப்
பசும்பிறை அமுதொடு நிரம்பிய தென்ன
மதுக்குளிர் மத்தமும் மிலைத்தொரு மறுபிறை 35

மார்பமும் இருத்திய தென்னக்கூன் புறத்து
ஏனக் கோடுவெண் பொடிப்புறத் தொளிர
பொலன்மிளிர் மன்றப் பொதுவகம் நாடித்
தனிக்கொடி காணஎவ் இடத்துயிர் தழைப்ப
ஆடிய பெருமான் அமர்ந்துநிறை கூடல் 40

கனவிலும் வினவா தவரினும் நீங்கி
சூளும் வாய்மையும் தோற்றி
நீளவும் பொய்த்தற்கு அவர்மனம் கரியே! 43

89. ஐயம் உற்று ஓதல்

பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும்
எழுமலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி
வரைஉலகு அனைத்தும் வருவது போல
திரைநிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும்
வையைநீர் விழவு புகுந்தனம் எனஒரு 5

பொய்யினள் அன்றி மெய்யினை நீயும்
பொலம்பூண் பெயர்ந்துறை பூணை அருள்தரும்
மலர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்தெனச்
சேக்கோள் கண்ணை செம்மொழிப் பெயர்தந்து
ஒன்றுடன் நில்லா மொழியை மதுத்த 10

முதிரா நாள்செய் முண்டகம் மலர்ந்து
கவிழ்ந்த முகத்தைஎம் கண்மனம் தோன்ற
அரும்பிய நகையை அன்றே நின்கெழு
என்கண் கண்ட இவ்இடை என்னுளம்
மன்னிநின் றடங்காக் குடுமிஅம் பெருந்தழல் 15

பசுங்கடல் வளைந்து பருகக் கொதித்த
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல்செய்
விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்கும்
கொடுஞ்சூர்க் கொன்ற கூரிலை நெடுவேல்
குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியோன் 20

குருகொலி ஓவாப் பனிமலர் வாவி
வயிறு வாய்த்த குழலியம் கிழவோன்
வாழ்பரங் குன்றெனும் மணிஅணி பூண்ட
நான்மறை புகழும் கூடல் எம்பெருமான்
வான்முதல் ஈன்ற மலைமகள் தன்னொடும் 25

முழுதுணர் ஞானம் எல்லாம் உடைமை
முழுதனுக் கிரகம் கெழுபரம் அநாதி
பாசம் இலாமை மாசறு நிட்களம்
அவிகா ரக்குறி ஆகிய தன்குணம்
எட்டும் தரித்து விட்டறு குற்றமும் 30

அருச்சனை வணக்கம் பரஉயிர்க்கு அன்பகம்
பேரருள் திருநூல் பெருந்துறவு எங்கும்
நிறைபொருள் அழுந்தல் அருளினர்க் கூட்டம்
இருள்பவம் நடுங்கல் எனும்குணம் எட்டும்
தமக்கும் படைத்த விதிப்பேற் றடியவர் 35

நிலையருள் கற்பென நெடுங்கற்பு உடையோள்
முன்னுறின் அவள் மனம் அங்கே
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே? 38

90. தலைவனோடு ஊடல்

மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும்
நகைத்தொகை கூட்டிக் கவைத்தெழு சொல்லும்
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும்
இருமனப் பொய்உளத்து ஒருமகள் தன்னை
கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர்அலர் 5

விதியினும் பன்மைசெய் முகன்படைத்து அளவாச்
சோதியின் படைக்கண் செலஉய்த்து அரும்புசெய்
முண்டக முலையில் சாந்தழித்து அமைத்தோள்
எழுதிய கழைக்கரும்பு எறிந்துநூல் வளர்த்த
கோதை வகைபரிந்து மணிக்கலன் கொண்டு 10

கழைத்தோள் நெகிழத் தழைவுடல் குழையத்
திரையினைத் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்து
ஒள்நிற வேங்கையின் தாதும் பொன்னும்
சுண்ணம் அவைகலந்து திமிர்ந்துடல் தூற்றி
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி 15

இறால்புணர் புதுத்தேன் ஈத்துடன் புணரும்
அவ்வயின் மறித்தும் அன்னவள் தன்னுடன்
கெழுமிய விழவுள் புகுமதி நீயே
கவைநாக் கட்செவி அணந்திரை துய்த்த
பாசுடற் பகுவாய்ப் பீழைஅம் தவளையும் 20

பேழ்வாய்த் தழல்விழித் தரக்கடித்து அவிந்த
நிலம்படர் தோகைக் குலம்கொள் சேதாவும்
அவ்வுழி மாத்திரை அரைஎழு காலை
திருநுதற் கண்ணும் மடமகள் பக்கமும்
எரிமழு நவ்வியும் பெறும்அருள் திருவுருவு 25

எடுத்துடன் அந்தக் கடுக்கொலை அரவினை
தீவாய்ப் புலியினை திருந்தலர் நகைப்ப
எடுத்தணி பூண உரித்துடை உடுப்ப
முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்ப
தருவன அன்றி மலரவன் அவன்தொழில் 30

நாரணன் ஆங்கவன் கூருடைக் காவல்
சேரத் துடைக்கும் பேரருள் நாளினும்
முத்தொழில் தனது முதல்தொழில் ஆக்கி
ஒருதாள் தாரைகொள் முக்கவைச் சுடர்வேல்
தலைஇருந்து அருங்கதி முழுதுநின் றளிக்கும் 35

திருநகர்க் காசிப் பதியகத்து என்றும்
வெளியுறத் தோன்றிய இருள்மணி மிடற்றோன்
நேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன்
தன்பரங் குன்றம் தமர்பெறு கூடற்கு
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் 40

பெரும்புனல் ஊர! எம்இல்
அரும்புனல் வையைஅம் புதுநீர் அன்றே. 42

91. உடன்பட உரைத்தல்

வேலிஅம் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்
பெருவெள் ளிடையில் சிறுகால் பட்டென
நிறைநாண் வேலி நீங்கித் தமியே
ஓர்உழி நில்லாது அலமரல் கொள்ளும்என்
அருந்துணை நெஞ்சிற்கு உறும்பயன் கேண்மதி 5

மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்
இருளரு புலனும்மெய்ப் பொருள்அறி கல்வியும்
அமரர்பெற் றுண்ணும் அமுதுருக் கொண்டு
குறுஞ்சொல் குதட்டிய மழலைமென் கிளவியில்
விதலைஉள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும் 10

நின்நலம் புகழ்ந்துணும் நீதியும் தோற்றமும்
துவருறத் தீர்ந்தநம் கவர்மனத்து ஊரன்
பொம்மல்அம் கதிர்முலை புணர்வுறும் கொல்எனச்
சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ
நெட்டுகிர்க் கருங்கால் தோல்முலைப் பெரும்பேய் 15

அமர்பெற்று ஒன்னலர் அறிவுறப் படர,
பேழ்வாய் இடாகினி கால்தொழுது ஏத்திக்
கையடை கொடுத்த வெள்நிண வாய்க்குழவி
ஈமப் பெருவிளக்கு எடுப்ப மற்றதன்
சுடுபொடிக் காப்புடல் துளங்கச் சுரிகுரல் 20

ஆந்தையும் கூகையும் அணிஓல் உறுத்த
ஓரிபாட்டு எடுப்ப உவணமும் கொடியும்
செஞ்செவிச் சேவல் கவர்வாய்க் கழுகும்
இட்டசெய் பந்தர் இடைஇடை கால்என
பட்டுலர் கள்ளிஅம் பால்துயில் கொள்ளும் 25

சுள்ளிஅம் கானிடை சுரர்தொழுது ஏத்த
மரகதத் துழாயும் அந்நிறக் கிளியும்
தோகையும் சூலமும் தோளில் முன்கையில்
மருங்கில் கரத்தில் வாடாது இருத்தி
போர்வலி அவுணர் புகப்பொருது உடற்றிய 30

முக்கண் பிறைஎயிற்று எண்தோட் செல்வி
கண்டுளம் களிப்ப கனைகழல் தாமரை
வானக வாவி யூடுற மலர
ஒருதாள் எழுபுவி உருவத் திண்தோள்
பத்துத் திசையுள் எட்டவை உடைப்ப 35

ஒருநடம் குலவிய திருவடி உரவோன்
கூடல்அம் பதியகம் போற்றி
நீடநின் றெண்ணார் உளமென நீயே. 38

92. பரத்தையிற் பிரிவு உரைத்தல்

பெருநிலத் தேவர்கள் மறைநீர் உகுப்ப
மற்றவர் மகத்துள் வளர்அவி மாந்த
விடையோன் அருச்சனைக்கு உரிமையன் முன்னவன்
அன்னவன் தன்னுடன் கடிகைஏழ் அமர
அன்றியும் இமையவர் கண்எனக் காட்ட 5

ஆயிரம் பணாடவி அரவுகடு வாங்க
தேவருண மருந்துடல் நீடநின் றுதவ
உடல்முனி செருவினர் உடல்வழி நடப்ப
நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற
தண்மதிக் கலைகள் தானற ஒடுங்க 10

எறிந்தெழும் அரக்கர் ஏனையர் மடிய
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப
அவன்தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க
பாசுடல் உளைமா ஏழணி பெற்ற
ஒருகால் தேர்நிறைந்து இருள்உடைத்து எழுந்த 15

செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப்
பெருந்தேன் அருந்திஎப் பேர்இசை அனைத்தினும்
முதல்இசைச் செவ்வழி விதிபெறப் பாடிஅத்
தாதுடல் துதைந்தமென் தழைச்சிறை வண்டினம்
பசுந்தாள் புல்இதழ்க் கருந்தாள் ஆம்பல் 20

சிறிதுஉவா மதுவமும் குறைபெற அருந்தி அப்
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனல்அணி ஊர!
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப
உழல்தேர் பத்தினன் மகவுஎன நாறி 25

முனிதழற் செல்வம் முற்றிப் பழங்கல்
பெண்வரச் சனகன் மிதிலையில் கொடுமரம்
இறுத்து அவன் மகட்புணர்ந்து எரிமழு இராமன்
வில்கவர்ந்து அன்னைவினை உள்வைத்து ஏவ
துணையும் இளவலும் தொடரக் கான்படர்ந்து 30

மாகுகன் நதிவிட ஊக்கி வனத்துக்
கராதி மாரீசன் கவந்தனுயிர் மடித்து
இருசிறைக் கழுகினர்க்கு உலந்தகடன் கழித்து
எறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்கு
அரிக்கு கருங்கடற்கு ஒரோஒரு கணைவிடுத்து 35

அக்கடல் வயிறுஅடைத்து அரக்கனுயிர் வௌவி
இலங்கைஅவ் அரக்கற்கு இளையோன் பெறுகஎனத்
தமதூர் புகுந்து முடிசுமந் தோர்க்கும்
நான்முகத் தவர்க்கும் இருபால் பகுத்த
ஒருநுதல் கண்ணவன் உறைதரு கூடல் 40

தெளிவேற் கண்குறுந் தொடியினர் காணின்
நின்பால் அளியமும் நீங்கி
இன்பும்இன்று ஒழிக்கும்எம் கால்தொடல் சென்மே. 43

93. பாணனை வெகுளுதல்

உளம்நகைத் துட்க ஊக்கும்ஓர் விருந்தினை
குவளைவடி பூத்தகண் தவள வாள்நகைக்
குறுந்தொடி மடந்தைநம் தோழியும் கேண்மோ!
கவிர்அலர் பூத்தசெஞ் செம்மைவில் குடுமி
மஞ்சடை கிளைத்த வரிக்குறு முள்தாள் 5

கூரரி வாளின் தோகைஅம் சேவல்
கொடியோன் குன்றம் புடைவளர் கூடல்
கணிச்சிஅம் கைத்தலத்து அருட்பெருங் காரணன்
உலகுயிர் மகவுடைப் பசுங்கொடிக்கு ஒருபால்
பகுத்துயிர்க்கு இன்பம் தொகுத்தமெய்த் துறவினன் 10

முளரிநீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்துணை
மணிமுடி சுமந்தநம் வயலணி ஊரர்பின்
வளர்மறித் தகர்எனத் திரிதரும் பாண்மகன்
எனக்குறித்து அறிகிலம் யாமே எமது
மணிஒளிர் முன்றில் ஒருபுடை நிலைநின்று 15

அன்ன ஊரர் புல்லமும் விழுக்குடிக்கு
அடாஅக் கிளவியும் படாக்கரும் புகழும்
எங்கையர் புலவியில் இகழ்ச்சியும் தம்பால்
தனதுபுன் புகழ்மொழி நீளத் தந்தும்
ஒன்றுபத்து ஆயிரம் நன்றுபெறப் புனைந்து 20

கட்டிய பொய்பாப் புனைந்துநிற்கு உறுத்தின்
பேரெழிற் சகரர் ஏழெனப் பறித்த
முரிதிரை வடிக்கும் பரிதி அம்தோழம்
காட்டையுள் இம்பரும் காணத்
தோட்டிநின் றளக்கும் தொன்மையது பெறுமே. 25

94. பாணன் புலந்து உரைத்தல்

இலவுஅலர் தூற்றி அனிச்சம் குழைத்து
தாமரை குவித்த காமர் சேவடித்
திருவினள் ஒருநகை அரிதினின் கேண்மோ
எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்
தன்னுள் தோன்றித் தான்அதில் தோன்றாத் 5

தன்னிடை நிறையும் ஒருதனிக் கோலத்து
இருவடிவு ஆகிய பழமறை வேதியன்
நான்மறைத் தாபதர் முத்தழற் கனல்புக்கு
அரக்கர் துய்த்துடற்றும் அதுவே மான
பாசடை மறைத்தெழு முளரிஅம் கயத்துள் 10

காரான் இனங்கள் சேடெறிந்து உழக்கும்
கூடற்கு இறையவன் காலற் காய்ந்தோன்
திருநடம் குறித்தநம் பொருபுனல் ஊரனை
எங்கையர் குழுமி எமக்கும் தங்கையர்ப்
புணர்த்தினன் பாண்தொழில் புல்லன்என் றிவனை 15

கோலின் கரத்தின் தோலின் புடைப்ப
கிளைமுள் செறிந்த வேலிஅம் படப்பைப்
படர்காய்க்கு அணைந்தபுன் கூழைஅம் குறுநரி
உடையோர் திமிர்ப்ப வரும்உயிர்ப்பு ஒடுக்கி
உயிர்பிரி வுற்றமை காட்டிஅவர் நீங்க 20

ஓட்டம் கொண்டன கடுக்கும்
நாட்டவர் தடையமற் றுதிர்ந்து நடந்ததுவே. 22

95. தோழிக்கு உரைத்தல்

வாய்வலம் கொண்ட வயிற்றெழு தழற்கு
ஆற்றாது அலந்து காற்றெனக் கொட்புற்று
உடைதிரை அருவி ஒளிமணி காலும்
சேயோன் குன்றகத் திருப்பெறு கூடல்
கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண் 5

பவளம் தழைத்த பதமலர் சுமந்தநம்
பொருபுனல் ஊரனை பொதுஎன அமைத்த
அக்கடி குடிமனை அவர்மனை புகுத்தி
அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோஎன
சுரைதலை கிடைத்த இசைஉளர் தண்டெடுத்து 10

அளிக்கார்ப் பாடும் குரல்நீர் வறந்த
மலைப்புள் போல நிலைக்குரல் அணைந்தாங்கு
உணவுளம் கருதி ஒளிஇசை பாட
முள்தாள் மறுத்த முண்டகம் தலையமைத்து
ஒருபால் அணைந்தஇவ் விரிமதிப் பாணற்கு 15

அடுத்தன உதவுழி வேண்டும்
கடுத்திகழ் கண்ணி அக்கல்லை இக்கணமே. 17

96. பாங்கி அன்னத்தோடு அழுங்கல்

வெறிமறி மடைக்குரல் தோல்காய்த் தென்ன
இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்தம்
பொய்வழிக் கதியகம் மெய்எனப் புகாத
விழியுடைத் தொண்டர் குழுமுடி தேய்ப்ப
தளிர்த்துச் சிவந்த தண்டையம் துணைத்தாள் 5

சேயோன் பரங்குன்று இழைஎனச் செறித்து
தமிழ்க்கலை மாலை சூடிதாவாப்
புகழ்க்கலை உடுத்துப் புண்ணியக் கணவர்
பல்நெறி வளனின் பூட்சியின் புல்லும்
தொல்நிலைக் கூடல் துடிக்கரத்து ஒருவனை 10

அன்புளத்து அடக்கி இன்பம்உண் ணாரென
சேவல் மண்டலித்துச் சினைஅடை கிடக்கும்
கைதைவெண் குருகுஎழ மொய்திரை உகளும்
உளைகடற் சேர்ப்பர் அளிவிடத் தணப்ப
நீலமும் கருங்கொடி அடம்பும் சங்கமும் 15

கண்ணிற்கு இடையில் களத்தில் கழிதந்து
அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அணுங்கலின்
வட்குடை மையல் அகற்றிஇன்பு ஒருகால்
கூறவும் பெறுமே ஆறு அதுநிற்க
இவள்நடை பெற்றும் இவட்பயின்று இரங்கியும் 20

ஓருழி வளர்ந்த நீரஇவ் அன்னம்
அன்றெனத் தடையாக் கேண்மை
குன்றும் அச்சூளினர் தம்மினும் கொடிதே. 23

97. இரவு இடை விலக்கல்

முதுகுறிப் பெண்டிர் வரத்தியல் குறிப்ப
வழிமுதல் தெய்வதம் வரைந்துமற் றதற்குப்
பருக்காடு உருத்திப் பலிமுதல் பராவக்
கிள்ளைஅவ் அயலினர் நாவுடன்று ஏத்தப்
பக்கம் சூழுநர் குரங்கம் மண்படப் 5

பெற்றுயிர்த் தயரும் பொற்றொடி மடந்தைதன்
குருமணி ஓவியத் திருநகர்ப் புறத்தும்
கரியுடன் உண்ணார் பழிஉளம் ஒத்த
இருளுடைப் பெருமுகில் வழிதெரிந்து ஏகன்மின்
அரிமான் உருத்த நூற்றுவர் மதித்த 10

புடைமனச் சகுனி புள்ளிஅம் கவற்றில்
அத்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு
ஒலிவாய் ஓதிமம் எரிமலர்த் தவிசிருந்து
ஊடுஉகள் சிரலைப் பச்சிற அருந்தும்
பழனக் குருநாடு அணிபதி தோற்று 15

முன்னுறும் உழுவலின் பன்னிரு வருடம்
கண்டீ ரவத்தொடு கறையடி வளரும்
குளிர்நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின்
அனைத்துள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதிபுக 20

ஊழ்முறையே எமக்கு உளமண் கருதிச்
சேறி என்றிசைப்ப செல்பணித் தூதினர்க்கு
ஒருகால் அளித்த திருமா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணம்குறித் தெனவே. 25

98. பருவம் குறித்தல்

அளிகள் பட்டெடுப்ப, புறவுபாட் டொடுங்க
காந்தளம் கடுக்கை கனல்தனம் மலர
கோடல் ஈன்று கொழுமுனை கூம்ப
பிடவமும் களவும் ஒருசிறை பூப்ப
வான்புறம் பூத்த மீன்பூ மறைய 5

கோபம் ஊர்தர மணிநிரை கிடப்ப
தென்கால் திகைப்ப வடகால் வளர
பொறிவிழிப் பாந்தள் புற்றளை வதிய
வரிஉடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப
இடிக்குரல் ஆனேற் றினம்எதிர் செறுப்ப 10

பொறிக்குறி மடமான் சுழித்தலைக் கவிழ
முடையுடல் அண்டர் படலிடம் புகுத
கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப
காயாக் கண்கொள முல்லை எயிறுற
முசுக்கலை பினவுடன் முழையுறை அடங்கக் 15

கணமயில் நடன்எழ காளி கூத்தொடுங்க
சாதகம் முரல்குரல் வாய்மடை திறப்ப
மாக்குயில் மாழ்கிக் கூக்குரல் அடைப்ப
பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப
உடைநறவு உண்டு வருடை வெறுப்ப 20

அகில்சுடு பெரும்புனம் உழுபதன் காட்ட
வெறிவிழிச் சவரர் மாஅடி ஒற்ற
மணந்துடன் போக்கினர்க்கு உயங்குவழி மறுப்ப
புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப
குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க 25

இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர
குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற
நிலமகள் உடலமும் திசைகளும் குளிர
ஒலிகடல் இப்பி தரளம் சூல்கொள
இவைமுதல் மணக்க எழுந்தகார் கண்டை 30

வறுநீர்மலர் என மாழ்கலை விடுமதி
மறைஅடி வருத்திய மறைவனத்து ஒருநாள்
மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்கு
இருவகை ஏழ்எனும் திருஉலகு அனைத்தும்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல 35

இருபுறம் போற்ற ஒருதேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர
பாசறை சென்ற நாள்நிலம் குழிய
எண்ணி விரல்தேய்ந்த செங்கரம் கூப்புக
கொய்தளிர் அன்ன மேனி 40

மொய்இழை பூத்த கவின்மலர்க் கொடியே! 41

99. நெறி விலக்கிக் கூறல்

வனப்புடை அனிச்சம் புகைமூழ் கியதென
இவ்வணங்கு அவ்வதர்ப் பேய்த்தேர்க்கு இடைந்தனள்
தென்திசைக் கோமகன் பகடுபொலிந் தன்ன
கறையடிச் சென்னியின் நகநுதி போக்கி
குருத்தயில் பேழ்வாய்ப் பல்படைச் சீயம் 5

அதர்தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன்
கடுங்கால் கொற்றத்து அடும்தூ துவர்எனத்
தனிபார்த்து உழலும் கிராதரும் பலரே
ஒருகால் இரதத்து எழுபரி பூட்டி
இருவான் போகிய எரிசுடர்க் கடவுள் 10

மாதவர் ஆமென மேல்மலை மறைந்தனன்
மின்பொலி வேலோய்! அன்பினர்க்கு அருளும்
கூடற் பதிவரும் ஆடற் பரியோன்
எட்டெட்டு இயற்றிய கட்டமர் சடையோன்
இருசரண் அடைந்த மறுவிலர் போல 15

அருளுடன் தமியை ஆடினை ஐய!
தண்ணீர் வாய்த்தரும் செந்நிறச் சிதலை
அதவுஉதிர் அரிசி அன்ன செந்தினை
நுண்பதம் தண்தேன் விளங்கனி முயல்தசை
வெறிக்கண் கவைஅடிக் கடுங்கால் மேதி 20

அன்புமகப் பிழைத்துக் கல்லறைப் பொழிந்த
வறள்பால் இன்னஎம் முழைஉள அயின்று
கார்உடல் அனுங்கிய பைங்கன் கறையடி
சென்னி தூக்கி நின்றன காட்டும்
நெடுமறை அதள்வேய் சில்இடக் குரம்பையில் 25

மற்றதன் தோலில் உற்றிரு வீரும்
கண்படுத்து இரவி கீறுமுன்
எண்பட நும்பதி ஏகுதல் கடனே! 28

100. ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி

வெறிக்குறுங் கதுப்பின் வெள்எயிற்று எயிற்றியர்
செம்மணி சுழற்றித் தேன்இலக்கு எறிதர
பெருக்கெடுத்து இழிதரும் வெள்ளப் பிரசக்
கான்யாரு உந்தும் கல்வரை நாட
சொல்தவறு உவக்கும் பித்தினர் சேர்புலன் 5

சிறிதிடைத் தெருள்வதும் உடனுடன் மருள்வதும்
ஆமெனக் காட்டும் அணிஇருள் மின்னலின்
நிணம்புணர் புகர்வேல் இணங்கு துணையாக
காமம் ஆறுள் கவர்தரும் வெகுளநர்
படிறுளம் கம்ழௌம் செறிதரு தீஉறழ் 10

கொள்ளிவாய்க் குணங்கு உள்ளுதோறு இவறிய
மின்மினி உமிழும் துன்னலர் கள்ளியை
அன்னைஎன்று அணைதரும் அரைஇருள் யாமத்து
கடுஞ்சுடர் இரவி விடும்கதிர்த் தேரினை
மூல நிசாசரர் மேல்நிலம் புடைத்து 15

துணைக்கரம் பிடித்தெனத் தோற்றிடும் பொழில்சூழ்
கூடல் பதிவரும் குணப்பெருங் குன்றினன்
தாமரை பழித்த இருசரண் அடையாக்
கோளினர் போலக் குறிபல குறித்தே
ஐந்தமர் கதுப்பினள் அமைத்தோள் நசைஇ 20

தருவின்கிழவன் தான்என நிற்றி
நின்னுயிர்க்கு இன்னல் நேர்தரத் திருவின்
தன்னுயிர்க்கு இன்னல் தவறில ஆ!ஆ!
இரண்டுயிர் தணப்பென எனதுகண் புணரஇக்
கொடுவழி இவ்வரவு என்றும் 25

விடுவது நெடும்புகழ் அடுவே லோயே! 26

கல்லாடம் முற்றும்.



கல்லாடம் : 1 2 3 4



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247