உதயண குமார காவியம் - Udhayanakumara Kaviyam - ஐஞ்சிறு காப்பியங்கள் - Iynchiru Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




உதயண குமார காவியம்

... தொடர்ச்சி - 3 ...

வாசவதத்தையின் ஊடல்

என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்து
சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில்
வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்
கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள். 201

உதயணன் ஊடலைப் போக்குதல்

பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன்
கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்ன
ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்
நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான். 202

இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்

நங்கைதன் மனங்கலங்கா நலம்புகழ்ந் தூடனீக்கி
வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ்வ வேபோற்
பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்
சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தானன்றே. 203

உருவிலி மதன்கணைகளுற்றுடன் சொரியப் பாய
இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல்
திரிநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய
மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே. 204

கோதையுஞ் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க
காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதினோடப்
போதவும் விடாது புல்லிப் புரவலனினியனாகி
ஏதமொன் றின்றிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில். 205

உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்

ஆனதன்னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே
ஊனுமிழ் கதிர்வேன் மன்னனுருமண்ணுவாவு தன்னைச்
சேனைநற்பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி
ஈனமி விராசனைய யெழில்வேள்வி யாற்கொ டுத்தான் . 206

உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்

சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே
இயைந்தநல் லிடபகற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த
செயந்தரு வளநன்னாடு சிறந்தவைம் பதும் அளித்து
வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தானன்றே. 207

யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்

ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல
சேதிநன்னாட்டை யூகிக் காக நற்றிறத்தினீந்து
சோதிநல்லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்
வீதி நன்னகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான். 208

உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்

பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் தூதர் வந்து
வாசகம் தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து
வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட
வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின்றானே. 209

ஓலையில் வந்த செய்தி

பிரச்சோதன னன்றா னென்னும் பெருமகனோலை தன்னை
உரவுச்சேர் கழற்கான் மிக்க வுதயண குமரன் காண்க
வரவுச்சீர்க் குருகுலத்தின் வண்மையான் கோடல் வேண்டி
வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன். 210

கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்
சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு
நலந்திகழ் தேரினேற்றி நன்குவுஞ் சயினி தன்னிற்
பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும். 211

கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும்
மாமனான் மருகனீ யென் மாமுறை யாயிற் றென்றும்
ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும்
பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான். 212

உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்

மன்னவனனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு
மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப
மன்னனு முடிய சைத்த மைச்சனை நெடிது நோக்கி
மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பினானே. 213

பிரச்சோதனன் முரசறைவித்தல்

சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கெள சாம்பியும்
பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்
ஆர்மிகு முரச மறைகென நகரில்
தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன். 214

யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்

தருமநன்னூல்வகை சாலங் காயனோ
டருமதி யூகியு மன்பினுரைத்தான்
பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்
திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான். 215

கல்விய தகலமுங் காட்சிக் கினிமையும்
சொல்லருஞ் சூட்சியுஞ் சொற் பொருட் டிண்மையும்
வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்
றெல்லையில் குணத்தினன் என்றுரை செய்தனன். 216

இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்
இன்னவ ரின்றி யிலையர சென்றே
இன்னன நீடிய வியல் பிற் பிறவுரை
மன்னவனாடி மகிழ்வித் திருந்த பின் 217

யூகியின் திருமணம்

சாலங் காயன் சகோதர மானநன்
னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்
பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்
கோலங் காரன்ன கூரெயி றாப்பியும். 218

பரதகன்றங்கை பான்மொழி வேற்கணி
திருநிலம்புகழ் திலதமா சேனையும்
பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்
அரிய யூகிக் கரசன் கொடுத்தளன். 219

சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்
நன்முது நகர்முன்னாடிப் போவெனப்
பன்மதி சனங்கள் பரவி வழிபட
வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன். 220

யூகி உதயணனை அடைதல்

வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன்
இத்தல முழுது மாளுமினியநன் மாமன் சொன்ன
ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துடனிருந்த போழ்தில்
சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் செல்வார். 221

உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்

பந்தடி காண்க வென்னப் பார்த்திபனினியனாகிக்
கலந்துகப் பூசல் காணக் களிற்றின்மீதேறி வந்து
கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப
வந்தனன் பதுமை தோழி வனப்பிராசனையென் பாளாம். 222

மகளிரின் பந்துப் போர்

ஓரெழுபந்து கொண்டே யொன்றொன்றி நெற்றிச் செல்ல
பாரெழு துகளு மாடப் பலகலனொலிப்ப வாடிச்
சீரெழு மாயி ரங்கை சிறுந்தவ ளடித்துவிட்டாள்
காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள். 223

வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக்
காய்பொனின் கலன்களார்ப்பக் கார்மயிலாட்டம் போல
ஆயிரத் தைஞ்நூறேற்றி யடித்தன ளகல வப்பால்
ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராபதிபந்து கொண்டாள். 224

சீரேறும் இமில் போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப்
பாரோர்கள் இனிது நோக்கும் பலகலஞ் சிலம்போடார்ப்ப
ஈராயிரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள்
தோராத வழகி தத்தை தோழிவிச்வ லேகை வந்தாள். 225

கருங்குழ நெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெடுத்துப்
பெருங்கலனினிதினார்ப்பப் பெய்வளை கலக லென்ன
ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ் நூ றடிட்த்து விட்டாள்
கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள். 226

ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச்
சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச்
சீரின்மூவாயிரங்கை சிறந்தவ ளடித்த பின்பு
பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதினோக்கா. 227

ஒருவரு மேற்பா ரின்றி யோர்ந்தவ ணெஞ்சங் கூர்ந்து
திருநுதன் மாது நொந்து சிறப்பின்றி யிருந்த போழ்தின்
மருவுகோ சலத்து மன்னன் மகளுரு வரிவை நாமம்
சுரிகுழன் மானனீகை சொலற்கருங் கற்பினாளே. 228

இளம்பிறை நுதல்வேற் கண்ணி யினியவிற் புருவ வேய்த்தோள்
இளங்கிளி மொழிநற் கொங்கை யீடில்பொற் கலசமல்குல்
இளமணிப் படம் பொன் வாழை யிருகுறங் காலம் பண்டி
இளம்புற வடிக ளாமை யிடைமின்பூங்குழலினாளே. 229

ஆங்கொரு காரணத்திற் றத்தைபால் வந்திருந்தாள்
பூங்கொடி தோல்வி கண்டு பொறுப்பிலா மனத்தளாகித்
தீங்குறு தத்தை தன்னைச் சீருடன் வணங்கிப் போந்து
பாங்குறு மிலக்க ணங்கள் பந்தடி பலவுஞ் சொன்னாள். 230

மூன்றுபத் திரண்டுநன் மூரிப்பந் தெடித்துடன்
தோன்றிரண்டு கையினுந் தொடுத்தினி தடித்தலும்
ஆன்றகையினோட்டலு மலங்கலுட் கரத்தலும்
ஈன்றரவினாடலு மிறைஞ்சி நிமிர்ந் தாடினாள். 231

முட்டில் கோலவட்டணை முயன்றுபத்தி யிட்டுடன்
நட்டணை நடனமு நயந்தினிதினாடவும்
பட்டுடையின் வேர்நுதற் பாங்கினிற் றுடைப்பவும்
இட்டிடை துவளவு மினியபந் தடித்தனள். 232

மானனீகையின் பந்தாட்டத்தை அனைவரும் பாராட்டுதல்

பிரிவுகொண் டனைவரும் பண்டறியோ மென்மரும்
விரிவுவான் மடந்தையோ வியந்தரியோ வென்மரும்
தரிவுவிச்சை மங்கையோ தான்பவண நாரியோ
விரிவுறிந் நிலத்திடை வேறுகண்ட தில்லென்பார். 233

காந்தணன்னறு முன்கைக் கன்னியவ் விரலினின்
ஏந்தினளெடுத்தடிக்க விறைவளை யொலிவிடப்
போந்தன விசும்பினும் பொங்குநன்னிலத்தினும்
சூழ்ந்துகந் தெழுந்தன சூறாவளிகளென்னவே. 234

பந்தாடும் மானனீகையின் நிலை

சிலம்புகிண் கிணிசில சீர்க்கலன்களார்ப்பவும்
வலம்புரி மணிவடம் வளரிள முலைமிசை
நலம்பெற வசைந்திட நங்கைபந் தடித்திடப்
புலம்புவண்டு தேனினம் பூங்குழன்மேலாடவே. 235

மானனீகையின் மீது உதயணனின் காதல்

பாடகச்சிலம்பொலி புண்ணினும் மினிதெனச்
சூடகத் தொலிநல சுரருடைய கீதமே
ஆடக மணித்தொனி யரசுளங் கவர்ந்துடன்
கூடகமனத்தினற்கு மரனினியனாயினான். 236

மானனீகையின் பந்து ஆடும் திறம்

மாறுமா றெழுவதும் வகையுடன்னிழிவதும்
வீறுமாத ராடவும் வேந்தனுடன் மாந்தரும்
கூறுமில் ளல்லது குவலயத்தினில்லையென்
றேறுபந்தினெற்றிக்கை யெண்ணாயிர மடித்தனள். 237

வாசவதத்தையின் சினம்

பிடிமிசை மாதர்போந்து பெருமணக் கோயில் புக்கார்
கடிமலர்க் கோதை மன்னன் காவிநன் விழிமானீகை
இடிமின்னி நுசுப்பினாளை யின்புறப் புணர்ந்தி ருப்பத்
துடியிடைத் தத்தை கேட்டுத் தோற்றிய சீற்றத் தானாள். 238

உதயணன் மானனீகை மணம்

துன்னிரு ணீங்கிக் காலை தூமலர் கொண்டு தத்தை
மன்னவனடிவ ணங்க மணமகிழ் வின்றி நின்ற
அன்னமென்னடையினாளை யகமகிழ் குளிரக் கூறி
மன்னன்மானீதக தன்னை மணமிகச் செய்து கொண்டான். 239

உதயணன் விரிசிகை மணம்

தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்
காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட
பூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்
தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே. 240

உதயணனின் ஆட்சிச் சிறப்பு

நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத்
துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்
திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க
நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான். 241

5. நரவாகன காண்டம்

வாசவதத்தை மசக்கை எய்துதல்

எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை
வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்
முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242

வாசவதத்தையின் விருப்பம்

நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட்
பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி
அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே. 243

உருமண்ணுவாவின் உரை

உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே. 244

இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான்
சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான்
பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான். 245

தேவன் கூற்று

பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும். 246

மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை
பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை
உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச்
சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான். 247

உதயணன் உரை

எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம்
திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி
எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன
நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான். 248

தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்

வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின்
உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள்
கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப்
புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான். 249

அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்

வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்
மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம்
உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற
பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார். 250

உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று
பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற
மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்
இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார். 251

நரவாகனன் பிறப்பு

மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு
தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்
போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச்
சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம். 252

மக்கட்குப் பெயரிடுதல்

நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன்
குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே. 253

நரவாகனன் கலைபயிலுதல்

நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி
பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே. 254

நரவாகனன் உலாப் போதல்

ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன்
மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான். 255

நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்

ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த
வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான். 256

நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்

மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு
இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று
மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்
இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே. 257

மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்

இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான்
திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று
பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே. 258

மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்

தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே
இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப
மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி
மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே. 259

வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்

அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி
இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப்
பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே. 260

வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்

கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப்
புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால். 261

மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்

மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள். 262

தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதையைக் கண்டுபீடுடைக் களையும்
தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன். 263

மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்

ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள். 264

நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்

கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே. 265

மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்

மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன். 266

மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்

வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன். 267

நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்

வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன். 268

போதி தன்வலிப் போத வுணர்ந்து தன்
காதலிற்சென்று காளைதன்னாமமும்
ஏதமில் தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன். 269

நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்

தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில் குணத் தையநீ ராரென்
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன். 270

விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென்
தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்சு லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான். 271

முனிவனின் கூற்று

வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின் 272

நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்

மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன். 273

மேனி கழ்வென மெய்த்தவர் கூறின்
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும் ரன்னினி தேறினான். 274

நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்

அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன். 275

நரவாகனனை வித்தியாதரன் காணுதல்

நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன் 276

நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்

அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும்
தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம். 277

காவலன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவிளங்கொடி புத்திரி நாமமும்
மேவி ளங்சூமநங்கவி லாசனை. 278

சுரும்பார் மாலையளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே. 279

வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள் 280

வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன்
நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன். 281

அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன். 282

அம்முனிவன்சொலரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன். 283

நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்

போவதே பொருள் புண்ணியற்கொண்டு
தேவனேயெனச் செல்வனுஞ்செலும்
காவலன்னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவலாளரோடினிதினெய்தினான். 284

நீலவேகனின் ஆசை

கன்னல் விற்கணையில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன். 285

அநங்க விலாசனை சுயம்வரம்

தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர். 286

அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்

மன்ன ரீண்டியே வந்திருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகினேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள். 287

மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்

அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்
திருமணஞ் செய்து செல்வனின்புற
இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம் 288

நரவாகனனின் திருவுலா

வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காமனேயெனக் கன்னி மங்கையர்
தாமரைக்கணாற் றான்ப ருகுநாள். 289

நரவாகனின் சிறப்புகள்

நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர் தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290

நாம விந்திரனன்க ருள்செயக்
காமனுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமனாலிரண் டொன்ற வாயிரம். 291

நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்

சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்கணத்தினி லடிப்ப டுத்தினன். 292

நரவாகனனின் வெற்றி

விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புரமிந்திரன்னென
மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன். 293

நரவாகனனின் மாட்சி

மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட
விதன மின்றிநல்வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர் 294

இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன்னாம வேலினான். 295

நரவாகனன் தந்தையைக் காண வருதல்

விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான். 296

புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன். 297

நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்

தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார். 298

உதயணன் செயல்

மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்
நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன். 299

பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்

பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநுனைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமியனரசு நாட்டினான். 300



உதயண குமார காவியம் : 1 2 3 4



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247