2

     அம்பாசமுத்திரம் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரபருணி நதியின் தலைப் பகுதியிலுள்ள ஊர். ஊர்க்குத் தெற்கே, அம்பாசமுத்திரத்துக்கும் கல்லிடைக்குறிச்சிக்கும் எல்லை கிழித்த மாதிரி, ஸ்படிகத் தெளிவு கொண்ட தாமிரபருணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஊருக்கு மேற்கே ஐந்தாறு மைல் தொலைவில், மேற்குத் தொடர்ச்சிமலை மஞ்சு தவழும் முகடுகளோடு அரண் வகுத்துக் கோட்டைச் சுவர் மாதிரி வானளாவி நிற்கிறது. மலைத்தொடரின் அடிவாரத்தில், தமிழ் பிறந்த தென்னன் பொதிகைச் சாரலில், வெள்ளைக்காரப் பெரு முதலாளியான ஹார்வியின் பஞ்சாலை கொடிகட்டி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆகஸ்டுச் சுதந்திரத்தின் அபிநவ பாண்டியகுமாரனாக, ஹார்வி தென் பாண்டி நாடு முழுவதிலும் கால் பரப்பி, அந்தப் பகுதியின் பொருளாதாரத்தின் மீது பேராதிக்கம் செலுத்தி வருகிறான். ஹார்வி மில்லுக்கு மேலே மலை மீது முண்டந்துறை என்ற கீழணைப் பிராந்தியத்தில் பாபநாச ஜல மின்சார உற்பத்தி நிலையம் கொலுவீற்றிருக்கிறது. தாமிரபருணித்தாய் வாரி வழங்கும் மகாசக்தியான மின்சாரத்தைக் கூட, அவளுடைய மக்களான நெல்லை ஜில்லாவாசிகளுக்கு ஒரு வெள்ளையன் தான் தரகுக்காரனாக இருந்து வினியோகித்து வருகிறான். மின்சார நிலையத்துக்கு மேலாக, பழைய நீலகண்டன் கசம் இருந்த இடத்தில், ‘அப்பர் டாம்’ என்ற காரையார் அணைக்கட்டும், அணைக்கட்டினால் ஏற்பட்ட ‘ஆர்தர் ஹோப் ஏரி’யும் இருக்கின்றன. மலையடிவாரத்தில் குடியேறிவிட்ட யந்திர வளர்ச்சியின் காரணமாக, அம்பாசமுத்திரத்திலிருந்து காரையாருக்குச் செல்லும் ரோட்டிலும், மலைப் பாதையிலும் சதா சர்வகாலமும் லாரிகளும், பிளஷர் கார்களும், பஸ்களும் பறந்தோடிய வண்ணமாய் இருக்கும். அம்பாசமுத்திரத்துக்குக் கிழக்கே ஐந்தாறு மைல் தூரத்தில் வீரவநல்லூர் என்ற இடைகழி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், அந்த வட்டாரத்துக்குப் பெருமுதலாளிகளான, இந்தியாவின் சிறு முதாளிகளின் பகீரத முயற்சியினால் தொடங்கப் பெற்ற புதிய டெக்ஸ்டைல் மில் ஒன்றும் இருக்கிறது. மலைவிழுங்கி மகாதேவனாக விளங்கும் விக்கிரமசிங்கபுரத்து ஹார்வி மில்லுக்கு எதிராக, அந்த மில் அமைந்திருப்பது விஸ்வரூப ராட்சதனுக்கு எதிரே, நாபிக் கொடி காய்ந்து விழாத பச்சிளங் குழந்தை தவழ்ந்து விளையாடத் துணிவது மாதிரித் தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது.


பெண்களுக்கான புதிய தொழில்கள்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

வாழ்வைப் புரட்டும் மந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

அசடன்
இருப்பு உள்ளது
ரூ.1225.00
Buy

பாதி நீதியும் நீதி பாதியும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

திரைக்கதை எழுதலாம் வாங்க
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

1984
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

அர்த்தமுள்ள இந்து மதம்
இருப்பு உள்ளது
ரூ.380.00
Buy

ஸ்ரீ வேதாந்த தேசிகர்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

The Rule of 5: Leadership and The E5 Movement
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

கடவுளின் நாக்கு
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

அலை ஓசை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

அலெக்சாண்டர்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

அய்யா வைகுண்டர்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

ரயில் நிலையங்களின் தோழமை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

கேள்விக்குறி
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

உறுபசி
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

ரயிலேறிய கிராமம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

யாதுமாகி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

செகண்ட் ஒப்பினியன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy
     தாமிரபருணித் தாயிடமிருந்து முதல் பாசன ஊட்டத்தைப் பெறும் பாக்கியம் பெற்றது அம்பாசமுத்திரம். எனவே, எந்தக் காலத்திலும் அந்த வட்டாரத்தில் தீய்வோ, தண்ணீர்த் தட்டோ இருந்ததில்லை. ஊரைச் சுற்றிலும் பல மைல் விஸ்தீரணத்துக்கு பச்சை பசிய நெல்வயல்கள் மரகத மைதானமாக விரிந்து கிடக்கும். திருநெல்வேலி ஜில்லா ஒரு பற்றாக்குறைப் பிரதேசம் தான்; என்றாலும் அம்பாசமுத்திரத்தைப் பொறுத்த வரை அது ஒரு பற்றாக்குறைப் பிரதேசம் அல்ல. எனினும் இந்தியாவெங்கும் உள்ளது போலவே, அங்கிருந்த நிலங்களில் பெரும்பகுதி நேரடியாக விவசாயம் செய்யும் விவசாயப் பெருமக்களுக்குச் சொந்தமானதல்ல. பெருவாரி நிலங்கள் கல்லிடைக் குறிச்சி பெரிய ஐயன்மார்கள் என்ற பார்ப்பன நிலப்பிரபுக்களுக்கும், சைவ ஆதீன மடங்களுக்கும், ஒரு சில பண்ணையார்களுக்கும், பற்பல சிறு நிலச் சொந்தக்காரர்களுக்கும் உடைமையாயிருந்தன. விவசாயிகள் பெரும்பாலும் நிலச்சுவான்தார்களிடம் நேரடிப் பாட்டத்துக்கு எடுத்தோ, அல்லது ஆதீன மடங்களைச் சேர்ந்த தரகுப் பிள்ளைமார்களிடம் குத்தகைக்கு எழுதி வாங்கியோ பயிர் செய்வதுதான் நடைமுறை வழக்கமாய் இருந்து வருகிறது. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கு இலக்கணமாக, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவின் சூழ்நிலையில் எங்குமுள்ளது போலவே அங்குமுள்ள விவசாயிகளின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது.

     அம்பாசமுத்திரம் ஊரைப் பொறுத்தவரையிலும் அது தாலுகாக் கச்சேரியும் பஞ்சாயத்து போர்டு ஆபீசும் அடுத்தடுதுள்ள இரண்டுங் கெட்டான் நகரம்; அதாவது வளர்ச்சியுற்ற கிராமம். சர்க்கார் கச்சேரிகள், பஸ், ரயில் போக்குவரத்து முதலிய நிலைமைகளால், அந்த ஊர் வளர்ந்து வரும் சிறுநகரப்புறம்போல் காட்சியளித்துக் கொண்டிருக்கும். ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயப் பெருங்குடி மக்கள், அன்றாடக் கூலிகள், சிறு தொழிற்காரர்கள் முதலியோர் தாம். சர்க்கார் உத்தியோகம், சிறு வியாபாரம், கமிஷன் ஏஜண்ட், பள்ளி ஆசிரியர் முதலியவர் போன்ற மத்தியதர வர்க்கத் தொழில் புரியும் மக்களும், ஏதோ வசதியாய் உட்கார்ந்து சாப்பிட வழியுள்ள நிலச்சுவான்தார்களும் ஊரின் பிரதான குடிமக்கள். இவர்களைத் தவிர, ஊரின் ஒரு பகுதி முழுவதும் பரம்பரை பரம்பரையாகத் தறி நெய்து ஜீவனோபாயம் தேடி அதில் வாழ்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான கைத்தறி நெசவாளர் சமூகமும் அங்குண்டு. கைத்தறி நெசவாளர்களில் பெரும்பாலோர் வெள்ளை வேட்டிப் பண்டாரங்களான கடைத்தட்டு மத்தியதர வர்க்கத்தார் தாம். ஒரு சிலர் மட்டும் ஜவுளிக்கடை நடத்தும் முதலாளிமார்களாகவும், மாஸ்டர் வீவர்களாகவும், நூல் வியாபாரிகளாகவும் இருந்து வந்தனர்.

     சுருங்கச் சொன்னால், அம்பாசமுத்திரம் விட்ட குறை தொட்ட குறையாகவுள்ள அரைகுறை அடிமை நாட்டின் அனுபவ சித்திரமாக விளங்கி வருகிறது. ஒரு புறம் வர்க்க போதம் பெற்று, பற்பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட ஹார்வி மில் தொழிலாளி வர்க்கம்; இன்னொரு புறம், அகழியில் விழுந்த முதலையைப் போல் தன்னுள் தானே வாழ்ந்து கொண்டு, என்றோ ஒருநாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் பொத்துக் கொண்டு வரத்தான் போகிறது என்ற அசட்டு நம்பிக்கையின் அஸ்திவாரத்திலேயே நாட்களைக் கடத்தும் நெல்லிக்காய் மூட்டை போன்ற, ஊசலாட்ட மனப்பான்மை கொண்ட சிறு முதலாளிகள், கைத்தறி நெசவாளிகள், சிப்பந்திகள் முதலியோர் கூட்டம். ஒரு புறம் பகாசுரப் பசியோடு இரவும் பகலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஹார்வியின் பஞ்சாலை; மறு புறத்தில் முக்கித் தக்கி வளர முயலும் உள்நாட்டுச் சிறு முதலாளிகளின் யந்திரத் தொழில் முயற்சி, ஒரு புறம் அசுர வேகத்தில் பறந்து செல்லும் லாரிகள், பஸ்கள்; இன்னொரு புறத்திலோ, தெற்கு மலையிலுள்ள சொரிமுத்தைய்யன் கோயிலில் பொங்கலிட்டுப் பூசை போடுவதற்காக, மலைக்காட்டுப் பாதையில் ஆமை வேகத்தில் செல்லும் கூண்டு வண்டிகள். ஒருபுறம் யந்திர சாதனமும் மின்சார உற்பத்தியும் நிறைந்த தொழிற்சாலைகள்; மறுபுறத்தில் ஆதீன அடியார்க்கு நல்லார்களின், தரகுப் பிள்ளைமார் என்ற தடியடித் தம்பிரான்களின் நிலப்பிரவுத்துச் சுரண்டலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் பிற்போக்கான விவசாயச் சமூகம். ஒருபுறம் அன்னிய முதலாளித்துவம்; மறுபுறம் உள்நாட்டு நிலப்பிரபுத்துவம்.

     நிலப்பிரபுவத்துவச் சீரழிவுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்குமான சரித்திர கதியின் பிரசவ காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியான அம்பாசமுத்திரம் தென்பிராந்திய ரயில்வேயில் ஒரு முக்கிய ஸ்டேஷன். ரயில்வே ஸ்டேஷன், ஊர் ஜனங்களின் வசதியை உத்தேசித்துக் கட்டப்பட்டதா, அல்லது ஹார்வி மில்லின் சௌகரியத்தைக் கருதிக் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஸ்டேஷனில் வந்திறங்கும் எவருக்கும் ஏற்படலாம். எனெனில் ஸ்டேஷனுக்கும் ஊரின் கேந்திர பாகத்துக்கும் ஒன்றரை மைல் தூரமிருக்கும்; அதே சமயத்தில் ரயில்வே ஸ்டேஷனை அடுத்து, அம்பாசமுத்திரம் - விக்கிரமசிங்கபுரம் ரோட்டோரத்தில் ஹார்வி மில்லுக்குச் சொந்தமான கிட்டங்கி இருக்கிறது. ஸ்டேஷனிலிருந்து காலாறக் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் நடந்து வந்தால், ஊரும் கடை கண்ணிகளும் கண்ணில் தட்டுப்படும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊரை நோக்கி வரும் பீடர் ரஸ்தாவில் சிறிது தூரம் வந்தபிறகு, இடது புறமாகவும், வலதுபுறமாகவும் செல்லும் தெருக்கள் முதலிமார் என்றழைக்கப் பெறும் கைநெசவுத் தொழிலாளர்கள் வாழும் பிரதேசத்தைப் புலப்படுத்தும். ரோட்டின் இடது புறமாகச் செல்லும் தெருவின் மத்தியில் தான் லோகநாயகி அம்மன் கோயில் இருக்கிறது.

     அம்மன் கோயிலுக்கு எதிரிலும், பக்கத்திலுமுள்ள தெருக்களில் அருணோதய காலங்களில் சூரிய தேவனுக்கு வானவில்லை நெளிசல் எடுத்து நடை பாவாடையாக விரித்துப் போட்டதுபோல், பாவு தோய்க்கும் கோலாகலக் காட்சி தெரு நிறைந்து ஒளி செய்யும். அம்மன் கோயிலுக்கு எதிராகச் செல்லும் சந்நிதித் தெருவின் கடை கோடியிலுள்ள காரை வீடுதான் மைனர் முதலியார்வாளின் வீடு. மேலத் தெருவின் மத்தியில் எடுத்துக் கட்டிய புதிய மாடியோடு உள்ளது கைலாசம் முதலியாரின் வீடு. அதற்கும் அப்பால், தன்னந் தனியாக, தெரு ரோட்டோடு கலக்கும் சங்கம முகத்தில், காம்பவுண்டு சுவர் வளைந்து, காடியானாவும், கார்ஷெட்டும் பூஞ்செடிகளும் உள்ள பங்களா வீடுதான் பெரிய முதலாளி என்று மதிக்கப்படும் தாதுலிங்க முதலியாரின் ‘மங்கள பவனம்’.

     சந்நிதித் தெருவின் கடை கோடி வீட்டு முன்வாசலில் ஒரு கறுப்பு நாய் தூங்காமல் தூங்கிச் சுகம் கண்டு கொண்டிருந்தது.

     சுப்பையா முதலியார் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு, “அண்ணாச்சி, அண்ணாச்சி” என்று பவ்வியத்தோடு குரல் கொடுத்தார். குரலைக் கேட்டதும், வாசலில் படுத்திருந்த நாய் எழுந்து நின்று வறட்டுக் குரலில் குலைக்கத் தொடங்கியது.

     நாயின் சத்தத்தைக் கேட்டு வெளிவந்த மைனர் முதலியார் “அடடே! சுப்பையாவா? வாப்பா உள்ளே” என்று அருமையோடு அழைத்தார். நாயின் உறுமலைக் கண்டு ஒதுங்கி நின்ற சுப்பையாவைக் கண்டு, மைனர் லேசாகச் சிரித்து விட்டு, நாயைச் சொடுக்கு விட்டு அருகே அழைத்து, “என்ன வெள்ளை! உனக்கு ஆள் கூட இனம் தெரியிலியா? இவனும் நம்மளவந்தான்!” என்று கூறிக்கொண்டே நாயைத் தட்டிக் கொடுத்தார். நாயும் எதையோ புரிந்து கொண்டது போல், தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன்னிடத்தில் போய்ப் படுத்துக் கொண்டது.

     மைனர் முதலியாரைத் தொடர்ந்து சுப்பையா முதலியாரும் உள்கட்டுக்குச் சென்று கூடத்திலிருந்த கருங்கல் திண்ணை மீது உட்கார்ந்தார்.

     மைனர் முதலியார்வாளின் மிடுக்கு பெயருக்குத் தக்கவாறு படாடோபமாகத்தான் இருந்தது. எனினும் இளமையில் இரவு பகல் என்று பாராமல் வண்டி போட்டுக் கொண்டு வைப்பாட்டிமார்களின் வீடுகளுக்குச் சென்று விளையாடி விட்டு வந்ததால், உடம்பில் தாது விழுந்து போய், கனமாய் தோன்றிய போதிலும் எடுப்பும் மினுமினுப்பும் இல்லாதிருந்தது. எனினும் கையிலே டாலடிக்கும் வெள்ளைக்கல் மோதிரங்கள், நெற்றியிலே அளவெடுத்து வட்டமிட்டது போல் விளங்கும் அழகிய சந்தனப் பொட்டு, வழுக்கை விழுந்த தலையேயாயினும் மிஞ்சி நின்ற ஓரிரு ரோமங்களையும் வாளிப்பாக வாரி விடப்பட்ட கிராப், கழுத்திலே கிடந்து ஒளி சிதறும் நவரத்னக் கற்கள் கோத்த மெல்லிய சங்கிலி, வெற்றிலையும் புகையிலையும் கலந்து லக்ஷ்மிகரமாய் விளங்கும் திருவாய் முதலிய சம்பிரமங்கள் மைனர்வாளின் தளர்ந்து போன உடற்கோலத்துக்குக் காயகல்பம் செய்து ஈடுகட்ட முயன்று கொண்டிருந்தன. மைனர் முதலியார் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே எதிரே கிடந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

     மைனர் முதலியார்வாளின் குடும்பம் பல தலைமுறைகளாக வியாபாரத்திலும், லேவாதேவியிலும் ஈடுபட்டு ஏராளமான நிலபுலன்களையும் சொத்துச் சுகங்களையும் தேடி வைத்திருந்தது. மைனரின் தந்தை தமது ஆயுட்காலம் முழுவதையும் அநேகமாகக் கோர்ட்டு வாசலிலேயே கழித்து விட்டார். ‘கோடேறியவன் வீடு ஈடேறாது’ என்ற நாட்டுப் பழமொழிக்கு எதிர்மறை இலக்கணமாகத்தான் அவரது கோர்ட்டு வாழ்க்கை கழிந்தது. அதாவது அவர் கோர்ட்டுக்குச் சென்று கைமுதல் எதையும் இழக்கவில்லை. அதற்குப் பதிலாகக் குடியானவர்களிடமும் ஏழை எளியவர்களிடமும் கண்ட கண்ட வட்டிக்கும் பணத்துக்கும் நோட்டும் அடமானமும் எழுதி வாங்கி, வாங்கி அவர்களிடமுள்ள சொத்துக்களைச் சட்டத்தின் பேரால் அபகரிக்கும் திருப்பணிக்காகவே அவர் கோர்ட் வாசலுக்கு மாதா மாதம் சென்று வந்தார். மைனர் முதலியார் சுயாதீனத்துக்கு அந்தச் சொத்துக்கள் வந்தபோது கண்மூக்குத் தெரியாமல் டம்பாச்சாரி வாழ்க்கை வாழ்வதற்கும் விளையாடுவதற்கும் நிறைந்த வசதி இருந்தது. எனினும் மைனர் முதலியார் அந்த வாழ்க்கையிலேயே ஓரேயடியாய் முங்கி முழுகி நொடித்துப் போய்விடவில்லை. முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே அந்த வாழ்க்கை இரும்புப் பெட்டியை மட்டும் பிடிக்காமல், உடம்பையும் பிடிக்கத் தொடங்கிவிட்டதால், மைனர் முதலியார் உயிராசையின் காரணமாக, சீக்கிரமே ஏலாப் பதிவிரதா இச்சா பத்திய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அதன் பின்னர் அவரும் மற்றவர்களைப் போலவே வியாபாரத்தைக் கவனிக்கவும், நூல் ஜவுளிக் கொள்முதல் செய்யவும், வீடு தேடி வந்து விடாப்பிடியாகக் கடன் கேட்கும் சுயஜாதிக்காரரிடத்திலும் பிறரிடமும் ஒன்றரை வட்டி இரண்டு வட்டிக்குச் சொத்தின் பேரிலும் நகை நட்டுக்களின் பேரிலும் கடன் கொடுக்கவும் தொடங்கி, தம் தந்தையின் பிதுர்க்கைங்கரியத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவரது சமூகத்தினரிடையே பலரும் அவரிடம் கடன் பட்டவர்களாதலால், அவர் தமது பொருளாதாரப் பிடிப்பின் மூலம் அந்த மக்களின் தெய்வ பக்தியிலிருந்து சகல சுப அசுப காரியங்களிலும் ஏகபோக ஆட்சி செலுத்தி வந்தார். எனவே அவர் அம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து, ஏதேதோ காரியங்கள் செய்தும் ஊர்க்காரர்கள் அவரைத் தட்டிக் கேட்கப் பயந்து விட்டு விதி என்றிருந்தார்கள்.

     ஈஸிச்சேரில் சாய்ந்தவாறே பக்கத்திலிருந்த எச்சில் படிகத்தில் காறித் துப்பிவிட்டு, நிமிர்ந்த மைனர் முதலியார், “என்ன சுப்பையா, எங்கே? காலம் காத்தாலே” என்று கேட்டார்.

     சுப்பையா தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசினார்.

     “நேத்து ராத்திரியே வந்தேன் அண்ணாச்சி, உங்களைக் காணம். அதுதான் காலையிலேயே வந்துட்டுப் போயிறலாம்னு வந்தேன்.”

     “சரி, என்ன விசயம்?”

     “எல்லாம் நம்மவங்க விசயம்தான். நம்ம வடிவேலு முதலியாரும் ரெண்டொருத்தரும் சேந்துக்கிட்டு என்னமோ தறிக்கூலியை உசத்திக் கேக்கணும்னு பேசிக்கிடுதாக. நேத்து நானே கேட்டேன்” என்று தொடங்கினார் சுப்பையா.

     “இவனுங்களுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் புடிச்சிருக்கா? காலம் கிடக்கிற கிடையிலே கூலியை உசத்துறதாவது? கட்டுப்படியாக வேண்டாமா?” என்று செல்லச் சிரிப்புடன் பதிலளித்தார் மைனர்.

     “சொன்னாக் கேக்காங்களா, அண்ணாச்சி, பாருங்க, அந்த வடிவேலு இத்தனையையும் அந்தக் கைலாச முதலியார் தைரியத்திலேதான் பேசுறாரு. கைலாச முதலியார் கிட்டே கலந்துக்கிட்டு ஊர்க்கூட்டம் போடப் போறதாகச் சொன்னாரு.”

     “என்னது? கைலாச முதலியாரா? அவர் மின்னேயும் ஒருதரம் இப்படித்தான் பெரிய தாராளப் பிரபு மாதிரிக் கூலியை உசத்திக் குடுக்கணும்னு, இவனுகளோட சேர்ந்துக்கிட்டு தாளம் போட்டாரு. இதிலே அவருக்கென்ன லாபமோ தெரியலே?” என்று சலித்தாற் போல் சொன்னார் மைனர்.

     “லாபம் இல்லாமலா, அண்ணாச்சி” என்று பொடி வைத்துச் சிரித்தார் சுப்பையா.

     “என்ன, என்ன சொன்னே?” மைனர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

     “அண்ணாச்சி, அவர் இப்படித் தறிகாரர்களுக்கெல்லாம் சாதகமா நடந்து அவங்களையெல்லாம் கைக்குள்ளே போடப் பார்க்கிறாரு. எல்லாம் உங்களுக்கு எதிரிடையாத்தான்!”

     “எனக்கு எதிராகவா? அப்படின்னா?” என்று வியந்தார் மைனர்.

     “ஒண்ணுமில்லே. நீங்க அம்மன் கோயில் தர்மகர்த்தாவா இருக்கது அவரு கண்ணை உறுத்துது போலிருக்கு. அவரே இந்த வருசம் தர்மகர்த்தா ஆகணும்னு கொடி கட்டிக்கிட்டுத் திரியிறாரு. அதுதான் அவர் இப்படிப் படை திரட்ட ஆரம்பிச்சிருக்காரு.”

     “ஊஹும்” என்று இளங்கோபத்தோடு உறுமிக் கொண்டார் மைனர்.

     “அண்ணாச்சி, பரம்பரையா வியாபாரம் பண்ணிப் பணக்காரனாயிருந்தா இந்த அற்ப ஆசையெல்லாம் தோணுமா? சண்டைக்கி மின்னாலே அவரும் தறிக்குழியிலே கிடந்து லொக்கடி லொக்கடின்னு நெஞ்சவர்தானே அண்ணாச்சி!”

     “சரிதான்” என்று ஒரு வார்த்தையைப் போட்டுவிட்டு ஏதோ யோசித்தார் மைனர்.

     “அண்ணாச்சி, நீங்க எவ்வளவு காலமாகத் தர்மகர்த்தாவா இருக்கீஹ. இப்ப உங்களைத் தள்ளிட்டு அவர் வாரதுன்னா, அது நல்லாருக்கா? நம்ம குடும்ப கௌரவம் என்னாகிறது?”

     “சுப்பையா!” என்று அடக்கமாகக் கூப்பிட்டார் மைனர்; சுப்பையா ஆர்வத்தோடு கழுத்தை நீட்டினார்.

     “இந்தா பாரு ஒண்ணும் நம்ம கையைவிட்டு மிஞ்சிப் போயிராது. இப்பவும் கைலாசத்துக்கு நம்ம தாதுலிங்க முதலியார்வாள் கிட்டேதான் லேவாதேவி. ஆசாமியை அந்தப் பக்கமா ஒரு இறுக்கு இறுக்கினாப் போச்சி!” என்றார் மைனர்.

     “அதென்னமோ அண்ணாச்சி லேசிலே இதை விட்டுறக் கூடாது.”

     “உன்னை மாதிரி நாலு பேர் சொல்றாகளேன்னுதான் பார்க்க வேண்டியிருக்கு. இல்லேன்னா, இதிலே என்ன காசா பணமா? என்னமோ தெய்வ காரியமேன்னு பார்த்தா, ஊர்க்காரன் சும்மா இருக்கானா? எடுத்ததுக்கெல்லாம் பொல்லாப்பு இருந்தாலும் இந்த அருணாசல முதலியாரை அப்படி ஒண்ணும் மடக்கிற முடியாது. ஆமா” என்று ஆணித்தரமாக அறைந்தார், மைனர் முதலியார்.

     “நல்லாச் சொன்னிய, அண்ணாச்சி. பூடம் தெரியாம, சாமி ஆடுதானுக” என்று மைனரின் வஞ்சின மொழியைப் பாராட்டினார் சுப்பையா. பிறகு அவர் தமது இடத்தை விட்டு எழுந்திருந்தவாறே, “அப்ப நான் வரட்டுமா, அண்ணாச்சி?” என்று கேட்டார்.

     “சரி” என்று நிர்விசாரமாகப் பதில் வந்தது எனினும் சுப்பையா அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

     “என்ன சுப்பையா?” என்று அர்த்த பாவத்தோடு கேட்டார் மைனர்.

     “ஒண்ணுமில்லே அண்ணாச்சி. நம்ம சின்னப் பயலுக்கு உடம்புக்கு முடியலெ. டாக்டர்கிட்டெ காட்டணும். கையிலெ ஒத்தச் சல்லி இல்லெ. அஞ்சு ரூவா இருந்தாக் கிடைக்குமா?” என்று மென்று விழுங்கிக் கூறினார் சுப்பையா.

     மைனர் முதலியார் மோவாயைத் தடவியவாறே முகட்டைப் பார்த்தார். பிறகு இரண்டு ரூபாய் நோட்டைப் பையிலிருந்து எடுத்து நீட்டியவாறே, “இந்தா, இதை வச்சிக்க” என்று கூறினார்.

     சுப்பையாவின் வாயெல்லாம் பல்லாய்த் தெரிந்தது. கிடைத்தவரையில் லாபம் என்ற ஆத்ம திருப்தியோடு அந்த நோட்டை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு வாசலுக்கு வந்தார். வாசலில் கிடக்கும் நாய்க்குப் பயந்து அரவமில்லாமல் நடை இறங்கினார்.

     நல்ல வேளையாக வெள்ளை நிச்சிந்தையாகத் தூங்கிக் கொண்டிருந்தது.பஞ்சும் பசியும் : 1 2சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 177/- : 1 வருடம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்!
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
      

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF
நிட்டை விளக்கம் - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF
திரு ஆனைக்கா உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


108 திவ்ய தேச உலா - பாகம் 1

ஆசிரியர்: பிரபுசங்கர்
வகைப்பாடு : ஆன்மிகம்
இருப்பு உள்ளது
விலை: ரூ. 225.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00
அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

Buy

நேரடியாக வாங்க : +91-94440-86888