![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 23. ‘விடுதலை’  | 
பெரியாழ்வார் அருளிய திருமொழி ... தொடர்ச்சி - 5 ... ஐந்தாம் பத்து முதல் திருமொழி - வாக்குத்தூய்மை 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 433 வாக்குத்தூய்மையிலாமையினாலே மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன் நாக்குநின்னையல்லால்அறியாது நானதஞ்சுவன்என்வசமன்று மூர்க்குப்பேசுகின்றானிவனென்று முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன் காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் காரணா. கருளக்கொடியானே. 1 434 சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன் சங்குசக்கரமேந்துகையனே. பிழைப்பராகிலும்தம்மடியார்சொல் பொறுப்பது பெரியோர்கடனன்றே விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால் வேறொருவரோடுஎன்மனம்பற்றாது உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய் ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2 435 நன்மைதீமைகளொன்றும்அறியேன் நாரணா. என்னும்இத்த்னையல்லால் புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப் புகழ்வானன்றுகண்டாய்திருமாலே. உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன் ஓவாதேநமோநாரணா, என்பன் வன்மையாவதுஉன்கோயிலில்வாழும் வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3 436 நெடுமையால்உலகேழுமளந்தாய், நின்மலா. நெடியாய். அடியேனைக் குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா கூறைசோறுஇவைவேண்டுவதில்லை அடிமையென்னுமக்கோயின்மையாலே அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4 437 தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை துடவையும்கிணறும்இவையெல்லாம் வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன் நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது நச்சுவார்பலர்கேழலொன்றாகி கோட்டுமண்கொண்டகொள்கையினானே குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5 438 கண்ணா, நான்முகனைப்படைத்தானே, காரணா, கரியாய், அடியேன்நான் உண்ணாநாள்பசியாவதொன்றில்லை ஓவாதேநமோநாரணாவென்று எண்ணாநாளும்இருக்கெசுச்சாம வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் நண்ணாநாள் அவைதத்துறுமாகில் அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6 439 வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை மெத்தையாகவிரித்து அதன்மேலே கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி உரோமகூபங்களாய் கண்ணநீர்கள் துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன் சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7 440 வண்ணமால்வரையேகுடையாக மாரிகாத்தவனே, மதுசூதா, கண்ணனே, கரிகோள்விடுத்தானே, காரணா, களிறட்டபிரானே, எண்ணுவாரிடரைக்களைவானே, ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே, நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும் நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8 441 நம்பனே, நவின்றேத்தவல்லார்கள் நாதனே, நரசிங்கமதானாய், உம்பர்கோனுலகேழும்அளந்தாய் ஊழியாயினாய், ஆழிமுன்னேந்தி கம்பமாகரிகோள்விடுத்தானே, காரணா, கடலைக்கடைந்தானே, எம்பிரான், என்னையாளுடைத்தேனே, ஏழையேனிடரைக்களையாயே. 9 442 காமர்தாதைகருதலர்சிங்கம் காணவினியகருங்குழல்குட்டன் வாமனன்என்மரகதவண்ணன் மாதவன்மதுசூதனன்தன்னை சேமநன்கமரும்புதுவையர்கோன் விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் நாமமென்றுநவின்றுரைப்பார்கள் நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. 10 இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை 
(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்) 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 443 நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. 1 444 சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2 445 வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3 446 மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4 447 மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர், பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5 448 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6 449 கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7 450 ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8 451 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே, சங்கே, அறவெறிநாந்தகவாளே, அழகியசார்ங்கமே, தண்டே, இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள், பறவையரையா, உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 9 452 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. 10 மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை 
(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 453 துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ? மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 1 454 வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2 455 உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன் தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். 3 456 காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன் பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4 457 காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல் மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5 458 எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும் ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத் திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6 459 அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால் இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய் சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7 460 எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய். சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8 461 அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9 462 சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள் நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. 10 நாலாம் திருமொழி - சென்னியோங்கு 
(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார் தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்) 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் 463 சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு தன்னைவாழநின்றநம்பீ, தாமோதரா, சதிரா, என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? 1 464 பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின் பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2 465 எம்மனா, என்குலதெய்வமே, என்னுடையநாயகனே, நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3 466 கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா தடவரைத்தோள்சக்கரபாணீ, சார்ங்கவிற்சேவகனே. 4 467 பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5 468 உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ, என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6 469 பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய் மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7 470 அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான், நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8 471 பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ, தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. 9 472 தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி, வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. 10 473 வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. 11 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.   |