உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
யசோதர காவியம் ... தொடர்ச்சி - 2 ... அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல் என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே. 101 தோழி, பாகனைக் கண்டு மீளல் மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன் ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்டாள். 102 (மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல் மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத் தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்டேன் என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள். 103 நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற் குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன் நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள். 104 பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம் நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே. 105 அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல் என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம் நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ. 106 காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல் காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன் ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக் நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள். 107 தோழியின் அச்சம் தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான் ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும் பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள். 108 இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார் ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங் கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப் பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்றாள். 109 தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள் முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே. 110 மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல் அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன் உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின் விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத் துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே. 111 மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல் துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக் கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண் செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான். 112 அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல் கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப் புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே. துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே. 113 அரசி மூர்ச்சை யெய்துதல் இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல் வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித் தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். 114 அரசி மூர்ச்சை தெளிந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல் தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்றாள். 115 அரசியின் உறுதிமொழி பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங் கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர் சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ. 116 மறைந்து நின்ற மன்னனின் செயல் என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக் கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும் சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே. 117 மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர் பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்றுண் டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். 118 இனையன பலவஞ் சிந்தித் திழிப்பொடு பழித்து நெஞ்சிற் புனைவளை யவர்கள் போகம் புறக்கணித் திட்டு மீண்டே கனவரை யனைய மார்பன் கடிகம ழமளி யேறித் தனிமுனி களிறு போலத் தானினை வெய்து கின்றான். 119 மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல் எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத் திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான். 120 இதுவுமது உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின் திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக் கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான். 121 மண்ணாசையையும் துறக்க எண்ணுதல் மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள் புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும் பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும் கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான். 122 மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல் மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை யின்பச சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.123 இதுவுமது நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும் புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த் மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே. 124 இதுவுமது புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான். 125 மன்னன், தாயிடம் சேறல் “ஆயிடை யரச னுள்ளத் தரசினை விடுப்ப வெண்ணித் தாயமர் கோயி லெய்திச் சந்திர மதிதன் முன்னர்ச் சேயிடை யிறைஞ்ச மற்றித் திரைசெய்நீ ருலக மெல்லாம நீயுயர் குடையின் வைகி நெடிதுடன் வாழ்க வென்றாள்.” 126 சந்திரமதி ஐயுறல் மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று. 127 அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல் விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான். 128 உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல் கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம். 129 ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின் மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற் கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு 130 மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள். 131 மன்னன் நெறியறிந்து கூறல் ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந் தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில் தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான். 132 என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின் என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய் மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான். 133 யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவர் தம்மைக் கொல்லின் வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. 134 அன்றியு முன்னின் முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள் கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லர் இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல விளையு மேலால் நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். 135 மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல் என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்றே சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். 136 மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக் கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற் றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால் வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். 137 உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான் அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான். 138 மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் செய்தே ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான். 139 மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல் மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே. 140 என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான். 141 ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றான். 142 அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல் இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித் தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான் அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான் எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள. 143 அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும் அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால் அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள். 144 ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான் தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே. 145 நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள் சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள். 146 மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல் நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண் புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித் துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே. 147 உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல் எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின் மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள் பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார். 148 விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல் தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண் காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ் சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார் ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம். 149 நகரத்து அறிஞர் கூறுதல் அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கெளியனல்லன் மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான் இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார். 150 இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும் நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக் கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள் மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள். 151 இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண் வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய் புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள். 152 யசோமதி முடிபுனைந்து அரசனாதல் வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச் சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான் ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான். 153 இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம் இனையது தெளிவி லாதா ரிருநில வரசு செய்கை வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். 154 மூன்றாஞ் சருக்கம் யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல் மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர் நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப் பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் புற்ற தாகு முரைக்குறு கின்றதே. 155 விந்த நாம் விலங்கலின் மன்னவன் வந்தொர் மாமயி லின்வயிற் றண்டமாய் வந்து நாளிடை நாயொடு கண்டகன் வந்தொர் வாளியி னான்மயில் வாட்டினான். 156 அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன் வம்பு வாரண முட்டையின் வைத்துடன் கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென நம்பு காமர் புளிஞிகை நல்கினான். 157 சந்தி ரம்மதி யாகிய தாயவள் வந்து மாநக ரப்புறச் சேரிவாய முந்து செய்வினை யான்முளை வாளெயிற் றந்த மிக்க சுணங்கம் தாயினாள். 158 மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக் கியலு பாயன மென்று கொடுத்தனர் மயரி யாகு மிசோமதி மன்னவன இயலு மாளிகை யெய்தின வென்பவே. 159 மன்ன னாகிய மாமயின் மாளிகை தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத் தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண் டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே. 160 அஞ்சி லோதியர் தாமடி தைவரப் பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல். 161 சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் தரைய மேகலை யாரி மைர்ந்துணும அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய இரைய வாவி யிருந்தயில் கின்றதே. 162 வந்து குப்பையின் மாசன முண்டபின் சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச் சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே. 163 நல்வ தத்தொ டறத்திற நண்ணலார கொல்வ தற்குள முன்செய் கொடுமையான ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் வெல்வ தற்கரி தால்வினை யின்பயன். 164 மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை முற்று வார்முலை யாண்முயங் குந்திறம மற்ற மாமயில் வந்தது கண்டதே. 165 அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின தப்பி லன்னது சாரன்றன் கண்களைக் குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே. 166 முத்த வாணகை யாண்முனி வுற்றனள் கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும் மத்த கத்தை மடுத்து மறித்தது தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே. 167 தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள் நாய்பின் னோடி நலிந்தது கவ்விய வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது தீமை செய்வினை செய்திற மின்னதே. 168 நாயின் வாயில் நடுங்கிய மாமயில் போய தின்னுயிர் பொன்றின மன்னவன் ஆயு மாறறி யாத விசோமதி நாயை யெற்றின னாய்பெய் பலகையால். 169 யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல் மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை இன்னல் செய்யுமோ ரேனம தாகிய தன்ன தாகு மருவினை யின்பயன். 170 சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் வந்து காரிருள் வண்ணத்த நாகமாய அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர் வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே. 171 தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற் சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர் பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே. 172 மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல் மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் உன்னு மொப்பி லுலோகித விப்பெயர் மன்னு மீனின் வடிவின தாயிற்றே. 173 சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல் சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் முந்து சன்று முதலைய தாயது வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில். 174 அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் வந்து வாயின் மடுத்தது கொண்டது கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் தந்த கொல்கென மன்னவன் சாற்றினான் 175 வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர் கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர் அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார். 176 சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல் சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்து வார்வலைப் பட்ட கராமரித தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே. 177 மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர் கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் குற்ற செய்கைக் குரித்தென வோதினார். 178 அறுத்த மீனி னவயவ மொன்றினைக் கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன சிறக்க வென்றனர் தீவினை யாளரே. 179 நின்ற கண்டத்து நீளுயிர் போமது சென்ற தன்பிறப் போர்ந்து தெளிந்தது தின்று தின்று துறக்கத் திருத்துதல் நன்று நன்றென நைந்திறந் திட்டதே 180 மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல் மன்னன் மாமயில் சூகர மாயமீன் முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே. 181 தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல் தாயி னன்னலந் தானுகர் போழ்தினில் ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே. 182 தாய்வ யிற்கரு வுட்டக ராயது போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன தாயை வாளியிற் றானுயிர் போக்கினான். 183 வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத் தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென ஆளி மொய்ம்ப னருளின னென்பவே. 184 யசோமதி பலியிடும் செய்தி கூறல் மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன் பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய் உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான் கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ. 185 இன்றெ றிந்த வெருமை யிதுதனைத் தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் நன்றி தென்றன ரந்தணர் நல்கினார நின்று பின்சில நீதிகள் ஓதினார். 186 ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற் காது காகங் கவர்ந்தன வாமெனின் தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென ஓதி னாரினி யொன்றுள தென்றனர். 187 தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி சாத நல்ல தகர்முகத் துப்படின பூத மென்றனர் புண்ணிய நூல்களின் நாத னாரத் துராதிக ணன்றரோ. 188 என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் நன்று நாமுன் வளர்க்க விடுத்தது சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின நன்றி தென்று நயந்தன ரந்தணர். 189 சென்று நல்லமிர் துண்டது தின்றனர் அன்று மன்ன னிசோதர னன்னையோ டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர் நான்மறை யாளரே. 190 இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும் அத்த லத்தக ராங்கது கேட்டபின் ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன இத்த லத்திறை யான விசோமத மத்த யானையின் மன்னவ னென்மகன். 191 இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் இதுவென் யானிவ ணின்னண மாயதே. 192 யான்ப டைத்த பொருட்குவை யாமிவை யான்வ ளர்த்த மதக்களி றாமிவை யான ளித்த குலப்பரி யாமிவை யான்வி ளைத்த வினைப்பய னின்னதே. 193 இவர்க ளென்கடைக் காவல ராயவர் இவர்க ளென்படை நாயக ராயவர் இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர் இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே. 194 என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் தன்ன மென்னடை யாளமிர் தம்மதி மன்னு தன்மறை யானொருட வைகுமோ என்னை செய்தன ளோவிவ ணில்லையால். 195 அசைய தாகி யரும்பட ரொன்றிலா இசையி லாதன யானுற வித்தலைத் தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ் வசையின மன்னவன் வானுல குய்க்குமோ. 196 பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம் மேதி னிப்பதி யாதல் விடுத்தபின் யாது செய்தன னோவினை யேனிடை யாது செய்குவ னோவுண ரேனினி. 197 சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல் இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா வினையி னாகிய வெந்துயர் தந்திடத் தனையன் மாளிகை தன்னுள நோகமுன் சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே. 198 சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்தி டங்கரு மாகிய வாடது நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து வந்து மாயிட மாகி வளர்ந்ததே. 199 வணிகர் தம்முடன் மாமயி டம்மது பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே. 200 |