|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
முன்னுரை நான் தனியே 'தீபம்' இலக்கிய மாத இதழைத் தொடங்கிய பின்பு அதில் எழுதிய முதல் சமூக நாவல் நெற்றிக் கண். இந்திய நாட்டில் சராசரி உழைக்கும் பத்திரிகையாளனுக்கு (Working Journalist) எந்த அளவு சுதந்திரமும், உரிமையும் கிடைக்கின்றன என்பதை ஓரளவு இந்த நாவலிலே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனைப் பற்றிய தமிழ்ச் சமூக நாவல் இது. ஒரு பத்திரிகையாளனின் அகப் போராட்டங்களும், புறப் போராட்டங்களும் இதில் வருகின்றன. இதில் நெகிழ்ச்சிமயமாக வந்து வாசகர்களை நெகிழ வைக்கும் பாத்திரம் துளசிதான்! சுகுணனைக் காட்டிலும் துளசிதான் வாசகர்களை அதிகம் உருக்க முடியும் என்று இந்த நாவல் தீபத்தில் நிறைவு பெற்ற போது எனக்கு வந்த ஏராளமான கடிதங்களிலிருந்து தெரிந்தது. என் மற்ற நாவல்களிலிருந்து இது பல அம்சங்களில் தனியாக விலகி நிற்கிறது. ஒரு பத்திரிகையாளனுடைய கண்ணோட்டத்தில் தான் தமிழ் நாட்டுச் சமூக வாழ்வு இந்த நாவலில் நோக்கப்பட்டிருக்கிறது. நாவலைப் படிப்பவர்களும் அதை மனத்தில் கொண்டு படித்தால் நல்லது என்ற வேண்டுகோளுடன் இந்த முன்னுரையை முடிக்கிறேன்.
அன்பன் நா. பார்த்தசாரதி http://www.chennailibrary.com/parthasarathy/nettrikkann/nettrikkann.html
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|