உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப் பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றிய தொகை நூல்கள். பதிற்றுப் பத்து சேர மன்னர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இது பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை. நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவற்றைச் சார்ந்த சில பாடல்கள் தொல்காப்பிய உரைகளாலும், 'புறத்திரட்டு' என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன. இவை நூல் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், துறை, வண்ணம், தூக்கு, பெயர், என்பனவற்றைப் புலப்படுத்தும் பழங்குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தைப் பாடியவர், பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள், புலவருக்கு அவர் அளித்த பரிசில், முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இந்நூற் செய்யுட்களில் இப்பொழுது கிடைப்பன 80; உரைகளால் தெரிய வருவன 6. ஒரு சில செய்யுட்களில் சில சீர்களும் அடிகளும் சிதைந்துள்ளன. நாலாம் பத்துச் செய்யுட்கள் மட்டும் அந்தாதியாக அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க் கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும் இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய சூலம் பிடித்த சுடர்ப் படைக் காலக் கடவுட்கு உயர்கமா, வலனே! இரண்டாம் பத்து
பாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 11. வெற்றிச் செல்வச் சிறப்பு
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய, வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல் நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி, அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5 கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு- செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின், மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து, மனாலக் கலவை போல, அரண் கொன்று, 10 முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை; பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர், நார் அரி நறவின், ஆர மார்பின், 15 போர் அடு தானைச் சேரலாத!- மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின் பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே 20 கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும், ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம் தென்அம் குமரியொடு ஆயிடை மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே. 25 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புண் உமிழ் குருதி 12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்
வயவர் வீழ வாள் அரில் மயக்கி, இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப, கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே! தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரிமான் வழங்கும் சாரல், பிற மான் 5 தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு, முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்- கேட்டற்கு இனிது-நின் செல்வம்: கேட்டொறும் காண்டல் விருப்பொடு-கமழும் குளவி; 10 வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை, அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி- வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல் தொல் பசி உழந்த பழங்கண் வீழ, 15 எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை, மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு, நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி; நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன, நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை, 20 நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ; வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள், வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய; அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே! 25 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மறம் வீங்கு பல் புகழ் 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு உழாது வித்துநவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் 5 வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், ஒலி தெங்கின், இமிழ் மருதின், புனல் வாயில், பூம் பொய்கை, பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; 10 கூற்று அடூஉ நின்ற யாக்கை போல, நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்- விரி பூங் கரும்பின் கழனி புல்லென, திரி காய் விடத்தரொடு கார் உடை போகி, கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, 15 ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து- உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே. காடே கடவுள் மேன; புறவே 20 ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன; ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25 மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசி இகந்து ஒரீஇ, பூத்தன்று-பெரும!-நீ காத்த நாடே! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பூத்த நெய்தல் 14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி
வாழ்த்துதல்
நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின் அளப்பு அரியையே; நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல், ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 5 துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை, அக்குரன் அனைய கைவண்மையையே; அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப! கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; 10 எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை! வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்; வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்; ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15 பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படை ஏர் உழவ! பாடினி வேந்தே! இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக் கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின் முன் திணை முதல்வர் போல, நின்று நீ 20 கெடாஅ நல் இசை நிலைஇத் தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : சான்றோர் மெய்ம்மறை 15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து, முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு- மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி, நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம் பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- 5 கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர, அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து, தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின், வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து, பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல், 10 சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில், புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின், அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின் பகைவர் நாடும் கண்டு வந்திசினே: 15 கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும், வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு, விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர், கொடி நிலற் பட்ட பொன்னுடை நியமத்து, சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் 20 வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை! தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின், போர் வல் யானைச் சேரலாத! 'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என, உண்டு உரை மாறிய, மழலை நாவின், 25 மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த, வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை, செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு, ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும் பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி, 30 நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின், நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்- மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது 35 ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின், புரைவயின் புரைவயின் பெரிய நல்கி, ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின், நெடியோன் அன்ன நல் இசை, ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே. 40 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிரைய வெள்ளம் |