3

     1920 ம் ஆண்டு அது மகோதய புண்ணிய காலம். சுவாமிகள் வேதாரணியத்துக்கு விஜயம் செய்து கோடிக்கரையில் ஸ்நானம் செய்தார். இந்தத்தலம் ஆதிசேது எனப்படும். இதைச் சுற்றிலும் இராமருடைய பாதம் பட்ட புண்ணியத்தலங்கள் உள்ளன. அகத்தியாம்பள்ளி என்ற திருத்தலத்துக்குச் சுவாமிகள் விஜயம் செய்தார். நாகப்பட்டினத்துக்குச் சென்று நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து அவரைத் தரிசித்தார்கள்.

     அந்த வருடத்து வியாசபூஜை மயிலாடுதுறையில் நடைபெற்றது. அதை ஒட்டிச் சதுர்மாஸ்ய விரதத்துக்காக மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருந்தார் சுவாமிகள். அங்கே சுமார் முன்னூறு பள்ளி மாணவர்களுக்கு வேத வகுப்புகளைத் தொடங்கிப் பயிற்சிபெறச் செய்ய அவர் ஏற்பாடு செய்தார். காவேரிக்கரையில் பசுமையான தோட்டத்தில், அந்தக் காலக் குருகுலம் போன்ற சூழ்நிலையில், இந்த வேத வகுப்புகள் நடைபெற்றன. தருமபுரம் ஆதீனத்திலிருந்து ஸ்ரீலஸ்ரீ பண்டார சன்னிதிகள் வந்து ஆசாரியாளைத் தரிசித்துத் தக்க மரியாதைகளைச் செய்தார்.


ராஜீவ்காந்தி சாலை
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

அசையும் படம்
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

விந்தைமிகு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

உன் சீஸை நகர்த்தியது நான்தான்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

ஆயிரம் வண்ணங்கள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

கரைந்த நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

முன்னத்தி ஏர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

சஞ்சாரம்
இருப்பு உள்ளது
ரூ.310.00
Buy

நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.330.00
Buy

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

இந்தியா 1948
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இந்து மதம் : நேற்று இன்று நாளை
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

சாவித்ரி
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

இதிகாசம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

புல்புல்தாரா
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சாண்டோ சின்னப்பா தேவர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy
     இந்த விஜயத்தில் இன்னொரு மறக்க முடியாத நிகழ்ச்சியும் இடம்பெற்றது. வயது முதிர்ந்த முஸ்லீம் ஒருவர் சுவாமிகளைத் தரிசித்து உரையாட விரும்பினார். அவருக்கு இரு கண்களும் பார்வை இழந்த நிலையில் இருந்தன. அவர் சுவாமிகளை நாடியபோது மாலை நான்கு மணிக்கு வர உத்தரவும் கிடைத்தது. அப்போது இந்துமதம் பற்றிய விளக்கங்களைப் பெரியோர் பலரும் சபையில் கூடிப் பக்தர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிகள் நாயகமாக நடுவில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். வித்துவான்கள் பேசி முடிந்தபின் அந்த முஸ்லிம் பெரியாரைப் பேச அழைத்தார் சுவாமிகள். அது அங்கே கூடி இருந்தவர்களுக்கும், அந்த முஸ்லிம் அன்பருக்குமே வியப்பாக இருந்தது. இருப்பினும் சுவாமிகள் விரும்பியபடி குர்ஆனிலிருந்து பல பகுதிகளை எடுத்துக்காட்டி, இஸ்லாமின் முக்கியமான தத்துவங்களை அவர் விளக்கினார். அது அங்கே கூடிய எல்லோரையும் கவர்ந்தது. இறுதியில் விடைபெறும்போது அந்தப் பெரியவர் “இப்படிப்பட்ட வாய்ப்பை எனக்குக் கொடுத்தீர்கள். தங்களைக் கண்ணாரத் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இருந்தாலும் அகக்கண்ணால் உங்களைக் கண்டு மகிழ்கிறேன். இறைவனையே தரிசித்தது போன்ற பெருமகிழ்ச்சியை அடைகிறேன்!” என்று மனம் உருகக் கூறிச் சென்றார்.

     சுவாமிகள் அதன்பின் ஆனைதாண்டவபுரத்தில் நவராத்திரி பூஜையை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் உமாதேவியரிடம் ஞானப்பால் பெற்ற சீர்காழிக்கும் விஜயம் செய்தார். அதன் கிழக்கே உள்ள திருவெண்காடு என்ற திருத்தலத்தில் சுவேதாரணிய சுவாமியைத் தரிசித்தார். அங்கே நிர்விகல்ப சமாதியில் உள்ள ஸ்ரீகாமகோடி பீடத்தின் 57 வது ஆசாரிய சுவாமிகளான ஸ்ரீ பரமசிவேந்திர சுவாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசித்தார். அந்தச்சுவாமிகள் ஸ்ரீசதாசிவப்பிரம்மேந்திரரின் ஞானகுருவாக விளங்கியவர்கள். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள வைணவத தலங்கள் பலவற்றையும் தரிசித்து, கடைசியில் காவேரிப் பூம்பட்டினத்துக்கு விஜயம் செய்தார். அங்கே காவேரி கடலில் சங்கமமாகும் ஸ்நான கட்டத்தில் நீராடினார்கள்.

     1912 ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தின்போது மக்களுக்குத் தொண்டு செய்ய ஏராளமான தொண்டர்கள் கூடினார்கள். அவர்களுடைய அரிய தொண்டினைச் சுவாமிகள் பாராட்டினார். ஆனாலும் அவர் கும்பகோணம் மடத்துக்கு வரஇயலவில்லை. விஜய யாத்திரையைத் தொடங்கியவர் அதை நலம்பெற முடித்த பின்னரே மடத்துக்குத் திரும்ப வேண்டும் என்பது சம்பிரதாயம். ஆகையால் சுவாமிகள் கும்பகோணத்துக்கு அருகில் இருந்த பட்டீசுவரம் என்ற இடத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அது பழைமையான சிவஸ்தலம். ஆலயத்துக்கு வருகை தந்து சுவாமிகள் ஈசுவரனைத் தரிசித்தார்கள்.

     மகாமக உற்சவத்தின் போது நீராட திருக்குளத்துக்கு வந்து, தென்கரையில் உள்ள மண்டபத்தில் தங்கி ஸ்நானம் செய்தார்கள். அவருடன் நீராடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, அப்போது சுவாமிகளைத் தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த உற்சவத்தில் தொண்டு புரிய, சென்னையில் உள்ள முஸ்லிம் இளைஞர் பேரவையிலிருந்து சுமார் இருநூறு தொண்டர்கள் வந்திருந்தார்கள். இந்து உற்சவமாயினும், அதில் உற்சாகமாகக் கலந்து கொண்டு, அவர்கள் நற்பணி புரிந்த சேவையைப் பாராட்டி, சுவமிகள் அவர்களைப் பட்டீசுவரத்துக்கு வரவழைத்து, வெள்ளிக் கோப்பைப் பரிசும் கொடுத்தார்.

     இந்த உற்சவத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அவர்களையும் சுவாமிகள் பாராட்டி வெள்ளிக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தார்கள். அங்கு அச்சமயம் வந்திருந்த சுப்பிரமணியசிவா என்ற பழம்பெரும் தேசபக்தருக்கும் சுவாமிகள் அருகில் வந்து ஆசிபெறும் வாய்ப்பை அளித்தார். அவர் சந்நியாசிகளைப் போலக் காவி உடை அணிந்திருந்தார். சுவாமிகள் அவரிடம் “உங்களுக்கு என்ன விருப்பமோ கேளுங்கள்!” என்று சொன்னார். அவர் பணிவுடன் “நான் எனக்கென்று எதைக் கேட்கப் போகிறேன்? மக்களிடையே தெய்வபக்தி பரவி நிலைக்க வேண்டும். தேசம் சுதந்திரம் பெற வேண்டும். அவ்வளவுதான்!” என்று பதில் கூறினார். “அவை நல்ல முறையில் நடைபெறும். ஆனால் அதுவரை அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்கும்படி மக்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று சுவாமிகள் அமைதியுடன் அறிவுரை கூறினார்.

     தஞ்சை மாவட்டத்தில் பல புண்ணியத் தலங்களையும் தரிசித்தபடி வந்து கொண்டிருந்த சுவாமிகளை குடவாசலிலிருந்து கொரடச்சேரி செல்லும் சாலையில் உள்ள செல்லூர் என்ற கிராமத்தில் இருந்த, சுமார் இருநூறு ஹரிஜன மக்கள் தரிசிக்க விரும்பினார்கள். சுத்தமாக நீராடித் தூய உடை அணிந்து, திருநீறு பூசி அவர்கள் காத்துக் கொண்டிருந்ததைக் கண்ட சுவாமிகள், இறங்கி அவர்களிடையே வந்து, அனைவருக்கும் தரிசனம் கொடுத்தார்கள். அவர்களை விவசாயம் பற்றியும், வாழ்க்கை நிலை பற்றியும் விசாரித்துக் தெரிந்து கொண்டதுடன், அவர்கள் எப்படிக் கடவுள் வழிபாடு செய்கிறார்கள் என்பதையும் விசாரித்து தெரிந்து மகிழ்ந்தார்கள். அது அந்த ஹரிஜன மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்தது. அதுபோலச் சுவாமிகள் விஜய யாத்திரை செல்லும்போது, வழியில் பல இடங்களிலும் ஹரிஜனங்கள் அவரைத் தரிசிக்க வந்து, காத்து நிற்பது வழக்கம். சுவாமிகளும் சிவிகையிலிருந்து இறங்கி, அவர்களுக்குத் தரிசனம் கொடுத்து, நல்வாழ்த்துக்கள் கூறிச் செல்லுவார்கள். ஏழை எளிய மக்களிடம் அவர் எப்போதுமே மனமிரங்கி அன்புடன் பேசிப் பழகுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர்கள் அனைவருடைய பக்தியையும் மரியாதையும் நிறைய பெற்று விளங்கினார்.

     சுவாமிகள் அதன்பின் மன்னார்குடிக்கு விஜயம் செய்து அங்கே பூவனூரில் தேவாரபாடம் கற்று வந்த மாணவர்களை பாராட்டிப் பட்டுடையைப் பரிசாகக் கொடுத்தார்கள். மன்னார்குடியில் இராஜக்கோபால சுவாமியையும், வடுவூர் ஸ்ரீராமரையும் தரிசித்து, பல தலங்களையும் தொடர்ந்து தரிசித்தபடி ஆவுடையார் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அது மாணிக்கவாசகர் ஆத்மநாதரைத் தரிசித்த இடம். அங்கே உள்ள குருந்த மரத்தின் அடியில் ஈசன் அந்தணர் உருவத்தில் அமர்ந்து, மாணிக்கவாசகருக்குச் சிவஞானபோதத்தை உபதேசித்து அருளுவதாகக் கூறுவார்கள். சுவாமிகள் ஆலயத்திற்கு வந்து தங்கி, ஈசனையும் யோகாம்பிகையும் தரிசித்து, குருந்த மரத்தையும் தரிசித்து மகிழ்ந்தார்கள். அங்கே அவர் தங்கி இருந்தபோது, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், தமது கட்டளைத் தம்பிரான் மூலமாகச் சுவாமிகளுக்குப் பிட்சை முதலிய பல மரியாதைகளையும் செய்து மகிழ்ந்தார்கள்.

     ஆவுடையார் கோயிலிலிருந்து உப்பூருக்கும், நவக்கிரகத்தலமான தேவிபட்டினத்துக்கும் சுவாமிகள் விஜயம் செய்தார்கள். அங்கிருந்து இராமேசுவரத்துக்கும் புறப்பட்டுச் சென்றார்கள். சுவாமிகள் பாம்பன் பாலத்தின் மீது ரயிலில் செல்ல ரயில்வே அதிகாரிகள் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். அவருடன் வந்த சாமான்களைப் படகுமூலம் எடுத்துச் செல்ல மண்டபத்தில் இருந்த மரைக்காயர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து உதவினார்.

     இராமேசுவரத்தில் சுவாமிகள் புண்ணிய ஸ்நானம் செய்து, காசி யாத்திரையின் ஒரு முக்கிய அங்கமாக அந்தப் புண்ணிய பூமியில் சிறிது மணலையும் எடுத்துக் கொண்டார்கள். அது புரட்டாசி மாதம் பெளர்ணமி தினம் ஆகும். அதன்பின் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் அது, சுவாமிகளின் பூஜையில் இருந்தது. 1934 ம் ஆண்டுதான், சுவாமிகள் பிரயாகைக்கு விஜயம் செய்தபோது, அதைத் திரிவேணி சங்கமத்தில் இட்டு வணங்கினார்கள். இந்துக்கள் காசி யாத்திரையில் இந்தச் சம்பிரதாயத்தை மேற்கொள்ளுவது வழக்கம். அன்று நாட்டில் ஒற்றுமை விளங்க இத்தகைய புண்ணிய யாத்திரை பெரிதும் உதவியாக இருந்தது. இதைத் தானே செய்து காட்டியதன் மூலம், சுவாமிகளும் தேச ஒற்றுமையை நிலைநாட்டப் பெரிதும் உதவினார்.

     தனுஷ்கோடியில் சுவாமிகள் நவராத்திரி பூஜையைச் செய்தார்கள். அது மகோததி, இரத்னாகரம் ஆகிய இரு கடற்பகுதிகள் சங்கமமாகும் இடம். அங்கு மூன்று நாட்கள் புண்ணிய ஸ்நானம் செய்து, வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் பொருள் வழங்கிப் பலவகை தானங்களையும் செய்தார்கள். இது தவிர அப்போது நாடு முழுவதும் பரவி இருந்த தேசிய உணர்வையும் கருத்திற்கொண்டு, சுவாமிகள் ஒரு புதுமையான காரியம் செய்தார்கள். சுதேசிப் பொருட்களையே மக்கள் ஏற்க வேண்டும் என்ற கொள்கையின்படி, காந்தி மகான் மக்களுக்கு வெளிநாட்டுத் துணிகளைப் பொது இடங்களில் வைத்து நெருப்பு இட்டு எரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். நெருப்பில் இடுவதை விடக் கடலில் எறிந்து விடலாம் என்று கருதி, சுவாமிகள் தனுஷ்கோடியில் நீராடிய மடத்துச் சிப்பந்திகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடிக் கதராடைகளைக் கொடுத்தார். அவர்கள் அணிந்திருந்த வெளிநாட்டு மில் துணிகளைக் கடலில் எறிந்து விடும்படி சொல்லி விட்டார்கள். அன்று முதல் மடத்தின் சிப்பந்திகள் பலரும் கதராடையே அணியும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். சுவமிகள் கொண்டிருந்த தேசப்பற்றுக்கு, இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணமாக அமைந்தது.

     சுவாமிகள் அதன்பின் மதுரைக்கு வந்து சுமார் ஒருமாத காலம் தங்கினார்கள். மீனாட்சி அம்மன் ஆலயக் கலியாண மண்டபத்திலேயே இருந்து தரிசனம் கொடுத்தார்கள். சுவாமிகளின் நித்ய பூஜையைக் காணவும், இரவு நேரங்களில் கலியாண மண்டபத்தில் அவர்கள் நிகழ்த்திய உபன்னியாசங்களைக் கேட்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினதோறும் வந்து கூடினார்கள்.

     மதுரையிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்து பல புண்ணிய தலங்களையும் சுவாமிகள் தரிசித்தார்கள் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் போன்ற திவ்விய தேசங்களைச் சேவித்துக் கொண்டு, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துருக்கு வருகை தந்தார்கள். அது ஆதிசங்கரரால், முருகப்பெருமான் மீது சுப்பிரமணிய புஜங்கம் பாடப்பெற்ற திருத்தலம். அங்கே ஐந்துநாட்கள் இருந்து சுவாமிகள் சண்முகனாதப் பெருமானைத் தரித்தார்கள் தொடர்ந்து அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கர நாராயணார் கோயில் போன்ற திருத்தலங்களுக்குத் சென்றுதரிசித்தார்கள். கல்லிடைகுறிச்சியில் சுமார் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, பக்தர்களிடம் பிட்சை, பாதபூஜை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு ஆசிகூறி அருளினார்கள்.

     அந்த ஆண்டு திருவானைக்கா என்ற திருத்தலத்தில் அகிலாண்டேசுவரி அம்மனுக்குத் தாடங்கப் பிரதிஷ்டை செய்வதாக முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. அதனால் பழனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தரிசனம் செய்து முடித்து திருச்சிக்குச் சுவாமிகள் வந்து சேர்ந்தார்கள். திருவானைக்கா என்ற ஜம்புகேசுவரம், பஞ்சபூதத் தலங்களில் இறைவன் நீர் வடிவமாக எழுந்தருளியுள்ள திருத்தலம் ஆகும். அங்கே அன்னை அகிலாண்டேசுவரி கொலுவிருந்து அருள்புரிகிறார்கள். ஆதிசங்கரர் அங்கே வந்து தங்கி, கோபாவேசமிகுந்த பார்வையுடன் இருந்த அம்மனின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாகத் தாடங்கங்களைக் காதில் அணியச் செய்ததாகக் கூறுவார்கள். இந்தப் புனித நிகழ்ச்சியையே தாடங்கப் பிரதிஷ்டை என வருணிப்பார்கள். இந்தப் பொறுப்பு ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆசாரிய சுவாமிகளிடமே விடப்பட்டிருந்தது.

     1846 ம் ஆண்டு ஸ்ரீகாமகோடி பீடாதிபதியாக இருந்த சுவாமிகள் இந்தத் தடாங்கப் பிரதிஷ்டையை மேற்கொண்டு செய்து முடித்தார்கள். அதன்பின் சுவாமிகள் இப்போது அங்கே வந்திருந்து இந்தப் புனிதமான வைபவத்தை நடத்தி முடித்தார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்ததுடன், சுவாமிகளையும் தரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். திருவானைக்காவில் இருந்த காமகோடி பீட மடம் இந்த சமயத்தில் புதுப்பிக்கப்பட்டது. வேதாபாட சாலையும் கேந்திரமும் தொடங்கி வைக்கப்பட்டது. அது 1923 ம் ஆண்டு. அந்த ஆண்டு திருச்சிக்கு வந்த மைசூரைச் சார்ந்த பெருமை மிகுந்த இஞ்சினியர் விசுவேசுவரய்யா, ஒரு பொதுக்கூட்டத்தில் “திருவானைக்காவில் உள்ள காமகோடி மடம் எனக்கு மிகவும் பிரியமானது. அங்கேதான் எனக்கு உபநயனம் நடைபெற்றது” என்று கூறியது இங்கே குறிப்பிடுவதற்கு உரியது.

     இதன்பின் சுவாமிகள் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதப் பெருமானையும் மலைக்கோட்டையில் ஸ்ரீமாத்ரு பூதேசுவரரையும் தரிசனம் செய்தார்கள். திருவானைக்காவில் மடத்தின் பின்புறம் பர்ணசாலை அமைத்துப் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து வந்தார்கள். அறிஞர்கள் பலரும், பக்தகோடிகளும் அங்கே வந்து சுவாமிகளின் உபதேச மொழிகளைக் கேட்கக் காத்திருப்பார்கள். சாஸ்திரம், விஞ்ஞானம், நடைமுறைச் செய்தி ஆகிய பலவற்றையும் சுவாமிகள் மிக எளிதாக நகைச்சுவையுடன் எடுத்துக் கூறுவார்கள். அதைக்கேட்டு அவர்கள் வியப்பும் பெருமிதமும் அடைவார்கள்.

     அதன்பின் சுவாமிகள் காவிரியின் தென்கரை வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். கரூர் வரை வந்து சேர்ந்து, பிறகு நெரூரில் உள்ள ஸ்ரீசதாசிவம் பிரம்மேந்திரரின் சமாதியை வந்தடைந்த்டார்கள். அவர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவிசை நல்லூரில் பிறந்தவர்கள். ஸ்ரீ காமகோடி பீடத்தின் 57 வது ஆசாரியரான ஸ்ரீ பரம சிவேந்திர சரசுவதியைத் தனது ஞான குருவாகப் பெற்றவர்கள். அவர் பல்வேறு சாஸ்திர நூல்களையும், இனிமையான பக்திக் கீர்த்தனைகளையும் இயற்றியவர். தனது ஞான குருவின் வாழ்க்கைச் சரித்திரத்தை விளக்கியும் ‘குரு ரத்னமாலிகை” என்ற நூலை இயற்றி இருக்கிறார். அதில் அரசர்களைப் பற்றியும், அவர்களுடைய சபைகளை அலங்கரித்த கவிகளைப் பற்றியும் விவரித்துள்ளார். அந்த நூல் நாட்டின் வரலாறாகவும், ஸ்ரீ காமகோடி பீடத்தின் சரித்திரமாகவும் உள்ளது. அது காமகோடி கோசஸ்தானத்தாரால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

     ஸ்ரீசதாசிவப்பிம்மேந்திரார் அவதூதராக வாழ்ந்தவர். அரசர்கள் ஆதரிக்க முன்வந்தும் அந்த சுக செளக்கியங்களை உதறி எறிந்து ஆண்டியாக வாழ்ந்தவர். காவேரிக்கரை ஓரமாக மணற்திட்டுகளிலும், கரை ஓரப் புதர்களிலும், மரத்தடியிலும் வாழ்ந்தவர். ஒரே காலத்தில் பல இடங்களில் தோன்றிப் பல அதிசயங்களைச் செய்வார். குழந்தைகளையும் பெரியவர்களையும் பக்தி உணர்வில் முழ்கச் செய்வார். தேனினும் இனிமையான கீர்த்தனைகளால் பரவசப்படுத்துவார். அவருடைய சமாதியைக் காவிரியின் தென் கரையிலே நெரூரில் அமைத்து அதன்மீது வில்வ மரத்தையும் வளர்க்க வேண்டும் என்று, இடமும் நாளும் குறித்துக் கட்டளை இட்டிருந்தார். அவர் தனது பூத உடலை நீத்தபிறகு அதன்படியே சீடர்கள் அவரது புனித உடலை அடக்கம் செய்து, அந்தச் சமாதியில் வில்வ விருட்சம் வளர்ந்து சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சுவாமிகள் நெரூரில் ஒரு வாரம் தங்கியிந்தார்கள். அப்போது ஸ்ரீசதாசிவப்பிம்மேந்திரரின் சமாதியில் அதிக நேரம் தனியாகத் தங்கி நிஷ்டையில் இருப்பார்கள். சுவாமிகள் விருப்பப்படி சமாதிக்கும், அதை அடுத்த சிவாலயத்துக்கும் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டன.

     நெரூரிலிருந்து சுவாமிகள் குழுமணி என்ற கிராமத்துக்குச் சென்றார்கள். அங்கே அவர் தங்கி இருந்தபோது மலையாளத்திலிந்து வந்த இளைஞன் ஒருவனை அங்கே, திருச்சி நகராண்மைக் கழகத்தின் தலைவராக இருந்த எப். ஜி. நடேச ஐயர் அழைத்து வந்தார். அவர் தாமே கிருஸ்துவ மதத்தில் இருபது ஆண்டுகள் இருந்து அதன்பின் இந்து மதத்துக்குத் திரும்பி வந்தவர். அந்த இளைஞன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் செல்ல விரும்பி வந்திருந்தான். ஐயர் அந்த இளைஞனின் முடிவை மாற்றா எவ்வளவோ முயன்று, அது முடியாமற்போகவே, அவனைச் சுவாமிகளிடம் அழைத்து வந்தார்.

     அந்த இளைஞனின் பேச்சைப் பொறுமையுடன் கேட்ட பின் சுவாமிகள் அவர்கள் இருவரையும் காவேரிக்கரை ஓரமாக அழைத்துக் சென்று மணத்திட்டு ஒன்றில் அமரச்செய்து விரிவாக விளக்கங்களைக் கூறினார்கள். பெருமை மிகுந்த இந்து மதத்தில் இல்லாத தர்மங்கள் எதுவும் இல்லை என்றும், எல்லா மதங்களுக்கும் அதுவே அடிப்படை என்றும், அவன் விரும்பும் பண்புகளை இந்து மதத்திலேயே காணலாம் என்றும் எடுத்துக்கூறி அவன் மனத்தெளிவு பெறச் செய்தார். அந்த இளைஞனும் மனம் தெளிந்து, சுவாமிகளுடைய அறிவுரையை ஏற்று, இந்து மதத்திலேயே தொடர்ந்து இருக்கும் மன உறுதியுடன் திரும்பினான். ஒரு இளைஞனின் மனத்தில் தெளிவு பிறக்கவும், இந்து மதத்தில் அவன் தொடர்ந்து நிலைக்கவும், சுவாமி எடுத்துக்கொண்ட அக்கறையையும், அதற்காகப் பொறுமையுடன் நேரத்தைச் செலவிட்ட பாங்கையும் பக்தர்கள் வியந்து பாராட்டினார்கள்.

     இதன்பின் புதுக்கோட்டை சமஸ்தானத்திலும், செட்டிநாட்டிலும் பல இடங்களுக்குச் சுவாமிகள் விஜயம் செய்தார். அங்கேயெல்லாம் பண்டிதர்களும், பாமரர்களும், விஞ்ஞானிகளும், தமிழ் அறிஞர்களும் சுவாமிகளைத் தரிசித்து வணங்கி அருளாசியைப் பெற்றார்கள். டாக்டர் உ.வே.சுவாமிநாதய்யர் தமிழ்த்தாத்தா என்று அனைவரும் கொண்டாடும் பெருமை மிக்கத் தமிழ் அறிஞர். அவர்களுக்கு ‘தக்ஷிணாத்யகலாநிதி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஐயர் அவர்கள் சுவாமிகளின் பூஜையை அருகிலிருந்து கவனித்துப் பூரித்துப் போவார். “ நான் எனது இளமைப் பருவத்தில் காமகோடி பீடத்தின் 65 வது ஆசாரியராக விளங்கிய ஸ்ரீ மகாதேவேந்திர சரசுவதி சுவாமிகளின் பூஜைகளைக் கவனித்திருக்கிறேன். இப்போது சுவாமிகள் நிகழ்த்தும் சிவபூஜையைக் காணும் போது என்னுடைய மனத்தில் அப்போது விளைந்த அதே பேரானந்தம் ஏற்படுகிறது” என்று அவர் சொல்லுவது வழக்கம்.

     சுவாமிகள் செட்டிநாட்டிற்கு விஜயம் செய்தபோது, வைநகரம் இராமநாதன் செட்டியார் என்ற சிவபக்தர், சுவாமிகள் செய்து வந்த சிவபூஜையை மிகுந்த ஆவலுடன் கவனித்து மனம் உருகி வழிபடுவார். சுவாமிகள் கடியாப்பட்டி என்ற ஊருக்குச் சென்றபோது, அங்கே அவருக்காகப் பெரிய ஊர்வலம் ஒன்றை மக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்,சுவாமிகள் பல்லக்கில் வந்தபோது இராமநாதன் செட்டியாரை வழியில் பல இடங்களிலும் தேடினார். ஆனால் அவர் சுவாமிகளின் பார்வையில் தென்படவே இல்லை. ஊர்வலம் முடிவுறும்போது, அவரைப் பற்றி மற்றவர்களைக் கேட்க, சற்று விலகித் தூரத்தில் நின்றிருந்த செட்டியாரை அவர்கள் அழைத்துக்கொண்டு வந்தார்கள். “ஊர்வலத்தில் உங்களைப் பார்க்கவே முடியவில்லையே? எங்கே போயிருந்தார்கள்? என்று சுவாமிகள் கேட்டபோது “சுவாமி! இரவு நான் தங்களுடைய பல்லக்கைச் சுமந்து வருபவர்களில் ஒருவனாகப் பணியாற்றினேன். எனக்கு அந்த நற்பேறு கிடைத்தது!” என்று பணிவுடன் அக மகிழ்ந்து கூறினார் செட்டியார்.

     சுவாமிகள் கெளரவித்த மற்றொரு தமிழறிஞர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள். செட்டியார் சமஸ்கிருத்ததிலும், தமிழ்மொழியிலும் வல்லவர். சுவாமிகள் அவருடன் அமர்ந்து தமிழ்மொழியில் உள்ள பழைமையும் பெருமையும் மிகுந்த நூல்களைப் பற்றிப் பேசுவார். சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்காகச் செய்ய வேண்டிய ஆக்கப்பணிகளைப் பற்றி விவாதிப்பார்.

     சுவாமிகளை வந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் தரிசித்து ஆசிகளைப் பெறுவதுண்டு. இன்றுவரை அந்தப்பழக்கம் தொடர்ந்து வருகிறது. தாம் சன்னியாசி என்பதால் குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்து ஈடுபடுமாறு பேசவோ இயலாது என்பதைச் சுவாமிகள் அவர்களிடம் கூறுவது உண்டு. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து சில கொள்கை வேறுபாடுகளால் விலகி ‘ஸ்வராஜ்யா’ என்ற புதுகட்சியைத் தொடங்கி இருந்த சி.ஆர்.தாஸ், மற்றும் தமிழகத்தில் அவரைப் பின்பற்றிய சத்யமூர்த்தி, ஏ. ரெங்கசாமி ஐயங்கார் போன்ற தலைவர்களும் சுவாமிகளை வந்து தரிசித்தார்கள். அப்போது சுவாமிகளின் தெளிவான அரசியல் ஞானத்தையும், வாதத்திறமையையும் கண்டு நான் பெருவியப்படைந்ததுண்டு.

     ஜம்புகேசுவத்தில் சுவாமிகளைத் தரிசிக்க ஜம்னாலால் பஜாஜ் என்ற அரசியல் தலைவர் வந்தபோது, ராஜாஜி அவருடன் வந்து வெளியே தங்கிவிட்டார். அவர் உள்ளே வராததை அறிந்து சுவாமிகள் ராஜாஜியை உள்ளே வரும்படி அழைத்தார். அவர் வந்ததும் “ஏன் உள்ளே வராமல் தங்கி விட்டீர்கள்?” என்று விசாரித்தார். “நான் இன்னும் நீராடவில்லை. அந்த நிலையில் தங்களை வந்து தரிசிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது!” என்றார் ராஜாஜி. “அப்படி ஒரு தயக்கம் தேவையே இல்லை. அரசியல் பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு இதுபோன்ற காரியங்களுக்கு நேரம் இல்லாமற்போகக்கூடும். அதற்காகத் தயங்க வேண்டாம். மக்களுடைய நல்வாழ்விற்காக அவர்கள் தூய உள்ளத்துடன் பணிகளை மேற்கொண்டால், அதுவே போதும்!” என்று சொன்னார் சுவாமிகள். அரசியல்வாதிகளானாலும், மக்களின் நன்மைக்காகப் பாடுபடுபவர்களைப் பெரிதும் மதிக்கும் பண்பு சுவாமிகளிடம் இருந்தது. துறவறத்தை மேற்கொண்டவரானாலும், மக்கள் தொண்டையும், மக்களிடையே பக்தியைப் பரப்ப வேண்டும் என்ற கொள்கையையும், அவர்கள் தம்மைச் சந்திக்க வரும் வேளைகளில் சுவாமிகள் சொல்லி அறிவுரை வழங்குவார்.

     சுவாமிகள் மக்களின் நன்மைக்காகத் தொண்டு செய்யும் உள்ளத்தை தாமே செயலிலும் வெளிப்படுத்திக் காட்டுவதுண்டு. 1924 ம் ஆண்டு அவர்கள் திருவையாற்றில் பூஜைக்காக வந்து தங்கி இருந்தபோது, காவிரிக்கரையில் புஷ்யமண்டபப் படித்துறையில் பூஜா மண்டபம் அமைக்கப்பட்டது. தஞ்சை நகரிலிருந்தும், சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கூடிப் பூஜைகளில் பங்கு பெற்றார்கள். அந்த வருடம் ஆடிப்பெருக்கின்போது காவிரி கரை புரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு கொள்ளிடம் வரை பரவிற்று. குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்கள் பலரும் சொல்லொணாத துயருக்கு ஆளானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஹரிஜன மக்கள்.

     சுவாமிகள் அவர்களுடைய துயரைத் துடைக்கும் பணியைத் தாமே மேற்கொண்டார். மேடான பகுதிகளில் ஒதுங்கி, உணவு ஏதும் இன்றித் தவித்த அவர்களுடைய பசியைத் தீர்க்க, மடத்தில் நடைபெறும் அன்னதானத்தைக் கூடக் குறைத்துக் கொண்டு, உக்கிராணத்தில் இருந்த உணவுப் பொருட்களை எடுத்தளிக்கச் செய்து, அண்டாக்களில் உணவு தயார் செய்யவைத்து, அவர்களுக்கு வழங்க செய்தார். எளியமக்கள் படும் சிரமத்தை நீக்க, துயர் துடைக்கும் பணிகளில் முக்கியப் பிரமுகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். சுமார் பதினைந்து நாட்கள் இவ்வகையில் அன்னதானம், துயர் துடைப்புப் பணிகள் ஆகியவை நடைபெற்றன. காவிரியின் வெள்ளமும் குறைந்து, மக்களும் ஓரளவு சிரமம் நீங்கினார்கள். சுவாமிகளின் கருணை உள்ளத்தை அனைவரும் பாராட்டினார்கள்.

     இதுபோலவே வங்காளத்தில் கங்கைக் கரையில் உள்ள குல்னா என்ற கிராமத்தில் வெள்ளப் பெருக்கினால் சேதம் ஏற்பட்டபோதும், கும்பகோணத்தில் எளிய மக்கள் வாழும் கள்ளர் தெருவில் தீப்பற்றிக் கொண்டு சேதம் ஏற்பட்டபோதும் சுவாமிகள் உதவி இருக்கிறார்கள். 1955 ம் ஆண்டு இறுதியில் புயலினாலும், மழையினாலும், இராமனாதபுரம், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் சேதம் விளைந்தபோது, ஏழை மக்களுக்குக் கஞ்சி வார்க்க, மடத்திலிருந்து நூறு மூட்டை அரிசியை அனுப்பி உதவினார்கள் சுவாமிகள்.

     1924 ம் ஆண்டின் இறுதியில் சுவாமிகள் தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊருக்கு விஜயம் செய்தார்கள். அது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய பலரும் வாழும் ஊர் இந்துக்களிடையே ஹரிஜனங்களும் பெரும் அளவில் இருந்தனர். இருப்பினும் அனைவரும் ஒன்று கூடிச் சுவாமிகளுக்குக் கோலாகலமான வரவேற்பை அளித்தார்கள். சுவாமிகள் தங்கள் ஊருக்கு விஜயம் செய்வதால் பசுமை நிறைந்து செழுமை ஏற்படும் என்று மக்கள் நம்பினார்கள். பலமணி நேரம் ஊர்வலம் நடைபெற்றது. அதன் முடிவில் சுவாமிகள் எல்லா மதத்தினருக்கும் ஏற்கும்படியான உபதேச மொழிகளைக் கூறி அருளினார். எந்த மதத்தினராயினும் அவரவர் மதத்துக்கேற்ற கோட்பாடுகளுடன் கடவுளைத் தொழ வேண்டும் என்றும், தங்களுக்குள்ளே ஏற்படும் மன வேறுபாடுகளைத் தங்களுக்குள்ளேயே சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். சுவாமிகளை வரவேற்பதிலும் வணக்குவதிலும் மற்ற மதத்தினர் காட்டிய ஈடுபாட்டைப் பெரிதும் பாராட்டினார். ஹரிஜன மக்கள் திருநீரு பூசி முகமலர்ந்து வரவேற்று வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் நினைத்துப் பார்த்தால் இது எவ்வளவு உன்னதமான ஒற்றுமை உணர்வு என்பது தெரிகிறதல்லவா? அதை அன்றே மக்களிடம் ஏற்படுத்திக் காண்பித்தார்கள் சுவாமிகள்.

     அப்போது தஞ்சையில் எச்.எம். ஹுட் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார். அவர் வல்லத்துக்கு வந்து இத்தகைய வரவேற்பைப் பெற்று, எல்லா மததினரும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பெரியோர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார். தம்மிடம் பணிபுரியும் இந்து அலுவலர் ஒருவரின் மூலம் சுவாமிகளைப் பற்றித் தெரிந்து கொண்டார். மேலும் திருவையாற்றில் மக்கள் வெள்ளத்தல் அவதியுற்றபோது அவர்களுக்கு உடனிருந்து உதவியது அவர்தாம் என்பதையும் தெரிந்து கொண்டார். ஆகையால் சுவாமிகளைத் தரிசிக்க ஆசைப்பட்டார். சுவாமிகளும் அந்த வேண்டுகோளை ஏற்று, அன்று மால கலெக்டர் வந்து தம்மைச் சந்திக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்கள்.

     மாலையில் கலெக்டர் வந்தபோது சுவாமிகள் திண்ணை மீது அமர்ந்து கொண்டார்கள். கலெக்டர் கீழே ஒரு நாற்கலியில் அமர்ந்து கொண்டார்கள். கலேக்டர் ஆங்கிலத்தில் பேச, அதை ஒருவர் மொழி பெயர்க்க, சுவாமிகள் தமிழில் உரையாடினார்கள். சுமார் ஒரு மணி நேரம் கலெக்டர் சுவாமிகளிடம் அரசாங்க விஷயமாகவும், பொதுப் பிரச்சினைகள் குறித்தும், மடத்தின் அலுவல்களைப் பற்றியும் பேசினார்கள். பல விஷயங்களையும் தெரிந்து உணர்ந்து கொண்ட கலெக்டர், புறப்பட்டுப் போகும்போது “இது ஓர் அபூர்வ சந்திப்பு. என் வாழ்நாளில் இந்த அனுபவத்தை ஒரு நாளும் மறக்க மாட்டேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

     சுவாமிகள் அபூர்வமான சிற்பக்கலைகளைப் பாராட்டுவார்; சித்திரங்களைக் கண்டு வியப்பார்; அரிய கல்வெட்டுகளைக் கூர்ந்து கவனிப்பார்; சுவடிகளைப் படித்து நுட்பமான விவரங்களை அறிந்து கொள்வார். ஆலயங்களுக்கோ, பிற இடங்களுக்கோ செல்லும் போது இதற்குரிய வாய்ப்புக் கிடைத்தால் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு அப்போதே இருந்தது. நார்த்தா மலைக்குகைக் கோயில்கள், குடுமியாமலை திருமயம் கோயில்களில் உள்ள சங்கீதம் பற்றிய கல்வெட்டுகள், சித்தன்ன வாசல் சித்திரங்கள் அகியவற்றை அவர்கள் தமது யாத்திரையில் கூர்ந்து கவனித்துப் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். சித்தன்ன வாசலில் கல்வெட்டுக்களில் சிவலிங்க உருவங்கள் அடியில் தண்ணீருக்குள் மறைந்திருப்பதை உணர்ந்து, தண்ணீரை இறைக்கச் செய்து, சிவலிங்கங்களை வெளிப்படுத்தி, அவற்றுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்வித்து தரிசித்துக் கொண்டார்கள். இவ்வித ஆரய்ச்சி மனப்பான்னமையும் அதில் உள்ள தனியான ஈடுபாடும் சுவாமிகளுக்கு இன்று வரையில் சிறிதளவும் குறையாமல் இருந்து வந்துள்ளது.

     1926 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுவாமிகள் கானாடு காத்தான் என்ற நகரத்தார் வாழும் ஊருக்கு விஜயம் செய்தார்கள். அப்போது டில்லிக்குச் சென்றிருந்த ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், அந்த வருகை பற்றிய தகவலை அறிந்து, தனது அலுவல்களை விரைவில் முடித்துக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்கள். சுவாமிகளைத் தரிசித்து, அவர்களுடைய யாத்திரையினால் மக்களிடம் பரவும் நல்லுணர்வை எடுத்துக்கூறி, நாத்திகர்களை வழிப்படுத்திச் சுவாமிகளின் தரிசனம் ஒன்றே போதும் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அவர் குறிப்பாகப் பிராமணக் குடும்பங்களின் நிலை பற்றி எடுத்துக் கூறினார். மேலை நாட்டு நாகரிகம், ஆடம்பரமான கலியாணச் செலவுகள், வரதட்சிணைப் பிரச்சினை ஆகியபலவும் பிராமணக் குடும்பங்களையே அதிகமாகப் பாதிப்பதையும் குறிப்பாக எடுத்துச் சொல்லி, அதற்குச் சுவாமிகள் தமது நல்லுரைகளின் மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் பணிந்து கெட்டுக் கொண்டார்கள். அதற்கான பண உதவிகளையும் தாம் அளிக்க முன்வருவதாகவும் தெரிவித்துக் கொண்டார்.

     சுவாமிகள் ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் சொன்னதையெல்லாம் மிகுந்த கவலையுடன் கேட்டு, அவருடைய அக்கறையைப் பெரிதும் பாராட்டினார். தேவை உள்ள போதெல்லாம் அவருடைய உதவியை ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார். செட்டியாரும் சுவாமிகளை மனமகிழ்ச்சியுடன் வணங்கி விடை பெற்றுக் கொண்டார்கள்.

     இளையாற்றங்குடியில் ஊர் மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து, நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க செட்டியார் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். அந்த நற்பணிகளுக்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்தது.ஜகம் புகழும் ஜகத்குரு : காணிக்கை 1 2 3சமகால இலக்கியம்

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


காந்தளூர் வசந்தகுமாரன் கதை

ஆசிரியர்: சுஜாதா
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: செப்டம்பர் 2013
பக்கங்கள்: 216
எடை: 250 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 978-81-89912-72-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 170.00
தள்ளுபடி விலை: ரூ. 155.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.
சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)