சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய பரிபாடல் கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும் கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின் உறுப்புக்கலுமேயாகும். இவ்விருபத்திரண்டனுள், திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15), முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21), வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22). இவற்றின் பின்னே உள்ள பகுதிகளுள் திருமாலுக்குரிய முழுப்பாடல் ஒன்று; வையைக்குரிய முழுப்பாடல் ஒன்று; உறுப்பு ஒன்று; மதுரைக்குரிய உறுப்புகள் ஏழு; சில உறுப்புகள் இன்ன வகையைச் சார்ந்தனவென்று விளங்கவில்லை. எட்டுத்தொகை நூல்களுள் இஃதொன்றே இசை நூலாகும். இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றித் தெரியவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல் பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14 முதல் 28ஆம் வரி வரை உள்ள பகுதி தெளிவின்றி உள்ளது.
1. திருமால்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை தீ உமிழ் திறனொடு முடிமிசை அணவர, மாவுடை மலர் மார்பின், மைஇல் வால் வளை மேனி, சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய, 5 வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; (இது தரவு) எரிமலர் சினைஇய கண்ணை; பூவை விரிமலர் புரையும் மேனியை; மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை 10 எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும் ஏவலுட் பணிந்தமை கூறும், நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே. (இது கொச்சகம்) இணைபிரி அணி துணி பிணி மணி எரி புரை 15 விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில் தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின் 20 எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் றுணி படல் இன மணி இயலெறும் எழிலின் இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை 25 உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிரிய அமரரைப் பொரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடர அமர் வென்ற கணை. (இவை நான்கும் அராகம்) "பொருவேம்" என்றவர் மதம் தபக் கடந்து, 30 செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! தெருள நின் வரவு அறிதல் மருள் அறு தேர்ச்சி முனிவர்க்கும் அரிதே; (இஃது ஆசிரியம்) அன்ன மரபின் அனையோய்! நின்னை 35 இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? (இது பேரெண்) அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம் திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும். (இஃது ஆசிரியம்) 40 விறன்மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ; திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின் மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ; அம் கண் வானத்து அணி நிலாத் திகழ் தரும் 45 திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; ஐந் தலை உயிரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ; நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும், பூவனும், நாற்றமும், நீ; 50 வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், நிலனும், நீடிய இமயமும், நீ. (இவை ஆறும் பேரெண்) அதனால், "இன்னோர் அனையை; இனையையால்" என, அன்னோர் யாம் இவண் காணாமையின், 55 பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னுயிர் முதல்வனை ஆதலின், நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே! (இது சுரீதகம்) நின் ஒக்கும் புகழ் நிழலவை; பொன் ஒக்கும் உடையவை; 60 புள்ளின் கொடியவை; புரி வளையினவை; எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை; மண்ணுறு மணி பாய் உருவினவை; எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை. (இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்) ஆங்கு, (இது தனிச்சொல்) 65 காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என, ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்- வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே. (இது சுரீதகம்) கடவுள் வாழ்த்து.
2. திருமால்
தொல்முறை இயற்கையின் மதியொ.... ... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக. பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட, விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல, 5 கரு வளர் வானத்து இசையின் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்; செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று 10 உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்; நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும், மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய 15 செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு ஊழி யாவரும் உணரா; ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது. 20 நீயே, "வளையொடு புரையும் வாலியோற்கு அவன் இளையன்" என்போர்க்கு இளையை ஆதலும், "புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு முதியை" என்போர்க்கு முதுமை தோன்றலும், வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த 25 கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே. ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில 30 நித்தில மதாணி அத்தகு மதி மறுச் செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் வை வான் மருப்பின் களிறு மணன் அயர்பு, "புள்ளி நிலனும் புரைபடல் அரிது" என, 35 உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து, இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு, முடிகள் அதிர, படிநிலை தளர, 40 நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, தலை இறுபு தாரொடு புரள நிலை தொலைபு, வேர், தூர், மடல், குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப் பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல் 45 நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு, அளறு சொரிபு, நிலம் சோர, சேரார் இன் உயிர் செகுக்கும் போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே; 50 ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே. நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி; கண்ணே, புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்; வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த 55 நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், சாயல் நினது, வான் நிறை என்னும் நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே; அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் எவ் வயினோயும் நீயே. 60 செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும், படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும், 65 நின் உருபுடன் உண்டி; பிறர் உடம்படுவாரா நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு. வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர, 70 மூவா மரபும் ஓவா நோன்மையும் சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் ... ... ... ... ... ... ... மரபினோய் நின் அடி தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்; கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம், 75 கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் "கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!" எனவே. கடவுள் வாழ்த்து
கீரந்தையார் பாட்டு நன்னாகனார் இசை பண்ணுப் பாலையாழ் |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
அம்மா வந்தாள் மொழி: தமிழ் பதிப்பு: 6 ஆண்டு: நவம்பர் 2016 பக்கங்கள்: 184 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-80240-88-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’. நேரடியாக வாங்க : +91-94440-86888
|