சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி - 13 ... எட்டாம் பத்து
பாடினோர் : அரிசில்கிழார்
பாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல்
அருள் பிறப்பித்தல்
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்தாங்கு, 5 கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, 10 மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில் ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து, புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, 15 மத்துக் கயிறு ஆடா வைகற் பொழுது நினையூஉ, ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க, பதி பாழாக வேறு புலம் படர்ந்து, விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் 20 பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர், மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின், பலி கொண்டு பெயரும் பாசம் போல, திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி! உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, 25 அறிந்தனை அருளாய்ஆயின், யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே? துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : குறுந் தாள் ஞாயில்
72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார், சூழாது துணிதல் அல்லது, வறிது உடன் காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின் முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் 5 நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின் பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்; துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை, நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி, உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் 10 வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து, ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து, பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின் மடங்கல் தீயின் அனையை, 15 சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : உருத்து எழு வெள்ளம் 73. வென்றிச் சிறப்பு
உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும், பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே! ....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5 தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் .... .... .... .... ... ... ... மருதம் சான்ற மலர்தலை விளை வயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார், 10 குறும் பல் யாணர்க் குரவை அயரும் காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை! கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக் கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின் 15 வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள் யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும் சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என, ஆங்கும் மதி மருளக் காண்குவல்; 20 'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிறம் திகழ் பாசிழை 74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக்
கூறுதல்
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், வேறு படு திருவின் நின் வழி வாழியர், கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், 5 பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி, தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி, கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின், புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் 10 தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டிற் பருதி போகிய புடை கிளை கட்டி, எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன் சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, 15 நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள், ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில் எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற்கு அமைந்த அரசு துறை போகிய 20 வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு- அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!- அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின் முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை, 'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், 25 தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என, வேறு படு நனந் தலைப் பெயரக் கூறினை, பெரும! நின் படிமையானே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நலம் பெறு திருமணி 75. வென்றிச் சிறப்பு
இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம், அரும் பொறி வய மான் அனையை-பல் வேல், பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!- வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து, நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, 5 அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர், வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை, வன் புலம் தழீஇ மென்பால் தோறும் அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து, கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் 10 வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல் வல்சி அறியார், தம்தம் பாடல் சான்ற வைப்பின் நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே? துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தீம் சேற்று யாணர் |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |