உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா இராசராச சோழன் உலா இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான். தக்கயாகப் பரணி உருவாகக் காரணம் ஆனவனும் இவனே. இவன் கி.பி. 1146-இல் அரசு கட்டில் ஏறியுள்ளான். இவனுக்குப் பல பட்டப் பெயர்கள் உண்டு. சோழேந்திர சிம்மன், கண்டன், இராச கம்பீரன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியன. இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இக்கோயில் சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்படடது. இக்கோயிலில் நாயன்மார் அறுபத்து மூவர் உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது. இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இராசராச சோழன் உலா கூறுகின்றது. இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்றுள்ளான். காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். இராசராச சோழன் உலாவில் வரும்
“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்” என்ற வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை. முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. இரண்டாம் இராஜராஜ சோழன் தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூட்டி விட்டு மரணம் அடைந்தான். புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும் 1 காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி 2 அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப் 3 பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும் நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற் 4 புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும் ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால் 5 மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப் புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த் 6 தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத் துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள் 7 சுரநதி தன்பெய ராகச் சுருதி வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர் 8 மல்லன் மரபை ரகுவின் மரபென்று சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால் 9 வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும் 10 ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர் வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது 11 சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே 12 வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத் தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு 13 குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும் வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - தரையின் 14 கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் 15 பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன் திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர் 16 கன்மலை மார்புங் கடவுள் வடமேருப் பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய 17 நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் 18 தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும் தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல் 19 ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி 20 மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித் துதகையைத் தீத்த வுரவோன் - முதுவானக் 21 கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும் மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி 22 அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன் வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை 23 பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர் 24 பாட வரிய பரணி பசுடொன்றின் கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும் 25 கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி உலகை முன்காத்த வுரவோன் - பலவும் 26 தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப் பரணி புனைந்த பருதி - முரணில் 27 புரந்தர னேமி பொருவு மகில துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென் 28 றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து சேய பெரிய திருக்குலத்து - நாயகன் 29 சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய 30 மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும் சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் 31 கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம் 32 பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி 33 திருமகன் சீராச ராசன் கதிரோன் மருமக னாகி மறித்தும் - திருநெடுமால் 34 ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப் பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற் 35 செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க வந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி 36 உடுத்த திகிரிப் பதினா லுலகும் அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக் 37 கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும் 38 தவன குலதிலகன் றன்பெருந் தேவி புவன முழுதுடைய பூவை - அவனியில் 39 எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப் பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ 40 ஓகை விளைக்கு முபய குலரத்னத் தோகை யுடனே துயிலெழுந் - தாகிய 41 மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித் தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி 42 மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் காலைக் கடவ கடன்கழித்து - மூலப் 43 பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப் 44 பவளச் சடையோன் பணித்த படியே தவளத்ரி புண்டரஞ் சாத்திக் - குவளைப்பூங் 45 கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன் போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம் 46 தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர் 47 சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப வேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி 48 அரச வலம்புரி யார்ப்ப வதன்பின் முரசொரு மூன்று முழங்கத் - திரையின் 49 சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற் கடவுட் கவிகை கவிப்ப - புடவியின் 50 மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன் தீட்டுங் கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத் 51 தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும் 52 காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர் 53 பொருவாத பூபால கோபால னென்னும் திருநாம நின்று சிறந்த - வருநாளில் 54 தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப் பொன்மாட வீதிப் பொடியடக்கத் - தன்மீது 55 கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன் பொன்மாரி பெய்யும் புயலேவப் - பின்னரும் 56 காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும் பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர் 57 காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய் மாலை வெயிலால் மறித்தொதுங்கக் - கோலப் 58 பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு மருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய 59 கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில் 60 இருபொறை தீரு மிருபாப் பரசும் இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம் 61 தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் மாமேரு வென்ன முடிவயங்கப் - பூமேற் 62 புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே குடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன் 63 கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும் தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் - பெய்கணைத் 64 தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும் பூணித் தனங்கவேண் முன்போத - மாணிக்கக் 65 கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப் பாவையாற் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது 66 செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய் வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ் 67 கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய் வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி 68 விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி கொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல் 69 குழாங்கள் விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள் மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல் 70 சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர வாள கிரியர மங்கையரும் - தோளிணையால் 71 கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த ஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின் 72 சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால் வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே 73 கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட வேதண்டலோக விமலையரும் - காதலால் 74 தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து வந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும் 75 மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள் வாரும் வரையர மாதரும் - வீரவேள் 76 வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன் தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின் 77 நிதியோடுங் கூட நிதியோ னளகைப் பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய 78 சாய லரமகளிர் தந்தந் திருமரபில் கோயி லுரிமைக் சூழாநெருங்கி - வாயிலும் 79 மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும் சூளிகையு மெம்மருங்குந் தோரணமும் - சாளரமும் 80 தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும் சுற்றிய பாங்கருந் தோன்றாமே - பற்றி 81 மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர் - தயங்கிழையீர் 82 குழாங்களின் கூற்று தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி கற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி 83 வட்ட மகோததி வேவ வொருவாளி விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச் 84 சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய 85 மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும் பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர் 86 இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட கடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்பத் 87 தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக் கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரதப் 88 பவித்ர விசயப் படைப்பரசு ராமன் கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில் 89 மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி 90 வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண் பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின் 91 றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற் 92 பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற் 93 றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள் மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற 94 அணைத்தரு காயிர மாயிர மாகப் பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட் 95 சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன் பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள 96 வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும் 97 திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி இருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர் 98 முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால் 99 தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர் எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய 100 நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார் போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில் 101 மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த தாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது 102 பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி இரந்தன கொண்டன வென்று - புரந்து 103 தனிச்சே வகம்பூமி தன்னதே யாக இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல் 104 மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப் பண்டு கலக்கிய பாற்கடலுட் - கொண்டதோர் 105 செங்கோ கனகை திருமார்பி லன்றியே எங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய் 106 திருப்பதி மாபதி யித்திரு மார்பில் இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே 107 அங்கட் கமலை யமலன் பெருந்தேவி கங்கட் புலனாயி னன்றென்பார் - நங்கைமீர் 108 கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும் பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ணத் 109 தொடித்தா மரையுந் தொழுதன நாபிக் கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன 110 அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால் 111 ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற் கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி 112 அருகெய்த வொட்டா வயிரா பதத்தின் இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்துத் 113 தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித் திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில் 114 பேதை பேதைக் குழாத்தொரு பேதை சிலபழங் காதற் குழாத்தோர்தங் கையடைளாள் - மீது 115 பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை மறந்தணிய செவ்வி மடமான் - புறந்தணியத் 116 தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க் கோகை விளைக்கு மொருகரும்பு - பாகைத் 117 தொடைபோய முல்லைத் தொடையலே போல இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன் 118 செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும் அறிந்து பிறந்த வறிவோ - நெறிந்தகுழல் 119 எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும் அம்பாவை பாடும் படியறிவாள் - உம்பர் 120 வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப் பருவத்து வேறு படியாள் - உருவக் 121 குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத் திறைவனை யல்லா லெழுதாள் - இறைவன் 122 முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால் கழங்கேழு மாடக் கருதாள் - வழங்கிய 123 முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால் சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் -சுற்றும் 124 பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம் துனிநீங்கத் தோன்றிய தோன்றல் - முனியும் 125 பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச் சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் - நறைவிட்ட 126 அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய செந்தா மரைக்கட் டிருநெடுமால் - வந்தானை 127 ஓகைய ராகி யுலப்பில் பலகோடித் தோகைய ரோடத் தொடர்ந்தோடித் - தாகம் 128 தணியத் தணியத் தமரும் பிறரும் பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில் 129 ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள் கோரந் தெரியவுங் கும்பிட்டாள் - வீரன் 130 படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட கடாகத் ததிர்முரசுங் கண்டாள் - அடாதனவும் 131 சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண் வில்லி யறியாது விட்டதே - நல்லார்சூழ் 132 பெதும்பை மற்று மொருத்தி வலம்புரி யாயிரம் சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் - சுற்றுடன் 133 அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை பின்ன ருடன்பேசப் பேசினாள் - இன்னிசையாழ் 134 பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை ஆட வதனுடனே யாடினாள் - கூடிய 135 நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் - கொல்லும் 136 மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின் குழவி யெயிறெழுச்சி யென்றும் - பழகி 137 எறியு மழையெழுச்சி யென்று முலகம் அறியு முலையெழுச்சி யன்னம் - செறியும் 138 வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும் திரையேழின் முத்தின் றிரளும் - தரையேழிற் 139 பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் - பின்னும் 140 பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட் கெழிலேறும் நாளையே யென்னக் - கழிய 141 உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே எழப்போக வெண்ணு மிடையாள் - மழைத்துப் 142 புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே கடைபோ யுலகளக்குங் கண்ணாள் - உடையதன் 143 சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப் பேரிற் பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஒரையில் 144 தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர் 145 மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும் பாய பருமுத்தின் பந்தராள் - நாயக 146 உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன் முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் - நிச்சமும் 147 நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன் கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் - மெல்லியற் 148 பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை வாங்கித் தரப்போய் வணங்கென்பான் - ஆங்கொருத்தி 149 மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின் மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவொளி 150 தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர் என்பாவை பூண வினிதென்பாள் - அன்பால் 151 உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த எயிர்புறத் தெல்லாருஞ் சூழ - அயிற்படை 152 வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி மாரனை நோக்கி வழிபட - மாரன் 153 படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக் கொடியின் மகரங் குமுற - நெடிய 154 அலகி லசோக நிழற்ற வடைய உலகில் மதுகரமூதக் - கலகித் 155 தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப விலங்கன் மலயக்கால் வீசக் - கலந்தெழும் 156 ஆவி யகிலொடு நீரோ டரமகளிர் தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில் 157 விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன வடிவும் பழம்படியே வாய்ப்பக் - கொடியிடை 158 எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும் புண்ணியம் போலப் பொழில்புகுந்தான் - அண்ணல் 159 சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த வரம்போல் வளமறுகில் வந்தான் - வரும்போதில் 160 ஏன்று மதன னியமியம்ப வேயனகன் மூன்று முரசு முழங்கின - தோன்றாத 161 வாரிக் களிறு முழங்கவே மானதன் மூரிக் களிறு முழங்கியது - வேரித்தார் 162 கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து நிற்குங் கவிகை நிழற்றியது - முற்கொண்டு 163 மற்றை யலகின் மதுகர மூதவே ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத 164 சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன் அற்கமணிக் காகளங்க ளார்த்தன - தெற்கெழுந்த 165 மல்லன் மலயக்கால் வீசவே மானதன் மெல்லென் கவரிக்கால் வீசியது - மெல்லியலும் 166 காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே கோமைந்தன் வேழங் குறிகினாள் - கோமனும் 167 மல்கு மூவகைக் கலுமி வரவரப் பில்கு மதர்வைப் பெரும்பரப் - பல்குலும் 168 கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப மங்கைப் பருவத்தை வாங்கினாள் - மங்கை 169 திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள் வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் - பெருக்க 170 ஒருவ ரொருவர்க் குருகி யுருகி இருவரு மீடழிய நோக்கி - வருகாமன் 171 செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண் மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே 172 கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத் தெய்யுந் தரமே யெழப்போனான் - தையல் 173 மங்கை ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பித் திருத்தி யனைய வெயிற்றாள் - கருத்தின் 174 நிலையிற் சிறந்த நிகரிலா மேரு மலையிற் பிறந்த வயிரம் - அலையிற 175 பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல முழக்கக் கருவுயிர்த்த முத்தம் - தொழத்தகும் 176 முன்னை யுலக முழுதுந் தருமுரசு மன்ன னபிடேக மாணிக்கம் - முன்னவன் 177 பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே நாற்கட னாயகனை நண்ணுவாள் - மேற்கவின 178 பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும் கொண்ட துணைவியருங் கூசுவாள் - புண்டரிகத் 179 தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப் பாடு மழலைப் பரிபுரத்தாள்- நீடிய 180 தூசுகள் வெள்ளென்று தூயன சேயன கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசிப் 181 பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத் தணியு மரைப்பட் டிகையாள் - துணியுங்கால் 182 அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப் பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் - கொற்றவன் 183 சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி துங்க நவரத்னத் தோள்வளையாள் - புங்கம் 184 தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப் 185 பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா மணிதந்த சூளா மணியாள் - அணியே 186 பரவி விறலியரும் பாணருந் தற்சூழந் திரவி புகார்பாடு மெல்லை - வரவரக் 187 கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல் நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே - கங்கைத் 188 துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட் டிறைவன் றிருப்பவனி யென்றாள் - பிறைநுதலும் 189 வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை வானிற் கணிய மயில்போன்றும் - தானே 190 வரவே நினையு மனக்களியா லிற்றை இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில் 191 செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன் வெயிற்கரங்க ளூடாட வேண்டும் - உயிர்க்கொலைசூழ் 192 தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த பொன்மலைய வாடாய் புகுதென்னும் - முன்மலைந்த 193 கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த பாற்கடல் வாராய் பரந்தென்னும் - மேற்பரந்து 194 கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன் பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் - ஈர்குரல் 195 அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம் முன்றிற் பனையு மெனமொழியும் - இன்றிரவை 196 ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய கோழிக்கே சோலை கொடீரென்னும் - வாழிய 197 பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும் வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் - நள்ளிருட் 198 கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த மங்கைப் பருவத்து வாணுதலும் - பொங்கொலிநீர் 199 வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக் கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய 200 கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை 201 வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர் முல்லைக் கொடியு முறுவலிப்ப - மெல்லியற் 202 பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக் காந்தளு நின்றெதிர் கைம்மலரப் - போந்தார் 203 பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த குரவு மரப்பாவை கொள்ளப் -புரிகுழற் 204 சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப் பாலையின் மான்மதம் பாரிப்பச் - சோலையின் 205 வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக் கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப -ஆங்குத் 206 திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம் பருவஞ்செய் சோலை பயப்பப் - பெருவஞ்சி 207 கொய்தன கொய்தன யாவும் பலகூறு செய்தனர் செய்தனர் பின்செல்லக் - கொய்யாத 208 பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் - மன்னனும் 209 எப்போதிற் போது மொருபோதி லேந்திழை கைப்போதிற் பெய்தன கண்டருளா - அப்போதே 210 செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும் கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் - மங்கை 211 பரிசி லுருவம் பயந்தன வென்று குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவரிய 212 தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ் காசும் பலகாற் கவர்ந்ததற்குக் -கூசி 213 இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ் உலகுங் கொடுப்பானே யொப்பப் - பலகாற் 214 கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து விடாது களிறகல விட்டான் - அடாதான்பால் 215 மடந்தை ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும் ஓரடியு நீங்காதா ளோராணங்கு - சீருடைய 216 மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து தானு மதிய மெனத்தகுவாள் - பானின்று 217 அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க் கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால் 218 இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச் சுருளுடைய வீங்கிய தோளாள் - அருளொடும் 219 தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய வம்பற வீங்கும் வனமுலையாள் - பைம்பொனின் 220 பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும் கண்ணிறப் போய கடி தடத்தாள் - தண்ணுறந்தார் 221 மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத் தன்மணி மாளிகைத் தாழ்வரையிற் -பொன்னுருவில் 222 தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக வைத்துக் கமுக வளஞ்செய்து - முத்தின் 223 பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக தலந்தோய் விசால தலத்து - மலர்ந்தபூங் 224 கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் - நிற்பப் 225 புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா 226 மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே எல்விளக்கு மாசு வெதிரெடுத்து - நொல்விய 227 பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய நான நறுநீர்த் தளிநளிய - மேனிலையிற் 228 கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ கொங்கை யினைநீர்க் குடநிரைத்து - எங்கும் 229 அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள விசும்பு தவிர வலிக்கிப் - பசும்பொன்யாழ் 230 முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப இட்ட தவிசின் மிசையிருந்து -பட்டினஞ்சூழ் 231 பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும் கன்னிக்குங் கங்கைக்குங் காவலனைச் - சென்னியை 232 தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண் டியானைப் பெருமானை யேந்தெடுப்பாள் - மேனாள் 233 யானையின் பெருமை உகந்த பிடியுடனே யோரெண் பிடியும் திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து 234 துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச் சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும் 235 உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும் அயிரா பதமத யானை - உயரும் 236 கடநாக மெட்டுங் கடநாக மெட்டும் படநாக மெட்டும் பரந்தீர்த் - துடனாகத் 237 தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும் கன்னாவ தங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர் 238 வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக் கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை 239 தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித் தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங் 240 காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத் தாராகக் கொண்ட மதாசலநீர் - வாரா 241 நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும் குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும் 242 பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும் அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா 243 தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக் கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நாட்டில் 244 பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப் பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட 245 கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர் ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர் 246 கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண் டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்குத் 247 துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப் பணிக்குங் கடவுட் பசுடு - தணிப்பரிய 248 பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின் மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கைக் 249 கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக் கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப 250 நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக் குன்று மொளித்துக் குளிப்பமுன் - சென்றழுத்திப் 251 பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால் செண்டு வௌிகண்ட செங்கைமாக் - கண்ட 252 மதிலே யகழாக வாங்கி யகழே மதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய் 253 வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை வாவிய தாக வெனவகுத்துத் - தாவுமான் 254 வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர் வெள்ளிடை யாக வுடன்விதித்துத் - தெள்ளிப் 255 புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப் புரப்பாரே யாக்கும் புகர்மாத் - திருக்குலத்துக் 256 கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக் கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு 257 கடியுங் களிறுங் களிறாமே காதற் பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில் 258 மாற்று மருமணம் வங்காள பாகத்து வேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார் 259 வயிரா கரமெறிந்த மானதன் கண்டன் அயிரா பதமதமே யாக்கிச் - செயிர்தீர்ந்த 260 காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென் றேதப் பெயரு மொருபொருப்புப் - பாதையிற் 261 கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற் கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில் 262 வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில் நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற் 263 கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில் வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத் 264 தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும் பரணி புனைந்த பகடு - சரணென்று 265 வாடா மதுரயாழ் வாங்கி மடவரல் பாடா விருந்த பருவத்து - நீடாப் 266 பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை குரிசி லுடன்வந்து கூடத் - தெருவில் 267 வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன் பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும் 268 வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும் ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல் 269 ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை தந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும் 270 பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும் கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும் 271 வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும் கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை 272 முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும் படியு மரசும் பணித்தான் - பிடியும் 273 சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி கவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை 274 அரிவை ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன் சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில் 275 விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும் படுசுடர்க் செம்பொற் படியான் - வடிவு 276 நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில் 277 குலபதும ராக பதிகுதி கொள்ளும் பலபதும ராகப் படியாள் - அலைகடலில் 278 முற்றா மரையாண் முகத்தா மரையாளப் பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள் 279 நீர் விளையாட்டு தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம் அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணிப் 280 புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத் துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப் - பணைத்துப் 281 புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும் நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு 282 பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும் அன்னக் குழை மலம்வரப் -பின்னரும் 283 காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத் தேற்குந் தரமேநா மென்றுபோய்த் - தோற்கின்ற 284 வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும் தாவி விழுந்து தடுமாறத் - தீவிய 285 பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும் அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்பட் 286 டெங்குத் தரியா திரியல் போ யாமையும் சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன் 287 செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய 288 கொள்ளைக் குமுத மலருங் குழையிள வள்ளைக் கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல் 289 பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங் கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ் 290 தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு காமர் தடமுங் கரைகடப்பக் - கோமகன் 291 உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம் 292 படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன் வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது 293 திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித் திளைக்குங் கொடியிடையா ரேத்தித் - திளைத்துமிழ்த் 294 தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின் செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே 295 மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க் கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய் 296 நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள் எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக் 297 கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு பண்டுபோ னோக்கப் பயப்படுவார் - கண்டு 298 கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற் பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை 299 யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த தானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி 300 பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத் திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை 301 வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத் 302 தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற் றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும் 303 மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண் தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி 304 பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி 305 ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை கொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுட் 306 பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை நன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில் 307 ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே 308 அரிவையின் முறையீடு மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள் கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட 309 முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம் கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்துள் 310 ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர வேறு முறிய வெறியாதோ- மாறாது 311 காந்து முழுமதியை யோரோர் கலையாக ஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல் 312 வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய் உய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையம் 313 தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று பணியு மடக்கொடியைப் பாரா - வணிய 314 உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா வருத்தந் திருமனத்து வைத்தே - திருந்தடந் 315 தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில் நாளும் பிரியாமை நல்கினான் - மீள 316 ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம் திருமகன் போலத் திளைப்பான் - இருநிலம் 317 தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித் தோளா லளந்த துணைமுலையா - ணாளும் 318 திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில் 319 விருப்பவனி கூர வருகின்ற மீளி திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப 320 அணந்த பணிவலைய வண்ணன் முதனாண் மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த 321 சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும் கோட மணிமகர குண்டலமும் - ஆடிய 322 சச்சையு மாலையு மாரமுந் தாமமுங் கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற 323 பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும் கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட 324 திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா உலகமுந் தோற்கு முருவும் - கலகமும் 325 மாரனுந் தானும் வருவாளை மன்னரில் வீரனுங் காணா வெருவராப் - பாரனைத்தும் 326 தேறுந் திருவைத் திருவவ தாரங்கள் தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறுங்கண் 327 வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத் தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய 328 மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை கைவிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப் 329 புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம் அவனி முழுது மளித்தான்போற் - கவினிய 330 அற்புத மாலை யணியப் பணிசெய்யுங் கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்குப் 331 பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி 332 முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின் படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை 333 அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை 334 மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப் பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில் 335 பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள் விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர் 336 வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும் பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப் 337 பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும் ஆடிக் குடக்கூத்து மாடினார் - பாடியில் 338 ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற் கோநிரையு மீளக் குழாங்கொண்டு - மீளிரையின் 339 மீதும் புடையு மிடைய விழவெழவேய் ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக் 340 கடந்தூர வந்தக ககன தளமும் இடந்தூர வந்து மிணையக் - குடங்கள் 341 எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள் விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய 342 தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும் தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய 343 நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற் பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே 344 தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற் பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய் 345 நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த ஆடகப் பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல் 346 வற்றாத மானத வாவியல் வாடாத பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன் 347 கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத 348 பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர ஏறுந் தவிசுதர வேறினாள் - வேறொருத்தி 349 பேரிளம் பெண் கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச் சச்சை கமழுந் தடந்தோளு -நிச்சமுரு 350 ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும் போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர் 351 பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி அணியுந் திருத்தா ளபயன் - பணிவலய 352 வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத் தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும் 353 ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம் பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற் 354 றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற் கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி 355 தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி பொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு 356 நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும் இறவு கடைக்கணித் தெய்தச் - சுறவுக் 357 கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை நெடியோனை நேமிப் பிரானைப்-படியோனைக் 358 கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக் கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு 359 மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத் திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை 360 மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள தேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று 361 துகிலசைந்து நாணுந் தொலைய வளக முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும் 362 சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும் யானையு நிற்க வெதிர்நின்று - கோனே 363 சதயுக மேனுந் தரணிபர் மக்கள் பதயுக மல்லது பாரார் - உதயாதி 364 காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத் தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி 365 நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற் 366 கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென் பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா 367 அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு செந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற 368 மல்லா புரேச சிலகால மற்றிவை எல்லாந் தனித்துடையோம் யாமன்றே - அல்லாது 369 மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்துக் 370 காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த வேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலைச் 371 சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால் நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர் 372 சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால் ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார் 373 நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால் தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே 374 தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும் உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற் 375 செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம் பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத 376 வாமே கலையே முலைவீக்கா வம்பினேம் யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய 377 நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத் தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ 378 முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல் 379 இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ தமைக்குந் துகிலினை யன்றே - அமைத்ததோர் 380 பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது கார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற 381 தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம் கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற 382 பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர் பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய 383 முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக் கொத்துக் குடையொக்கக் கூடுமே - இததிறத்தால் 384 எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும் அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம் 385 கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற் றண்டரளக் கொற்றத் தனிக்குடையோன் -பண்டறியா 386 ஆரமு மாலையும் நாணு மருங்கலா பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும் 387 பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும் படியுங் கடாரம் பலவும் - நெடியோன் 388 கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த 389 பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக மாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச் -சோதி 390 இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ் உலகுடையான் போந்த னுலா. 391 வெண்பா அன்று தொழுத வரியை துளவணிவ தென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில் நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த வீரதரா வீரோ தயா. இராசராச சோழனுலா முற்றிற்று மூவருலா முற்றிற்று |