4 சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இத்தாலிய ‘பாஸிஸ்ட் ஜடாமுனி’ அபிஸீனியா மீது போர் தொடுப்பதற்கு முன்பு, கைலாச முதலியார் சாதாரணத் தறிகாரராய்த்தான் இருந்தார். ஏதோ முன்னோர்கள் தேடி வைத்துவிட்டுப் போன நாழி ஓடுபோட்ட சிறு காரை வீடும், இரண்டு மரக்கால் விரைப்பாடும் கொண்ட சாதாரண மத்திய தர வர்க்கத் தொழிலாளியாகத்தான் இருந்தார். அந்தக் காலத்தில் அவர் உள்ளூர் பெரிய முதலாளியான தாதுலிங்க முதலியாரிடம் நூல் வாங்கி நெய்து கொடுத்து அதற்குரிய கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். நாளாரம்பத்தில் அவர் தமது சுய சம்பாத்தியத்தில் வாயை வயிற்றைக்கட்டி மிச்சம் பிடித்ததைக் கொண்டும், வயலை அடமானம் வைத்தும், நாலைந்து தறிகளை வாங்கிப் போட்டுத் தமது இனத்தாரில் சிலரை அதில் வேலைக்கு வைத்துக் கொண்டு, நூல் வாங்கிக் கொடுத்து நெய்து சேலை துணிமணியாக்கித் தமது தொழிலை ஓரளவு விருத்தி பண்ணிக் கொண்டார். இத்தியாதி காரணங்களால், யுத்த காலத்தில் சாதாரணத் தறிகாரர் என்ற நிலைமையிலிருந்து ‘முதலாளி’ என்ற அந்தஸ்துக்கு கைலாச முதலியார் உயர்ந்துவிட்டார். கையில் கிடைத்த புதுப் பணத்தின் மூலமாக, அவர் தமது பூர்விக வீட்டை எடுத்துக்கட்டி விஸ்தரித்தார். நாழி ஓட்டைப் பிரித்து, மச்சு எடுத்து வீட்டைப் புதுப்பித்தார்; வீட்டுக்கு மின்சார விளக்கும் போட்டார். முன்வீட்டில் நூல் கட்டுக்களை ஸ்டாக் செய்யவும், ஜவுளிக் கொள்முதல் வியாபாரம் செய்யவும் ஒரு கடையையும் திறந்து வைத்தார். கடையில் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு கணக்கப்பிள்ளையையும், பதினைந்து ரூபாய்ச் சம்பளத்தில் ஒரு எடுபிடி வேலைக்காரப் பையனையும் வேலைக்கு அமர்த்தினார். காலையில் அவர் ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டு கையில் இரும்புப் பெட்டிச்சாவி கலகலக்க, ஈரத்தலையைச் சிக்கெடுத்து உதறியவாறே பட்டறைப் பலகையில் வந்து அமரும்போது, சிப்பந்திகள் இருவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும், ‘மொதலாளி’ என்று பவ்வியத்தோடு அழைக்கும் போதும், அவருக்குத் தம்மையறியாமலேயே சிறு அகந்தை உணர்ச்சி மேலோங்கும். வீட்டை எடுத்துக் கட்டியதோடு அவர் தாமிரபருணிப் பாசனத்தில் ஒன்றரைக் கோட்டை விரைப்பாடு கொண்ட வயலையும் கிரயத்துக்கு முடித்திருந்தார். அத்துடன் வாழ்நாளில் செம்பாதியை உழைத்துழைத்துச் சலித்து வாடிப் போன தம் மனைவி தங்கம்மாளுக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமானத்துக்கு நகை நட்டுக்களும் பண்ணிப் போட்டிருந்தார். தங்கம்மாளும் புதுப் பணமோகத்தில் ஊரிலுள்ள நாலு பெரிய வீட்டுப் பெண்ணரசிகளோடு சம அந்தஸ்தில் பழக வேண்டும் என்ற காரணத்தால், வளர்த்துத் தொங்க விட்டுப் பாம்படம் போட்டிருந்த காதை அறுத்து ஒட்டி, கால் துட்டு அகலத்தில் கம்மலும் போட்டுக் கொண்டாள். ஏதோ தன் மகன் மணிக்குக் காலாகாலத்தில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைத்து விட்டால், மருமகளை ஆட்சி செலுத்திக் கொண்டு தான் நிம்மதியாக இருக்கலாம் என்ற நிரந்தர நப்பாசையும் அவள் மனத்தில் குடி கொண்டிருந்தது. வியாபாரி என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டதால், கைலாச முதலியாரும் தமது மூத்த மகன் சுப்பிரமணியன் என்ற மணியை இங்கிலீஷ் படிப்புப் படிக்க வைத்து, பி.ஏ. கிளாஸ் வரையிலும் தள்ளி விட்டுவிட்டார். கைலாச முதலியார் தம் சம்பாத்தியத்தில் பெருமளவை வீட்டிலும் வயலிலும் வியாபாரத்திலும் போட்டு விட்டதால், அவரிடம் ரொக்கமாக அப்படி ஒன்றும் அதிகம் மிஞ்சி விடவில்லை. எனவே வியாபாரத்தில் அடிக்கடி ஏற்படும் தேவைகளுக்கு தாதுலிங்க முதலியாரிடமும், மைனர் முதலியோரிடமும், வேறு சிலரிடமும் அவ்வப்போது ரொக்க லேவாதேவி செய்து, வாங்குவதும் அடைப்பதுமாக வியாபாரத்தை ஓட்டி வந்தார். மாற்றுக்குறையாத தெய்வ பக்தியின் காரணமாகவும், தமது பூர்வ நிலையை மறந்தறியாத காரணமாகவும், அவர் தம்மிடம் தொழில் நடத்திய தறிகாரர்களிடத்தில் கூடிய பட்ச நாணயத்தோடும், மரியாதையோடும் நடந்து கொண்டார். பெரிய முதலாளிமார்களைப் போல், தறிகாரர்களின் வாயில் வயிற்றிலடித்துப் பணம் திரட்டவும், தறிகாரர்களிடத்தில் கண்ணியக் குறைவாகவோ, அதிகார முறுக்காகவோ நடந்து கொள்ளவும் அவர் முனையவில்லை. இதனால், தறிகாரர்கள் அனைவரிடத்திலும் பொதுவாக அவரைப் பற்றி நல்லெண்ணம் தான் நிலவி வந்தது. வடிவேலு முதலியாருக்குக் கைலாச முதலியாரின் நாணயப் பொறுப்பிலும் நல்லெண்ணத்திலும் மிகுந்த நம்பிக்கை. எனவேதான் அவர் எப்படியும் நடப்பு வருஷத்தில் கைலாச முதலியாரைக் கோயில் தர்மகர்த்தா ஆக்கிவிடுவது என்று தீர்மானத்தோடு தறிகாரர்களிடையே அவ்வப்போது பிரசாரம் செய்து பலம் திரட்டி வந்தார். அன்று மாலை நடக்கவிருந்த ஊர்க்கூட்டத்தில் கூலி உயர்வுப் பிரச்னையையும் தர்மகர்த்தாப் பிரச்னையையும் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அன்றைக்குப் பொழுது அநேகமாகக் கருக்கலாகி விட்டதால், வடிவேலு முதலியார் கைலாச முதலியாரைக் கூட்டத்துக்கு நேரில் சென்று அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தார். “அண்ணாச்சி, அண்ணாச்சி.” வாசலில் கூப்பிடு குரல் கேட்டதும் கைலாச முதலியாரின் மனைவி தங்கம்மாள் சேலையை இழுத்துத் தோளில் மூடிக் கொண்டு, வாசல் நடைக்கு வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் வடிவேலு முதலியார் நிற்பதைக் கண்டதும், உள்ளே திரும்பிச் சென்று மாடிப் படிக்கட்டுக்கருகே நின்றவாறே மேல் நோக்கிச் சத்தம் கொடுத்தாள். “இந்தாங்க, உங்களத்தானே.” கைலாச முதலியார் மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனிப்பதற்காக உள்ளே சென்றாள் தங்கம். கைலாச முதலியார் வாசல் நடை மீதிருந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடையை அடுத்துக் கிடந்த பெஞ்சியில் அமர்ந்தார். “வடிவேலுத் தம்பியா? வாங்க. என்ன நேரமாயிட்டுதா?” என்று விசாரித்தவாறே பெட்டியைத் திறந்தார். “ஆமா அண்ணாச்சி, நேரத்தோட போயிட்டா நல்லதுதானே. பெரிய முதலாளி கூட வாரதாக இருக்கு” என்றார் வடிவேலு. கைலாச முதலியார் வெற்றிலையைப் போட்டு முடித்துவிட்டு, “அப்ப இருங்க. வேட்டி மாத்திக்கிட்டு வந்திடுதேன்” என்று கூறியவாறே உள்ளே சென்றார்.
கைலாச முதலியாரும் வடிவேலு முதலியாரும் கூட்டம் நடக்கவிருந்த இடமான அம்மன் கோயிலுக்குச் செல்லும் போது பொழுது நன்றாக இருட்டி விட்டது. தெருக்களில் மின்சார விளக்கும் போய்விட்டது. கோயில் முன் மண்டபத்திலும் தெருவிலுமாகத் தறிகாரர்கள் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு புஸ்ஸென்று இரைந்து கொண்டிருந்தது. சமுக்காள விரிப்பில் உள்ளூர் ஜவுளி நூல் வியாபாரிகள் சிலர் உட்கார்ந்திருந்தனர். வடிவேலு முதலியார் கைலாச முதலியாரை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு, மற்ற தறிகாரர்களோடு போய் நின்று கொண்டார்.
“வாங்க கைலாச முதலியார்வாள். திருச்செந்தூரிலிருந்து எப்ப வந்தீக?” என்று விசாரித்தார் ஒரு வியாபாரி. “நேத்து ராத்திரியே வந்துட்டேனே” என்று பதிலளித்துவிட்டு, “பெரிய முதலாளியும் வாரதாகச் சொன்னாகளாமில்லே. வரலியா?” என்று அர்த்தபாவமற்று நிச்சிந்தையாய்க் கேட்டார். அவருக்கு யாரோ ஒருவர் பதிலளிக்க முனைவதற்குள் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “வந்தாச்சி போலிருக்கே!” பெரிய முதலாளி தாதுலிங்க முதலியாரும், தர்மகர்த்தா மைனர் முதலியாரும், சேர்ந்தாற் போல் உள்ளே வந்தார்கள்; பெரிய முதலாளியைக் கண்டதும் ஒரு சில வியாபாரிகள் மரியாதைக்காக எழுந்து நின்று உட்கார்ந்தார்கள். தாதுலிங்க முதலியாரும் மைனர்வாளும் கூட்டத்தினருக்குத் தலைமை தாங்கும் பாவனையில் மத்தியில் போய் அமர்ந்து கொண்டனர். அங்கு நிலவிய அமைதியை மைனர் தான் முதலில் கலைக்கத் துணிந்தார். “வியாபாரிகள் எல்லாரும் வந்தாச்சா? இன்னும் வரணுமா?” “அநேகமாக வந்தாச்சி. கூட்டத்தை நடத்தலாம்” என்று ஒரு குரல் பதிலளித்தது. தாதுலிங்க முதலியார் முகத்தில் எந்தவிதமான பாவப் பிரதிபலிப்பும் இல்லாமல் கைலாச முதலியாரை நோக்கி, “என்ன கைலாச முதலியார்வாள், தறிகாரர்கள்ளாம் கூலி உசத்திக் கேக்கிறாங்களே. நீங்க என்ன சொல்லுதிய?” என்று கேட்டார். “கூடக்குறையன்னாலும் பாத்துக் குடுக்க வேண்டியதுதான். இல்லேன்னு சொல்லிற முடியுமா?” என்றார் கைலாசம். கைலாச முதலியாரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த மைனர்வாளின் முகம் சட்டென்று வக்கிர உச்சம் பெற்றது. உடனே அவர் “இந்தத் தறிகாரர்களே இப்படித்தான். இதே வழக்கமாப் போச்சு. நூல் விலையானா, நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போவுது. கூலியையும் உசத்திக் குடுத்துட்டா, அப்புறம் சரக்கு நகர்ந்த காலத்திலேதான் நிசம்!” என்று அடித்துப் பேசினார். “வாஸ்தவம்தான். ஆனால் நூல் விலை ஏறுதுங்கிறதுக்காக, கூலியைக் குறைச்சிச் சரிக்கட்ட முடியுமா? நாலஞ்சு வருஷத்துக்கு மின்னே கிடைச்ச கூலியிலே, இப்போ தறிகாரங்களுக்கு அரைவாசி கூடக் கிடைக்கல்லே. இன்னிக்கி இருக்கிற விலைவாசியிலே அவங்க பாடும் ஓடியடைய வேண்டாமா?” என்றார் கைலாசம். “எல்லாம் பெரிய முதலாளி பார்த்துச் சொன்னா, சரிதான்” என்று பொறுப்பைத் தாதுலிங்க முதலியாரிடம் தள்ளிவிட முனைந்தார் ஒரு வியாபார். பிரச்சினை தாதுலிங்க முதலியாரிடம் கைமாறுவதற்குள் ஒரு சிறு வியாபாரி முந்திக் கொண்டு பேச முனைந்தார்; “அவாளுக்கு என்ன? நம்மைச் சொல்லுங்க. நமக்கும் தறிகாரர்களை வச்ச வாழ்வு; தறிகாரர்களுக்கும் நம்மை வச்ச வாழ்வு. கொஞ்சம் அனுசரித்துத்தான் போகணும். இல்லேன்னா, தறிகாரங்கள்ளாம் ஒண்ணு கூடிக்கிட்டு ஏதாவது தப்புத் தண்டான்னு ஆரம்பிச்சா, நம்ம யாபாரமே தொலைஞ்சிது!” இந்தப் பேச்சைக் கேட்டவுடன் தாதுலிங்க முதலியார் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்: “என்னய்யா பேசறிங்க? இப்ப மட்டும் வியாபாரம் ரொம்ப வாழுதாக்கும். வர வர ஜவுளி ஏத்துமதியே அத்துப்போச்சி. வியாபாரமோ நடக்கல்லே. சரக்கெல்லாம் இடிச்சிவச்ச புளி மாதிரி இருக்கு. நூல் விலையோ ஏறுது. கூலி உசத்திக் குடுக்கிறதுக்கு என்ன நியாயம் இருக்கு?” தாதுலிங்க முதலியாரின் அதிகார மிடுக்கு நிறைந்த பேச்சு மைனர் முதலியாரின் வாயையும் திறந்து விட்டது: “சில பேர் குடுத்துக் குடுத்து வழக்கம் பண்ணப் போய்த்தான் தறிகாரங்களும் கூத்தாடுறாங்க” என்று கூறிவிட்டு அர்த்த பாவத்தோடு கைலாச முதலியாரைப் பார்த்தார். கைலாச முதலியார் அந்தக் குறிப்பை உணர்ந்தவராக, “மனமறிஞ்சி இனத்தான் வயிற்றில் அடிக்கக் கூடாது” என்று கூறி நிறுத்தினார். “யார் வயித்திலே யார் அடிக்கிறா? வேலைக்குத்தான் கூலியா? விருதாக் கூலியா?” மைனர்வாளின் குரல் மண்டபக் காலில் முட்டி மோதி எதிரொலித்தது. சுமார் அரைமணி நேர வாதப் பிரதி வாதங்களுக்குப் பிறகு இரு சாராருக்கும் பொதுவாக ஒரு முடிவு செய்யப்பட்டது. தறிகாரர்களுக்கு அப்போது கழிக்கு எட்டணா கூலிதான் கிடைத்து வந்தது. குறைந்தபட்சம் பன்னிரண்டணா வேண்டும் என்பது தறிகாரர்களின் கோரிக்கை. கடைசியில் பெரும்பான்மையான வியாபாரிகளின் அபிப்பிராயப்படி கழிக்குப் பத்தணாக் கூலி என்று ‘தென்காசி வழக்’காகக் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிர்ணயிப்புக்கு வருவதற்கே கைலாச முதலியாரையொத்த சிறு வியாபாரிகள் பலரும் வெகு நேரம் வாதாட வேண்டியிருந்தது. பிறகு இந்த முடிவைத் தெரிவிப்பதற்காகத் தறிகாரர்கள் உள்ளே வரவழைக்கப் பட்டார்கள். முடிவு தெரிவிக்கப்பட்டது; தறிகாரர்களும் சம்மதித்துக் கொண்டார்கள். “அப்போ விஷயம் முடிஞ்சிது. கூட்டத்தைக் கலைச்சிரலாமா?” என்று கேட்டுக்கொண்டே இடத்தை விட்டு எழுந்திருக்க முனைந்தார் மைனர் முதலியார். உடனே ஒரு வியாபாரி குறுக்கிட்டு, “இருங்க. அவசரப்படுதியளே!” என்று இடைமறித்துக் கூறி அவரைக் கையமர்த்தி உட்கார வைத்தார். இதற்குள் வடிவேலு முதலியார், “முதலாளி, நம்ம அம்மன் கோயில் தர்மகர்த்தா விசயமா ஒரு முடிவு பண்ணனும்னு பல பேருக்கு எண்ணம். அதையும் இங்கேயே...” என்று ஆரம்பித்தார். அவரை ஆமோதித்தார் ஒரு சிறு வியாபாரி. “என்னய்யா யோசனை? அருணாசல முதலியார்வாள் தான் தர்மகர்த்தாவா இருக்காகளே, அவாளே இருந்துட்டுப் போகட்டுமே. எல்லாம் நிலைமை சீர்ப்பட்டு வந்த பிறகு பாத்துக்கிடலாம்” என்று அடித்துப் பேசினார். “மைனர்வாளை நான் குத்தம் சொல்ல வரலை. ஊர்ப் பொல்லாப்பு. நாலு பேர் நாலுவிதமாப் பேசுதாங்க. பொறுப்பைக் கைமாத்திக் குடுத்திட்டா, ஒரு வம்பு தும்பு இல்லை” என்று வடிவேலு முதலியாரை ஆதரித்த சிறு வியாபாரி அழுத்திப் பேசினார். இதைக் கேட்டதும் கூட்டத்தில் நின்ற சுப்பையா முதலியார், “அது என்ன அது? அண்ணாச்சியையும் கூட்டத்திலே வச்சிக்கிட்டு இப்படி அவமரியாதையாப் பேசுறதாவது?” என்று கண்டனக் குரல் எழுப்பி, தமது குடும்ப விசுவாசத்தை நிலைநாட்டிக் கொண்டார். “ஊர்க் காரியமின்னா நல்லதும் வரும்; பொல்லதும் வரும். நாலும் பொறுத்துத்தான் போகணும். கோவிச்சுக்கிட்டா முடியுமா?” என்று சூடாகப் பதில் அளித்தார் வடிவேலு முதலியார். கடைசியில் தறிகாரர்கள் அபிப்பிராயப்படியே தர்மகர்த்தா பிரச்சினை ‘அஜண்டா’வில் இடம் பெற்றது. பெரிய முதலாளியும் மைனர்வாளும் கிளப்பிய ஆக்ஷேபணைகள் ஒன்றும் நிலைக்கவில்லை. முடிவாக வடிவேலு முதலியாரின் திட்டமே நிறைவேறியது. பெரும்பான்மையோரின் ஆதரவின் மூலம் கைலாச முதலியார் அம்மன் கோயிலின் புதிய தர்மகர்த்தாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தர்மகர்த்தாவிடம் கோயில் கணக்கு வழக்குகளையெல்லாம் அருணாசல முதலியார் கூடிய சீக்கிரம் ஒப்படைப்பதென்றும் கூட்டத்தார் முடிவு செய்தனர். புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட கைலாச முதலியார் ‘முருகா’ என்று தமக்குத் தாமே கூறிவிட்டு, சபையோரைப் பார்த்து, “எல்லாருமாகச் சேர்ந்து கொடுக்கிற இந்தப் பொறுப்பை என்னாலானமட்டும் கவனிச்சிப் பார்க்கிறேன். அம்மன் பணிக்கு அட்டி சொல்லப்படுமா?” என்று அவையடக்கத்தோடு கூறிக் கொண்டார். பின்னர் கோயிலுக்குப் பூஜை செய்யும் ஓதுவார் மூர்த்தி, அம்மனுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கினார். விபூதிப் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் தரித்தவாறே கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மைனர் முதலியார் கோயிலைவிட்டு வெளியேறும் வரையிலும் வாயே திறக்கவில்லை. ஒன்றும் பேசாமல், பெரிய முதலாளியுடன் சென்று அவரது காரில் ஏறிக் கொண்டார். இரட்டைக்குழல் ஹார்னை உறுமிவிட்டு, அந்த பியூக் கார் தெருமூலையைக் கடந்து திரும்பியது. அப்போதுதான் மைனர் முதலியார் தம் திருவாயை மலரச் செய்தார். “பாத்தியளா அண்ணாச்சி, உங்க பேச்சுக்குக் கூட மதிப்பில்லாமப் போச்சி. எல்லாம் அந்தக் கைலாசம் கைவரிசைதான். இன்னிக்கி ஊர் விவகாரத்திலே தறிகாரங்களையெல்லாம் ஒண்ணு திரட்டிக்கிட்டு நினைச்சதைச் சாதிக்கிறவன், நாளைக்கு நம்ம வியாபார விசயத்திலேயும் இந்த மாதிரி ஏதாவது பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்?” தாதுலிங்க முதலியாரிடமிருந்து இந்தக் கேள்விக்கு உடனே பதில் வந்து விடவில்லை. சில விநாடிகள் கழித்து அவர் சொன்னார்: “தம்பி, கைலாசம் நான் வளர்த்து விட்ட பயிர்; வளர்த்து விடத் தெரிஞ்சமாதிரி, அதைச் சாகடிக்கவும் எனக்கு வழி தெரியும். அந்தக் கவலையை விடுங்க.” தாதுலிங்க முதலியாரின் வர்ம மொழியைக் கேட்ட பின்னர்தான் மைனர் முதலியாருக்கு ஆசுவாசமாக மூச்சு வந்தது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |