யசோதர காவியம் தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆனது இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு. உதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல். அரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும்.
தற்சிறப்புப்பாயிரம் கடவுள் வாழ்த்து உலக மூன்று மொருங்குணர் கேவலத் தலகி லாத வனந்த குணக்கடல் விலகி வெவ்வினை வீடு விளைப்பதற் கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். 1 நாத னம்முனி சுவ்வத னல்கிய தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள் ஏத மஃகி யசோதர னெய்திய தோத வுள்ள மொருப்படு கின்றதே. 2 அவையடக்கம் உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென எள்ளு கின்றன ரில்லை விளக்கினை உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர் கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே. 3 நூல் நுவல் பொருள் மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும் வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே. 4 நூல் முதற் சருக்கம் நாட்டுச் சிறப்பு பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை நம்பு நீரணி நாடுள தூடுபோய் வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ திம்ப ரீடில தௌதய மென்பதே. 5 நகரச் சிறப்பு திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய் வசை யிலாநகர் வானவர் போகமஃ தசைவி லாவள காபுரி தானலால் இசைவி லாதவி ராசபு ரம்மதே. 6 இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சு லாமதி சூடின மாளிகை அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால் விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே. 7 அரசனியல்பு பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன் மாரி தத்தனென் பானுளன் மன்னவன். 8 அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர் மருவு மானுயர் வானவர் போகமும் பொருவில் வீடு புணர்திற மும்மிவை தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால். 9 வேனில் வரவு நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை சரிந்த காதற் றடையில தாகவே வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள் விரிந்த தின்னிள வேனிற் பருவமே. 10 வசந்தமன்னனை வரவேற்றல் கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன வாங்கு வாகை வளைத்தன சாமரை கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி பாங்கு வண்டொடு பாடின தேனினம். 11 இதுவுமது மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர் கலந்த காதன்மை காட்டுநர் போலவே வலந்த வண்டளிர் மாவின மேயெலாம். 12 அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல் உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட வயந்த மன்னவன் வந்தன னென்றலும் நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும் வயந்த மாடு வகையின ராயினர். 13 கானும் வாவியுங் காவு மடுத்துடன் வேனி லாடல் விரும்பிய போழ்தினில் மான யானைய மன்னவன் றன்னுழை ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார். 14 ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல் என்று மிப்பரு வத்தினோ டைப்பசி சென்று தேவி சிறப்பது செய்துமஃ தொன்று மோரல மாயின மொன்றலா நன்ற லாதன நங்களை வந்துறும். 15 இதுவுமது நோவு செய்திடு நோய்பல வாக்கிடும் ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும் தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் காவல் மன்ன கடிதெழு கென்றனர். 16 அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல் என்று கூறலு மேதமி தென்றிலன் சென்று நல்லறத் திற்றெளி வின்மையால் நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத் தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன். 17 தேவியின் கோயிலை அடைதல் சண்ட கோபி தகவிலி தத்துவங் கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத் தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை கண்ட மாரி தனதிட மெய்தினான். 18 அரசன் மாரிதேவதையை வணங்குதல் பாவ மூர்த்தி படிவ மிருந்தவத் தேவி மாட மடைந்து செறிகழன் மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன் தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ. 19 மன்ன னாணையின் மாமயில் வாரணம் துன்னு சூகர மாடெரு மைத்தொகை இன்ன சாதி விலங்கி லிரட்டைகள் பின்னி வந்து பிறங்கின கண்டனன். 20 யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை ஈன மில்பலி யாக வியற்றினால் ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில் ஆன பூசனை யாற்றுத லாற்றென. 21 வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை யீடி லாத வியல்பினி லில்வழி யேட சண்ட கருமதந் தீகென நாட வோடின னன்னகர் தன்னுளே. 22 அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல் ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந் தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச் சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன் மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான். 23 சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல் வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச் சிந்தையா னெறிக்கட் டீமை தீர்த்திடும் நியம முற்றி அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான் முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ. 24 சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம் உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார் அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும் துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார். 25 சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல் அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர் எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார். 26 இளைஞர் சரிகை செல்லுதல் வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய் வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார் கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார். 27 இதுவுமது வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே. 28 மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல் அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க் கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப் புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான். 29 இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல் எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல் தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச் சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான். இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே. 30 வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித் தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல் அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில் தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான். 31 நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின் அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான். 32 அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால் அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான். 33 அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந் தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின் நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம் மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ. 34 கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும் பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும் பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம். 35 பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத் துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய் சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம். 36 (இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்) நரககதி வரலாறு முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம் அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள் உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ. 37 விலங்குகதி வரலாறு அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல் பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ. 38 மனுஷ்யகதி வரலாறு ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு விட்ட வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான். 39 தேவகதி வரலாறு இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்றோ. 40 தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும் துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத் தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே. 41 வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந் தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ. 42 மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித் தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும் அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும் ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே. 43 ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்றோ மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும் பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான். 44 அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல் அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின் நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள். 45 இதுவுமது அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும் வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந் திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்டோ. 46 இதுவுமது பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத் திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான். 47 இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம் நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள். 48 இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல் ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான் நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண். 49 இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல் ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற்றாகி அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின் வேறா யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.’ 50 இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல் உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப் பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும் அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும் பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார். 51 சித்தர் வணக்கம் ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ் வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார் வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித் தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார். 52 அருகர் வணக்கம் பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும் உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித் திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார். 53 ஆசாரியர் வணக்கம் ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார் பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித் தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார். 54 உபாத்தியாயர் வணக்கம் அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப் பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட் டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார். 55 சர்வசாது வணக்கம் பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச் சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச் சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார். 56 இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே. 57 இளைஞர் புன்முறுவல் செய்தல் கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால் இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார். மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார். 58 இளைஞர் மன்னனை வாழ்த்துதல் மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச் சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார். 59 மன்னவன் மனமாற்ற மடைதல் நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல் மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார் அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால் நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான். 60 அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல் இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் கொல் நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம். 61 இதுவுமது முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம் மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான். 62 அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல் கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற் பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும் பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார். 63 மன்னனும் வியத்தல் மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில் என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான். 64 அபயருசியின் மறுமொழி அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால் மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல் அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான். 65 வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல் அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான். 66 அபயருசியின் அறவுரை மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப் பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல் அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான். 67 இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார் எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார் அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும் மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ் செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே. 68 மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும் புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும் கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும். 69 ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும் ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா வின்பமதா மென்னா திழித் துவர்மின்’. 70 பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட் சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை. 71 இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல் அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப் பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான் உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார். 72 இரண்டாவது சருக்கம் உஞ்சயினியின் சிறப்பு வளவயல் வாரியின் மலிந்த பல்பதி அளவறு சனபத மவந்தி யாமதின் விளைபய னமரரும் விரும்பு நீர்மைய துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே. 73 அசோகன் சிறப்பு கந்தடு களிமத யானை மன்னவன் இந்திர னெனுந்திற லசோக னென்றுளன் சந்திர மதியெனு மடந்தை தன்னுடன் அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள். 74 இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே சந்திர மதியொரு தனயற் றந்தனள் எந்துயர் களைபவ னெசோத ரன்னென நந்திய புகழவ னாம மோதினான். 75 யசோதரன் மணம் இளங்களி றுழுவையி னேத மின்றியே வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால் உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான். 76 யசோமதியின் பிறப்பு இளையவ ளெழினல மேந்து கொங்கையின் விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள் வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே. 77 இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார் மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான் ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன். 78 இளமை நிலையாமை வண்டளிர் புரைதிரு மேனி மாதரார கண்டக லுறவரு கழிய மூப்பிது உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன் வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன். 79 துறவின் இன்றியமையாமை இளமையி னியல்பிது வாய வென்னினிவ் வளமையி லிளமையை மனத்து வைப்பதென் கிளைமையு மனையதே கெழுமு நம்முளத தளைமையை விடுவதே தகுவ தாமினி. 80 முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம் முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே. 81 யசோதரனுக்கு முடி சூட்டுதல் இனையன நினைவுறீஇ யசோதர னெனுந் தனையனை நிலமகட் டலைவ னாகெனக கனை மணி வனைமுடி கவித்துக் காவலன புனைவளை மதிமதி புலம்பப் போயினான். 82 யசோதரன் அரசியல் அசோகன் துறவு குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந் தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய் வரையுடை வனமது மருவி னானரோ. 83 எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக் கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன் அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான். 84 மன்னனின் மனமாட்சி திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான். 85 அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன் புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில் தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான். 86 தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால் பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல் ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான். 87 யசோதரன் பள்ளியறை சேர்தல் மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான். 88 அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல் சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக் கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல் அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள். 89 இருவரும் இன்பம் நுகர்தல் ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித் தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளார். 90 இதுவுமது மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற் படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே. 91 இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல் இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க் மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன். 92 பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல் ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச் சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத் தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே. 93 அரசி மதிமயங்குதல் பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ் அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம் விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல் மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். 94 பெண்மையின் புன்மை மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும் பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே. 95 குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல் துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன் றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள். 96 அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல் தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங் கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித் துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள். 97 தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல் அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல் கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும் நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள். 98 அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல் என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும் நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல் சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள். 99 அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல் மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற் கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள். 100 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |