அத்தியாயம் - 7 பெஞ்ஜமின் வீட்டுக்கும் சந்தியாகு வீட்டுக்கும் இடையில் உள்ள மணல் வெளியில்தான் பரவர்கள் கூடியிருக்கின்றனர். கடற்கரையில் மீன் வந்து விழுகையில் சேரும் கூட்டத்தைப் போன்றுதான் பலசந்திக் கூப்பாடுகளாய் இரைச்சல்கள், கடலின் இரைச்சலை அமுக்கிக் கொண்டு கேட்கின்றன. சந்தியாகு பாய்க்குப் புளியங்கொட்டைத் தூர் காய்ச்சி முக்கி வைத்துவிட்டு வருகிறான். சிலுவைப்பிச்சை மணலில் குந்தி இருந்து புகையிலை போடுகிறான். பிச்சைமுத்துப்பாட்டாவும் கையில் சுருட்டுடன் நடந்து வந்து அங்கே குந்துகிறார். எட்வின் அப்போதே குடித்திருக்கிறான். “சவோதார சவோதரிகளே... சத்தம் போடாதீர்கள்...” என்று கத்துகிறான். சிலுவை மொடுதவம், பூபாலராயன், அந்தோணிராஜ், குருஸ் எல்லோரும் ஏற்கெனவே வந்து நின்று கொண்டும் இருந்து கொண்டும் மனம் போனபடி பேசிக் கொண்டிருக்கின்றனர். பெஞ்ஜமின் வீட்டு வாயிலில் ஊர்ப் பெண்டுகள் பலரும் வந்திருக்கின்றனர்.
“குடிமெவ எப்படிவே வருவா? கோயிலை மீறிக் கூட்டம் போடுவீரு, தெறிப்பு நிப்பாட்டணுமிண்ணு நினைச்சாலே அவராதமிண்ணு சாமி அறிக்கை வாசிக்கல பூசையில?” என்று செபமாலையான் கேட்கிறான். “போடட்டுமே? அவுராதம் நாம ஏன் கெட்டணும்? சவோதர சவோதரிகளே, நாம ஒண்ணிச்சி இருக்கணும். அப்பம் இந்தச் சாமி சாயம் வெளுத்துப் போவும்?” என்று எட்வின் முழங்குகிறான். “யார்லே அவெ? திருடிட்டு ஜெயில்ல இருந்த தெண்டிப் பய, நாக்கு அழுவும்லே, சாமியப்பத்திப் பேசாதே!” “அதும் இதும் சொல்லிப் படை பொராதீங்க! இப்பம் நாம ஒரு முக்கியமான விசயம் பேசக் கூடியிருக்கிறம். இது கோயிலை மதிக்காமயோ, துரோகம் செய்வதாகவோ விசுவாசமில்லாததாகவோ பேசல. நம்ம தொழில், நம்ம வாழ்வு... அதைப் பாதிக்கும் ஒரு விஷயம் பேசுதோம்...” பெஞ்ஜமின் சமாதானமாகப் பேச முற்படுகிறான். மொடுதவம் இடையில் எழுந்து சீறுகிறான். “கோயில் தெறிப்புக் குடுக்காண்டாமிண்ணு பேசுதீம்... அது மாதாவுக்குத் துரோவமில்லியா? ஆழிப்பார் வாரயில மாதா பேரைச் சொல்லிப் பிச்சை கேக்காம, உன்னக்க மயிரையா சொல்லுவே?” “அதுக்கும் இவெ ஒண்ரக்கண்ணனும் அவெனும் இவெனும் நம்ம பாட்டக் கொள்ளயடிக்கிறதுக்கும் எம்மாட்டுத் தொந்தம்வே? கிறிஸ்தவம் மாதாண்ணும் யேசுவேண்ணும் சொல்லுதோம். இந்துண்ணா முருவாண்ணுவா? அதுக்காவ, துவி, கோயிலுக்குச் சொந்தமிண்ணு சொல்றது நாயமா? ஆத்தாகிட்டக் குடிச்ச பால முதக்கொண்டு ஆராளிக்கடல்ல கக்கிப் பாடுபட்டுக் கொண்டார மீனை இவனுவளுக்குக் கொளுக்கக் குடுக்கணமின்னா நாயமில்லியா...” பிச்சைமுத்துப்பாட்டா, இவர் மூன்று தலைமுறையைக் கண்ட கிழவர். இரண்டு பெண்சாதி கட்டியவர். மூத்தவளின் மகன் நிறையப் படித்துத் தேவ அழைப்பு வந்து குருப்பட்டம் பெற்று, எங்கோ இமாலயப் பக்கம் தொண்டாற்றப் போய்விட்டான். இன்னொரு பையன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காதல் மணம்புரிந்து கொண்டு பம்பாய்க்குப் போய்விட்டான். மகளைக் கன்யாகுமரியில் கட்டிக் கொடுத்திருந்தார். அவளுக்கு நான்கு குழந்தைகள். புருஷன் மீன் தரகன்தான். அவனும் இறந்து போனான். அவனுடைய பெரிய மகன் படித்து சென்னையில் வேலை செய்கிறான். அங்கே குடும்பம் போய்விட்டது. இளைய தாரத்துக்கு இரண்டு மகளும் ஒரு மகனும். மகன்தான் பட்டப்பகலில் பால்வடிய வெட்டப் பெற்ற இளமரமாகக் கொலையுண்டான். ஒரு மகள் மீன் வியாபாரம் செய்ய வந்த கொச்சிக்காரன் சாயபுவுடன் ஓடிப் போனாள். இன்னொருத்தியின் புருசனும் படித்தவன். தூத்துக்குடி துறைமுகத்தில் எழுத்து வேலை செய்கிறான். அவளுக்கு இந்தக் கடற்கரையில் இப்போது அப்பன் அம்மையிடம் வரவே பிடிக்கவில்லை. அப்பன் மீன் ஏலம் போடப் போவதும், முச்சந்தியில் மீன் கண்டத்தை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதும், நாகரிகமில்லாமல் அம்மையும் அவனும் சண்டையிட்டுக் கொள்வதும் அவளைக் கட்டிய மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. எனவே அனுப்புவதில்லை. கிழவருக்கு மகன் மகள் என்ற பாசங்களெல்லாம் வெறும் வேஷங்களென்றும், கடற்கரை ஒன்றுதான் நிலையானதென்றும் ஊறிப் போனவர். இவர் இரண்டிலொன்று என்று இவர்கள் பக்கம் சாய்ந்திருக்கிறார். “என்னம்புவே நாயம் கண்டீரு? உனக்கும் எனக்கும் முன்ன முப்பாட்டங் காலத்தில் வச்ச வளம நெறி இது. இப்ப நாயமில்லியா? பதிதக் களுதங்களா, நண்ணி வேணாம்? கோயில் தெறிப்புக் குடுக்கலேண்ணா, குருத்துரோவம், தெய்வத் துரோவம்?” என்று மொடுதவம் கோயில் சார்பில் உறுதியாகக் கூறுகிறான். மரியான் ஓரமாக நின்று காதைக் குடைந்து கொண்டிருக்கிறான். குறுகுறூவென்று காதில் நீர் புகுந்து கொண்டாற் போன்று ஓர் உணர்வு. பிச்சைமுத்துப்பாட்டா சளைக்கவில்லை. “பாட்டான் முற்பாட்டங் காலத்தைப் பத்திப் பேசுதிங்க. என்னலே தெரியும் ஒனக்கு? அவங்கல்லாம் இம்மாட்டு ஆயிரம் ரெண்டாயிரம் போட்டு வலை பிரைஞ்சாங்களா? தட்டு மடி, குதலி மடி, ஏழு ரூபாக்கும், எட்டு ரூபாக்கும் நூல்கயிறும் கொச்சக்கயிறும் போட்டுப் பிரஞ்சாங்க. உளுவைத் துவியானாலும் எந்த மயிரானாலும் ஆறு காசுக்கு மேல கெடயாது. இப்பம் மீனுக்குமேல துவிவெல போவுது...” “என்னியடா நெனச்சிப் பாக்குறது? களுதப்பய மவனெ? நீ திங்கிற சோறு, உப்பு, மாதா கொடுக்கிறது? மாதா கருணயில்லேண்ணா, எத்தினி தபா வல போட்டாலும் ஒரு மயிரும் வுழுகாது” என்று மொடுதவம் கத்துகிறான். “அப்படியே, இருக்கட்டும் வச்சுக்குவம். அப்ப கோயில்காரங்க, சாதாரண மனிசங்களான நமக்கும் நாயம் பாக்கணும், துரோகமா நினைக்கக் கூடாது. யேசுநாதர் கஷ்டப்படும் மனுசங்கிட்ட இரக்கப்படணுமிண்ணுதாஞ் சொல்லியிருக்கிறாரே ஒழிய, புள்ளகுட்டி தவதண்ணிக்கில்லாம பாடு விழாம இருக்கையிலே, நாம கையில காசில்லாம இருக்கையிலே நெஞ்சில ஈரமில்லாம கோயிலுக்கும் கட்டணுமிண்டு சொல்லியிருக்கல. மாசத்தில நான் பத்து ஸ்றாபுடிக்கேன். நூறுரூவா கெடக்கக் கூடிய துவி கோயிலுக்கு அப்படியே போயிடுது. யோசனை செஞ்சி பாருங்க, ஆத்திரப்படாம, நெதானமா. இன்னிக்கு ஆவுரேஜ் தொழிலாளிங்க கடல் தொழில் செய்யிறவங்க கடன்காரனாத்தான் இருக்யான். வலைக்குச் சேதம் வந்தா, ஒரு நா மீன் பாடு இல்லேண்ணா, இவனுக்கு வட்டிக் கடன்தான் வாங்க வேணும், கடனுக்கு வட்டி கெட்டியே சீரழியுறான். பொஞ்சாதிமேல குந்துமணி தங்கமில்லாம வித்துப் போடறான். பொறவு. பொம்பிளப் பிள்ளையிருந்தா கெட்டிச் சிக்குடுக்க வழியில்லாம முழியக்யான். துவி, நமக்கு நாயமாச் சேரவேண்டிய சொத்து. வியாபாரி கொடுக்கிற வரிபோல நாமும் கொடுப்போம். ஆனா அதுக்குமேல் எல்லாமும் கொடுப்பது சரியாண்ணு கேட்டுக்குங்க...” காலம் காலமாக, பங்குக்குரு, கோயில் என்று அசைக்க இயலாததொரு நெறியாக ஊறியிருக்கும் அரணை, மதிப்பை இவன் உண்மையான அடிநிலைகளில் இருந்து அவை எழவில்லை என்று அறிவுறுத்தி அசைத்துப் பார்க்கிறான். “சர்ச்சை எதித்துப் பேசுதே, திமிர்புடிச்ச பய? அந்தக் கடல் நாச்சி இந்தக் குலத்தையே அழிக்கணுமிண்ணு நினைச்சா அழிச்சிடுவாலேய்! முன்ன, எங்க பாட்டன் காலத்தில நுப்பத்தஞ்சு மரக்கானைத் திரும்பி உயிரோடு கரைக்கு வராம செஞ்சிட்டா. முப்பத்தஞ்சு பொம்பிளைங்க தாலி கயட்டினாளுவ. பின்ன அந்தக் கரையே வேணாமிண்ணு இந்தக் கரைக்கு வந்தாளுவ. அவளுவ சந்ததி தா இந்தக் கன்னியாபுரக் கடக்கரையில. இதாம் சரித்திரம்...!” என்று செபமாலையான் சரித்திரம் கூறுகிறார். “மாமா, சரித்திரம் பாத்திட்டிருந்தா தரித்திரம் தொலஞ்சிருமா?” என்று எட்வின் கேட்கிறான். “இவனுவ நெசமாவே யேசுநாதரைச் சிநேகிக்கிறவனுகளாயிருந்தா, நம்மையும் சிநேகிக்கணும். அவுராதம் போடுவமிண்டு பயங்காட்ட மாட்டானுவ! இவுனுவ கொள்ளக் கூட்டமில்ல...” என்ற பொன் மொழிகளைப் பின்னும் உதிர்க்கிறான். “லே, என்னியலே நாஸ்திகம் பேசுதே? நாக்கழுவிப் போயிரும்லே! ஊரில, கடக்கரயில கோயிலை எதிர்த்து இல்லாத நாயம் கொண்டுவரானுவ, நாய்க்கிப் பொறந்த பயலுவ...” “ஒண்ரக்கண்ணன்பய வந்திருக்கான். இங்கிய வேணுண்டு தூண்டிவிட வந்திருக்யான்...” என்று அகுஸ்தின் ஓரமாக நிற்பவனைக் காட்டிப் பிச்சைமுத்துப்பாட்டாவிடம் கூறுகிறான். “எந்த மயிரான் வந்தா என்ன, பன்னாடைப் பயலுவ!” பாட்டா மணலில் காறி உமிழ்ந்துவிட்டுச் சுருட்டை வாயில் வைத்துக் கொள்கிறார். நீடிக்கவிட்டால் இந்தப் பேச்சுக்கள் கொலையில்கூடக் கொண்டு விட்டுவிடும். நசரேன் தம்பி ஜான் அப்போது அங்கே வருகிறான். அவன் தங்கச்சி லீஸி ஏற்கெனவே மணலில் பாட்டவினருகில் நின்று வேடிக்கை பார்க்கிறது. எட்ட மணலில் விளையாடிய குழந்தைகளும் கூட இங்கே சத்தம் கேட்டு வந்து நிற்கின்றனர். “ஜான்...? அண்ணெ வார இல்ல?...” “அண்ணெ ஊருக்குப் போயிருக்யா... ஆத்தாளும் போயிருக்கா, தெறிப்பு நிப்பாட்டியாச்சா மச்சா?” “அம்மாண்டி லேசாயிருமா? இது என்னப்பு வெட்டுப் பழி குத்துப்பழில கொண்டிட்டுவுடுமோ, ஏறூமாறுண்ணு சத்தம் போடுதா, மொடுதவமும் செபமாலை மாமனும்! ஆனா, இத்தவுடமாட்டோம்...” பெஞ்ஜமின் ஆங்காங்கு எழும் முணமுணப்புகளைப் பொருட்டாக்கவில்லை. “இப்ப கிறிஸ்தவம் எம்மாட்டோ சொல்லுது. அடுத்தவன் கஷ்டப்பட பார்க்கக் கூடாதுண்ணிருக்கு. கள்ளுக்குடிக் காண்டாமிண்ணு சொல்லுது. உம்பொஞ்சாதிய விட்டு வேறு ஒரு பொண்ணைப் பாக்காதேண்ணுது. இங்கே இருக்கிறவங்க எல்லாமே அப்படிப் பாத்தா கிறித்தவத்தில் விதிக்கப்பட்ட நாயத்தை எல்லாம் மீறுறவங்கதா. குடிச்சு வயிறு புண்ணானாலும், கடல் மேல போகலேண்ணாலும் அது இல்லாம இருக்க ஏலாது, ரொம்பப்பேருக்கு... பின்ன... இது, நம்ம கோரிக்கை நாயமான ஒண்ணு. நம்ம குடும்பங்களை நல்லபடி முன்னுக்குக் கொண்டுவர, நாம பாடுபட்டுக் கொண்டுவரும் மீன்பாட்டின் உரிமையக் கேக்குறம்... எல்லாருக்கும் உள்ள வரி வாங்கிக்கட்டும்; திருவிழா அது இதுகண்ணு கொடை குடுக்க மாட்டோமிண்ணும் சொல்லல. துவிதெறிப்பை நிப்பாட்டணும். நாம ஒத்துக்கப்படாது...” இவன் பேச்சு, அலுத்துச் சோர்ந்த இளம் உள்ளங்களுக்குச் சாரமூட்டுவது போலிருக்கிறது. ஆனால் முதியவர்களில் பிச்சை முத்துப்பாட்டாவைத் தவிர யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. “நீங்க தீருமானம் பண்ணிப் போட்டா, சாமிகிட்ட யாபாரி துவியை எடுக்க விடலேன்னு சொல்லமாட்டானா? அப்பம் சாமி அவராதம் போட்டா எப்பிடிக் கெட்ட?” “சாமியே வேணாமிண்ணு சொல்ல முடியுமா?”
* மையவாடி - இடுகாடு # அவஸ்தை பூசல் - பிராயச்சித்தம் பிச்சைமுத்துப்பாட்டா, சுருட்டைக் கையில் வைத்துக் கொண்டு மணலில் காறி உமிழ்கிறார். “அதுவுந்தாம் பார்ப்பமே? கலகம் வந்தாத்தான் நாயம் பொறக்கும். எதுமே கலங்கித்தான் தெளியும். இப்பம் கோயில் குத்தவை இருபத்தஞ்சாந்தேதி ஏலம் விடுவாங்க. நாம இதுக்கு ஒத்துக்கலே, துவித்தெறிப்புக் குடுக்க மாட்டோம். அந்தக் காலத்தில் - துவிக்கு வெலயில்ல. ஜாதித்தலவன் மாருன்னு குடுத்திட்டிருந்தாங்க வரி. பொறவு சர்ச்சுக்கு வரிண்ணாச்சி, அப்பம் கோயில் கட்டிடமொண்ணும் இப்படிக்கெல்லாமில்ல. சாமிக்கும் நாம கொடுக்க வேண்டியநிலை. இப்பம் அதெல்லாம் மாறிப்போச்சி. துவிவெல அதிகம். அதனால நாம ஒன்னிச்சி நிக்கணும். மீனை நாம ஏலம்விட்டுப் பணம் வாங்குறாப்பல துவியையும் ஏலம் விடுவோம். ஆனபடியால், இருவத்தஞ்சாந் தேதி கோயில் குத்தவைன்னு ஏலம்வுடுறத நாம நிப்பாட்டணும். ஒத்துக்கக் கூடாது. அஞ்சுமீன் தெறிப்பும் இல்ல...” “செரி... செரி...” சந்தியாகு கை தூக்குகிறான். தொடர்ந்து பத்துப் பதினைந்து ஜோடிகள்... எல்லாமே உயருகின்றன. எட்வின் கூட்டத்தை நன்றாக முடிக்க முன்வருகிறான். “இப்பம் எல்லாரும் ‘வாழ்க’ சொல்லிடுங்க. பிச்சமுத்துப் பாட்டா... வாழ்க! பெஞ்சமின் அண்ணெ... வாழ்க...!” சிறு பிள்ளைகள் கத்துகிறார்கள். மற்றவர்கள் சிரிக்கிறார்கள். ஆத்திரமாகப் பேசினாலும் நியாயம் நியாயம் என்றுதான் மொடுதவம், ஜபமாலையான் எல்லாருக்கும் உள் மனதில் உரைக்கிறது. மரியான் பெஞ்ஜமின் பக்கம் வந்து, “மச்சான், கொன்னிட்டீரு. சூரு புடிச்சிட்டுது...” என்று உற்சாகமாகத் தோளில் கை போடுகிறான். “சங்கம்னு ஒரு ஒளுங்கு முறையோட, அடுத்த ஊருக்காரங்களையும் கூட்டி நடத்தணுமிண்ணு இருக்கம் மாப்ள. இன்னக்கே ஸ்கூல் கெட்டிடம் மெனக்கிதானே. கூட்டம் வச்சுக்கலாமிண்ணு கேட்டே, சாமிக்குப் பயந்திட்டு குடுக்க மாட்டேன்னிட்டாரு வாத்தியாரு. ஸ்கிரிஸ்தான்* கிட்டப் போயிக் கேட்டேன். அவுரு உள்ளியே இருந்திட்டு இல்லேண்டு சொல்லச் சொல்லிட்டாரு... எனக்கு வுடறதில்லேண்ணாச்சி.”
* ஸ்கிரிஸ்தான் - மாதாகோயில் கணக்கன் “பலே, சவாசு. புடிச்ச காட்ல விட்டிருவம்...” என்று பிச்சை முத்துப்பாட்டா தைரியம் கூறுகிறார். அநேகமாகப் பொழுது தாழ்ந்து விட்ட அந்த விடுமுறை நாளில் கலைந்து சென்ற கூட்டத்தினர் அமலோற்பவத்தின் ‘தண்ணி’யை நினைத்துக் கொண்டுதான் அவரவர் வீட்டுக்கும் கிடைக்கும் இடத்துக்கும் நடந்தார்கள். மரியானுக்கு நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு சாமியார் வீடு, கோயிலின் மேலண்டைப் பக்கம் மேட்டுத் தெரு, என்று போகத் தோன்றுகிறது. நடக்கிறான். செபஸ்தி நாடார் கடையின் முன் ஏழெட்டுப் பேர்... வியாபாரிகள் இருக்கின்றனர். குலசைச் சாயபுவும், வட்டக்காரரும் கூடத் தெரிகின்றனர். புகை குடித்துக் கொண்டு, ஒற்றைப் பெஞ்சியில் அமர்ந்து இந்தக் கன்னிபுரம் ‘கம்மாரக்காரப்’ பயலுவளுக்கு வந்துவிட்ட துணிச்சலைப் பற்றிப் பேசுகிறார்களோ? சாமியார் வீட்டுப்பக்கம் ஈகுஞ்சில்லை. கதவடைத்துக் கிடக்கிறது. கோயிலில் மாலைப் பூசை நேரம். யார் யாரோ பெண்கள் முக்காடிட்டுக் கொண்டு செல்கின்றனர். இவள்கள் முக்காடிட்டுவிட்டால், துருக்கச்சிகள் போலவே இருக்கிறார்கள்...! கிணற்றடியில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்து தன் கந்தைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறான்... கன்னி மேரி துவக்கப் பள்ளி, சிவப்புத்தபால் பெட்டியுடன் தபாலாபீசு, எல்லாம் உறங்கிக் கிடக்கின்றன. நாலைந்து வால்கள் ஒரு ஓந்தானை அடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். பெரிய வாத்தியார் வீட்டு வாயிலில் சக்கிரிக் கிழவன் விறகு வெட்டுகிறான். இவனுக்கு ‘மெனக்கி’ இல்லையாக இருக்கும். குடிக்கக் காசு இருக்காது. மேலும் கடன் வாங்க வேலை செய்வான். இவர்கள் வாழ்வைப் பாதிக்கும் ஓர் ஏற்பாட்டை மீறுவதற்கான திட்டத்தை முடிவாக்கியிருக்கையில், எல்லாம் வழக்கம் போல்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவனுடைய கால்கள், ஏலியின் குடிசையை நாடி கடலோரத்துக்குச் செல்கின்றன. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|
அதிர்ந்த இந்தியா ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்வகைப்பாடு : வர்த்தகம் விலை: ரூ. 210.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
அந்த முகில் இந்த முகில் ஆசிரியர்: ஜெயமோகன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 240.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|