12 “இதுவா வங்கில குடுத்தாங்க? பெரியவரே, பாரும், வேற இருக்கும். இது ரசீதில்ல...?” முருகேசு விதிர் விதிர்க்க விழிக்கிறான். “இது வங்கி ரசீதில்ல? இதுதா அந்தப்பய குடுத்தான்? பத்திரமாக அந்தப் பைக்குள் வைத்துப் பெட்டிக்குள் தான் வைத்திருந்தான்...!” “இது சும்மா எதோ போஸ்டாபீசு ரசீது, முத்திரையிருக்குப் பாரும்?”
இந்தத் தீர்மானத்துடன் அவன் தாயகம் திரும்புவோர் அலுவலகத்தில் குந்தியிருக்கும் பழனிவேலுவிடம் அந்த ரசீதைக் கொடுத்து மேலே ஒரு ஐநூறு பணம் எடுக்க வேண்டும் என்று கோருகிறான். அவன் இந்த ரசீது வங்கி ரசீதே இல்லை, என்று நம்பிக்கை வேரைச் சரக்கென்று வெட்டிப் போட்டு விட்டானே? அலையக் குலைய வீட்டுக்கு வந்து பெட்டியைத் திறக்கிறான். அதில் சுகந்தியின் சீலைகள் ஜாக்கெட் தவிர, தனது சாமான் என்று வைத்திருக்கும் பையை எடுக்கிறான். பைக்குள்... குமரு விட்டுப் போன அந்தக் குழந்தை ஃபிராக்... பிளாஸ்டிக் உறையில் போட்டோ படம், மற்றும் அத்தாட்சிச் சான்றுகள், பாஸ்போர்ட் - வேறு காகிதமே இல்லையே? இவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, பச்சை வேலு கொண்டு வந்து கொடுத்த ரசீது இதுதான்... மறுபடியும் ஓடுகிறான், பையையே தூக்கிக் கொண்டு. பழனி எல்லாவற்றையும் பார்த்து விட்டு மீண்டும் பையில் போடுகிறான். “இது வங்கி ரசீது இல்ல. எத்தனை ரூபா பெருமான உருப்படி, யாரிட்ட குடுத்தீங்க?...” முருகேசு அழாக்குறையாகச் சொல்கிறான். “யாரு, பச்ச வேலு?...” “வரிவரியா, துண்டு தலையில கட்டிட்டு, லொரி ஓட்டுறா... அவனும் இலங்கைப் பய்யன்தா, ஒறவுகாரங்கதா, நாங்க இங்க வந்து எறங்கினப்ப, அவந்தா எல்லா ஒத்தாசையும் பண்ணினா, எங்க புள்ளக்கி, மொறக்கார...” “அதென்னமோ, ஆனா, இது வங்கி ரசீது இல்ல...” ஒருக்க, அவனே மறந்து போயி அத்த வச்சிட்டு அவனே ஞாபக மறதியில இதைக் குடுத்திட்டானா?... வீட்டுக்குச் சென்றதும் சுகந்தியிடம் கேட்கிறான். “அம்மாளம், இது என்ன ரசீது... பாத்து சொல்லு?” வெங்காயக் கையைத் துடைத்துக் கொண்டு வந்து பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதுவும் புரியத்தானில்லை. “இத பாரு, அந்தப்பய மூணு பவன் அட்டியலக் கொண்டிட்டுப் போயி வங்கில வச்சிருக்கேன்னு இத்தக் கொண்டாந்து குடுத்தா. இவம் பேச்ச நம்பி மூவாயிரம் ரூவாய எவங்கிட்டயோ தூக்கிக் குடுத்தேன். எம்புத்தியச் செருப்பாலடிக்கணும், ரோக்கியமான பயன்னு நினச்சா... இப்பிடி ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிருக்கிறா! என் கண்ணில படாம இங்க வந்திட்டுப் போயிட்டிருக்கிறான்?...” அவளுக்கு விருவிரென்று முகத்தில் சூடேறுகிறது. “அதெல்லா ஒண்ணுமில்ல. இப்பிடி ரூவாயக் குடுத்துக் காணாம போயிடிச்சேன்னு நெதம் சொல்றாரு. மதராசி வரயிலும் போயிப் புடிச்சிரலாம்னுதா இன்னமும் சொல்றாரு. அதனால உங்க முகத்தில முழுக்கவே எப்பிடியோ சங்கடப்பட்டுக் கிட்டு இருக்காரு. மைத்தபடி ஒண்ணில்ல. நமக்கு மட்டுமா? ஆயிரக்கணக்கான சனங்களும் குடுத்திருக்கா...” “அவுரு ஒண்ணும் ஏமாத்தரவரு இல்ல. நீங்க, சடயம்மா சடயம்மான்னு அல்லாம் ஒண்ணாப் பாவிச்சீங்க. அவங்ககிட்ட எங்கனாலும் போயிடுச்சோ என்னமோ?...” இவனுக்குக் கடுகடுவென்று பேச நா துடிக்கிறது. அழுத்திக் கொள்கிறான். சடயம்மாவின் குடும்பம், நாதியின்றி, காற்றில் பறக்கும் பஞ்சுப் பிசிறுகளைப் போல் தலையில் மூட்டை முடிச்சுக்களுடன், பசிய மலைச்சரிவுகளின் இடையே எங்களுக்கு வாழ்வில்லை என்று நடந்து போன காட்சி நெஞ்சில் சூடு போட்டாற்போல் பதிகிறது. “மேலுக்கு முடியாம மாமி படுத்திருக்காவ. ரொட்டியும் தேத்தண்ணியும் இந்தாரும் மாமு?” என்று சிரித்துக் கொண்டு அந்தச் சிறுமி ரொட்டியும் துவையலும் வைத்த காட்சியை விட, பசி நேரத்தின் அந்த உணவின் ருசி ஈரேழு சன்மத்துக்கும் நினைவிருக்க வேண்டுமே? சுகந்திப் பொண்ணுக்கும் இவனுக்குமுள்ள தொடர்பில் அத்தகைய கசிவே தோன்றவில்லை. இப்போது அது கட்டாந்தரை வெடிப்பாக இருவரையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத இலக்குகளில் விலக்குகிறது. அன்று மாலை வேலை முடிந்து, முருகேசு மெள்ள நடந்து வருகையில், வழக்கம் போல் சாராயக்கடை வாசலில் முகம் புரியாத கும்பல் மொய்த்திருக்கிறது. இவன் கண்கள் சட்டென்று பச்சை வேலுவின் தலைக்கட்டை இனம் கண்டு கொள்கிறது. இடையே புகுந்து சட்டையைப் பற்றி இழுக்கிறான். பளாரென்று கன்னத்தில் விடுகிறான். “அயோக்கியப் பயலே? எங்கலே ரசீது? பொய்யா ஒரு கடிதாசித் துண்டக் குடுத்து ஏமாத்திப்பிட்டுத் தலை மறவாப் பதுங்கறே?...” ஏமாற்றங்கள் இழப்புக்களில் கிளர்ந்தெழும் ஆற்றாமை வெறியனாகவே அவனை ஆட்டுகிறது. சாராயக் கடை வாசலில் கூட்டம் கூடிவிடுகிறது. “ஏ...ய்யா? ஏய்யா போட்டு அடிக்கிற?...என்ன?” “பொய் ரசீதக் குடுத்துப் போட்டு வங்கில குடுத்ததுன்னு ஏமாத்திப் போட்டான்? கயவாளி... ராஸ்கோல்!” பச்சைவேலுவோ, “அடிக்காதீம்; அடிக்காதீம் மாமா...” என்று கைகளினால் தடுத்துக் கொண்டு பரிதாபமான குரலில் அழுகிறான். “நா... ஏமாத்துறவ இல்ல. மானம் மரியாதி உள்ளவ மாமு...” “மானமென்ன மானம்? என்னிக்குப் பெறந்த பூமி, பெறந்த தாய் மண்ண வுட்டு நவுந்தமோ அன்னக்கே அந்த மானம் போயிட்டதுலே, வவுறு எரியிது... எரியுதுலே...” “மாமு, தப்புதா... சத்தம் போடாம வாருங்க, வெவரமாச் சொல்லுற...” “நா என்னல இன்னும் சத்தம் போடாம வார, நீ சொல்ல? மாசக்கணக்கா, நீ எங்கண்ணில படாம நழுவிட்டிருக்கிற! ஏண்டா நழுவணும், நேர்மயா இருக்கிறவனா இருந்தா? ஏங்கிட்ட உருப்படிய வாங்கி அடமானம் வச்சிட்டு ரூபா கொண்டாந்து தந்த. ரசீதுன்னு ஒண்ணும் குடுத்த. இப்ப பாத்தா அது என்னமோ காயிதம்...” “மாமு... ஒங்கக்கு இந்த வயிசில கையில இவ்வளவு பெலமிருக்கி!” “இருக்குண்டா... கயவாளி ராஸ்கோல், என்ன நீ ஏமாத்துற? ஒம் பேச்சக் கேட்டு, மூவாயிரத்தக் கொண்டு எவங்கிட்டியோ தூக்கிக் குடுத்து அம்புட்டும் போச்சி...” “மாமா மன்னிச்சிக்குங்க... அது நீங்க மட்டுமில்ல. எல்லாரும் குடுத்திருக்கா. ...இப்ப, நா வந்து, வங்கில கூடுதல் வட்டி யாவும்னு, தெரிஞ்ச எடத்துல குடுத்துப் பணம் வாங்கிட்டு வந்தே. அவவும் ஸ்லோன் காரவுகதா, உருப்படி நம்பகமா இருக்கு. பணம் கெட்டிட்டா, வந்திடும்...” “பச்சவேலு, எனக்குள்ளாற இப்ப ஒரு காளவாயி எரியிது. அடுப்பாளா இருந்திருக்கிற. அப்பக் கூட நெருப்பு உறச்சதில்ல. இப்ப வேவுது. இத்தவுட, அன்னைக்கு நாங்க இந்த மண்ணு பச்சைன்னு வந்து எறங்கினப்ப, அது இல்லேன்னு அப்பமே உறச்சிருக்கும், நீ வந்து மாமுன்னு ஒறவு கொண்டாடிட்டு வர இல்லேன்னா ஒரேயடியா எங்கனாலும் போயிக் கசத்துல வுழுந்திருப்போம். ஊரு பேரு தெரிஞ்சி, நம்பிக்கை குடுத்து, துரோவம் பண்ணிருக்கிற நீ! ஏன்ல...?” “மாமா, துரோவம் இல்ல சத்தியமா...” “சத்தியத்தை எச்சில்ல பெரட்டாத, உருப்படிய இப்ப நீ எங்க வச்சிருக்கிறன்னு சொல்லணும், காட்டணும்...” இவர்கள் சண்டை அங்கே பழனி வேலுவைத் தள்ளி வருகிறது. “இவந்தானா, பெரியவரே?...” “ஆமாம் தம்பி...” “என்னாடா பச்சை? என்னா விசயம்?” பச்சை அழுது கொண்டே சொல்கிறான். “அண்ணே, நா நிசமா ஏமாத்தணும்னு செய்ய இல்ல... உருப்படி இ.எஸ்.எம். அண்ணாச்சி கிட்டதா வச்சிட்டே. எழுநூத்தம்பது வாங்கின. அடுத்த மாசம் குடுத்திடறே...” “அஞ்சு நூறு எனக்குக் குடுத்தான். இப்ப ஏழுநூறுன்னு சொல்றா. எது நிசமோ, முருகனுக்குத்தா வெளிச்சம்!” “இதபாருங்க, இப்ப நடு வீதில அடிச்சிட்டா, எவனாலும் பொலீசைக் கூட்டிட்டு வருவான். ஸ்லோன் ஆளுங்களே மிச்சம் குடிச்சிட்டுக் குழப்பம் பண்றானுவன்னு கூட்டிப் போய் அடிப்பான்!...” இவர்களை விலக்கி அவன் கூட்டிப் போகிறான். “உங்க உருப்படி என்ன ஆச்சின்னு நான் பார்த்துச் சொல்றே. கவலப்படாம போங்க...! இவந்தான?...” வீட்டுக்கு ஓர் ஆறுதலுடன் வருகிறான். வீட்டில் சுகந்தி இல்லை. பார்வதி வீட்டாருடன் சினிமாவுக்குப் போயிருக்கிறாள். இனி பத்தடித்த பின் இருளிலும் குளிரிலும் வருவாள்... கிழவி சாவியைக் கொடுத்து விட்டு சில பல கொச்சைகளால் மொத்தமாகத் திட்டிக் காரி உமிழ்கிறாள். இவன் கைப்பட்டுப் பூமித்தாய் வஞ்சனை செய்ததே இல்லை. கிழங்குத் தோட்டம், பொங்கிப் பூரிக்க ஒரே வரிசையாகப் பச்சை விரிந்திருக்கிறது. மண் கட்டி, கிளைத்துவிடும் வேரில் கிழங்குகளுக்கு ஊட்டமாக அணைத்துக் கொடுக்கிறான். புண்ணான இதயத்துக்கு, இந்த பூமிக் கொஞ்சல் தான் இதமாக இருக்கிறது. தேயிலைப் பச்சையைக் காட்டிலும் கிழங்குப் பச்சை பசி அவிக்கும் பச்சை. எத்தனை குவித்தாலும் தேயிலையைத் தின்று பசியாற முடியாது. அந்த மண் விரட்டி விட்டது. இது... இந்த மண்ணில், வீட்டுக்கடன் மூவாயிரம் வந்ததும், ஒரு குடிசை போட்டுக் கொண்டு, ...சுகந்தி கலியாணத்தை முடித்து விட்டு... அவ்வளவுதானா? அவ்வளவுதானா? இல்லை... குமருவை ஒரு முறை பார்க்க வேணும். அவன் குழந்தை மதறாசில் இருக்கிறது. அதை மார்போடு தழுவிக் கொண்டு, அது தாத்தா என்று தேன் பிலிற்றுவதைச் செவிமடுத்து... “உங்க பாட்டி, பூட்டி பெத்த மண்ணை உதறிட்டுப் போனா; அதன் பலன், அந்தப் பாவம், அவ பரம்பரையே அல்லாடுது. தாய் மடியை உதாசீனம் செய்யலாமா? தாய் தகப்பன்கிட்ட நாயம் கிடைக்கலேன்னா உரிமையோட சண்ட போடலாம், போராடலாம், அதுக்காவ விட்டுப் போட்டுப் போகலாமா? தாயே குடுக்காதத, மத்தவ குடுப்பாளான்னு நினைக்கணும்...” வார்த்தைகள் முண முணப்பாக உயிர்க்கின்றன. இடையில் நான்கு மாசக் குழந்தையைச் சுமந்து கொண்டு புருசனுடனும் கங்காணியுடனும் அநுராதபுரக் காடுகளில் எறும்புக் கும்பல் போல் சென்ற கும்பலில் ஒருத்தியான தாயையும் தந்தையையும் இன்று நொந்து கொள்கிறான். கட்டின புருசனும், கைக்குழந்தையும் வழியிலேயே மரித்த பின், வேறு ஒருவனைக் கட்டி, அங்கே குடும்பம் பெருக்கினாள்... இரண்டு துரோகங்கள்... முருகா... என் ஆத்தாளை நான் தப்பாக நினைக்கிறேன். மன்னிச்சிடு. நா யாருக்கும் துரோகம் நினைக்கல. புள்ளயள நல்லா வய்யி!... சற்று முன் பளிச்சென்று சிரித்த வானில் கருமேகம் மூடிக் கொள்ள, பள்ளத்தில் கரும்புகையாக அந்த மஞ்சு கவிந்து கொண்டு பசுமை, மேடு பள்ளம், சாலை, எல்லாவற்றையும் மறைக்கிறது. தொலைவில் ஒரு மணிச்சங்கு இலேசாக இழைவது போல் செவிகளில் படுகிறது. மண்வெட்டியைக் கொண்டு கிடங்கறைப் பக்கம் போட்டுவிட்டு, சாலையில் நடந்து டீக்கடைக்கு வருகிறான். டீக்கடை வாசலில், குழந்தைவேலுவும், இன்னும் சில ஆட்களும் இருக்கின்றனர். “தம்பி, சவுக்கியமா?... நல்லாருக்கீங்களா?...” “நீங்க முருகேசு இல்ல...? பொட்டம்மா வீட்டு ஷெட்டில தங்கிட்டு, ராமசாமி வூட்டுக்கு அடுத்தாப்பில இருக்கிறீங்கல்ல?...” “நீங்களும் சிரீலங்கா பைனான்சில பணம் போட்டீங்க தான?” “ஆமா, மூவாயிரம். மண்டபத்துல குடுத்த டிராஃப்ட மாத்தி அப்பிடியே குடுத்தே...” “இப்ப கேசு எடுத்திட்டுப் போறம். நீங்களும், சாங்காலமா ஆபீசுக்கு வந்து, எழுதிக் குடுங்க?...” “லோனு... அது எப்ப வரும்...?” “வூட்டு லோனா?... போகணும், ஊட்டிக்கிப் போயி, கலக்டரப் பாக்கணும். எங்க... பாத்தா, இப்ப ஆச்சி, அப்ப ஆச்சிங்கறா. அந்த காலனில, தண்ணி இல்லாம என்ன செரமப்படுறா? நேத்து ஒரு புள்ள சருக்கி வுழுந்து எலும்பு ஒடஞ்சி அசுபத்திரில போட்டிருக்கு... ஒரு குழாய் வச்சித்தரணும்னு மனுக் குடுத்து ஒரு வருசமாகப் போவுது. ஒண்ணும் நடக்க இல்ல... நீங்க வாங்க...!” பழனி வேலுவைப் பற்றி விசாரிக்கத் தோன்றுகிறது. மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விடுகிறான். ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி வைத்துக் கொண்டு, அநுபவித்து அருந்துகிறான். “இங்கவுட, கூடலூர் பக்கந்தா, வியாபாரம் உள்ள எடம். ஒரு செமை தூக்கின்னாலும் பொழக்கலாம். காபித் தோட்டம் மிச்சம் இருக்கு. குளுரு இம்புட்டு இல்ல. எப்படின்னாலும் பொழக்க முடியும். காடுங்கள்ள, வெறவு வெட்டிட்டு வந்து கூடப் பிழக்க முடியும்...” என்று அவர்களில் ஒருவன் சொல்கிறான். மரம் அறுக்கும் தொழிலாளிகள்... “எட்டுப் பேரு... ஒருத்தன் வேலை செஞ்சி பிழக்கிறது எப்படி? அங்க போனா, பொண்டுவளுக்கு, சல்லிசா தோட்டங்கள்ள வேலை கிடைக்கும்னு சொல்றா. ஒரு பலகாரம் போட்டு வித்தாக்கூடப் பொழக்கலாமாம்!” தேநீரை உறிஞ்சி விட்டு ஒருவன் குரலை இறக்குகிறான். “மிச்சம் சங்கடமா இருக்கு. பொம்பிளக, ...தெரியுமில்ல சடாச்சரத்தும் பொம்பிள, மூணு பொண்ணுக... இதா அவளுகளத் தட்டிக் கேக்க முடியல. சூடுசொரண உள்ள ஆம்பிளகதா, பாத்திட்டிருக்கிறம்...” முருகேசுவுக்கு மூளை நரம்புகளில் சுரீர் சுரீரென்று ஊசிகள் குத்தினாற்போல் அந்தக் குரலின் உட்பொருள் உறைக்கிறது. பசி வந்து விடப் பத்தும் பறந்து போகுமாம்... இனி, பறக்க ஏதேனும் மனிதனிடம் இருக்கிறதா? மாலையில் அலுவலகத்தில் பழனியும் இருக்கிறான். அங்கே கட்டாகச் சிறு புத்தகங்கள் வந்து கிடக்கின்றன. ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்க்கிறான்... ஒன்றும் புரியவில்லை. துப்பாக்கியை நீட்டிக் கொண்டு, ஒரு தமிழ்ப் படையாளி நிற்கும் பொம்மை மட்டும், அது ஈழம் சம்பந்தப்பட்டது என்று புரிகிறது. “இதெல்லாம் என்ன பொஸ்தகம் தம்பி?...” “...எல்லாம் நம்ம பிரச்சின தா. திம்பு பேச்சுவார்த்தை நடக்குதில்ல? அதில, நம்ம தோட்டத் தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் குடுக்க இல்லன்னு எழுதியிருக்கா. நம்ம லச்ச லச்சமா வந்து சாவுறோம். ஆனா, நம்ம பிரச்சின யாருக்கும் பெரிசாப் படலன்னு எழுதியிருக்கா. என்ன பிரேசனம்? இங்க நூத்துக்குத் தொண்ணுத் தெட்டாளுவளுக்கு இந்தப் பிரக்ஞையே இல்ல...” “இதாரு தம்பி புத்தகம் போட்டிருக்கா?...” “நம்ம ஆளுதா, குமார வேலன்னு...” அதற்கு மேல் என்ன சொன்னான் என்று புரியவில்லை. முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து, பார்த்தாற்போல் குளிர்ந்து போகிறான். பூரித்து, இதமான வெம்மையில் மகிழ்ந்து போகிறான். சொல்லத் தெரியாத சுகம் நாடி நரம்புகளிலெல்லாம் பாய்கிறது. “அங்க இங்க போவாரு, இங்கயும் கூட வருவா. இதுதா முதல்ல புஸ்தகம் போட்டிருக்காரு, இது மட்றாசில அச்சாகி வந்திருக்கு...” “குடும்பம், சம்சாரமெல்லாம்...?” “சம்சாரமும் படிச்சவங்க, தமிழர் பொண்ணு. அவங்க தா, தோட்டத் தொழிலாளிப் பெண்களுக்காகப் பாடுபட்டிருந்தா. இப்ப, அவங்க இயக்கத்தில இருக்காங்க... தோட்ட ஆளுங்களுக்கும் நாயம் கிடைக்கணும்ங்கற பக்கம் தா அவங்களும். இப்ப தலைமறவா இருக்கிறதாக் கேள்வி...” “குளந்தங்க இல்ல...?” “அவங்க சனங்க மட்றாசில வந்திருக்கா. ஒரு பிள்ளை அங்க இருக்குன்னு சொல்லிட்டா...” மூன்றாம் மனிதர் மூலமாக அவன் கேட்கிறான். எத்தகைய பெருமை!... என் மகன்... என் மகன்... அவனைத் தன் மகன் என்று சொல்லிக் கொண்டால், இந்தப் பழனி ஒப்புவானோ? “என்ன பெரியவரே? நா கூடலூருப் பக்கம் போற. ஞாயித்துக்கிழம, வாரீங்களா? உருப்படி அங்கதா இருக்கு.” கண்களில் கசிவைத் துடைத்துக் கொண்டு சட்டென்று நிமிருகிறான். “ஆமா, அத்த... ஒரு கிரயத்துக்குக் குடுத்துப் போட்டு, கடன் போனதும் இருக்கிறத வச்சி, ஒரு கலியாணத்தக் கட்டி வச்சிடலாம்... வார...” வீட்டுக்குச் சென்றதும் பெட்டியைத் திறந்து, பைக்குள் பத்திரமாக இருக்கும் அந்த வழுவழுத்த சந்தன வண்ணப் பிள்ளைக் கவுனைத் தன் கையினால் தடவுகிறான். புல்லரிக்கிறது. கன்றுக் குட்டியின் மேனியைப் போல் அவன் தளர்ந்த மேனி சிலிர்த்துப் போகிறது. |
ஏழாம் உலகம் ஆசிரியர்: ஜெயமோகன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 370.00 தள்ளுபடி விலை: ரூ. 335.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
ஜெயமோகன் சிறுகதைகள் ஆசிரியர்: ஜெயமோகன்வகைப்பாடு : சிறுகதை விலை: ரூ. 750.00 தள்ளுபடி விலை: ரூ. 675.00 அஞ்சல்: ரூ. 0.00 |
|