பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : Raja K   |   மொத்த உறுப்பினர் : 440   |   உறுப்பினர் விவரம்
google pay   phonepe   payumoney donors button
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

மண்டல புருடர்

இயற்றிய

சூடாமணி நிகண்டு

... தொடர்ச்சி - 2 ...

தகரயெதுகை

மதலையே கொன்றை பிள்ளை மரக்கலங் கொடுங்கை தூணாம்
சிதலை நோய் துணிசொல்லென்ப சீதநீர்குளிரே மேகம்
பதலை யோர்கட்பறைப்பேர் பருவரை தாழிக்கும் பேர்
கதலியே வாழை தேற்றுக் காற்றாடி துவச நாற்பேர். 94 - 1

இதழ் பனையேடு பூவின் இத ழுதடென விம்முப்பேர்
கதழ்வு வேகங் சிறப்பாங் களி செருக்கொடு குழம்பு
மதுகமே யிருப்பை யொட்டி மதுரமாந் தராவுமாமே
சிதட னந்தகன் மூடன்பேர் திதி பக்க நிலை பேறும்பேர். 95 - 2

ஆத னாருயி ரோர் வில்லான் அங்கி யென்பது தீச் சட்டை
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர்
ஏதந் துன்பங் குற்றப் பேர் இமமே மயானங் காட்டம்
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை. 96 - 3

சூத மாமரமே வண்டு சூதுட னிரதந் தோன்றல்
சூதகமே யாசௌசந் தோகைமார் தோயாப்பூப்பாம்
பூத மா லிறந்தகாலம் புனித மைம்பூதஞ் சீவன்
மாதவந் தவம் வசந்தம் வாதமே தருக்கங் காற்றாம். 97 - 4

மதன் வலி வேள் வனப்பாம் வலித்தலே வளைத்தல் பேசல்
பதங்கம் புட்பொது விட்டிற் பேர் பலி பூசை பிச்சை நீராம்
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்டதாமே
நிதம்பமே அல்கு லென்ப நெடுமலைப் பக்கமும்பேர். 98 - 5

சதி யுரோகணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து
விதியென்ப வினை யயன்பேர் வேட்டுவன் மகநாள் வேடன்
பதி யிறை கேள்வ னூராம் பதுக்கையே பாறை தூறு
பிதிர் கதை நொடி தூவற்பேர் பிண்டமே திரளை பிச்சை. 99 - 6

ஆதியே முத னேரோடல் அருகன் மா லீசன் வேதன்
பூதியம் புவி யுடற்பேர் பொம்மலே பொலிவுஞ் சோறும்
பாதிரிப் பாடலப் பேர் பணைத்தெழு மூங்கிற்கும் பேர்
ஏதி யாயுதம் வாளென்ப இழை நூ லாபரண மாமே. 100 - 7


நிலா நிழல்
இருப்பு இல்லை
ரூ.120.00
Buy

அக்கடா
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

வாஸ்து : இந்தியக் கட்டடக் கலை
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கருப்பு வெள்ளை வானம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ஆட்கொல்லி
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

பாரதியின் பூனைகள்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கொலையுதிர் காலம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

அறம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

நான் ரம்யாவாக இருக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

செல்வ புரிக்கான விரைவுப் பாதை
இருப்பு உள்ளது
ரூ.420.00
Buy

கரும்புனல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

நவீனன் டைரி
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

அய்யா வைகுண்டர்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

கிழிபடும் காவி அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

இது நீ இருக்கும் நெஞ்சமடி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

அசுரன்: வீழ்த்தப் பட்டவர்களின் வீர காவியம்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy
சாதியே பிரம்பு கள் ளோர்தரு சிறுசண்பகப் பேர்
போத ஞானம் தோணிப்பேர் புகல் குதி ருடல் சொல் வெற்றி
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பாம்
ஓதிமம் அன்னம் வெற்பா முருத்தலே தோற்றல் கோபம். 101 - 8

சுதை மகள் கறவாத்தேனு சுண்ணச்சாந் தமுது நாற்பேர்
புதையென்ப கணையின் கட்டும் புதுமையும் மறைவு முப்பேர்
மதுவென்ப நறவுந் தேனும் வசந்தகாலமுமா மென்ப
கதை தண்டாயுதமே வார்த்தை காரணமிம் முப்பேரே. 102 - 9

சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்றேவி
மேதை தோல் புத னிறைச்சி மிக்க பேரறிவு கள்ளாம்
கோதை முன்கைத் தோற் கட்டி குழறார் காற் றொழுங்கு சேரன்
ஓதை பேரொலி மதிற்பேர் உக்கந் தீ யிடை யா னேறு. 103 - 10

அத்தர் பொன் பாதிகை கண்ணாடி சொற்பொருள் கா டோர்நாள்
புத்தகங் கோசமென்ப சித்திரப்படாமு மாமே
நத்தமே யிருளுமூரு நந்துட னிரவு நாற்பேர்
துத்த மோரிசை நாய் பாலே வயிறு கண் மருந்துஞ் சொல்லும். 104 - 11

அத்தென்ப அரைஞாண் செம்மை யசைச்சொலோ டிசைப்பு நாற்பேர்
கொத்துப் பூங்கொத்துத் தொண்டாந் தூம்பு வேய் துளை மரக்கால்
தத்தை மூத்தாள் கிளிக் காந்தழல் கிளிகடிகோல் செந்தீ
உத்தர மூழித்தீ மேலொடு மறுமொழி வடக்காம். 105 - 12

கூத்தனே யுயிர் நடன்பேர் குலங் குடி கோயில் கூட்டம்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வியுறு பதனழிவு முப்பேர்
பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர்
தீர்த்தமே விழாவு நீருந் தீர்த்தனே யருக னாசான். 106 - 13

குத்தி மண் ணடக்க மென்ப கோணம் வாள் குதிரை மூக்காம்
பத்தியே முறை யொழுக்கம் பகர் வழிபாடு முப்பேர்
அத்தி யார்கலியே யானை யத வெலும் பாகநாற்பேர்
சத்தியஞ் சபத மெய்யாந் தபுதலே சாவுங் கேடும். 107 - 14

பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர் தலமுமாகும்
கத்திகை தொடை விகற்பந் துவசமே கமழ் வாசந்தி
உத்தி செந்திரு வுருப்புச் சுணங்கு ரையாடன் முப்பேர்
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்பொறி புத லொன்றாமே. 108 - 15

சித்தரபானு செந்தீ திவாகர னாண்டொன்றின் பேர்
பத்திர மிலை வனப்புப் படைநன்மை சிறகே பாணம்
சித்திர மழ கோர்பாடல் சிறந்த விம்மித மேரண்டம்
சத்திரங் குடையே யன்னசாலை கைவிடா வேல் வேள்வி. 109 - 16

காத்திரங் கன மெய் சீற்றங் களிற்றின் முன்காலே கீரி
நேத்திரங்கண் பட்டாடை நீலியே கருமை துர்கை
கோத்திரம் புடவி தானே குலமொடு மலையுமாமே
பாத்தியே சிறுசெய் யில்லம் பகுத்தலும் வகுத்த நாமம். 110 - 17

சதமிலை யிறகு நூறு சத்தமே யோசை யோழம்
கதவமே கதவு காப்பாங் கழங்கு போய் நடங் கழற்சி
பதமூர லின்பஞ் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை
மதியோர் முன்னிலை யசைச் சொன் மாத மம்புலி புத்திப்பேர். 111 - 18

பீதகஞ் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப்பேர்
சாதகம் வானம் பாடி சனனம் பாரிட முப்பேரே
சேதகஞ் சேறு செம்மை தேயந்தா னுடம்பு நாடாம்
மாத ரோர்ரிடைச்சொல் காதல் வனப்பொடு மகளிராமே. 112 - 19

சோதி மால ருகன் பானு சுடர்விளக் கீச னோர்நாள்
பூதியே நரகஞ் செல்வந் துர்கந்தம் புழுதி நீறாம்
வீதியே தெரு நேரோடல் மேலென்ப திடம் விண் மேற்காம்
மாதிரந் திசை யாகாயம் மலை யானை நில மைம்பேரே. 113 - 20

தாது பொன்முதலா மேழும் சடமுறு தாதோரேழும்
பூதமோர் ரைந்துங் காவிக்கல்லுடன் புகலு நாற்பேர்
வேதிகை பலகை திண்ணை வெதிரேன்ப செவிடு வேணு
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை. 114 - 21

கதுப்பே யாண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளு முப்பேர்
விதப்பே கம்பித மிக்காகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம்
அதிர் பொலி நடுக்கமென்ப அகப்பாவே புரிசை மேடை
ஒதுக்கமே நடை மறைப்பாம் ஒருத்த லாண்விலங்கு வேழம். 115 - 22

பத்திரி பறவை காளி பரி யிலை பாணமைம் பேர்
அத்தரி கழுதை விண் ணெட்டகம் பரி அசலம் அம்பாம்
சத்தியே யுமை வேல் கான்றல் குடை வலி துவசந் தானாம்
சுத்தியே யகல் வெண்சங்கஞ் சுத்த மோர் கருவிக்கும்பேர். 116 - 23

புத்தன்மாலருகன் சாத்தன் பூழில்தானகில் பூமிப்பேர்
புத்தேளே புதுமை தேவாம் பூட்கை தோல் மேற்கோள் யாளி
கைத்தல்துன்னங்கைத்தற்பேர் சாறு கள் விழவு தாறாம்
முத்தமே பிரியமோட்டம் மருதநன்னிலமுத்தாமே. 117 - 24

அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவுந்நாற்பேர்
சித்தமே திட முள்ளப் பேர் சேகரந் தலை மா வேராம்
கைத்தலே சினங் கைப்பாகுங் கஞறலே பொலிவு கன்றல்
சித்தென்ப செயமே ஞானஞ் செய் யென்ப நில மேவற்பேர். 118 - 25

உத்திரஞ் சித்தரஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போ டோர்நாள்
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரலாகும்
மத்திகையே சம்மட்டி சுடர்நிலைதண்டு மாலை
மத்தென்ப தயிர்மத்தோடு மத்தமு மிருபேராமே. 119 - 26

மதர்வு மேவுதல் வனப்பு வலி யிட மிகுதி யைம்பேர்
புதவென்ப கதவோர் புல்லாம் புணர்சியே கலவி கூடல்
சித ருறி திவலை வண்டு சீலையின்துணி நாற்பேரே
அதர் வழி புழுதி யாடடின்அதரு நுண்மணலு மாமே. 120 - 27

முதலை செங்கிடை யிடங்கர் முருந்தென மெழியலாகும்
அத மிறங்குதல் பாதாங் கீழு மென்றைறுயு முப்பேர்
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியுங் காட்டும்
மத மிபமதஞ் செருக்காம் மாயையே மாயஞ் சத்தி. 121 - 28

பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் பேர்
பேதையோர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர்
வாதுவர் யானைப்பாகர் வயப்பரிமாவடிப் பேர்
மூதிரை யாதிரைப்பேர் முக்கணன் பேருமாமே. 122 - 29

தாதியே பரணி நாளும் அடிமையும் யிருபேர்சாற்றும்
போதுதான் காலம் பூவாம் போர்வை தோல் கவச மீக்கோள்
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இரியியல்பு பீடாம்
வீதலே கெடுதல் சாவே யிலம்பாடும் விளம்பு முப்பேர். 123 - 30

நகரயெதுகை

இந்தன மிசையே காட்டம் எரி யிடு கனலுமாகும்
சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம்
கந்த மிந்திரியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம்
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள். 124 - 1

அந்திலாங் கசையிடப் பேர் அணவலே அணுகல் புல்லல்
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் யிசைப்புமப்பேர்
நந்தியே சிவனு ேமுறும் நந்தி யீச்சுரனு முப்பேர்
உந்தி தேருருளே யாறே உவரி நீர் சுழியே கொப்பூழ். 125 - 2

கந்து பண்டியுளிரும்புங் கம்பமும் யாக்கைமூட்டும்
கந்துகங் குதிரை பந்தாங் கன மென்ப புயல் பாரப் பேர்
பந்து கந்துகமு மட்டுப்படர்நீர்தூந்துருத்தியும் பேர்
குந்தள மாதரோதி குழற்கொத்து குருளை முப்பேர். 126 - 3

வேந்தனே அரசன் திங்கள் வியாழ னிந்திர னாதித்தன்
காந்தார மிசை காடென்ப காழகங் கருமை தூசாம்
ஏந்தலே பெருமை மேடா மெஃ குருக்கொடு வேல் கூர்மை
கூந்தல் பெண் மயிர் பீலிப்பேர் குவலயங் குவளை பூமி. 127 - 4

அந்தரம் முடிவு பேதம் அண்டமோடிடை நாற்பேரே
கந்தரமென்ப மேகங் கழுத்தொடு மலை முழைப்பேர்
மந்தாரந் தரு மரஞ் செவ்வரத்தமு மாகுமென்ப
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை. 128 - 5

கந்தருவம் பண்வாசி கவந்த மென்பது நீர் மட்டை
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல்
செந்துவோர் நரக மோரி சீவனோ டணுவு நாற்பேர்
சிந்து நீர் முச்சீ ராறு கடல் குற ளொறுதேசப்பேர். 129 - 6

அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை
நந்தென்ப நத்தை சங்கா நாறுதல் மணமுண்டாதல்
மைந்தனே திறலோன் சேயாம் வசந்தமே வேனில் வாசம்
வந்தியர் புகழ்வோர் பேரு மலடிகள் பேருமாமே. 130 - 7

விந்தமோ ரெண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பாம்
அந்தணர் அறவோர் பார்ப்பர் அணி படை வகுப் பணிப்பேர்
அந்தகன் குருடன் கூற்றாம் அங்காரகன் றீச்செவ்வாய்
மந்தகன் சனி கூர்ப்பில்லாமனுடனு மிருபேராமே. 131 - 8

பகரயெதுகை

உப்பு மெல்லியலா ராடல் உவர் கடல் இனிமை நாற்பேர்
செப்பமே நடுநிலைப்பேர் தெருவொடு நெஞ்சுமாகும்
துப் பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை யனுபவப் பேர்
கப்பண மிரும்பிற்செய்த நெருஞ்சின்முட் கைவேலாமே. 132 - 1

தாபரம் மலைபோல் நிற்றல் சடமொடு தருவு முப்பேர்
நீப முத்தரட்டாதிப் பேர் நிமித்த நீர்க் கடம்பு மாகும்
யூபமே கவந்தம் வேள்விகுறு தம்பம் படைவகுப்பாம்
சாபமே சபித்தல் வில்லாந் தளிமமே யழகு மெத்தை. 133 - 2

சீப்பென்ப கதவிற் றாழும் சீவு கங்கமுமா மென்ப
நாப்ப ணென்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்வுறுப்பு முப்பேர்
காப்பென்ப காவலோடு கதவும் வெண்ணீருமாகும்
யாபென்ப கவிதை காட்டாம் இறால் தேன்கூ டெருது மீனே. 134 - 3

மகரயெதுகை

சமன்யமன் நடுவுமாகுஞ் சலமென்ப வயிர நீர் பொய்
கமல நீர் வனசமும்பேர் கலாஞ் சினங் கொடுமையாகும்
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர்
ஞமலி நாய் மயில் கள்ளென்ப நனை கள்ளு மலர்மொட்டும் பேர். 135 - 1

சாம மோர்வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர்
வாமமே குற ளிடப்பால் வனப்பொடு தொடையுமாமே
பூ மலர் வனப்புக் கூர்மை பொலிவொடு பிறப்புப் பூமி
ஏமமே சேமங் காவல் இன்பம் பொன் னிரவே மையல். 136 - 2

உம்பரே தேவராகும் உயர்நிலமுடன் மேலும் பேர்
வம்மென்ப புதுமை கச்சு மண நிலையின்மை நாற்பேர்
கும்பமே குட மிராசி கும்பி மத்தகமுமாகும்
கும்பென்ப சிம்பு தோடாஞ் சுகமென்ப கிளியே யின்பம். 137 - 3

ஆம்பல் வேய் கள்ளுக் கவ்வை யல்லி வங்கியமே யானை
சாம்பல் கூம்புதல் பழம்பூத் தமிழென்ப தினிமை நீர்மை
தாம்பென்ப கயிறுதானே தாமணி தனக்கும் பேராம்
காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடிமலர்க் கொம்பு நாற்பேர். 138 - 4

அம்மையே வரு பிறப்பும் அழகுமாந் தாயுமாகும்
சும்மையென்பதுவே நெற்போர் நா டொலி சுமையுஞ் சொல்லும்
செம்மை செவ்வையுஞ் சிவப்புந் திரிதலே யுலாவல் கேடாம்
கொம்மையே யிளமை வட்டங் கொங்கை கைகுவித்துக்கொட்டல். 139 - 5

அம் அழகு அசைச்சொல் நீராம் அழனந் தீ பிணமு மாகும்
கம்மென்ப தலை ஆகாயங் கனங் கானீர் விதி வெளுப்புச்
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன்
கம்மியர் கைவினைப்பேர் கண்ணாளர் தாமுமாமே. 140 - 6

வாமனங் குறள் புராண மாதிரக்கயத்தி லொன்றாம்
காமரம் அத்தநாளோ டடுப் பிசைப்பொதுவுங் காட்டும்
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புட் கட லையைம்பேரே
தேமென்ப திடந் தித்திப்புத் தேன் நாற்றந் திசை தேசப்பேர். 141 - 7

தாமம் வெற் பொழுங்கு கொன்றைச் சாந் தொளி நகரந் தாம்பு
பூ மணிக்கோவை மாலை பொருகளங் கரி யீராறாம்
சோம னோர்வள்ளல் லிந்து சுரும்பென்ப மலையும் வண்டும்
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை. 142 - 8

குமுதமே யடுப் போர்திக்கின்குஞ்சர மொலி வெண்ணெய்தல்
சிமயமே மலை வெற்புச்சி தீத் தீயே நரகு தீங்காம்
அமறலே பொலிவு துன்னல் அரிறூறு பிணக்கம் மாசு
சிமிலியே குடுமி சிக்கஞ் சிள்வீடு தானுமாமே. 143 - 9

சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மா லோரி
தும்பியே களிறு வண்டாந் துன்னலே செறிதல் சேர்தல்
கம்புளே சங்கு சம்பங்கோழி யென்றிருபேர் காட்டும்
அம்பரங் கடல் விண்தூசாம் அண்ணலே தலைவன் பீடு. 144 - 10

கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி யோர்நாள்
கும்பி சே றானை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்தாம்
உம்ப லாண்விலங்கு வேழம் உயர்குல மெழுச்சிக்கும் பேர்
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்தலர் தூற்றலாமே. 145 - 11

கம்பலை அச்சம் ஓசை கம்பிதந் துன்பம் நாற்பேர்
செம்புலம் பாலைசேருந்திணை செருக்கள மிரண்டாம்
தம்பபே கவசந் தூணாஞ் சமழ்தலே வருத்த நாணம்
கம்பமே நடுக்கந் தம்பங் கந்தனே அருகன் செவ்வேள். 146 - 12

அமரரே விபுதர் தெவ்வர் அவந்தி தாம் கிள யோரூராம்
அமுது பால் தேவருண்டியாகு மின்சுவையு முப்பேர்
அமலையே ஆரவாரம் அயினியோ டுமையுமுப்பேர்
தம மிருள் ராகுவின்பேர் சாரங்கம் விற்பொது மால் வில்லாம். 147 - 13

ஆம்பிரம் புளிமா தேமாவாம் புளிப்பினுக்கு மப்பேர்
சாம்பு பொன் பறையாமென்ப தாண்டவங் கூத்தே தாவல்
பாம்பென்ப கரை மராளம் பை யராப்படமே பச்சை
ஆம்பியே யொலி காளானாம் அயிராணி யுமை யிந்திராணி. 148 - 14

காமனே வாசவன் வேள் கழுதுந் திப்பிலியு மாகும்
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர்
சேமமே காவ லின்ப தெக்கிணம் வலந் தெற்காகும். 149 - 15

காமுகன் விடன் வேண் மாலாங் காதென்ப கொலையுங் காதும்
கோமளம் பசுவனப்புக் கூறிய இளமைக்கும் பேர்
நாமமாங் கலித்தல் மிக்கு நற்பொலி வெழுச்சி யோசை
மாமையே நிறம்வனப்பாம் மலயசஞ் சந்தந் தென்றல். 150 - 16

யகரயெதுகை

காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயங் கறி கரித்தல்
நேயம் நெய் எண்ணெய் யன்பாம் நிறமென்ப மருமங் காந்தி
ஆயமே கவற்றிற்றாயம் ஆதாயம் மாதர்கூட்டம்
சாயலென்பது மேம்பாடு தருமழகுடனே மென்மை. 151 - 1

வய நீர் புட்பொது வலிப்பேர் வயல் வௌி பழனமும் பேர்
சயம் வெற்றி சருக்கரைப் பேர் சட முடல் வஞ்சம் பொய்யாம்
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரங் கோயில்
இயமென்ப வொலியே வார்த்தை வாச்சிய மிம்முப்பேரே. 152 - 2

அயமென்ப நீர் தடாகம் ஆடு வெம்பரி யிரும்பாம்
கய மென்மை குளமே யாழங் களிறு கீழ் பெருமை தேய்வாம்
பயமென்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேரைந்தே
அயனமே வழியினாமம் ஆண்டினற் பாதியின்பேர். 153 - 3

பயி ரோலி பயிலே பைங்கூழ் பறக்கும் புட்குரலின்நாற்பேர்
கயினியே அத்தநாளுங் கைம்மையும் யிருபேர் காட்டும்
வயிரமே செற்றங் கூர்மை வச்சிரம் ஓர்மணியே சேகு
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர் இருபேர்தானே. 154 - 4

ஐயமே பிச்சையேற்குமோ டனுமானம் பிச்சை
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்ப னீச்சுர னார்பேரே
தொய்யலே யுழவுஞ் சேறும் துயருமும் மகிழ்சியும்பேர்
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரட்பேர். 155 - 5

வயவனே வீரனோடு வலியான் காதலனு மாகும்
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுத னார்பேரே
வய னிட முதரம் வீடாம் வயாக் கரு வருத்தங் காதல்
மயல் செத்தை மயக்கம் பேயாம் மறவரே வயவர் வேடர். 156 - 6

குயிலே கோகிலமுஞ் சொல்லும் கொண்டலுந் துளையு நாற்பேர்
வயமாவே குதிரை சிங்கம் மதகரி புலியு மாகும்
வியலென்ப விசாலம் பீடாம் வேய்துளை வெற்று மூங்கில்
மயிலையே மீனராசி மீ னிருவாட்சி முப்பேர். 157 - 7

சயிந்தவங் குதிரையோடு தலையு மிந்துப்பு மாகும்
குயந்தனம் இளமையோடு கூரரிவாளு முப்பேர்
நயந்தோன் நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை
பயம்பென்ப தானைவீழும்படுகுழி பள்ளமாமே. 158 - 8

இயல்நடைதமிழ் சாயற்பேர் ஏல்வையே பொழுது வாவி
குய்யென்ப கறிகரித்தல் குளிர்நறும்புகை யிரண்டாம்
செயிரென்ப சினங் குற்றப்பேர் சேடி விஞ்சையரூர் பாங்கி
உயவை காக்கணமே முல்லையுற்ற கான்யாறுமாமே. 159 - 9

செய்யலே ஒழக்கங்காவல் சேறு செய்வினை நாற்பேரே
நெய்தலே கடற்சார்பூமி நெய்தற்பூச் சாபறைபேர்
வெய்யோன் ஆதவனே தீயோன் வருப்பினன் றனக்கு மப்பேர்
ஐயையே யுமையாள் துர்கை மக ளருந்தவப் பெண் ணாசாள். 160 - 10

ஐ யழ கிடைச்சொல் கோழை யரசனோ டிருமல் சாமி
மையென்ப தஞ்சனங் கார் மல டிருள் ஆடு மாசாம்
கையிடம் படையுறுப் பொப்பனை செங்கை சிறுமை சீலம்
வையந் தே ரே றுரோணி வசுந்தரை சிவிகை யூர்தி. 161 - 11

சேய் குகன் இளமை தூரஞ் செம்மை றனசண் சிறுமை செவ்வாய்
வாய் குழ லிடம் வாய்மைப்பேர் மாருதி யனுமன் வீமன்
ஆய்தலே நுணுக்கந் தேர்தல் ஆறென்ப வழி நதிப் பேர்
வேய்தல் சூடுதல் மூடற்பேர் விநாயகன் அருகன் முன்னோன். 162 -12

அயிர் தேங்கட்டி யான்ற நுண்மணலே நுண்மை
செயல் தொழி லொழுக்க மென்ப தெய்வமே கடவு ளூழாம்
நயமென்ப மகிழ்ச்சி யின்பம் நன்மை நற்பயன் நாற்பேரே.
பெயரென்ப பெருமை கீர்த்தி பேசு நாமப் பேராமே. 163 - 13

ரகரயெதுகை

சிரகமே கரகமாகுஞ் சென்னியிற் சோடு மப்பேர்
கரகமே யாலங்கட்டி கமண்டலந் துளி நீர் கங்கை
மரபுதான் முறைமை தொன்மை மறலென்ப பிணக்குங் கூற்றும்
சரபம் எண்காற்புள்ளென்ப வரையாடு தானுமாமே. 164 - 1

இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை யரைஞாண் பொற்றேர்
அரணமே கவசங் காடே அணிமதில் வேலி நாற்பேர்
கரணம் எண் ம னாதிக் கூத்துக் கலவிக் காரண மைம்பேரே
சரணந் தாள் மறைபுகற்பேர் தன்னம் ஆன்கன்றே யற்பம். 165 - 2

உரமென்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர்
சரமென்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதேயாம்
புரமென்ப புரி முன் மெய்ப் பேர் புரவலன் வள்ளல் வேந்தன்
கரமென்ப கிரணங் செங்கை கழுதை நஞ் சிறுத்தலும் பேர். 166 - 3

அரவ நூபுர பாம் போசை ஆய்வென்ப வருத்தம் ஆய்தல்
பரவை வாரிதிப் பரப்புப் பங்கயமாதின்கூத்தே
இரலையே கலை யூதுங்கொம் பிரண்டுடன் முதனா ளென்ப
அரசு மன் னராச்சியப் பேர் அம்பி நாவாயே தெப்பம். 167 - 4

அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவெ யிரத நன்மை
சரந்தனி மணிவடம் போர் சாயக நாணற்புற்பேர்
நரந்தமென்பது நாரத்தை நாறுங்கத்தூரிக்கும்பேர்
சுருங்கையே கரந்துபண்ணும் கற்படை நுழைவியிற்பேர். 168 - 5

ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை
வார நீக்கரையே யன்பு மலைச்சாரல் கிழமை பங்காம்
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப
கோரஞ் சோழன்மா வட்டில் கொடுமை பூமொட்டு வாசி. 169 - 6

இராசிய மறைவே யோனி யிறப்பென்ப மிகுதி போக்காம்
பராகமே யிரேணுவாகும் பரிமள மலர்த்தூளும் பேர்
துரேணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்காம்
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமு மேற்கும். 170 - 7

பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல்வருத்தம்
புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டாம்
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கலும்பேர்
வரி சுணங் கெழுத்துப் பாட்டு வாரிதி இறையே நெல்லு. 171 - 8

சரி கரவளை வழிப்பேர் சராவமே யகல் சலாகை
கரியவன் சனியின்பேராங் கண்ண னிந்திரனு மாமே
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணைய நாற்பேர்
கரில் குற்றங் காழ்தலும்பேர் காதை சொற் கதையுமாமே. 172 - 9

மூறி யேறெருமை ஆற்றல் முறை பீடு நெறிவு மாமே
வாரி நீர் கதவு வெள்ள மதில் கடல் வருவாய் வட்டை
நாரி பன்னாடை பெண்ணே நறவு வின்னாணி நாற்பேர்
பாரி யேர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர். 173 - 10

அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம்
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை
குரு நிற மோர் நோய் தேயங் குரவன் பாரம் வியாழன்
அருணமென்பது மான் செம்மை ஆ டெலுமிச்சை நாற்பேர். 174 - 11

முருகு கள் ளிளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பாம்
மருமானே மருமகன் பேர் வழித்தோன்றல் பேருமாமே
இருசு பண்டியுளிரும்பு செவ்வை யென்றிருபேரென்ப
கருமையே பெருமையாகுங் கருப்பொடு வலியுமாமே. 175 - 12

கிருத்திமந் தோலே பண்ணல் கெட்டபொய் விட்டபூதம்
விருத்தியே தொழில் இலாபம் விரிபொருள் வளர்ச்சிக்கும் பேர்
துருத்தி யாற்றிடைக்குறைப்பேர் தோலுமாந் துட்டைக்கும் பேர்
அரத்தமே யரத்தம் செம்மை அரக்கொ டுற்பலங் கடம்பு. 176 - 13

சீர் செல்வந் தாளவொத்துச் சிர்த்தி காத் தண்டே பாரம்
தார் கொடிப் படை பூத்தண்டு தாமங் கிங்கிணியின்கோவை
சூரென்ப நோயே யச்சம் அஞ்சாமை யணங்குஞ் சொல்லும்
கார் நீர் வெள்ளாடு மேகங் கறுப் பிருண் மாரிக்காலம். 177 - 14

ஆர் கூர்மை ஆத்தி தேரினகத்துறு கதிருமாகும்
பீரென்ப முலையிற் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர்
வாரென்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர்
நேர் சம மீதல் பாதி நெடி லுடன்பாடு நுட்பம். 178 - 15

அருணன் சூரியன் தேர்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே.
வருணமே குல நீராகும் மகனென்ப சிறந்தோன் மைந்தன்
தரணி பா ரிரவி வெற்பாந் தையல் பெண் ணழகுமாகு
கரிணியே முழையும் வெற்புங் களிற்றொடு பிடியுங் காட்டும். 179 - 16

மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேக மைம்பேர்
ஓரி யாண்மயி ரோர்வள்ளல் முது நரி முசுவென் றோதும்
காரி யோர்வள்ள லையன் கடுச் சனி வடுகன் காக்கை
தூரிய மிடப மாடை துந்துபி யெழுதுங்கோலே. 180 - 17

பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோ
டிரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே
அரசனே வியாழன் மன்னாம் அம்பணந் தோணி யாமை
குரல் கதிர் சிறுகு மாதர்கூந்தல் யாழ்நரம்பு நாற்பேர். 181 - 18

தோரை நெல் விகற்பம் முங்கிலரிசி கைவரை சொன் முப்பேர்
ஆரையே மதில் புற்பாயாம் அகலுளே பரப் பூர் நாடே
ஓரையே மாதர் கூடி விளையாடலுட னிராசி
தாரை கண்மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை. 182 - 19

ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா
ஆர்வமமோர் நரகம் அன்பாம் அகலம் மார்பொடு விசாலம்
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணுவென்பது உயிர் நுண்மைப் பேர்
ஆர்தலே நிரைதல் உண்டல் அகளந்தான் மிடா நற்றாழி. 183 - 20

பாரமே கவசந் தோணி பல்லணம் பொறை யினோடு
நீருறுகரை வன்பார நிறை தரை நிகழ்த்தும் எண்பேர்
சுரனே யிரவி தீ நாய் துகளென்ப குற்றம் தூளாம்
சாரங்க மானும் வண்டுஞ் சாதகப்புள்ளு மாமே. 184 - 21

ஆரல் கார்த்திகை நாள் செவ்வாய் அரணுருப் பொருமீன் நாற்பேர்
சாரலே மருதயாழி னிசையொடு சைல பக்கம்
மூரலே நகை பல் சோறாம் முரம்பென்ப மேடு பாறை
கூரல் புட்சிறகு மாதர் ஓதியு மிரு பேர் கூறும். 185 - 22

சாரிகை பூவை சுங்கஞ் சுழல்காற்று தானுமாகும்
காரிகை யழகு பெண்ணே கலித்துறை யோர்நூற்கும் பேர்
வாரணங் கவசங் கோழி தடை சங்கு வாரி கைம்மா
பூருவம் முதுமை முன்பு கிழக்கென்றும் புகலலாமே. 186 - 23

ஏ ரழகு உழுபெற்றப்பேர் இராசிதா னோரை கூட்டம்
பா ருலகந் தேர்ப் பாராம் பயல் பள்ளம் பாதி சிற்றாள்
போ ரமர் சதயத்தோடு புகலு நென் முதலாஞ் சும்மை
பீருவே யச்சமுள்ளோன் பெயரொடு புருவமாமே. 187 - 24

அருப்ப மாரிட நோய் காடாம் அரணுட னூரு மப்பேர்
மரக்கால் ஆயிலியஞ் சோதி மாயவனாடல் முப்பேர்
நிரப்பென்ப மிடிநிரைப்பேர் நிறையழியாமை நீர்ச்சால்
துருக்கமே யரண் கத்தூரி குங்கும மரமுஞ் சொல்லும். 188 - 25

குருதியே சிவப்பி ரத்தங் குசனெனக் கூறு முப்பேர்
பரிதியே யூர் கோள் வட்டம் பாற்கரண் நேமி நாற்பேர்
சுருதியே யொலி வேதப்பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம்
இரதி பித்தளை பெண்யானை மதன்தேவி யிச்சை நாற்பேர். 189 - 26

புரை குற்றம் உவமை யில்லம் புழை யுயர்சியு மைம்பேரே
விரை மணஞ் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி
நரை வெள்ளையிவுளி வெண்மை நந்தி நற்சவரி நாரை
சுரை கள் ஆன்முலை துளைப்பேர் துளும்பலே திமிறல் துள்ளல். 190 - 27

மருளென்ப குறிஞ்சி யாழின்றிறத்தொடு மயக்க மும்பேர்
இருளொரு நரகம் மையல் இருளொடு கருமை யென்ப
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர்
இருபிறப் பெயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளுமாமே. 191 - 28

மருதமே யொருமரஞ்செய் மருத மந்நிலப் பாடற்பேர்
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம் பிரத்தமென்ப
தருமராசன்றான் புத்தன் சண்டனே டருகன் றானாம்
கரியென்ப திருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர். 192 - 29

கருவி பல்லியந் துணைக்காரணங்கள் யாழ் கவச மீட்டம்
பொருபடைக்கலஞ் தொடர்ச்சி புயல் பலவினைப்பேர் கூட்டம்
பரியின் பல்லணமே யாடை கசை பதின்முப்பேர் பன்னும்
சுரிகையே கவசம் வாளாந் துவை பிண்ணாக் கிறைச்சி யோசை. 193 - 30

குருகு புள் ளிளமை நாரை கொல்லுலைமூக்குங் கோழி
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி யொன்பான் பேர்சாற்றும்
முரசே யுட்டரத்தாதி பேரியமென்று மொழிய லாமே
தரளமே உருட்சி முத்தாஞ் சார்வென்ப திடமும் பற்றும். 194 - 31

முரண் வலி பகை யாமென்ப மொய்ம்பு தோள் வலியுமாகும்
உரை யென்ப கிளவி தேய்வாம் உவாத் தந்தி யிளையோன் பௌவம்
ஞெரே லொலி விரைவுமாகும் நிதி யிருநிதி பொன்னென்ப
உரு நிறம் வரிவட்டைப்பேர் ஓதனஞ் சோறே யுண்டி. 195 - 32

அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை யிந்திரன் கால் காந்தி
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில்
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை. 196 - 33

அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே யீர்வாள்
அரிதலே சயன நேமி அடல் விசி பறை யரித்தல்
பரிபுரமதனுட்பெய்த பரலோ டிவ்வா றேழைந்தாம்
அரிதமேபசுமை திக்காம் ஆற்பொறி சிரித்தற் பேரே. 197 - 34

அருவியே மலைசார் வாறும் அரிதினைத்தாளு மாகும்
அரலையே கனி வித் தாழி மரல் கழலையுமாமென்ப
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காகமு மாகும்
சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் மாண்மயிர்க்கும் பேராம். 198 - 35

திருவென்ப கமலை செல்வஞ் சிறப்பொடு முப்பேர் செப்பும்
பரிவென்பதுன்ப மின்பம் பகரும் அன்பிற்கும் பேர்
கரையே நீர்க்கரை சேர்வாகுங் கைத்து நீள்நிதி வெறுப்பாம்
சுரகுரு மகவான் றேவமந்திரி யிருபேர் சொல்லும். 199 - 36

அரற்றலே அழுகை யோசை யைதென்ப விரைவு நொய்தாம்
இரத்தஞ் சென்னீர் சிவப்பாம் இலாங்கலி யலந்தென் காந்தள்
அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமுஞ் சிவப்புமாகும்
அருச்சுன மருது வெண்மை யறிக்கைதா னறிவு பற்றாம். 200 - 37

அரந்தை யென்பது குறிஞ்சியாழிசை துன்பமாகும்
அருந்தலே யருமை யுண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல்
அரங்க மாற்றிடைக்குறைப்பேர் ஆடிடஞ் சபையுமுப்பேர்
அரங்கு பேரிடம் வட்டாடும் இடஞ் சபை மனைவி கற்பாம். 201 - 38

முருந்தென்ப மயிலின்றோகைமுதன்முள்ளுத் தவளமாகும்
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின்கூட்டமு மென்றாகும்
குரங்கு வானரம் விலங்கின்பொது மிகுகோணலாகும்
எருந் துரல் கிளிஞ்சிெ லன்பர்இடஞ் செல்வம் விசாலம் வாமம். 202 - 39

ஆரியர் மிலோச்சர் நல்லோர் ஆனென்ப யடைச்சொலாவாம்
ஆரியே கதவு சோழன் அழொடு மேன்மைக்கும் பேர்
காருகர் தந்து வாயர் கடுங்கொலையாளர் வண்ணார்
தாரகாரியென்ப காளி சண்முகந் தானுமாமே. 203 - 40

சார் கூட லொரு தாருப்பேர் சான்றோன் மான்றலைநாள் பானு
வேரென்ப மரவேர் வேர்வாம் விழைச்சு நல்லிளமை போகம்
பாரா வாரந்தான் வாரி கடற்கரை யிருபேர் பன்னும்
சாரண ரொற்றரென்ப சமண்முனிவர்க்கும் பேராம். 204 - 41

அராகஞ் சென்னிறமே பாலையாழ் முடுகியற்பாட் டாசை
கரேணுவே பிடி யானைக்குங் கடுங்கொலை யானைக்கும் பேர்
கிராணமே கிராண மூக்காங் கிளர்சிறு வட்டிலும்பேர்
கரீரமே மிடா வகத்தி கரியின்பல்லடி முளைப்பேர். 205 - 42


சூடாமணி நிகண்டு : 1 2 3சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்

கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


இதுதான் நான்
ஆசிரியர்: பிரபுதேவா
வகைப்பாடு : சினிமா
விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்

ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download

நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download

உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்


தெற்கிலிருந்து ஒரு சூரியன்
ஆசிரியர்: இந்து தமிழ் திசை
வகைப்பாடு : வரலாறு
விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00
அஞ்சல்: ரூ. 60.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com