1 அந்த ஆலமரத்தின் அடியில், அத்தனை பெண்களும் கையும் பீடி இலையுமாய், வாயும் பேச்சுமாய், தட்டும் மடியுமாய், தலையில் வைத்த பூக்கள், அவர்களின் தளிர்மேனி செடியில் பூத்து நிற்பதுபோல் பொலிவு காட்ட, முன்னாலும் பின்னாலும் லேசாய் ஆடியாடி, முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த ஆலின் அடிவாரத்தை மாலையிட்டு மரியாதை செலுத்துவதுபோல, பதினெட்டு இருபது பெண் பூக்கள் மாலை வடிவத்தில் அமர்ந்து பீடி இலைகளைக் கத்தரித்தும், சதுரஞ்சதுரமாகச் சித்தரித்தும், வெட்டியும், சுருட்டியும், கட்டியும் கைகளை இயக்கத்தில் விட்டார்கள். செண்பகப் பூப்போன்ற தங்கநிற முத்தம்மா, குண்டுமல்லி போன்ற தடிச்சி வாடாப்பூ, தங்கரளி போல்-பாவாடை குடைபோல் சுழலும் சந்திரா, கூர்மையான பற்களைக் கொண்ட ரோசாப்பூ மாதிரியான ராசகிளி ஆகிய பெண்மாலைக்கு இடையிடையே இட்டு நிரப்பப்பட்ட இலைபோல தங்கம்மா, அலங்காரி ஆகிய நடுத்தர-வயதுப் பெண்கள்... வானவில்லே பெண் வில்லாய்ப் பிறப்பெடுத்தது போன்ற அந்தப் பகற்பொழுதில் - பீடி இலைகளைச் சதுரஞ்சதுரமாக வெட்டிக் கொண்டிருந்த சந்திரா, எதிரே பீடி இலைகளைத் தூக்கி நிரப்பி அவசர அவசரமாகச் சுருட்டும் தாயம்மாவைப் பார்த்து அதட்டலான அன்போடு கேட்டாள். “என்னத்தே... ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்படிச் சுத்துற. கை உடம்ப விட்டு கழண்டுடப் போவுது...” “ஒனக்கென்ன பேசமாட்டே... ஒனக்கு பீடி சுத்தறது பொழுது போக்கு. எனக்கோ ஒரு நாள் பொழுதப் போக்குறது... அவனவன் கம்பெனிக் கடைகள்ல தீபாவளி போனஸ், பொங்கல் பரிசுன்னு வாங்குறானுவ... நாம என்னடான்னா பீடி மொதலாளிக்கு போடு வண்டலுன்னு நாமே போனசு கொடுக்கோம்... இதைக் கேக்க நாதியில்லே...” தாயம்மா அத்தைக்குப், ‘பாவாடைத் தாவணி’ சந்திரா பதில் சொல்ல யோசித்தபோது, பிள்ளைக்குட்டி பெற்றாலும், அந்த வார்த்தைகளின் இரண்டாவது வார்த்தைக்கு உரியவள் போல் தோன்றிய அலங்காரி, அலட்டிக்காமலே குறுக்கிட்டாள். “வேற எதையாவது பேசுங்க, தெனமும் பொழப்பப் பத்தியே பேசிப் பேசி அலுத்துப் போச்சு... இப்போ புதுசா வந்திருக்கிற சினிமாவுல எது நல்லா இருக்காம்?” “நம்ம கோணச்சத்திரத்துக்கு வார படமெல்லாம் டப்பாப் படம்தானே...” “நான் தென்காசியிலயும் திருநெல்வேலியிலயும் ஓடுற சினிமாவச் சொன்னேன்...” “நீதான் பாத்துட்டு வந்து சொல்லேன்... அங்க போறது ஒனக்கு ஒண்ணும் புதிசில்லியே மயினி...” அலங்காரி, வெள்ளை வெளேர் முத்தம்மா தன்னைக் கிண்டல் செய்வதாக நினைத்து, திட்டப் போனாள். இதற்குள் ஒரு எட்டு வயதுப் பயல் எங்கிருந்தோ வந்தவன் போல் வந்தான். ஒரு ஆல விழுதை எட்டிக் குதித்துப் பிடித்தபடி அங்கும் இங்குமாக ஆடினான். தாயம்மாவின் தலைக்கு மேலே போகும்போது, கால்களைச் சுருட்டிக் கொண்டான். தாயம்மா பயத்தில் தலையை நிமிர்த்திய போது, அவன் காலில் அவள் தலைமுடி சிக்கி, அவளைத் தரையோடு தரையாக இழுத்துப் போட்டது. உடனே அந்தப் பயல், விழுதை விட்டுவிட்டு, விழுந்தடித்து ஓடிய வேகத்தில், தாயம்மாவின் பீடித்தட்டு குப்புற விழுந்தது. இலைகள் பட்டம் பறப்பதுபோல் ஆகாயத்தில் பறந்தன. பீடித் துகள்கள் மண் தூள்களுடன் கலந்து மாயமாயின. தாயம்மா ஒப்பாரியிட்டாள். “ஐயோ... என் அறுபது வண்டலு இலயும் போச்சே... பீடிக்கடைக்காரனுக்கு என்ன சொல்லுவேன்... ஏது சொல்லுவேன்... காஞ்சான் மகன் பண்ணுன வேலையைப் பாருங்க... எலே நாய்க்கு பெறந்த நாயே... இப்போ ஓடிட்டாலும், அப்புறம் வரத்தானே போறே...” அந்தப் பயலைப் பிடிப்பதற்காக, நான்கு பெண்கள் எழுந்து, அவர்களில் மூவர் சேலைகளை இறுக்கிக் கட்ட, மூவரில் ஒருத்தி, கோழி, பருந்தை நோக்கி பாய்ந்து பிடிப்பதுபோல் சிறிது ஓடிவிட்டு, பிறகு மூச்சு முட்டி நின்றாள். தாயம்மாவுக்கு வேண்டாதவர்கள் உட்பட எல்லோருமே, அவளை பரிதாபமாய்ப் பார்த்தார்கள். தாயம்மா கத்தக்கூட திராணி இல்லாமல் தலையில் கை வைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தபோது, அவளுக்கு உறவுப் பெண்ணான சந்திரா ஆறுதல் சொன்னாள். “ஏன் சித்தி அழுவுறே... நாங்க ஆளுக்குக் கொஞ்சம் இலயும் பேருக்குக் கொஞ்சம் தூளும் தாறோம்... எமுளா பாக்கிய. சித்திக்குக் கொடுங்கழா...” எல்லாப் பெண்களும் கை நிறைய இலை எடுத்து விரல் நிறையத் தூளெடுத்து தாயம்மாவின் தட்டில் போடப் போனபோது, அலங்காரி இக்கன்னா போட்டுப் பேசினாள். “அவளுக்கு தைரியம் இருந்தா காஞ்சான் மச்சான் கிட்டப்போயி அவரு பய பண்ணுன கோலத்தச் சொல்லி நஷ்டஈடு கேட்கட்டும்... அந்த நொறுங்குவான் பண்ணுன காரியத்துக்கு நாம ஏன் அபராதம் கட்டுறது மாதிரி இல கொடுக்கணும்...” “சரி. நீங்க போடாட்டா இருங்க... நாங்க போடுறோம்... மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்குமாம்...” “இந்த பாரு சந்திரா... மாடு கீடுன்னு பேசுனே மரியாதை கேட்டுப் போவும்...” “மாடு நல்ல சீவன்... கண்டவன் பின்னால எல்லாம் போவாது...” “அப்போ நான் கண்டவன் பின்னால போறவ...” “அப்படித்தான் வேணுமுன்னா வச்சுக்கங்க...” “ஏழா, சந்திரா, வரம்பு மீறிப் பேசாத...” “பின்ன என்ன வாடாப்பூ அத்தை...? தாயம்மா சித்தி நம்மள்ல ஒருத்தி... அந்த தூம மவனால... அவ்வளவு இலயையும், தூளயும் பறிகொடுத்துட்டு அந்தரத்திலே நிக்கா... ஆளுக்கு கொஞ்சம் இல கொடுத்தா தேய்ஞ்சா போயிடுவோம்... சீ... அறுத்த கைக்கு சுண்ணாம்பு வக்காத ஆளுங்க...” “வேணுமுன்னா ஒன் கைய அறுத்துக் காட்டு... நான் சுண்ணாம்பு வக்கேன்...” பாவாடை தாவணி சந்திராவுக்கும், பழுத்த இலை போல் புடவை கட்டிய அலங்காரிக்கும், இடையே தூள் கிளப்ப நடந்த வாய்ச் சண்டையை எல்லாப் பெண்களும் ரசித்துக் கொண்டே இருந்தார்கள். சற்றுத் தொலைவாய் உட்கார்ந்திருந்த தாயம்மாவின் அருகே கிடந்த தட்டில், இலையையும், தூளையும் எடுத்துப் போடப் போனார்கள். ஆனால் தாயம்மா திட்டவட்டமாகச் சொன்னபடியே எழுந்தாள். “எனக்கு எவளும் பிச்சை போட வேண்டாம். இந்தப் பேச்சை வாங்கிக்கிட்டு அந்த இலய வாங்குறது ஒவ்வோருத்திய மாதிரி அடுத்தவனுக்கு முந்தானை விரிக்கதுக்கு சமம்...” சோர்ந்துபோய் நடந்த தாயம்மாவை, எல்லாப் பெண்களும் தாளமுடியாமல் பார்த்துவிட்டு, பிறகு தத்தம் தட்டருகே வந்து உட்கார்ந்தார்கள். தாயம்மா போவதை சட்டை செய்யாததுபோல் குறுஞ் சிரிப்புடன் அலங்காரி பீடி இலை ஒன்றைக் கசக்கிப் போட்டபடியே தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் பேசினாள். “தனக்குப் போவத்தான் தானம்... பிச்சை போடறதுக்கு நாம ஒண்ணும் பெரிய இடம் இல்ல...” “இந்தா பாரு... எங்க சித்தி... ஒங்கிட்ட என்ன பிச்சையா கேட்டா? பேச்சை விடேன்... கடைசியில ஒன் புத்தியக் காட்டிட்டே பாத்தியா?” “எம் புத்திய என்னத்தடி கண்டே? நான் அந்த மனுஷன்கூட இந்த ஊருக்கு ஓடி வந்ததுலே என்ன தப்பு? ஊர் ஒலகத்துல செய்யாததையா செய்துப்புட்டேன்?” “நான் அதை நினைச்சு சொல்லலே. ஆனாலும் இப்போ சொல்லுறேன்... ஓடிப்போறது தப்புன்னாலும், அது பெரிய தப்பில்ல... ஓடி வந்தவன் முதுகுக்குப் பின்னாலயே பிறத்தியாரோட ஒய்யாரஞ் செய்யுறதுதான் தப்பு...” “அப்போ நான் கண்டவனை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு கதவை அடைக்கேன்னு சொல்றீயா?” “குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமாம்.” “அப்போ ஒங்க வம்சம் ரொம்ப யோக்கியமுன்னு நெனப்போ?” “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் எங்க கரும்பட்டையான் குடும்பம் கவுரிமானுக மாதிரிதான்... எங்க குடும்பத்துல எவளாவது ஒருத்தி எவன் கூடயாவது ஓடிப்போயிருக்காளான்னு ஒரு விரல மடக்கு பார்க்கலாம்...” “எந்த சோளத்தட்டைக்குள்ள என்ன நடக்குதோ? எந்தக் கரும்புத் தோட்டத்துக்குள்ள என்ன குறும்பு நடக்குதோ...?” “ஒவ்வொரு சோளத் தட்டையா விலக்கிப் பாரு... ஒவ்வொரு கரும்பா பிரிச்சுப் பாரு... எங்க கரும்பட்டையான் குடும்பத்துப் பெண்ணுல ஒருத்தியக் கூட கையுங் களவுமா பிடிக்க முடியாது. ஒவ்வொருத்தியள போல பட்டப்பகலுல பப்ளிக்கா ஒருத்தனோட சைக்கிள்ல உட்காந்து வரல... அப்புறம் சைக்கிள்காரன ஒப்புக்கு வச்சுட்டு இன்னொருத்தன் பைக்ல ஏறல...” அலங்காரி நிலைகுலைந்தவள் போல், ஆல விழுதைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்த பெண்களும் சந்திராவை அதட்டவில்லை. என்றாலும், இந்த அலங்காரி வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரியின் ‘சங்கதி’ தெரிந்தும், லேசாய் கோபம் வந்தது. அதேசமயம் அவளுக்கு வக்காலத்து வாங்குவது தாங்களும் அவளைப்போல் ஆகத்தயார் என்று அறிவிப்பதுபோல் ஆகிவிடும் என்று சும்மா இருந்தார்கள். ஒருவேளை இதற்குமேல் சந்திரா பேசியிருந்தால், ஏதாவது சொல்லி இருப்பார்கள். சந்திரா வாயைப் பூட்டிக்கொண்டாள். அந்தப் பெண்களுக்கு இடையே இப்போது மெளனம் கொடுங்கோல் புரிந்தது. அலங்காரிக்கு வழக்கம்போல் தொண்டை கனத்தது. அதற்குள் முள் போன்ற ஏதோ ஒன்று, மேலும் கீழுமாய் முகமெங்கும் பாய்ந்து, இறுதியில் முன் நெற்றியைக் குத்தியது. முகமெங்கும் இருட்டு மொய்த்தது. சாதாரண ஒரு சிரிப்பைக் கூட தற்செயலாய் பார்ப்பதையே, கண்டனக் கணையாகக் காண்பவள்... சண்டை சச்சரவு வரும்போது, சில பெண்கள் ‘ஒன் பவுசு... தெரியாதா’ என்று இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்திப் பேசுகிறபோது, வாயை நிராயுதபாணியாக்கி கேட்டு, தலையில் மாறி மாறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி, புருஷனைத் திட்டுபவள்... இப்போது, ஓடி ஒளிய இடமில்லாமல் தவித்தாள். அந்தத் தவிப்பில் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்... அது ஒரு சபதமாகும் என்று நினைக்காமல்தான், தனக்குத்தானே சூளுரைத்தாள். அலங்காரி தனக்குத்தானே தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள். “நான் மட்டும் ஓடி வந்ததாலே தானே இந்த ஏச்சுப் பேச்சு? நான் ஓடி வந்த பெறகு பிறந்த இந்தச் சந்திரா பயமவள் எப்படிப் பேசுறாள்? இவங்க குடும்பத்திலயும் ஒருத்திய நான் ஓட வச்சா இப்படிப் பேசுவாளா...? வச்சா என்ன வச்சா? ஓட வச்சே காட்டணும்... கரும் பட்டையான் குடும்பத்த கரும்புள்ளி செம்புள்ளி குத்துறது மாதிரி செய்து காட்டணும்...” அலங்காரி அங்குமிங்குமாய் திரும்பினாள். மேற்குப் பக்கத்திலிருந்து செம்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த துளசிங்கம் கையில் ஒரு கம்போடு வந்தான். கிழக்குப் பக்கத்திலிருந்து கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த கோலவடிவு கையில் ஒரு கூடையோடு வந்தாள். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
வரலாறு படைத்த வரலாறு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2016 பக்கங்கள்: 264 எடை: 310 கிராம் வகைப்பாடு : வரலாறு ISBN: 978-93-83067-44-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வளம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவிக்கிறது. எல்லா புத்தகங்களிலும் சில பக்கங்கள் இருப்பது வழக்கம். ஆனால் இவர் புத்தகத்தில் மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் சில பல புத்தகங்கள் அடங்கி இருக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|