13 தயாரிப்பாளர் கன்னையாவும் மேரியும்தான், காட்சி எப்படிப் படமாக்கப்பெற இருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்களே ஒழிய டைரக்டர் உதவி டைரக்டர் என்ற பெயரில் வந்திருந்த இருவரும் வாயைத் திறக்கவே இல்லை. தயாரிப்பாளர் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கே வாயைத் திறந்தால் உத்தியோகம் போய்விடும் என்கிற பயத்திலோ என்னவோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்து விட்டார்கள். “இந்த அவுட்டோர் உனக்குன்னே ஏற்பாடு பண்ணினதுடி சுமதி” என்று சுமதியின் காதருகே சொன்னாள் மேரி. “தெண்டச் செலவு. முகம் கூடத் தெரிய வழியில்லாத ஒரு ‘டூப்’ காட்சிக்காக இவ்வளவு செலவழிக் கணுமா மேரி?” என்று சுமதி வெடுக்கென்று கேட்டுவிட்டாள். “உன்னைப் போல ஒரு பெண்ணுக்காக நம்ம புரொட்யூஸர் எவ்வளவு வேணும்னாச் செலவழிப்பார் சுமதி?” மேரி எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று சுமதி யோசிக்கத் தொடங்கினாள். அவள் சொன்ன வாக்கியம் சரியாகச் சுருதி சேரவில்லை. அதில் சுருதி பேதம் இருந்தது. அதற்கேற்றாற் போலத் தயாரிப்பாளரும் குட்டி போட்ட பூனையைப் போலச் சுமதியையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார். “சுமதிக்கு எது வேணும்னாலும் கூச்சப்படாம எங்கிட்டக் கேட்கணும். பகல் சாப்பாட்டோட ஏதாச்சும் ஒரு ஸ்வீட்டுக்குச் சொல்லட்டுமா? வேறே ஏதாவது ஜூஸ் கீஸ் வேணுமா?” என்றெல்லாம் அருகே வந்து மிகவும் கனிவாக விசாரித்துக் கொண்டிருந்தார். பகல் ஒன்றரை மணிக்குள் சுமதி தண்ணிரில் குதித்துக் கரையில் ஒதுங்குகிற காட்சியை எடுத்துவிட முயன்றார்கள் அவர்கள். இருமுறை முயன்றும் ஷாட் ஓ.கே. ஆகவில்லை. காரணம், தண்ணிரில் குதிப்பதில் சுமதிக்கு இருந்த பயம்தான். என்னதான் லாங்-ஷாட்டாக எடுத்தாலும் கதைக்கு ஏற்ப வாழ்க்கையை வெறுத்தவள் ஒருத்தி தண்ணிரில் குதிப்பது போலக் குதிக்காமல் தயங்கித் தயங்கிப் பயந்து கொண்டே குதித்தாள் அவள். இந்த மாதிரிக் குதித்ததனால் அவளுக்கே முழங்காலில் இலேசாகக் காயம்கூடப் பட்டுவிட்டது. முதல் ஷாட்டின் போது அவள் பயப்பட்டாள் என்பதற்காக இரண்டாவது ‘ஷாட்’டின்போது தண்ணிரில் ஆழம் குறைவான இடமாகப் பார்த்துக் குதிக்கச் சொன்னார்கள். முதல் ஷாட்டில் அவள் பயந்து குதிக்காமலே இருந்துவிட்டாள். இரண்டாவது ஷாட்டில் குதித்துக் காயம் பட்டுவிட்டது. முதலில் குதிப்பதையும் பின்பு கரையில் ஒதுங்கி எழுந்திருப்பதையும், தந்திரமாக எடுத்துவிட முயன்றார்கள்; முடியவில்லை. “பரவாயில்லை! வாம்மா. சாப்பாட்டுக்கு அப்புறம் பார்க்கலாம். முடிஞ்சா உனக்கே இன்னொரு ‘டூப்’ போட்டுக்கலாம், என்று அயராமல் சொல்லியபடி அருகே வந்து சுமதியைத் தோளில் தட்டிக் கொடுத்தார் தயாரிப்பாளர். ஒரு சின்ன ‘டூப்’ காட்சியைக் கூட ஒரே ஷாட்டில் கச்சிதமாகச் செய்து கொடுக்க முடியவில்லையே என்று கூச்சமாகவும், வெட்கமாகவும் இருந்தது சுமதிக்கு. “இந்தாப்பா! உங்களைத் தானே? இங்கே அக்கம் பக்கத்துக் கிராமத்திலே யாராவது மீனவர் கம்யூனிட்டிப் பொண்ணுங்க இருந்தால் கூட்டிக்கிட்டு வாங்க. தண்ணிரிலே குதிக்கிற காட்சிக்கு அவங்களிலே யாராவது ஒருத்தரைப் பயன்படுத்திக்கிட்டு அப்புறம் கரையிலே ஒதுங்கறப்போ முதுகு மட்டும் தெரியறமாதிரி சுமதியை ஒரு ஷாட் எடுத்துக்கலாம்” என்ற தயாரிப்பாளரே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு யோசனை கூறினார். “பெரிய நடிகருக்கோ, நடிகைக்கோ தான் ‘டூப்’போடுவாங்க. ஆனா நம்ம புரொட்யூஸர் சார் குந்தளகுமாரிக்கு உன்னை ‘டூப்’ போட்டுட்டு உனக்கே இன்னொரு ‘டூப்’ போடப் போறாரு. உம்மேலே உள்ள பிரியத்திலேதான் இதெல்லாம் செய்யறாரு” என்றாள் மேரி. தண்ணிரில் பயப்படாமல் சகஜமாகக் குதிக்கத்தக்கக் கூடிய ஒரு துணிச்சல்காரியான மீனவப் பெண்ணைத் தேடி ஆட்கள் பறந்தார்கள். அரைமணி நேரத்தில் அப்படிப் பட்ட பெண்மணி ஒருத்தியையும் கண்டுபிடித்து அழைத்து வந்துவிட்டார்கள். ஒரு மேட்டிலிருந்து அவளைத் தண்ணிரில் குதிக்கச் சொல்லி லாங் ‘ஷாட்’டில் எடுத்துக் கொண்டார்கள். கச்சிதமாக ஒரே ஷாட்டில் அது முடிந்து விட்டது. தயாரிப்பாளர் அந்த மீனவப் பெண்ணுக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார். “என்னங்க. இது? அம்பது ரூபாயாச்சும் கொடுங்க” என்றாள் அந்த மீனவப் பெண். “சினிமாவிலே உன் மூஞ்சியைக் காமிக்கிறதுக்காக நீ எனக்குக் குடுக்கணும் அம்பது ரூபா” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் தயாரிப்பாளர். தண்ணிரில் குதிக்கிற காட்சியை எடுத்து முடித்ததும் கரையருகே கதாநாயகி ஒதுக்கப்பட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்திருப்பது போல ஒரு காட்சி எடுக்கப்படவேண்டும். அந்தக் காட்சிக்காகச் சுமதி திறந்த முதுகுடன் தண்ணிரருகே குப்புறக் கிடக்க வேண்டும். திறந்த முதுகுடன் கிடப்பது பற்றி ஒரு சர்ச்சை மூண்டது. “இந்த இடத்தில் திறந்த முதுகு அநாவசியம்” என்றார் ஒருவர். “சென் ஸாரில் வெட்டிடு வாங்க” என்றார் மற்றொருவர். “அதெல்லாம் வெட்டாமே நான் பார்த்துக்கிறேன். வேணும்னா வெறும் முதுகு வேண்டாம், ‘ப்ரா’வோட முதுகுப் பக்க வார் மட்டும் இருக்கட்டுமே” என்றார் தயாரிப்பாளர். அதற்குச் சம்மதமா இல்லையா என்று சுமதியை யாருமே கேட்கவில்லை. சுமதிக்கும் அதற்கு ஆட்சேபணை இல்லைதான். ஆனால் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. படம் வெளிவந்த பின் அதில் தான் இந்தக் கோலத்தில் தோன்றுவதை யாராவது பார்த்து மதுரையில் அம்மாவிடம் போய் இதுபற்றிப் ப்ரஸ்தாபித்தால் வீண் சண்டை வருமே என்றுதான் தயங்கினாள். தன் சந்தேகத்தை மெதுவாக மேரியின் காதருகே நெருங்கிச் சொன்னாள் அவள். “உன் சந்தேகம் அனாவசியமானது டீ. சுமதி ! படத்திலே உன் முகமே வராது. முதுகும் ‘ப்ரா’பட்டையும் தான் தெரியும்” என்று மேரி அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள். தண்ணிரில் நனைந்த புடவையும் வெயில் வெளிச்சத்தில் தங்கப்பாளமாக மின்னும் அழகிய சதைச் செழிப்புள்ள முதுகுமாகச் சுமதி தண்ணிர் கரையருகே குப்புறச் சாய்ந்தாற் போலப் படுத்துக் கொண்டாள். காமிரா ஆட்கள் எல்லாம் ரெடியாயிருந்தனர். “டூப் போட்டதே நல்லதாப் போச்சு. குந்தளகுமாரி யோட முதுகு இப்படிப் பசு வெண்ணெய் மாதிரித் தளதளன்னு இருக்காது. மூங்கில் மொறம் கணக்கா இருக்கும். நெல்லுக்கூடக் காயப் போடலாம். அத்தனை பெரிசு. இவ சும்மா லட்டு மாதிரி இருக்கா.” இதுவும் தயாரிப்பாளர்தான். அடிக்கடி சுமதியை ‘லட்டு’ என்றார் அவர். மறுபடியும் யாரோ குறுக்கிட்டார்கள். “சார்! தண்ணீரிலே ஹீரோயின் குதிச்சுக் கரையிலே ஒதுங்கறத்துக்குள்ளே இப்படிச் சேலை கீலை எல்லாம் ஒதுங்கி ரவிக்கை காணாமப் போயி வெறும் முதுகு மட்டும் ‘ப்ரா’ பட்டையோட தெரியறாப்பில ஆயிடுச்சிங்கறத நம்பவே முடியாது சார். கொஞ்சம் யோசனைப் பண்ணிச் செய்யுங்க.” “அட, இவன் யார்ராவன்? படம் பார்க்க வர்ரவன் கண்ணுக்குக் குளுமையா ரெண்டு காட்சியைச் சேர்க்கலாம்னா என்னென்னமோ தர்க்கமெல்லாம் பண்ணிக் கிட்டிருக்கான். நீ சும்மா இரு அய்யா, டைரக்டர் சார்! நீங்க ஷாட்டை ஓ.கே. பண்ணுங்க” என்றார் தயாரிப்பாளர். “இல்லீங்க! இது ஒரு சோகமான கட்டம். இதுலே போயி ‘செக்ஸ்’ஸை நுழைச்சோம்னாக் கதையிலே சுருதி பேதம் தட்டும்.” “தட்டட்டும், பரவாயில்லே. நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ...” காட்சி தயாரிப்பாளர் விரும்பியபடியே கதாநாயகி குப்புறச் சாய்ந்து படுத்த நிலையில் முதுகும், இடுப்புக்கு அப்பாலும் தூக்கலாகத் தெரிகிறாற் போலவே எடுத்து முடிக்கப்பட்டது. “பப்ளிஸிட்டிக்காரன் கிட்டச் சொல்லிப் போடணும். இந்த ஸீன்தான் முதல் வால்போஸ்டர். குந்தளகுமாரியோட மூஞ்சியை காமிக்கறதைவிட நம்ம சுமதி யோட முதுகைக் காமிக்கிறத்துக்கு எவ்வளவோ பப்ளிஸிட்டி ‘வேல்யூ’ அதிகமாக இருக்கும்னேன்” என்று தமக்குத்தாமே சொல்லி மெச்சிக் கொண்டார் தயாரிப்பாளர். படப்பிடிப்பு முடிந்த பின்னும் நீண்ட நேரம்வரை தான் அதற்கு எப்படிச் சம்மதித்தோம் என்று சுமதிக்கு தன்னையே நம்ப முடியாமல் இருந்தது. படத்தில் முகம் தெரியாது என்பதால் ஆறுதலாகவும் இருந்தது. தயாரிப்பாளர் கொடுத்ததாக மேலும் இருநூறு ரூபாயைச் சுமதியிடம் கொடுத்தாள் மேரி. “இந்தப் படத்தை நல்லா வந்திருக்கா இல்லியான்னு எப்போ நான் பார்க்கலாம்?” என்று சுமதி மேரியை கேட்டாள். “அடுத்த வாரக் கடைசியிலே தரணி ஸ்டூடியே ரிக்கார்டிங் தியேட்டரில் ரஷ் போட்டுக் காட்டுவாங்க, அப்போ உன்னையும் கூப்பிடுவாங்க, வந்து பாரு” என்றாள் மேரி. அவுட்டோர் ஷூட்டிங் முடிந்த தினத்தன்று மாலை கல்லூரி விடுதி வாயில் வரை தயாரிப்பாளரின் காரிலேயே சுமதியைக் கொண்டு வந்து ‘டிராப்’ பண்ணினாள் மேரி. சுமதிக்கு ஒரு சந்தேகமும் பயமும் இருந்தது. அதனால்தான் அவள் அந்தப் படத்தில் ரஷ்களை பார்க்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். தான் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்ற பதற்றம் சுமதிக்கு உள்ளூற இருந்தது; மிகவும் தந்திரமாகவும் வஞ்சகமாகவும் தயாரிப்பாளரும் காமிராமேனும் தன்னை ஏமாற்றி விட்டார்களோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அந்த வாரக் கடைசியில் மேரியோடு தரணி ஸ்டூடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் போய் ரஷ் பார்த்த போது சுமதிக்கு அவளுடைய முந்திய சந்தேகங்கள் உறுதிப்பட்டன. அவள் பதறி மனம் குழம்பித் தவித்தாள். |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |