உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 21 ... 26. சிவாதித்தன்
2001 அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் ஒன்றும் இருசுட ராம்அரு ணோதயம் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1
2002 கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2
2003 தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடலுயிர் * வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே. 3 * வேறொன்ற; வேறொன்றாய்
2004 தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4 27. பசு இலக்கணம் - பிராணன்
2005 உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் * இளையா விளக்கினை அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1 * இறையாம்
2006 அன்ன * மிரண்டுள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைப்பிரி # யாதன்னந் $ தன்னிலை அன்னம் தனி @ யொன்றது என்றக்கால் & பின்ன மடஅன்னம் % பேறணு காதே. 2 * மிரண்டு மாற்றங் # யாதென்க $ அந்நிலை @ யொன்று போனக்கால் & பின்னை % கூடுகிலாவே 28. புருடன்
2007 வைகரி யாதியும் மாயா மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானம் கிரியா * விசேடத்துச் செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 1 * விசேடத்தாற்
2008 அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2
2009 படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஒட்டி நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 3
2010 அணுவுள் * அவனும் அவனுள் அணுவும் கணுஅற நின்ற கலப்பது உணரார் இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித் தணிவற # நின்றான் சராசரம் தானே. 4 * அணுவனும் அணுவுள் # நின்ற 29. சீவன்
2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 1
2012 ஏனோர் பெருமையி * னாயினும் எம்மிறை ஊனே # சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. 2 * னாகிலும் # சிறுமையுள்
2013 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 3
2014 மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே. 4 30. பசு
2015 கற்ற பசுக்கள் கதறித் * திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி # மேயினும் முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1 * திரியின் # மேயின்
2016 கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லைக் கடப்பித்து இறைவ * னடிகூட்டி வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2 * னடிக்கூட்டி (இப்பாடல் 2903-ம் பாடலாகவும் வந்துள்ளது) 31. போதன் (அறிஞன்)
2017 சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1
2018 குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2
2019 அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3
2020 ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4
2021 சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவ * தறியா தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடாகி லாரே. 5 * தறியார்
2022 நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார் நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6 32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
2023 ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1
2024 கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே. 2
2025 புலம் ஐந்து * புள்ளைந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் # உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 3 * உளமைந்து # உலமந்து
2026 அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன * அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 4 * அஞ்சும்பொய் அஞ்சுந்தம்
2027 * ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் # ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்த சினத்தொடே நின்றிடில் ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 5 * ஐவர் அரசர் அமைச்சர் தொண்ணூற்றுவர் # ஐவர் அமர்ந்திட மாளக் கருதுவர்
2028 சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 6
2029 எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 7
2030 விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. 8 33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
2031 குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1
2032 கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் அடக்க லுறும் அவன்தானே அமரன் விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2
2033 அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3
2034 முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4
2035 ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5
2036 பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் * சுருக்கம் அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6 * சுருங்கும்
2037 இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7
2038 பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8
2039 நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9
2040 சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10
2041 போற்றிசைத் * துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் # புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11 * தும்புனி # புத்தியாம்
2042 தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12
2043 கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13 34. அசற்குரு நெறி
2044 உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1
2045 மந்திர தந்திர மாயோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2
2046 ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன் கோமா * னலசனத் தாகும் குரவனே. 3 * னலனசத்
2047 கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும் நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4
2048 குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர் * முரணும் பழங்குழி # வீழ்வர்கள் முன்பின் குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5 * முரளும் # வீழ்வரா 35. சற்குரு நெறி
2049 தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள்தந்து * தன்னை அறியத் தரவல்லோன் தாள்தந்து # தத்துவா தீதத்துச் சார்சீவன் தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1 * தன்னைச் சீவனைத் # தந்துவா தீதச் சதாசிவன்
2050 தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 2
2051 கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 3
2052 பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலமற நீக்குவோர் ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப் பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4
2053 நேயத்தே நிற்கும் நிமலன் * மலமற்ற நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே # ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5 * மலமற; மனமற்ற # ஆயத்து வாதந்
2054 பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6
2055 தானே எனநின்ற சற்குரு சந்நிதி தானே எனநின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7
2056 வரும்வழி போம்வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைப் பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் குருவழியே சென்று கூடலும் ஆமே. 8
2057 குருஎன் பவனே வேதாக மங்கூறும் பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9
2058 சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச் சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல் அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10
2059 ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை பற்றறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித் தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11
2060 எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம் * வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச் சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 12 மல்லார் புல்ல வருங்கால் உயிர்த்தொன்றிச்
2061 ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித் தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13
2062 அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் சித்தொடு அசித்துஅறத் * தெளிவித்த சீவனைச் சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 14 * தெளிவித்துச்
2063 ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம் பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15
2064 மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற் * றிருந்தார் ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16 * றிருந்தார்கள்
2065 அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே அசைத்துஇரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17
2066 ஏறு நெறியே மலத்தை எரித்தலால் ஈறில் உரையால் இருளை அறுத்தலான் மாறில் பசுபாசம் வாட்டலால் * வீடுக கூறு பரனே குருவாம் இயம்பிலே. 18 * வீடுகள் வேறு 36. கூடா ஒழுக்கம்
2067 கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி * யில்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 1 * யில்லை யிடமில்லை
2068 செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வன் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2
2069 * பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும் மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 3 * பத்திவித்துண்டு
2070 வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானமி ல்லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 4
2071 காயக் * குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5 * குழம்பனைக் (இப்பாடல் 2550-ம் பாடலாகவும் வந்துள்ளது)
2072 கண்காணி யாகவே கையகத் தேயெழும் கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும் கண்காணி யாகிய காதலன் தானே. 6
2073 கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 7
2074 காணாத கண்ணில் படலமே கண்ணொளி காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் காணாது கண்டார் களவொழிந் தாரே. 8
2075 பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி * உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச் சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 9 * உய்த்துத் தோன்று
2076 பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும் பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார் சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர் நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10
2077 ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்றுஇரண் * டென்றே உரைதரு வோர்க்கெலாம் ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 11 * டன்றே
2078 உயிரது * நின்றால் உணர்வுஎங்கு நிற்கும் அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும் உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 12 * வென்றால்
2079 உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வுஅறி வாகும் உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 13
2080 உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன் நிலவாணி * ஐந்தினுள் தேருற நிற்கும் சிலவாணி யாகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 14 * ஐந்துடன்
2081 தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர் ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர் தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 15
2082 உன்முத லாகிய ஊன்உயிர் * உண்டெனும் கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால் தன்முதல் ஆகிய # தத்துவம் ஆமே. 16 * தொண்டேனுங் # சத்தது வாமே
2083 இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர் வந்தன சூக்க உடலன்று மானது தந்திடும் * ஐவிதத் தால்தற் புருடனும் முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 17 * ஐயவியத் 37. கேடு கண்டு இரங்கல்
2084 வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1
2085 போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் * தாள்பணிந் தாதியை அன்பில் அறியகில் லார்களே. 2 * தாளணிந்
2086 கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3
2087 விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன பரந்தன்னை ஓராப் * பழிமொழி யாளர் உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4 * பழமொழி
2088 நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும் என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும் அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5
2089 இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6
2090 பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7
2091 ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8
2092 இப்பரி சேஇள ஞாயிறு போலுரு அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை இப்பரி சேகம லத்துறை ஈசனை மெய்ப்பரி சேவின வாதுஇருந் தோமே. 9
2093 கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து ஆடவல் லார்அவர் * பேறெது வாமே. 10 * பேறிது; பேரிது (இப்பாடல் 2559-ம் பாடலாகவும் வந்துள்ளது)
2094 நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர் நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11
2095 மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 12
2096 நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை ஆதி * பயனென்று அமரர் பிரான்என்று நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13 * யயனென்
2097 இருந்தேன் * மலரளைந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14 * மலர்களைத்
2098 கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம் வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15
2099 குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த * வதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16 * விதிர்த்திருந்
2100 கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின் நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 17 |