அத்தியாயம் - 13 கடற்கரை மீன்வாடியில் காக்கைகளின் சந்தடியும் வியாபாரச் சந்தடியும் அலைகளின் ஓசையும் எவ்வாறு ஒழுங்கின்மைக்கு மாதிரியாக விளங்குமோ அத்தகையதொரு கத்தலும், ஆவேச மொழிகளும் அந்தக் கூட்டத்தில் கலகலக்கின்றன. பங்களாவிலிருந்து கொண்டு வந்த நாற்காலியில் சாமியார் அமர்ந்திருக்கிறார். சிலர் மணலில் குந்தியிருக்கின்றனர். சிலர் எழுந்து நிற்கின்றனர். வயிரமேறிய தசை தளர்ந்தாலும் இன்னமும் உறுதி குலையவில்லை என்று வீம்புடன் நிற்கும் கடல் தொழிலாளிகள், முகத்தில் மீசை அரும்பாத இளம் பிள்ளைகள், வாலிபத்தின் கிளர்ச்சியில் துடிக்கும் உதடுகளும் தோள்களுமாக எழும்பி நிற்பவர், பிறந்த மேனியுடன் மணலில் விளையாடும் சிறு குழந்தைகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றனர். பெண்கள் எட்டியுள்ள வீடுகளில் வாயில்களில் நின்றவாறு வேடிக்கை பார்க்கின்றனர். காவல்துறையினர் இருவரும் முன்னேற்பாடாக வந்திருக்கின்றனர்.
“ஃபாதர் யோசனை செய்வதற்கு இதில் ஒண்ணும் புரியாதது இல்லை. நாங்கள் பல தடவைகள் உங்களிடம் இது விஷயம் பேசிய பிறகுதான் நாங்களாகவே நிறுத்திக் கொண்டோம். முன்போல் வலை தட்டுமடி இல்லை. விலைகள் அதிகமாகிவிட்டன. வாழ்க்கைச் செலவு ரொம்ப உயர்ந்து போச்சு. எங்கள் பெண்களுக்குச் சீதனம் தந்து கல்யாணம் கட்ட முடிவதில்லை. ஒரு வலை செட் அறுநூறு, எழுநூறு என்று தொழிலுக்கே அதிக முதல் முடக்க வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்தில் துவி ஒரு அல்ப விலைக்குத்தான் போயிற்று. இப்பம்...” சாமி அவன் முழுவதும் பேச விடாமல் குறுக்கிடுகிறார். “இதெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பயனில்லை. கோயிலுக்குச் சேர வேண்டிய வரிக்கு அந்த நாள் இந்த நாளிண்ணு கிடையாது. பங்குக் கோயில் உங்களுடைய ஆத்தும சீவியத்துக்காகவே ஏற்பட்டது. நீங்கள் பாவ வாழ்வு வாழாமல் நல்ல கிறிஸ்தவர்களாகச் சங்கையுடன் வாழ்ந்து மோட்சத்துக்குப் போக வேண்டும் என்பதற்காகவே சில விதிகளை, சவேரியார் சுவாமிகள் ஒழுங்கு செய்தார். கஷ்டப்பாடு என்று சொல்கிறீர்கள். கஷ்டப்பாடு உங்களுக்கு மட்டும்தானா? கஷ்டப்பாடுகள் என்று பாவ எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள்; உண்மையை மறைக்கிறீர்கள்; பொய் சொல்கிறீர்கள்; திருச்சபையும் பங்குக் கோயிலும் இன்றியமையாததாகின்றன. நிச்சயமாகத் தேவையாகின்றன. ஆதியில் இந்தக் கடல்துறை ஊர்களில் மக்கள் இருந்த போதிலும் புனித சவேரியார் சுவாமிகள் வரும் காலம் வரையிலும் விசுவாச வாழ்வுக்காக நல்ல வழிகள் பற்றி மறை தழுவி எதுவும் தெரியாதவர்களாகவே இருந்தார்கள். விசுவாசப் பிரமாணம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம், பத்துக் கற்பனைகள் இதெல்லாம் கற்றுக் கொடுக்கவும், பலி பூசை நிறைவேற்றவும் யாருமே இங்கு இல்லை. அவர் வந்த பிறகுதான் பரவர் விசுவாச வாழ்வில் மலர்ச்சி வந்தது. அந்தக் காலத்தில் மக்களாகவே ஒப்புக் கொண்டு கோயிலுக்கும் பங்குக்கும் இந்த வருமானங்களில் பங்கென்று பட்டயம் எழுதி வைக்கப்பட்டது. உங்களுடைய வரிகளில் சுமை குறைக்க முன்னம் செவ்வாய்க்கிழமைகளில் பாதிப் பங்கைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டுமென்றிருந்ததை நிறுத்தியாயிற்று. இப்போது இன்னும் இருக்கும் வரிகளையும், நீங்கள் அதிகமாகக் குடிப்பதற்கும் ஆடம்பரச் செலவுகள் செய்வதற்குமாக நிறுத்த வேண்டும் என்கிறீர்கள். இது நியாயம் இல்லை...” சாமியார் இலக்கண சுத்தமாகப் பேசும் மொழிகள் பலருக்கும் புரியாமலிருந்தாலும், அவர் துவிக்குத்தகையை நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை என்று மட்டும் புரிந்தாலும், சாமியாரின் நாவிலிருந்து பிறப்பது வேத மந்திரம் என்ற பக்தி விசுவாச உணர்வுடன் முதியவர் கேட்கின்றனர். மரியானுக்கு பெஞ்சமின் துவி என்று உச்சரிக்குமுன் சாமி குறுக்கிட்டுப் பாய்ந்ததில் ஆத்திரம். இப்போது அவன் சாமியைக் குறுக்கிடுகிறான். “அப்பம் துவி ஆறு காசுக்குப் போவ இல்ல. இப்ப துவி ஆறு ரூபாயிலேந்து மீனுக்கு மேல வெல போவுது. அத்தை அப்பிடியே கோயிலுக்குண்டு குடுப்பது என்னம்ப்பு நாயம்?” “சாமியார் பேசுமுன்ன நாய் போலப் பாயுறா! சொம்மா இருறா நாய்ப்பயலே?” என்று ஜெபமாலையான் அடக்குகிறான். “நீ சொம்மா இரிலே! எதிர்க்கட்சியாடுதான், துரோகி!” என்று திட்டுகிறார் பிச்சைமுத்துப்பாட்டா. பெஞ்சமின் கை தட்டி அமர்த்துகிறான். “நமக்குள்ள ஏன் சண்டை போடுறீங்க? சண்டை போட்டுக்கிட்டா மேன்மையில்ல. சாமியிடம் நான் கேட்டுக்கிடறது இதுதான். சமரசமா நீங்களும் விட்டுக் கொடுக்கணும். ஒவ்வொரு நாளும் கடல் தொழிலாளி உயிரைப் பணயம் வச்சுப் போறான். போவும் போது இன்ன வருமிண்டு நிச்சயமில்ல. கிடைக்கும்; கிடைக்காமயும் இருக்கும். நம்ம நெனப்புக்கு எட்டாத சங்கல்பம் அது. மடக்கலை வரும் போது மரியாண்ணு சொல்லுதோம். சுழலியில் லோலுப்படும் போது அற்புதம் புரிந்த அந்தோணியாரேண்ணு பிச்சை கேக்கிறோம். எங்க விசுவாசம் ஆதிக்கடவுள், சமுத்திரம் ரெண்டிலும் நிலச்சிருக்கு. இப்பம் பீஸ் வலை வச்சித் தொழில் செஞ்சாத்தான் நல்லது. முன்ன ஒரு தட்டுமடி பார்லபட்டுக் கிழிஞ்சிச்சிண்ணா நஷ்டம் அதிகமில்ல. இப்ப நூத்துக்கணக்கா, ஆயிரக்கணக்கா நஷ்டம். இங்கே கடல்கரையில் நீங்க கணக்கெடுத்துப் பார்த்தா, நூத்துக்கு அறுபது பொம்பிள மேல தாலி இருக்காது. இதெல்லாம் சாமி, கொஞ்சம் யோசித்துப் பார்த்து, அந்த வியாபாரிகளைப் போல் நாங்களும் வரி கட்டினால் போதுமிண்ணு வருஷாந்தர வரியாகப் பத்து ரூபாய் வாங்கிட்டு மற்ற குத்தவைகளை நிப்பாட்டுவதை நாயமாச் செய்யணமிண்டு சொல்றேன்...” சாமிக்கு முகம் சிறுத்துப் போகிறது. ‘இவர்கள் சொல்லுவதெல்லாம் நியாயம் நியாயம்’ என்று மனம் மந்திரிக்கிறது. என்றாலும் இப்படி விட்டுக் கொடுக்கலாமா? திருச்சபையின் பங்குக் கோயில்களின் பெருவாரியான வருமானம் அல்லவோ இது? தமது வாழ்க்கையை இவ்வாறு ஒரு வெள்ளை அங்கிக்குள் சிறைப்படுத்திக் கொண்டு நியாயமான வேட்கைகளைக் கொன்று கொண்டு வாழும் வாழ்வில் இதைத் தவிர வேறென்ன லாபம்? குருப்பட்டம் பெற்று இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதற்குக் காரணமே வாழ்க்கையின் பொருளாதார வறுமையின் அவல நிலையிலிருந்து மேலோங்க வேண்டும் என்பதனாலல்லவோ? கடல் மீது சென்று பாடுபடும் இவர்கள் குழந்தைகளைப் போல் அவ்வப்போதைய உணர்ச்சிகளுக்கேற்பத் தங்களை வெளியிட்டுக் கொண்டு விடுவார்கள். அப்படி ஓர் எழுச்சி தான் இது. இதை அடக்கிவிட வேண்டும் என்று எண்ணுகிறார். “நீங்கள் கேட்பது இயலாத காரியம். நீங்கள் அபராதம் கட்டவில்லையென்றால், ஞானஸ்நானம், கல்யாணம், மரித்தோர் கடன் என்று சாமியார் வருவதற்கில்லை...” சாமியார் சட்டென்று எழுந்து விட்டார். இருதயம் எழுந்து நிற்கிறார். “அவரு அம்மாட்டுக்கு விட்டுக் கொடுப்பாரா? இந்தப் பயலுவ என்னமோ கோழி சிலும்புதாப்பல சிலும்புறானுவ!” கூட்டத்தில் கசமுசவென்றும் உரத்தும் குரல்கள் மோதிக் கொள்கின்றன. பெஞ்ஜமின் சாமியாரைத் தொடர்ந்து சென்று அவரை நிறுத்த முயலுகிறான். “சாமி, நீங்க சமரசமா ஒரு ஏற்பாட்டுக்கு வரணமிண்ணு தானே கூட்டம் போட்டம்? நீங்க கோவிச்சிட்டுப் போயிட்டா எப்படி?...” “இங்கே யாரும் கோபிக்க இல்லை. நீங்க கேட்பது நடக்காதது. இது சவேரியார் காலத்திலேந்து வரும் நடப்பு. இப்போது அதை மாற்ற முடியாது...” “ஃபாதர், ஆண்டகையிடம் சொல்லி எதானும் ஏற்பாடு செய்யக் கூடாதா?” சாமியார் கையை விரிக்கிறார். “நீங்க ஆண்டகையிடம் போய்ச் சொல்லுங்க. எனக்கு விரோதமில்ல. ஆனால் இது திருச்சபையைச் சேர்ந்த எல்லாத் துறை ஊரிலும் உள்ள நடைமுறை. அதை அப்படி மாற்றிவிட முடியாது...” “ஆண்டகை தூத்துக்குடியில்தானே இருக்கிறாரு? நாங்களே ஆண்டகையிடம் போய்க் கேக்கிறோம்...” “ஆண்டகை இப்போது எங்கிருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. நீங்கள் போய்ச் சொல்லுங்க, எனக்கு ஆட்சேபமில்லை.” சாமியார் அங்கி விசிற வேகமாக நடந்து பங்களாவுக்குள் நுழைகிறார். பெஞ்ஜமின் திரும்பி வருகையில் சூரியனின் மாலைக் கதிர்கள் அவனுடைய குழம்பிய முகத்தில் விழுகின்றன. கூட்டத்தில் அதிருப்திக் குரல்கள் உயருகின்றன; ஏசல்களும் பூசல்களும் தலை காட்டுகின்றன காவல் துறையாளர் இருவரும் இருக்கின்றனர். ஆனால் அவர்களே அஞ்சிவிடுமளவுக்கு இவர்களிடம் வன்முறைக் கிளர்ச்சி தோன்றிவிடும். “கிளிச்சான், இவெ. சாமியாரிட்ட இவெ மயிரு ஒண்ணுஞ் செல்லாது...” என்று சாமுவல் கூற, எட்வின் அவனைப் பிடித்துத் தள்ள, மற்ற இருவர் சவால்விட, கலகலப்பு கைகலப்பில் கொண்டு விடுகிறது. போலீஸ்காரர் புகுந்து விலக்குகின்றனர். பெஞ்ஜமினின் நெற்றி வரிகள் ஆழ்ந்து போகின்றன. “நீங்க எல்லாம் அமைச்சலாயிருக்கணும். நாம் இப்பம் நாயம் சொல்லுதோம். இதுல எதும் அநியாயமிருந்தா அவ நம்பிக்கைப் படணும். ஆண்டகையிட்ட நம்ம வழக்கைக் கொண்டிட்டுப் போவம் - நம்ம சகலைக்குத் தெரிஞ்சவரு, வித்யாவதி ஊரில் போலீசு இனிஸ்பெட்டரு. அவரிட்ட நா இப்படிண்டு விசயம் சொல்லித்தான் இன்னைக்கே ரெண்டு பேர அனுப்பித் தந்தாங்க. அவரு அண்ணைக்குச் சொன்னாரு, நீரு ஒண்ணும் கவலிக்க வேணாம். இதொண்ணும் சரிப்படலேண்ணா நாம ஆண்டகையிட்டப் போவம், நானும் கூட வாரன்னு சொல்லியிருக்கிறாரு. நாம அந்தால ஒரு பிளசர் எடுத்திட்டுத் தூத்துக்குடி போயி - நாம முக்கியமா ஒரு நாலஞ்சு பேரு போயி ஆண்டகையப் பாத்து நம்ம வழக்கைச் சொல்லுவம்...” பிச்சைமுத்துப்பாட்டா திறந்த வாயுடன் அவனையே பார்க்கிறார். எம்பிட்டு மேதையும் கெல்பும் துணிச்சலும் இந்தப் பயலுக்கு? இவெப்பனும் அவரைப்போல் கடல் தொழில் செய்தவர்தாம். அவருடைய பிள்ளைகள் யாருமே கடல் வாழ்வில் ஒட்டாமல் போய்விட்டார்கள். உப்பு ஒட்டாத, ‘நன்னி’யில்லாத வாழ்வு! ஆண்டவங் கிருவையால இந்தப்பய நல்லாயிருக்கணும். தனக்கு உடம்புல உப்பும் பெலமும் குடுத்த மண்ணுக்கும் தண்ணிக்கும் மனுஷ ஒறவுக்கும் நன்னியோட நல்லது செய்யணுமிண்டு நினைக்கான்... பிச்சைமுத்துப்பாட்டா கண்களில் நீர் கசிய உணர்ச்சிவசப்பட்டுப் பெஞ்ஜமினின் தோளில் கை போட்டுக் கொள்கிறார். “மக்கா, கடலு மேலியே வட்டமிட்டுக்கேரும் புள்ளைப் போல, கரைக்குப் போவப் பெலமில்லாத புள்ளைப்போல, வெளி ஒலவ வெவகாரம் தெரியாம வாழுறம். கரைக்குப் போகவும் பெலமில்லாம பாஞ்செடுக்கவும் பலமில்லாம தண்ணி மேல மெதக்கும் சீதாப்புள்ளுவ போல, ஒலவ வெவகாரத்தில், மனுஷனாட்டுப் பெறந்த பல கோடிகளும் நமக்கு வேண்டப்பட்டவராயிருக்கணுமிண்டு கிறிஸ்து நாதர் சொல்லல?...” அந்த முதியவரின் உள்ளத்திலோடும் உணர்ச்சிக் கோலங்களைப் பெஞ்ஜமின் முழுதும் புரிந்து கொள்ளவில்லை. எனினும் பெற்ற மக்களின் தொடர்பு துறந்து அந்தக் கடற்கரையே நிலைத்த இடமென்று வாழத் துணிந்த இவருடைய ஒட்டுறவு அவனது நெஞ்சின் மென்மையான உணர்வுகளைத் தொட்டு உயிர்க்கச் செய்கிறது. இந்தக் கரையில் கடல் தொழில் செய்ய வந்திருக்கும் அனைவரையும் அவர் அறிவார். அவர்களையே அவர் தம் பிள்ளைகளாகக் கருதுகிறார்! “நீங்க எங்க பேச்சு நியாயமிண்ணு எங்ககூட இருப்பதே பெலம் தாத்தா!” என்று கரைகிறான். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கற்சுவர்கள் வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 115.00தள்ளுபடி விலை: ரூ. 100.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |