18 அவனுக்குக் குளிக்கத் தண்ணீர் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். கோசும் தேங்காயுமாகப் பொரியலும், வெங்காயம் மணக்கப் பருப்பு சாம்பாரும் ஆக்கி, விருந்தாளிக்குப் படைக்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் வாயிலில் பெரிய கூச்சல் கேட்கிறது. தேவானை வெளியே விரைந்து செல்கிறாள். “ஏண்டி தேவுடியா? துணிய மெறிச்சிட்டுப் போயி, நீ தண்ணி புடிச்சிட்டுப் போறா? ஒண்ட வந்த பறக்கயித...” வசைகள் பொல பொலக்கின்றன...
“சர்க்காரு போட்டிருக்கா, நீ முந்தி விரிச்ச பன்னாட, பறப்பன்னாட, புருசன ஓட்டி விட்டுட்டு ஊரு மேல போற கயித... சோப்புப் போட்டுத் துணிக் கசக்கி வச்சிட்டு உள்ளேந்து குடம் கழுவி வருமுன்ன, துணிய விசிறி எறிஞ்சி மெதிச்சிட்டுப் போறா! இன்னா திமிரு இருந்தா நீ துணியக் கீழ விசிறுவ...! அடீ... இந்த ஆலயம்மா ஆருன்னு உனுக்கு புரியல...! ராச்சியமா பண்ணுறிய இங்க வந்து! சாணியக் களவாடுறது, எருமுட்டயக் களவாடுறது, அசந்து மறந்தா கோளியக் கூடத் தூக்கிட்டுப் போயி முளுங்கிடற கும்பலு... கேடுகெட்டதுங்க!...” “இந்தாம்மா, ஏனிப்படி இல்லாதது பொல்லாததெல்லாம் பேசுறிய?...” மாணிக்கம் கையை உதறிவிட்டு, “தேவானை! நீ உள்ளாற வா...” என்று கத்துகிறான்... எழுந்து சென்று அவளை உள்ளே தள்ளிவந்து வாயிற் கதவைச் சாத்துகிறான். தேவானை பிழியப் பிழிய அழுகிறாள். “எந்நேரமும் வம்புச் சண்டைக்கு வலிய வருது இந்தப் பொம்பிள... ஆமாப்பா, நா வேலை செய்யிற வூட்டில அந்தப் பொம்பிள தங்கச்சி வேலை செஞ்சிட்டிருந்திச்சா. குளந்த மோதரம் காணாமப் போச்சா. எதுனாலும் சாமான் கிடச்சா, கொண்டாந்து குடுக்கமாட்டாளாம். அவங்க நிப்பாட்டிட்டு என்ன வச்சிட்டாங்களா. அதே கெரு வச்சிட்டுப் போகவரத் திட்டுறா. பொலீச வுட்டு அடிக்கச் சொல்லுவ அப்பிடி இப்பிடின்னுறா...” “கெடக்கிறாங்க, விடு. நாம எதுத்துப் பேசக் கூடாது. பதனமா, நம்மமட்டும் அடாவடிக்குப் போகாதவங்களாத்தா பொழக்கணும். நாமெல்லாம் வந்திருக்கக் கூடாது. இந்த மண்ணுல சொந்தம் கொண்டாட நமுக்கு என்னா இருக்கு? நமக்குன்னு பேசுறவங்க யாரிக்கா? நமக்கென்ன கட்சியா, சங்கமா என்ன இருக்கு?... எலக்சன்னா, அந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடு, இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுன்னு வாராங்க. மத்தபடி நமக்கென்ன இருக்கு இங்க?” கதவைச் சாத்தினாலும் வெளியே வசைமழை நின்றபாடில்லை. இப்போது புதிய கீச்சுக்குரல் இவர்கள் சார்பில் ஒலிக்கிறது. அலமேலு கிளர்ச்சியுடன் வெளியே கதவைத் திறந்து சாக்கை நீக்கிப் பார்க்கிறாள். “பேசாதடி அறிவு கெட்ட நாயி, சாராயத்த ஊத்தி போலீசுக்கும் குடுத்துக் கைக்குள்ள போட்டுக்குவே. நேயி... நேயி... தூ!...” “நீ பேசாதடீ பன்னி! நீங்கல்லாம் மனுசங்களா? கண்டவனுக்கும் முந்தி விரிக்கிற பன்னிங்க! பொஞ்சாதியக் கூட்டிவிட்டு வயிறு வளக்கிற பன்னிங்க!... இவளுவ ரோட்டோரமும் சந்தியிலும் மினுக்கிகிட்டு நிக்கிறதும் சீலையத் தூக்கி சிரிக்கிறதும்... துத்தேறி!...” “அலமேலு! கதவை மூடு...!” முருகேசு நடுங்கிப் போகிறான். மலைமேல் இவ்வளவு சீரழிவு இல்லை. எடுத்த கவளச் சோறு உள்ளே செல்ல மறுக்கிறது. “ருக்குமணி அக்காதா இவளுவளுக்குச் சரி... நாம பேசாம இருந்தா சும்மா குலச்சுக்கிட்டே இருப்பா...” “நீங்க இப்ப கதவத் துறக்க வேணாம். அது இப்பிடித் தான் புகஞ்சிட்டே இருக்கும். பொக்குனு கிளம்பும். நீ நாயி, நீ பன்னின்னு திட்டிப்பா. ஆம்பிளக இதுல தலையே குடுக்க மாட்டா. நெதம் இது பழக்கமாப் போச்சி?” “சண்ட போடற பொம்பிளயும் நம்மவங்க தானா?” ஒருவரும் ஒலி எழுப்பவில்லை. சாப்பிட்டு முடிந்த பின் பின்பக்கமே கை கழுவிக் கொள்கிறார்கள். பிறகு கட்டிலில் உட்கார்ந்து புகை பிடிக்கிறார்கள். “சமஞ்ச புள்ளய வீட்டில வச்சிக்கவும் முடியாம அனுப்பவும் முடியாம அதா கஷ்டமா இருக்கு. ஒருத்திக்குக் கட்டியே, அந்தப்பய பொஞ்சாதி புள்ளன்ற நெனப்பில்லாம இருக்கிறா. நல்லா உழைப்பா, பேசுவா சிரிப்பா, ஆனா, சூதாடுறா. அதுதா கையில பணம் தங்கறதில்ல. வூட்டுக்கு வாரதில்லன்னு அவாயி சொல்றா. வேற தொடுப்பு கிடுப்பு வச்சித் தொலைச்சிருக்கானோ என்னமோ அதும் தெரியல...” “புள்ள அலமேலு!, அந்த படத்தை எடுத்து வா, அண்ணாச்சி கிட்டக் காட்டுவம்...” சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தை அலமேலு எம்பி மெள்ள மெடுக்கிறாள். அப்படியும் அது கை நழுவி விழுகிறது. கண்ணாடி உடைந்து சிதறவில்லை. என்றாலும் கீறல் விழுந்து இரண்டு பகுதிகளாக நிற்கிறது. மாணிக்கம் எழுந்து போய் எடுக்கிறான். “பதனமா எடுக்கிறதில்ல? கண்ணாடி ஒடஞ்சி போச்சி பாரு?” கடிந்த வண்ணம் படத்தை முருகேசனுக்குக் காட்டுகிறான். “இத பாருங்க, அங்க கண்டியில எடுத்த படந்தா இது.” முருகேசு கையில் வாங்கிப் பார்க்கிறான். திடுக்கிடுகிறான். எங்கேயோ அரிக்குளிப்பாய்த் தட்டிய நெருடல் திடுக்கென்று குவிந்து முனையாய் நெஞ்சில் வந்து ஒட்டுகிறது; குத்துகிறது. இந்தப் பெண்ணின் பக்கத்தில் தலைக்கட்டும் புது வேட்டி சட்டையும் மாலையுமாக நிற்பவன் பச்சைவேலு! அட... பாவி! அதே பச்சைவேலு! ஏழெட்டு வருசங்களுக்கிப்போது முகத்தில் சிறிது அழுத்தமும் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. மற்றபடி அதே பச்சைவேலு. அதே ஆள். இதனால் தான், இவன் தாய் தகப்பன் யாரையும் கூட்டி வரவில்லை; சொல்லவில்லை. நகையைக் கொண்டு போய் வைத்தது... ஒன்றுமே இல்லாமல் இவர்களைக் குழிபறித்து... அட பாவிப் பயலே! கல்லைத் தூக்கிப் போட்டாற் போல காரியம் செய்து விட்டாயே? முருகேசுவினால் அமைதியாக இருக்க முடியவில்லை. படத்தைப் பார்க்க முடியாமல் கண்களைப் படலம் மறைக்கிறது. “இந்த... இவம் பேரென்ன?” “பச்சைவேலு... வேலுன்னுதா கூப்பிடற பழக்கம். நல்ல பயதா. சாவகாசம் மோசமாப் போயி சூதாடுறா. ரேஸ் போவா. சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கியோ போகுது. எப்படின்னாலும் பொழச்சிக்கிறவ, நாலு தொழிலும் செய்யிவான்னு அவுங்கப்பாவும் சொன்னாரு. அப்ப எட்டு சவரன் தாலிச் செயின் போட்டே. இங்க வந்து மூணு மாசத்துல அத்தக் கொண்டு போயி வித்திட்டா... இதெல்லாம் இப்ப சொல்லிப் பிரயோசனமில்ல. சூழ்நிலை சந்தர்ப்பம் மனிசன் உள்ளாற மிருகமாப் போயிடறா. அதா உங்ககிட்ட இப்ப காணிச்சித்தார. எங்கனாலும் துப்புக் கெடச்சா, காதப் புடிச்சி நீங்க இட்டாரப் பாத்தியத இருக்கு... இது உங்க புள்ளையாட்ட...” “இழுத்தாரேப்பா... இழுத்தாரேன்...” நெஞ்சு தழுதழுக்கிறது. மனிதன் மிருகமாகிப் போகிறான். இனம் இனத்தையே காலைவாரி விட்டுக் குழி பறிக்கிறது. குடும்பங்கள் குலைந்து, சமுதாயக் கட்டுக் கோப்புகள் உடைந்து, உணர்வுகள் வெறித்தனத்துக்குச் சிதறி... முருகேசு அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறான். “இவ புருசன் வீட்டில யாரிருக்காங்க?” “இதையே சொல்லிட்டிருந்தா ஓயாது. ஒரு நாலுமணி போல உங்கள நா கூட்டிட்டுப் போயி விட்டுப் போட்டு வேலைக்குப் போகணும். செத்தவாணா படுத்து ஒறங்குங்க!” முருகேசுவுக்கு உடல் அயர்வாகத்தான் இருக்கிறது. ஆனால் படுத்தால் கண்களை மூட முடிகிறதா? இருட்டுக் கடலில் குண்டடியை நினைத்துத் திகிலும், காணாமற் போன பெண்களை நினைத்த பயமுமாகப் பயணம் செய்த போதும் கூட ஏதோ பற்றிக் கொள்ள இலக்கு இருந்தாற் போல் பற்றியிருந்தான். எத்தனை எத்தனை நொடிகள் முழுகிவிடும் அவலத்தில்! முருகா முருகா என்றோ, மீனாட்சி, ஈசுவரா என்றோ எங்கோ இருக்கும் கடவுளரைக் கூவியழைத்தானே? இப்போது அந்தப் பற்றும் கூட அவனுக்குள் முழுகிப் போகிறது. கந்தன், முருகன், ஈசுவரன் தேவி எல்லாம் மனிதனுக்கு உள்ளுக்குள்ளே ஒரு தைரியம் கொடுக்க அவனாக ஏற்படுத்திக் கொண்ட ‘தாங்கிகள்’தாம். இப்போது அந்த எல்லையையும் மீறிவிட்டது அவனுக்கு நேர்ந்திருக்கும் துன்பங்கள்... அவன் என்றால், அவனல்ல - மொத்தமாக எல்லாச் சமுதாயத்தினருக்கும். இதற்கெல்லாம் யார் பொறுப்பாளி? சிங்களத்தானா? அரசா? குண்டெறியப் புறப்பட்ட விடலைகளா? யார்?... இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனால் யாரையும் குற்றவாளியாகப் பார்க்க முடியவில்லை. இதோ இந்தக் குழந்தை... இதற்கு என்ன தெரியும்? பச்சை வேலுப்பயல் ஏனிப்படித் துரோகம் செய்திருக்கிறான்? சூது, குடி, இதெல்லாமும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியிலும், நிகழ்காலத்தை மறக்க வேண்டும் என்ற வெறியிலும் தான் வருகின்றன. சிங்களத்தானை நல்லவனாக, நல்ல மனிதனாக அவன் இதயத்தோடு உணர்ந்து இருக்கிறான். அதே சிங்களத்தான் மிருகமாக நிற்கும்போது, இரத்தம் குடிக்கும் பேயாட்டாம் ஆடும் போது இது கனவோ என்று தான் மயங்கிப் போயிருக்கிறான். இதெல்லாம் போய், மனிதன் மனிதனாக எப்போது ஆகப்போகிறான்? இந்தப் போராட்டத்தில், படிப்பு, பணம், பதவி எல்லாமே வெறும் வார்த்தைகளாகப் போகின்றன. |
பீஃப் கவிதைகள் ஆசிரியர்: பச்சோந்திவகைப்பாடு : தலித்தியம் விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
அபிதா ஆசிரியர்: லா.ச. ராமாமிருதம்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 81.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|