18 ‘ஏப்ரல் முதல் வாரம் திரும்புவார்’ - என்று சிவவடி வேலு தம்பதிகள் பற்றி மறுபடி டெலக்ஸ் கிடைத்தது. குப்தாவும், ஆடிட்டரும் சித்திரை பிறந்து ஏப்ரல் பதினாறில் ஒரு முகூர்த்தம் பார்த்து அஜீத்-பார்கவி, குமரேசன்-தேவசேனா திருமணத்திற்கு ரகசியமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். ஏப்ரல் முதல் வாரமே சிவவடிவேலு தம்பதி திரும்பினால் கல்யாண ஏற்பாடுகளில் ஏதாவது குழப்பமாகலாம் என்று பயம் இருந்தது. “எங்கப்பா இங்கே ஏப்ரல் பிறந்ததுமே வந்துடாமே சிங்கப்பூரிலியோ, கோலாலம்பூரிலேயோ பத்துநாள் டூர் புரோக்ராமை நீட்டச் சொல்லுங்க. மாதவி டூர்காரன்தான் உங்க நெருங்கின தோஸ்த் ஆச்சே? இப்படி அப்பா, அம்மாவை மட்டும் லாஸ்ட் போர்டிங் பாயிண்டிலே அதிக நாள் நீட்டிக்கிறதுனாலே அடிஷனல் செலவு ஆளுக்கூடப் பரவாயில்லே. இங்கே வந்தார்னா ஏதாச்சும் நம்மை ஏப்ரல் ஃபூல் பண்ணிடுவாரு... ஜாக்கிரதை. எல்லா ஏற்பாடுமே எகிறிப் போயிரும்,” என்று குமரேசன் ஆடிட்டரை எச்சரித்தான்.
“என்ன யோசிக்கிறீங்க? கிரகங்கள், தசா புத்திகள் லாம் பின்னே எதுக்காக இருக்குங்கிறேன்! கடுக்கையூர்க் கண்ணபிரான் ஜோசியர் தலையிலே பழியைப் போடுங்க. அவரைக் கூப்பிட்டுத் தசா புத்தி சரியாகாததாலே ஏப்ரல் பதினைந்தாம் தேதி இரவு சிங்கப்பூர்லே ஃப்ளைட் பிடிச்சுப் பதினாறாந் தேதி காலையில் இங்கே வர்ற மாதிரிப் புறப்படச் சொல்லி அவர் கையெழுத்தோடவே ஒரு கேபிள் அல்லது டெலக்ஸ் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க.” “கடுக்கையூர் என்ன சொல்லுவாரோ...” “நூறு ரூபாய் தட்சிணை வையுங்க. தசா புத்தி கிரகம் சனி, குரு, ராகு, கேது எல்லாமே அப்பாலே நாம சொல்றபடியே கேக்க வச்சிடுவாரு.” உடனே கடுக்கையூராரை வரவழைத்து அவர் சொல்வதாக அதே பாணியில் கேபிள் கொடுத்தார்கள். அப்படியே அரேன்ஞ் செய்வதாக மறுநாள் பதிலும் கிடைத்து விட்டது. எல்லாரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். ஆடிட்டர் குமரேசனிடம் சொன்னார்: “நீ உங்கப்பாவைப் பத்தி அதிகமா ஒர்ரி பண்ணிக்கிறே குமரேசா! நான் பந்தயம் வேணும்னாப் போடறேன். அவர் பழைய கஞ்சத்தனம், கன்ஸர்வேடிஸம், குறுகிய மனப்பான்மை எல்லாத்தையும் விட்டுவிட்டுப் புது மனுஷனா மனசு விசாலமடைஞ்சுதான் திரும்பி வரப்போறாரு.” “எப்படி அத்தனை உறுதியாகச் சொல்றீங்க! ஏதாச்சும், அடையாளம் இருக்கா?” “அடையாளம்லாம் ஒண்ணுமில்லே! பிரயாணமும் புது இடமும் புது மனிதர்களும் எப்படிப்பட்ட ஆளையும் மாத்திப்பிடும்ங்கற உலக நியதியை வச்சு அனுமானம் பண்ணித்தான் சொல்றேன்.” “எங்கப்பா விஷயத்திலே உங்க அனுமானம் சரியா ஒத்து வராது! ‘நீருட்கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும்’னு ஒரு பழைய தமிழ்ப்பாட்டு இருக்கு சார்! அதுக்கு அர்த்தம் ‘கருங்கல் எத்தனை யுகமாகத் தண்ணீருக்குள் ஊறினாலும் அதனால் சிறிதும் கரைந்து போய் விடாது’ என்பது. எங்கப்பா மனசும் அந்தக் கருங்கல் மாதிரிதான்.” “அவர் உன்னைச் சோம்பேறி, தறுதலைன்னெல்லாம் திட்டிப்பிட்டாருங்கிறதுனாலே நீ அவர் மேலேயும் கரும்பாயிரத்தும் மேலேயும் ரொம்ப பிரெஜிடிஸ் ஆகியிருக்கே. அதுதான் உன்னோட கோபத்துக்குக் காரணம் குமரேசன்!” “கோபமாவது ஒண்ணாவது? எனக்கு அவர் மேலே இருக்கிறதெல்லாம் வெறும் பரிதாபம்தான் சார். கோபப்படறது வேறே. தேறாத கேஸ்னு பரிதாபப்படறது வேறே.” “அதெல்லாம் உனக்கு இருக்கிற வீண் பிரமை குமரேசன்! ரொம்பப் பெருந்தன்மையா உங்களை எல்லாம் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் பிஸினஸை எல்லாம் உங்கிட்டவும், தண்டபாணி கிட்டவும் ஒப்படைச்சிட்டு ஹாயாக ரிட்டயாட் ஆகிடப் போறாரு அவரு.” “கண்டிப்பாக மனமாற்றத்தோடு வருகிறார்னு சொல்கிறேன்.” “நான் இல்லேங்கிறேன். பந்தயம் என்ன சொல்லுங்க?” “ஆயிரம் ரூபாய் வெச்சுக்கலாம்.” “சீ! பிச்சைக் காசு! குருபுரம் சார்ட்டர்ட் அகௌண்ட் அஸோஸியேஷன் தலைவர், ஓட்டல் நியூ பார்கவியின் ஃபைனான்ஷியல் அட்வைஸர் உயர் திரு அனந்தசாமி சொல்ற தொகையா இது? கேவலம் சார்! ஐயாயிரம்னாவது சொல் லுங்க... உங்க மானம் கப்பலேறாது.” “சரி, தொலை. ஐயாயிரம்னே வச்சுப்போம்.” “அப்போ பந்தயத் தொகை ஐயாயிரம்னு ஃபிக்ஸ் ஆயிடிச்சி! ஆனா ஒரு மனுஷன் மாறிட்டானா இல்லியான்னு கண்டு பிடிக்கறது கொஞ்சம் ஸ்லோ பிராசஸ். நீங்களே ஐயாயிரத்தை எங்கிட்டப் பறிக்கிறதுக்காக எங்கப்பாவைத் தன்னைக் கட்சி மாறின மாதிரி நடிக்கச் சொல்லி என்னை ‘சீட்’ பண்ணிட முடியும். அதனலே அவர் பிளேன்லே இருந்து கீழே இறங்கினதும் இன்னவாக்கியம் தான் வாயிலே வரும். அந்த வாக்கியமே அவர் மாறலங்கிறதுக்கு அத்தாட்சின்னு ஒரு வாக்கியத்தை இப்பவே எழுதி நான் உங்ககிட்டே காமிக் கிறேன். அதை நீங்க ஒத்துக்கிட்டா அந்த செண்டென்ஸை அப்படியே எழுதி உங்க முன்னாடியே கவர்லே போட்டு ஒட்டி சீல் வச்சு ரெண்டு பேருக்கும் பொதுவா அதைக் குப்தாகிட்ட டெபாஸிட் பண்ணிடுவோம். எங்கப்பாவை ஏர் போர்ட்லே ரெஸிவ் பண்றப்போ, நான் எழுதிக் குடுத்த செண்டென்ஸைத் தான் அவர் முதல்லே சொல்றாரான்னு அவர் வந்து இறங்கினப்புறம் குப்தா சீல் வச்ச கவரைப் பிரிச்சுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அவர் பேசற முதல் வாக்கியமும் சீல்டு கவர்லே உங்களுக்குக் காண்பிச்சப்புறம் நான் ஒட்டிச் சீல் வைச்சுக் குடுக்கிற வாக்கியமும் ஒண்ணாயிருந்தால் அன்னிக்கி - அதாவது ஏப்ரல் 16 ந் தேதி மாலைக்குள் நீங்க எனக்கு ஐயாயிரம் ரூபாய் குடுத்திடணும். அந்த மாதிரி இல்லாமே அவர் வேற வாக்கியத்தைப் பேசிட்டார்னா நான் உங்களுக்கு அதே நேரத்திற்குள் ஐயாயிரம் ரூபாய் குடுத்துடுவேன்.” “எல்லாம் சரி! ரொம்பக் காம்ப்ளிகேடட் ஆகச் சொல்றியேப்பா? அதென்ன கணக்கு? ஒரு வாக்கியம்கிற நிபந்தனை எதுக்கு? மாறியிருக்கிறாரா இல்லையான்னு உங்கப்பாவைக் கவனிச்சு முடிவு பண்ணினாப் போறாதா?” “அது ரொம்பச் சிக்கல்! அந்த ஒரு வாக்கியத்தை நீங்க சம்மதிச்சா இப்பவே எழுதிக் காண்பிக்க நான் தயார்...” “எங்கே எழுதிக் காட்டு! பார்க்கலாம்.” குமரேசன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுத் தாளை எடுத்து அவசரமாக இரண்டே இரண்டு சொற்களை எழுதி ஒரு கேள்விக் குறியையும் முடிவில் போட்டு அவரிடம் காட்டினான். அதைப் படித்துவிட்டு, “இதுக்கு என்ன அர்த்தம்? இந்த ரெண்டு வார்த்தையைத்தான் அவர் முதல்லே கேட்பார்னு சொல்றியா?” “ஆமாம்! இப்படிக் கேட்டார்னா நீங்க எனக்குப் பந்தயத் தொகை தரணும். இப்படிக் கேட்காவிட்டாலும் - வேறு எப்படிக் கேட்டாலும் நான் உங்களுக்குப் பந்தயத் தொகையைத் தரணும். தந்து விடுவேன்.” “அப்படியானா எனக்குத்தான் சான்ஸ் அதிகம். சம்மதிக்கிறேன்” என்றார் ஆடிட்டர். திட்டமிட்டபடியே அந்தத் துண்டுத் தாளை ஒரு கவரில் போட்டு நாலு முனையிலும் நடுவிலும் அரக்கு சீல் வைத்து விவரம் சொல்லி இருவருமாகக் குப்தாவிடம் போய்க் கொடுத்தார்கள். குப்தா கேட்டான், “இதிலே நான் உங்க ரெண்டு பேருக்கும் ரெஃபரியா? விரக்தியிலே இரண்டு பேருமாச் சேர்ந்து ரெஃபரியை உதைக்க மாட்டீங்களே?” “அதெல்லாம் உங்களுக்கு எந்த அபாயமும் வராது. பிளேன்ல இருந்து இறங்கினதும் எங்கப்பா பேசற வாக்கியமும் இந்த சீல்டு கவருக்குள்ள எழுதி வச்சிருக்குற வாக்கியமும் ஒண்ணா இருந்தா நான் ஜெயிக்கிறேன். இல்லாட்டி மிஸ்டர் அனந்த் ஜெயிக்கிறார்,” என்றான் குமரேசன். “சரி! உங்க இரண்டு பேரிட்டவும் பணப் புழக்கம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன். அதான் பந்தயம் கிந்தயம்ன்னு ஐயாயிரம் ரூபாயை வாரி விடறீங்க!” “கவலையே படாதீங்க! பணம், அறிவு ஜீவிப் பட்டம் ரெண்டுமே எனக்குத்தான்,” என்று தீர்மானமாகப் பதில் வந்தது குமரேசனிடமிருந்து. “அப்படி என்னதான் இதுக்குள்ளே எழுதி சீல் வச்சிருக்கீங்க? நான் பிரிச்சுப் பார்க்கலாமா?” “இப்பப் பிரிக்கப்படாது மிஸ்டர் குப்தா! எங்கப்பா வந்து இறங்கி முதல் வாக்கியத்தைப் பேசினதும் பிரிக்கலாம்.” “படு மர்மமாக இருக்கிறதே?” “மர்மம்தான்! கவரைப் பத்திரமாக வச்சிக்குங்க. சீல் உடைஞ்சிருந்தா ஒத்துக்க மாட்டோம்.” “பயமுறுத்தாதீங்க. பத்திரமா இருக்கும். குப்தா இருவருக்கும் உறுதி கூறி அனுப்பினான். அவனிடம் கவரை அளித்துவிட்டுத் திரும்பும்போது மறுபடியும் ஆடிட்டர் குமரேசனைப் பிடித்துக் கொண்டார். “அது எப்படி அப்பா அத்தனை கரெக்டா இப்படித்தான் எங்கப்பா கேட்பார்னு என்னமோ கம்ப்யூட்டர்லே புரோக்ராம் பண்ணிவச்சு ஆன்ஸர் வரவழைச்ச மாதிரி உன்னாலே எழுதிக் குடுக்க முடியுது?” “ஆடிட்டர் சார்! அதுதான் பட்டிமன்ற மூளை! எதிரி என்ன பேசுவார்னு தீர்மானிச்சு முன்கூட்டியே அதைச் சமாளிக்க நம்மைத் தயார் பண்ணிக்கிற சாமர்த்தியம் பட்டி மன்றங்கள் எனக்குக் கற்றுத் தந்த செல்வம்.” “சும்மாப் புருடா விடாதே அப்பனே! இதிலே என்னமோ இருக்கு. இல்லாட்டி நீ இத்தினி துணிச்சலாப் பந்தயம் போடமாட்டே?” “நீங்க மெல்ல இப்போ பேக் அடிக்கிற மாதிரித் தெரியுதே ஆடிட்டர் சார்! விஷயம் முடிஞ்சுது. இனிமேல் பந்தயம் பந்தயம்தான். இப்போ வேறே விஷயம் எதினாச்சும் பேசுங்க. இது போதும்” என்றான் குமரேசன். ஆடிட்டருக்குத் தைரியமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கச்சத்தீவு வகைப்பாடு : அரசியல் இருப்பு உள்ளது விலை: ரூ. 160.00தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |