எட்டாம் திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் ... தொடர்ச்சி - 2 ... 5. திருச்சதகம் (பக்தி வைராக்கிய விசித்திரம்)
திருப்பெருந்துறையில் அருளியது 5.1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) திருச்சிற்றம்பலம் மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5 கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6 உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7 சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8 தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9 பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வர்சுழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10 முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து முன்னாள் செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11 உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் இழிதரு காலம்எக் காலம் வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக் கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே. 12 பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும் அவன்எம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே புவன்எம் பிரான்தெரி யும்பரிசுஆவ தியம்புகவே. 13 புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல் லாமணியே தகவே எனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதே நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14 திருச்சிற்றம்பலம்
5.2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15 யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என் கடவேன் வான் ஏயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16 வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17 ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வானே. 18 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19 வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20 பரவுவார் இமையேர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21 அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22 வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23 வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24 திருச்சிற்றம்பலம்
5.3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணேர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளம்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25 வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக் கேடன் என்பாய் போல இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான் ஆனவாறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26 ஆயநான் மறையனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியர் தாம் இல்லையே அன்றி மற்று ஓர் பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27 பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப் பேசிப் பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28 வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு எண்ணம்தான் தடுமாறி இமையேர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன் வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி மலர்க்கழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத் திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29 சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30 தனியனேன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் கனியைநேர் துவர்வாயர் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31 கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் இணை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே நாயினுக்குந் தவிசு இட்டு நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32 விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற செச்சை மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. 33 தேவர்க்கோ அறியாத தேவ தேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவன் அடியர் அடியாரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34 திருச்சிற்றம்பலம் 5.4. ஆத்தும சுத்தி (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35 அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36 மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மதி இலிமட நெஞ்சே தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெச் சிவன் அவன் திரள் தோள் மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் கீறு கின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37 கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப் பாதம் முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38 அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. 39 புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை ஆண்டவன் சுழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40 வினையென் போலுடை யார்பிறர் ஆர்உடை யான்அடி நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்றுமற் றதனாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி இன்னதென் றறியேனே. 41 தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனைஎன் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு வேன்உயிர் ஓயாதே. 42 ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43 வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவன்நகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44 திருச்சிற்றம்பலம்
5.5. கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்) திருச்சிற்றம்பலம் இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன் கண்டது எவ்வமே வருக என்று பணித்தனை வானுளோர்க்கு ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45 உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே. 46 மேலை வானவ ரும்மறி யாததேர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேஇவை வந்துபோம் கால மேஉனை என்றுகொல் காண்பதே. 47 காண லாம்பர மேகட்கு இறந்ததேர் வாணி லாப் பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப் பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48 போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று ஆற்றல் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறும் கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49 கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் நள்ளும் கீழளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50 எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்கும் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51 செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 52 கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு இட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53 அறிவ னேஅமு தேஅடி நாயினேன் அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள் அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே. 54 திருச்சிற்றம்பலம் 5. 6. அநுபோக சுத்தி (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் ஈசனேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55 செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்கு இருப்ப தானேன் போரேறே. 56 போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியர் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே றாய்இங் குழல்வேனா கொடியான் உயிர்தான் உலவாதே. 57 உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங்கு உனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58 மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டுஇதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59 உடையா னேநின்றனைஉள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங்கு ஊர்நாயிற் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் முடையார் புழுக்கூ டுஇதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே. 60 முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் அடியாரைப் பிடித்த வாறும் சோராமற் சோர னேன்இங் கொருத்திவாய் துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61 தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் நானின் னடியேன் நீஎன்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாம்என் தன்மையே. 62 தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே. 63 புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன் நெகும்அன் பில்லை நினைக்காண நீஆண்டருள் அடியேனும் தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64 திருச்சிற்றம்பலம் 5.7. காருணியத்து இரங்கல் (அறுசர்ர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. 65 போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66 போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றுஇய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. 67 கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68 சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்குஇவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69 இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட்டு எம்பி ரானே. 70 எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71 ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருவஎன் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. 72 தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73 போற்றியிப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 74 திருச்சிற்றம்பலம்
5.8. ஆனந்தத்து அழுந்தல் (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம் புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75 போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. 76 ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்எம்பிரான் மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77 ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. 78 வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79 நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80 எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு ஈதலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81 ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82 சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83 இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள் கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84 திருச்சிற்றம்பலம் 9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) திருச்சிற்றம்பலம் விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் இச்சைக்கு ஆனர் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர் எம் பிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85 பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86 அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ அடியர் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87 காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88 மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையோனே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89 புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே. 90 தாராய் உடையாய் அடியேற்கு உன்தாள் இணை அன்பு பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தாள் இணை அன்புக்கு ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91 அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92 பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93 யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94 திருச்சிற்றம்பலம்
5.10. ஆனந்தாதீதம் (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் மாறு இலாத மாக் கருணை வெள்ளமே வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன் கடையன் ஆயினன் பட்ட கீழ்மையே. 95 மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து எனைப் பணிகொண்ட பின்மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக் கருது கின்றிலேன் மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96 பொருத்தம் இன்மையேன் பொய்மை உண்மையேன் போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும் வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97 இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏதுகொண்டு நான் ஏது செய்யினும் வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98 வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத்து உடைய விச்சையே. 99 விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன்கோயில் வாயிலிற் பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்கனே உடைய நாதனே. 100 உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி உடையனே பணி போற்றி உம்பரர் தம் பராபரா போற்றி யாரினும் கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101 அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம்நெக அள் ஊறு தேன் ஒப்பனே உனக்கு அரிய அன்பரில் உரியனாய் உனைப் பருக நின்றது ஓர் துப்பனே சுடர் முடியனே துணை யாளனே தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே. 102 மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன எம்பிரான் வருக என் எனைப் பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால் பன்ன எம்பிரான் வருக என் எனைப் பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103 பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடிநைந்துநைந்துருகி நெக்குநெக்கு ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத் தாடுநின்கழற்போது நாயினேன் கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104 திருச்சிற்றம்பலம் |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |