1

     தட்டில் இன்னும் நாளைந்து கவளம் இருக்கையில் வாயிற் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்கிறது. மைத்ரேயி முற்றத்துக் குறட்டில் தானே சாப்பிட உட்கார்ந்திருக்கிறாள்? வெயில் இன்னமும் சுவரேறிப் பார்க்கவில்லை. மணி இரண்டடித்திருக்காது. அவளை அந்நேரத்தில் தேடி வந்து கதவை இடிப்பவர் யாராக இருக்குமோ?

     அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டாலும் விழுங்க முடியவில்லை. அடி வயிற்றில் ஒரு உள்நாக்கு ஒட்டி, அது பழுப்பிலையாய்த் துடிப்பது போல் ஒரு அச்சம்.

     ஒருகால் தபால்காரனோ? இந்த முகவரி யாருக்குமே தெரியாதே? கதவு தட் தட்டென்று பொறுமை குலைய ஓசைப்படுகிறது. மீதியுள்ள சோற்றோடு தட்டைச் சுவர் மறைவில் வைத்துவிட்டு பரபரப்புடன் வாளி நீரை எடுத்துக் கையைக் கழுவிக் கொள்கிறாள். பிறகு கையைத் துடைத்துக் கொண்டு கதவுத் தாழை மெள்ள நீக்குகிறாள்.


மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

கிழிபடும் காவி அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

கம்பா நதி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

Who Will Cry When You Die?
Stock Available
ரூ.250.00
Buy

கரும்புனல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

வாரன் பஃபட் : பணக் கடவுள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

மாயான் : ஹூலியோ கொர்த்தஸார்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

ஆரோக்கியமே அடித்தளம்!
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

ஜெயமோகன் குறுநாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

உலகத்துச் சிறந்த நாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உப்பு நாய்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

யானைகளின் வருகை
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

கால் முளைத்த கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இதிகாசம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இனப் படுகொலைகள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ஆதி இந்தியர்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy
     சினிமாக் காட்சிகளில் அதிர்ச்சியைக் குறிக்க ‘பாங்!’ என்று பேரோசைப் பின்னணியைத் தோற்றுவிப்பார்கள். அத்தகைய பேரோசையில் செவிகள் மூழ்கி ஊமையாகின்றன. கண்கள் நிலைக்கின்றன.

     மறுகணம் மைத்ரேயி தலைகுனிய, பின்னே நகர்ந்து கொள்கிறாள். மாமா அந்த வாயிலையே அடைத்துக் கொண்டாற் போல் நிற்கிறார்.

     வாரி முடித்த குடுமி, பஸ்ஸில் வந்ததனால் பிரிந்து பளபளப்பை இழந்திருக்கிறது. செவியில் பழைய நாளைய சிவப்புக் கடுக்கன் தொங்குகிறது. உளி பிடித்துச் செதுக்கினாற் போன்ற முக்கு. தட்டுச் சுற்று வேட்டிக்கு மேல் அந்தப் பருத்த உடலுக்கும் தொள தொளப்பாகத் தொய்யும் ஒரு வெள்ளைச் சட்டை. அவளுடைய பார்வை சட்டென்று மறுபடியும் நிலத்துக்கு இறங்குகிறது. அவரும் அவளை அப்படித் தலையோடு கால் பார்த்திருப்பார்.

     “வாங்கோ மாமா” என்று சொல்லக் கூட நாவெழாமல் நகர்ந்து வழிகாட்டும் அவளை மறுபேச்சே எழாமல் பார்ப்பதை அவள் அறியாதவள் போல் தலைகுனிய நிற்கிறாள். எங்கோ பனங்காட்டின் நடுவே, ஊரோடு ஒட்டாமல், இப்படிக் குடும்பத்தை விட்டு ஓடி வந்தவளுக்கென்று முளைத்தாற் போல் இருக்கும் ஓர் பாழடைந்த ஓட்டுக் குடிசை. செங்கற்தளம் மண்பறியக் கால்களில் ஒட்டுகிறது. ஆறடி ஐந்தடி ரேழியைக் கடந்தால் ஒட்டுத் தாழ்வரை முற்றம். தாழ்வரையில் குறுஞ்சுவர். பகுதி சமையலறை, பின்புறம் விரிசல் விழுந்த கிழவியின் முகத்தைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்துக் கீறல் விழுந்து சிதிலமான கதவு.

     தாழ்வரையின் ஓரத்தில் இரண்டு பாய்ச் சுருட்டுக்கள் இருக்கின்றன. ஒரு தகரப்பெட்டி. கொடியில் ஒரு வாயில் புடவை, பாவாடை, ரவிக்கை உட்கச்சு எல்லாம் காய்ந்து கொண்டிருக்கின்றன. நரிக்குறத்தியின் தலையைப் போல் பிறந்ததற்குப் பிறகு வெள்ளைக் குளி காணாத சுவரில் ஒரு எட்டணாக் கண்ணாடி தொங்குகிறது. முக்கோணப் புரையில் ஒரு குடிகூராப் பவுடர். ஹாஸலைன் ஸ்னோ சிப்பு வகையறா தெரிகின்றன. அட்டையில்லாத தொடர்கதைப் பகுதிகள் போல் ஐந்தாறு புத்தக அடுக்கு பெட்டிக்குப் பக்கத்தில் அவளுடைய பொழுதுபோக்கை விளக்குகின்றன. முற்றத்து வாளி புதியது. தகர டப்பாக் குவளை.

     முற்றத்துத் தூணோடு சாய்ந்தாற் போல் அவள் நிற்கிறாள்.

     “... ம் ... இப்படியாய்ப் போச்சா?”

     அவரை உட்கருங்கள் என்று சொல்ல அவளுக்கு நா எழவில்லை.

     இவர் எப்படி இங்கே தேடிக் கொண்டு வந்தார்? எதற்கு வந்தார்? ஒரு பூ அடுக்கிலிருந்து ஓர் இதழ் விடுபட்டு வந்த பின் அங்கே போய் மறுபடி உறவு கொண்டாடிக் கொள்ள என்ன இருக்கிறது?

     “அவன் எப்ப வருவான்?”

     இந்தக் கேள்விகள் அவளுக்குத் துயரம் துருத்திக் கொண்டு எழும்புகிறது. தலை நிமிராமலே நிலத்தில் கோலமிடுகிறாள்.

     “ஏம்மா, என்ன வெட்கம் இப்ப? நடந்தது நடந்தாச்சு. எப்படியோ நீ சந்தோஷமா இருக்கேன்னா சரிதான்.”

     தரையில் இரண்டு முத்துக்கள் சிந்தி விடுகின்றன.

     “ஏம்மா? அடாடா எதுக்கு அழறே?”

     நன்றாகப் பார்க்க முடியாதபடி, ஆனால் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாதபடி அவ்வளவு அருகாமையில் அவர் வந்து நிற்கிறார். வைகாசி மாசத்து வெயில் திடீரென்று இருள, ஊமைப் புழுக்கமாய் உருக்குகிறது.

     “நான் அழலியே?”

     “கோர்ட்டு காரியமா வந்தேன். இப்படீன்னு தஞ்சாவூர்ல சுமதி கதை கதையாச் சொன்னால். நான் மாம்பாக்கம் போகலே. நேரே இங்கேதான் வந்தேன். இப்ப என்ன குடி முழுகிப் போச்சு? என்ன குடி முழுகிப் போச்சுன்னு கேட்டேன். ஏம்மா, நான் கேட்டது சரிதானே?”

     அழுகைதான் அடக்கமுடியாமல் வருகிறது. என்ன சொல்வது?

     “எனக்கு இதில் சந்தோஷம் தான். அவ உங்களுக்கெல்லாம் துரோகம் பண்ணிருக்கா. நீயே நினைச்சுப்பாரு? அந்த வீடு உங்கப்பா வெள்ளைக்காரன் கம்பெனியில் இருந்த நாளில் அந்தப் பாணியில் கட்டினது. தோப்பு, வயல், மிஷின் வச்ச துறவுக் கிணறு, எல்லாமா, எங்கக்காக்கு வாழக் குடுத்து வைக்கலே. ஆனால் அவள் வயித்துப் பெண்ணே மத்ததுகளுக்கு வஞ்சகம் பண்ணும்னு நான் நினைக்கலே; சுமதிய முந்தாநாள் கூடத் தஞ்சாவூரில் பாக்கறச்சே நினைச்சிண்டேன். கழுத்து மட்டு சம்சாரம். பிடுங்கல். முக்கி முக்கி நூத்தம்பது ரூபாய் வராத ஒரு வாத்தியார் வேலை அவனுக்கு. அஞ்சு குழந்தைகள். சாப்பாட்டுக்கே வராத தரித்திரம். ரஞ்சிக்கு மட்டும் என்ன? இளையாளைப் போல வயசு வித்தியாசத்தில் கொண்டுக் கட்டியிருக்கா. மூணு குழந்தையாச்சு, அவனுக்கும் மட்டுச் சம்பளம். பெங்களூரில் ரேஸ், தண்ணி எல்லாம் இருக்கு. நீங்களெல்லாரும் அழகில் குறைச்சலா, புத்திசாலித்தனம் தான் குறைச்சலா?... எச்சுமு கூடச் சொல்லுவா. சிவப்புன்னா சிலது சந்தனக் குழம்பா இருக்கும். சிலது எலுமிச்சை மஞ்சளா இருக்கும். ரோஜா, சந்தனம், எலுமிச்சை எல்லாம் கலந்த ஒண்ணும் தூக்காத கலர் மைத்ரேயிக்குன்னு. உங்கப்பாவின் நிமிர்ந்த களை உனக்குத்தான் அப்படியே வந்திருக்கு. இப்ப என்ன குறைஞ்சு போச்சு?...” மாமா ஒரு மூச்சு பேசி முடித்து விட்டு ஒரு நிதானத்துக்கு வருகிறார்.

     மெல்லிய புன்னகை இதழ்களில் விளையாடுகிறது.

     “இப்ப எங்கே, எந்த படத்துக்குப் பாட்டெழுதறார்மா?”

     “இப்ப ஒண்ணும் எழுதலே. ஆனா சான்ஸ் உடனேயே வரும்னார்...” இப்போது அவளுக்குத் தலைநிமிர்ந்து சொல்லக் கூச்சம் தெளியவில்லை.

     “இந்தக் காலத்தில் சினிமால லைட்பாய்னாக் கூட மதிப்பாத்தான் இருக்கு. கவிஞன். யாரு கண்டா? உன்னை அடுத்த தடவை பங்களா கார்னு பார்ப்பேனாக இருக்கும்.”

     அவளுக்கு முகம் சிவக்கிறது.

     “நின்னுண்டே பேசறேளே மாமா, உக்காருங்கோ...”

     சருகுகளெல்லாம் பஞ்சுப் பிசிறுகளாக எழும்பிச் செல்கின்றன. உணர்ச்சிகள் இலேசாகின்றன.

     “நீங்க எப்ப புறப்பட்டு எப்படி இங்கே கண்டு பிடிச்சிண்டு வந்தேள் மாமா?”

     “சைதாப்பேட்டையில் போயி வக்கீலைப் பார்த்தேன். நேசமுடையாரை நெஞ்சில் நினைச்சாலே நேரில் பார்க்கலாம்னு சொல்லுவா. அப்படித்தான் ஆச்சு. வக்கீல் வீட்டில சோஷியல் வொர்க்கர் லோகநாயகி அம்மா வந்திருந்தா. அவ ஏதோ அநாதாசிரமத்துக் கேசு விஷயமாகத்தான் பேசினா. சினிமான்னு ஆசைப்பட்டு வெளியூர்லேந்து கபடு தெரியாத பெண்கள் ஓடி வந்து ஏமாந்து போறதுன்னெல்லாம் சொல்லிண்டிருக்கச்சே, வக்கீல் சொன்னார்: இப்படி இந்தப் பக்கம் கூட சினிமாக்குப் பாட்டெழுதும் ஒருத்தன் ஒரு பிராமனப் பெண்ணைக் கலியாணம் பண்ணிண்டிருக்கிறான்னு... எனக்கு சுருக்குனு தச்சது. விசாரிச்சுண்டு பஸ்ஸைப் பிடிச்சு வந்தேன். அவன் காலம்பரவே போயிடுவனா?”

     “இல்லே, இன்னிக்கு புதுப்படம் விஷயமா யாரோ வரச் சொல்லியிருக்கார்னு காலமே போயிட்டார்.”

     “கவியெல்லாம் ஒரு கிஃப்ட், நீ இப்படித் துணிஞ்சு கல்யாணம் செஞ்சிண்டிருக்காத போனா, அவ இன்னும் எங்கியானும் லேவடியாக் கொண்டு தள்ளிருப்ப. சாதி சனம் என்ன வேண்டியிருக்கு, ஒண்ணு வாழ்ந்தா ஒண்ணு பொறுக்கல... இவன், ஏம்மா முதலியாரோ, பிள்ளையோ?”

     “அதெல்லாம் சொல்லிக்கிறதில்லே... இருங்கோ மாமா, இத வந்துட்டேன்...” என்று சமையலறை மறைவுக்கு வருகிறாள். மாமாவுக்குக் காபி போட்டுக் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பண்ணை வீட்டில் ‘காரியம்’ பார்க்கும் மாமாவின் வீட்டில் பசுவும் எருமையும் கலந்து புதிய பாலில் காபி போடுவார்கள். இந்தப் புதிய மணவாழ்வில் வெறும் அன்பையே காபி, டிபன் உல்லாசங்கள் என்று எண்ணி இருக்க வேண்டிய நிலையில் உபசரிப்பு ஆசையை எப்படி நிறைவேற்றப் போகிறாள்? பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து கத்திரிக்கோலினால் வெட்டி எறிந்தாற் போன்று துண்டாடப்பட்டு அவள் வந்த பிறகு, சிறகெல்லாம் ஒடிந்த நிலையில் உறவின் இன்ப ஈரங்களெல்லாம் வற்றிக் கிடக்கும் நிலையில் அபூர்வமாக ஒரு ஈரம் பொசியும் ஊற்றுக் கண்ணாய், உறவுக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் தாய் மாமன். அவருக்கு இனிப்பும் காரமும் காபியும் கொடுத்து உபசரிக்க ஆசை.

     “சித்த இருங்கோ மாமா, பால் கறந்திருப்பா தோட்டத்தில், வாங்கிண்டு வந்துடறேன்...”

     அவர் முகத்தையே பார்க்காமல் கூறிவிட்டு அவள் பின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருகிறாள்.

     பசுமையே அற்றுப் போனாற் போன்ற நெட்டைப் பனை மரங்கள்; குட்டிச்சுவர்கள்; குற்றிச் செடிகளுக்கு இடையே பாம்பு இருக்குமோ, கரையான்கள் தாமோ என்று விளங்காத புற்றுகள்.

     ‘ஓ’வென்று நெஞ்சு துயரத்தைப் பிழிகிறது.

     உடனே “சீ என்ன அசட்டுத்தனம்?” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

     இந்த வீட்டை விட்டு மாலை நேரங்களில் சினிமாவுக்கோ, கடைவீதிக்கோ என்றேனும் சென்ற போதும் கூட அவனுடன் தான் சென்றிருக்கிறாள். மாம்பாக்கத்தையும், இந்தச் சாவடிக்குப்பத்தையும் பட்டணத்திலிருந்து வரும் நேர்ச்சாலை இணைக்காது போனாலும், இரண்டும் கண்டம் விட்டு கண்டம் அல்லவே? அவளுக்கு வெளியே இறங்கவே கூச்சம் போகவில்லை. அருகில் உள்ள மொட்டைக் கிணற்றிலிருந்து அதிகாலையிலே நீர் கொண்டு வந்துவிடுவாள். எத்தனையோ நாட்களில் அவன் காலையில் வெளியே சென்று, இரவு எட்டுக்கும் எட்டரைக்கும் வந்திருக்கிறான். பகல் முழுவதும் சடேரென்று ஒரு தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுத் திருப்பம் கண்ட வாழ்வின் புரியாத எதிர்காலத்தை எண்ணிக் கோலங்களை இட்டு இட்டுக் கலைப்பதும், படித்த குப்பைகளையே படிப்பதுமாக ஓர் இருண்ட சிறைக்குள் காலம் கழித்திருக்கிறாளே ஒழிய, கதவைத் திறந்து பார்த்ததில்லை. சற்று அப்பாலுள்ள பள்ளிக்கூடத்துப் பையன்களின் கலகலப்புக் கேட்கும். சில போக்கிரிப் பையன்கள் முற்றத்தில் ஓட்டில் வந்து விழக் கல்லெறிந்தது கூட உண்டு.

     வெளியே நின்று சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கிறாள் மைத்ரேயி. மாமா உள்ளே உட்கார்ந்திருக்கிறாரே? ஐயோ!

     கையிலே நாலணாக்காசு கிடையாது, ரவை இல்லை. சர்க்கரை இல்லை. நெய், முந்திரிப்பருப்பு ஒன்றுமில்லை; சொஜ்ஜி கிளறும் ஆசைதான் அவலமாய் நிற்கிறது.

     இந்திரா கபேயில் ஒரு ஸ்வீட், காரம் காப்பி கிடைக்கும். வாங்கி வந்து மாமாவை உபசரிக்கலாம்.

     ஆனால் அந்தக் கடையில் ஏற்கெனவே அவர்கள் கணக்கில் பதினான்கு ரூபாய் கடன் நிற்கிறது. வீட்டில் இருப்பதைக் கொண்டு என்ன செய்யலாம்? அரைப்படி அரிசி, கடுகு, வெந்தயம், ஒரு புளிக்குழம்பு செய்யும் அற்பப் பொருள்கள். காயும் பருப்பும் சேர்ந்து நல்ல சமையல் செய்து நான்கு நாட்களாகின்றன.

     இடை இடையே மாமா உள்ளே உட்கார்ந்திருக்கும் உணர்வு பளீர்பளிரென்று மின் அதிர்ச்சி கொடுப்பது போல் உறைக்க, அவள் பெரிய சாலையை நோக்கி நடக்கிறாள்.

     பெரிய சாலையில் பச்சைக் கண்ணாடிகளும் படாடோபமான திரைகளுமாக விளங்கும் ஓட்டல் இந்திரா கபேதான், ஒரு பெரிய நகரை அடுத்த இரண்டுங்கெட்டான் ஊர்க் கடைவீதிக்கே உரித்தான மூன்றாந்தர ஓட்டல். அந்தப் பச்சையும் நீலமுமான திரைகள் தொங்கும் மாடியறையில் தான் அவர்கள் முதலிரவையும் பின்னும் சில இரவுகளையும் அனுபவித்தார்கள். பொழுது விடியாத, உறக்கம் தெளியாத, கனவு கலையாத மயக்கத்துக்கு அது சுவர்க்கத்து அனுபவமாக இருந்தது; பெரிய சாதனையைச் சாதித்த பெருமிதமாக இருந்தது; குன்றேறி நின்ற கர்வத்தை முகத்திலும் உடலிலும் பூசியது. இப்போது...

     பிற்பகல், கெடுபிடியில்லாத நேரம். சருகு இலைகளில் சாப்பிடும் இரண்டு கிராமத்தார்களைத் தவிரக் கூட்டம் இல்லை. முன்சீப் கோர்ட்டுக்கு வந்த கும்பல் ஒன்று உரத்துப் பேசிக் கொண்டு தோசைக்காகக் காத்திருக்கிறது.

     முதலாளி சிவந்த நிறமுடைய இளைஞன் தான். ஆனாலும் உட்கார்ந்து ஊட்டம் பெற்ற தொந்தியும் சிலும்பிக் கொண்டு நிற்கும் கிராப்பும், வெண்பட்டையில் பளிச்சிடும் குங்குமமும் பட்டாகச் சிவந்த வெற்றிலை உதடுகளும் வயசை நடுத்தரத்துக்குக் கொண்டு போயிருக்கின்றன. அவளும் அவனுமாக எதிர்ப்பட்டால் சிரித்து உபசாரம் செய்வான். இந்த ஓட்டல்காரன், தான் பிறந்த குலத்தில் பிறந்திருக்கிறான் என்ற உணர்வு அவளுள் உறுத்த, நாணமும் குற்ற உணர்வும் அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தடுத்திருக்கின்றன.

     முதன்முதலாக அந்த ஓட்டல் படியேறி வந்தது அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிரே இருந்த கண்ணாடியில் இருவர் உருவங்களும் தெரிந்தன. அவன் கறுப்பு. ஆனால் முடி அழகாகச் சுருண்டு சுருண்டு முன் நெற்றியில் விழும். ராட்சஸ வாளிப்பு இல்லை. அவளுடைய உயரம் தான். ஆனால் அவன் சிரித்த போது, முதன் முதலாக அவளை விழுங்கி விடும் நோக்கில் பார்த்த போது...

     “அடாடா... என்னம்மா, தனியா...? யாரிட்டானும் சொல்லி அனுப்பினால் பையங்கிட்டக் குடுத்து அனுப்ப மாட்டேனா?”

     “இல்லீங்க... (அவள் இப்போதெல்லாம் பேச்சுப் பழக்கத்தில் கூட சாதி தெரியக்கூடாது என்று மறைக்கிறாள்.) யாருமில்ல. திடீர்னு ஒரு சிநேகிதி பார்க்க வந்திருக்கா. ரெண்டு ஸ்வீட், மிக்ஸ்சர் பொட்டலம், காப்பி...”

     “ஓ, அதுக்கென்ன, நான் பையன்கிட்ட அனுப்பி வைக்கிறேன். பையா...?” என்று மணியை அடிக்கிறான்.

     ஓர் அழுக்குச் சராய்ப்பையன் வந்து நிற்கிறான்.

     “ஸ்வீட் என்ன வேண்டும்? ஜாங்கிரி இருக்கு; ரவா லாடு இருக்கு...”

     “ஜாங்கிரியே இருக்கட்டுமே? கணக்கில் எழுதிக்குங்க...”

     மென்மையான உணர்வில் ஆயிரம் ஊசிகள் தைக்கின்றன.

     “ரெண்டு ஜாங்கிரி, மிக்ஸ்சர் பொட்டலம், ரெண்டு ஸ்பெஷல் காப்பி எடுத்திட்டுபோ...”

     அவனை ஏறிட்டுப் பார்க்க இயலாமல், நன்றி என்று கூடச் சொல்லக் கூனிக் குறுகி, அவள் திரும்புகிறாள்.

     “இந்த பொண்ணு, பிராமணப் பொண்ணு. இப்படி ஒரு சேர்க்கையுடன் வந்து...” என்று நினைப்பானோ என்று இன்று தான் தோன்றுகிறது. பின்னே நெடுஞ்சாலையில் ஓட்டல் பையன் காப்பித் தம்ளர் பொட்டலங்களுடன் புள்ளி போல் தொடருகிறான். வீடு திரும்புமுன் பொட்டலங்களையும் காப்பிக் கிளாசுகளையும் தன் கையில் வாங்கிக் கொண்டு பின் புறமாகவே கதவைத் தள்ளிக் கொண்டு நுழைகிறாள். மாமா அடுக்குத் தொடர் கதையில் ஒன்றைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் விருவிரென்று குறுஞ்சுவருக்குப் பின் புகுந்து காப்பியைத் தன் டம்ளர்களில் கொட்டிக் கொண்டு, ஓட்டல் பையனிடம் அந்த டம்ளர்களைக் கொடுத்து அனுப்புகிறாள். ஜாங்கிரி புதிதல்ல. ஒன்றில் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டுக் கொள்கிறாள். மிக்ஸ்சருக்குப் பதிலாகப் பகோடா வாங்கியிருக்கலாமோ? ஆனால் ஏகாதசி அமாவாசை ஏதேனுமாக இருந்தால் மாமா வெங்காயம் சாப்பிடமாட்டார். கொண்டு வைக்கத் தட்டு இல்லை. சோற்று வட்டையில் மூடும் அலுமினியத் தட்டில் அவற்றை வைத்துக் கொண்டு வருகிறாள்.

     “அடேடே, என்னத்துக்கம்மா இதெல்லாம், நீயே ஓட்டல்ல வாங்கிண்டு...”

     “பரவாயில்ல மாமா, பாலுக்குப் போனேன். கறக்கிறவனில்லையாம். அப்படியே நாலெட்டு போய் வாங்கி வந்திட்டேன். முத முதல்ல நீங்க வந்திருக்கேள் மாமா.”

     “அசடு, இப்ப எதுக்கு, கண்கலங்கறே? முதல்ல அப்படித் தான் இருக்கும். பின்னே தானே வந்து சொந்தம் கொண்டாடறாளா இல்லையா, பாரு! இவாளை விட, அக்னி ஹோத்ரம் பண்ணினவா குடும்பங்களிலெல்லாம் பிள்ளைகள் சீமையில் போய் எந்தக் கழிசடையையேனும் சம்பந்தம் பண்ணிண்டு வந்து, சொத்துக் கிடையாது, பத்துக் கிடையாதுன்னு குதிச்சவாள்ளாம் இப்ப கொஞ்சிக் குலாவறா. அந்தக் கருமம், பொண்ணாப் பிறந்தது, சமையலுள்ள வந்து சிகரெட்டை ஊதறது. இவா விழுந்து விழுந்து உபசாரம் பண்றா...!”

     “உங்க பண்ணை வீட்டிலா, மாமா?”

     “எல்லாம் இந்தக் கண்ணால எத்தனையோ பார்த்தாச்சு. பிராமண ஜாதியிலே பிராமணத்துவம் எங்கே இருக்கு? பணத்துக்காக எல்லா ஆசாரத்தையும் விட்டவாதான் அதிகம். நீ எதுக்கு அழறே, அசடு?”

     “அழலே மாமா, நீங்க வந்தது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு.” நெஞ்சம் தழுதழுத்துக் குழம்புகிறாள். “மாமா, உங்களை நமஸ்காரம் பண்ண மறந்துட்டேனே? அப்படியே நில்லுங்கோ...” என்று விழுந்து பணிகிறாள்.

     “தீர்க்க சுமங்கலியா, அமோகமா வாழ்ந்திண்டிரம்மா. ரெண்டு பேரான்னா பண்ணணும்?”

     தடைப்பட்ட நீர் கரகரவென்று கன்னங்களை நனைக்கிறது.

     “காப்பி ஆறிப் போறது. சாப்பிடுங்கோ மாமா.”

     “இந்தா, நீ சாப்பிடு...”

     “எனக்கு இருக்கு மாமா, இப்பத்தான் நான் சாதமே சாப்பிட்டேன். இங்கே இருப்பு நிலையில்லே. கோயமுத்தூர் ஸ்டூடியோவில் புதுப் படத்துக்குப் பாட்டு எழுதப் போறதா இருக்கார். அதனால, இப்படி சாமான் சட்டெல்லாம் இல்லாம இருக்கோம்.”

     “அதுக்கென்னம்மா? ஓட்டல்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு ஹாயா இருக்கற காலம் தானே இப்ப?...” என்று சிரிக்கிறார். ஜாங்கிரியையும் மிக்ஸ்சரையும் மாறி மாறி ரசித்துச் சாப்பிடுகிறார்.

     “மாமி சௌக்கியமா, மாமா? சுந்து எப்படி இருக்கிறான்? பிரேமா இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.ஸியா?”

     “எங்கே? போன வருஷம் பரிட்சை சமயத்திலே டைபாயிடாப் படுத்துண்டு தங்கிட்டாளே? உன் மாமிக்குத் தான் ப்ளட் பிரஷர். மட்றாஸுக்கு வந்து வைத்தியம் பண்ணிக்கணும்னு சொல்லிண்டிருக்கா. அடுத்த மாசம் மறுபடியும் கோர்ட்டுக் காரியமா வரச்சே அவளையும் கூட்டிண்டு வந்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டணும்...”

     அந்தக் கணத்தில் மாமியை அழைத்து வந்து விடுவாரோ என்ற திகில் கவ்வுகிறது. “அதான். இன்னிக்கே ஒரு கால் கிளம்ப வேண்டி இருந்தாலும் இருக்கும்னு சொல்லிட்டுத்தான் போனார்...” என்று முன்னணை போட்டு வைக்கிறாள்.

     “ஏதோ இருக்கட்டும். நீதான் அமோகமாக இருக்கப் போறே...” என்று சொல்லிக் கொண்டே மாமா எழுந்து சென்று வாளி நீரில் கை கழுவிக் கொண்டு காப்பி குடிக்கிறார். பிறகு மடியிலிருந்து வெற்றிலை பாக்கு சீவல் டப்பாவை எடுத்து வெற்றிலை போட்டுக் கொள்கிறார்.

     அவளுக்கு, அவர் எழுந்து போகவேண்டுமே என்று இருக்கிறது. தான் உட்காராமலேயே நிற்கிறாள்.

     “அப்ப உங்கக்கா, உனக்கு ஒண்ணுமே கொடுக்கலியா?”

     கொடுப்பதா? அக்கா என்ன கொடுத்தாள் அவளுக்கு? புடவைத் தலைப்பைக் கைவிரலில் முறுக்கிக் கொண்டு குற்றவாளியாக நின்ற அவளுக்கு என்ன கொடுத்தாள் அக்கா? அவள் காலடியில் அவளுடைய இரண்டு பாவாடை தாவணி, புடவை ஒன்றும் கொண்ட துணி மூட்டை வந்து விழுந்தது.

     வாயிற்படியில் கனலை உமிழும் துர்க்கையாக அக்கா கனகம் நின்றாள்.

     “எங்கே வேணாப் போய்ச் சந்தி சிரி. வீட்டுப்படி ஏறக் கூடாது இனிமே!”

     துணிமூட்டையை எடுத்துச் சென்று மரத்தடியில் நின்று பிரித்துப் பார்த்தாள். அவளுடைய பழைய பாவாடைகள். புதிய ‘பிங்க்’ சோலியும் ஜார்ஜெட் புடவையும் எங்கே?

     திரும்பி வந்து அவள் அதைக் கேட்டாள்.

     “ஜார்ஜெட் புடவையா? போய்க் கட்டிக்கப் போறியா, அந்த நல்லாம்டயானை வாங்கித் தரச் சொல்லு!” என்று சீறினாள். அந்த மூட்டையை அப்படியே கொண்டு நடக்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. மிகப் பழைய பாவாடை தாவணியைப் போட்டுவிட்டு சேலையையும் உள்பாவாடை ரவிக்கைகளையும் மட்டும் மடித்துச் சுருட்டிக் கொண்டு அந்த வாயிலைக் கடந்து வந்தாள்.

     “ஒண்ணுமே தரலே? உங்கம்மாவின் சங்கிலியில் உனக்கு ஒத்தவரியும் ஒரு ஜோடி வளையலும் இருக்குமே? பட்டுப் புடவையில் இரண்டு கூட உன் பங்குக்கு வரணுமேடி? அப்புறம் வயிரத்தோட்டில் பிரிச்ச கல்லு? காது மூக்கு மூளியா, கையில் கழுத்தில், ஒண்ணுமில்லாம, வெறும் கருமணி மாலையும் கண்ணாடி வளையலுமா நிக்கிறியே?”

     “அதெல்லாம் எதுக்கு மாமா இப்ப? நீங்க சித்தமுன்ன சொன்னாப்போல, எனக்கு நல்ல காலம் வரச்சே, நானே எல்லாம் வாங்கிப் போட்டுக்கறேன்.”

     “அதுக்காக? கல்யாணம்னு பண்ணிக் குடுத்தா உன் பங்குக்குப் பத்தாயிரம் செலவழிக்க வேண்டாமா?”

     “...”

     “அதை நீ கேக்கலியா?”

     “அதைக் கேட்க எனக்கு வாயில்லையே மாமா?”

     “அடி அசடு? உங்கப்பா, கட்டின பொண்டாட்டியையும் பெண் குழந்தைகளையும் விட்டுட்டுக் கடைசி காலத்திலே எவளையோ புடிச்சிண்டு ரெண்டு லட்சம் ஆஸ்தியையும் அவளுக்குத் தாரை வார்த்துட்டுப் போனப்ப, கம்பெனி டைரக்டரெல்லாம் சேர்ந்து இரக்கப்பட்டு அஞ்சும் பத்துமா அறியாமல் நின்ன உங்க மூணு பேருக்கு மட்டும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்யாணத்துக்குன்னு கொடுத்தாளே, அதை நீ கேட்க வேண்டாமா?”

     மைத்ரேயிக்கு இது கேட்காத புதுமையாக இருக்கிறது.

     அவளுக்குத் தாயாகும் வயசுக்கு மூத்த அக்கா, அம்மையையும் அப்பனையும் துடைத்து வாயில் போட்டுக் கொண்டதற்காக அவளைத் திட்டிக் கொட்டித்தான் அறிந்திருக்கிறாள்.

     “அதெல்லாம் எனக்குத் தெரியாது, மாமா...”

     “தெரியாதா? அவா ரெண்டு பேருக்கும் தான் அந்தப் பணத்தைச் செலவழிச்சு நல்ல இடமாகப் பார்க்காமல் வஞ்சகம் செய்தாள். உன் பங்கு முழுசுமே விட்டுவிடுவதா? அடி அசடு! உன்னோட அவன் கிட்டச் சொல்லி கேஸ் போடச் சொல்லு!...”

     “சரி, மாமா...”

     “கூடப் பிறந்த பிறப்புக்கே துரோகம் செய்யத் தோணுமா? நான் அன்னிக்கே உங்களை எல்லாம் இவகிட்ட காட்டிக் குடுக்காம கூட்டிண்டு போயிருப்பேன். எங்கிட்ட வந்திருந்தா இப்படி எல்லாமா நேரும்? ஒருத்தொருத்தியையும் டாக்டர்னும் இன்ஜினீயர்ர்னும் கட்டிக் குடுத்திருக்க மாட்டேனா? அம்மாவும் அப்பாவும் போனாலும், இப்படி ஒரு துரதிர்ஷ்டம் அக்கா ரூபத்திலே வருமா? அந்தக் காலத்தில் முதல்ல இவளை அத்தை பிள்ளைக்கே குடுத்து, கொஞ்சச் சீராகவா செஞ்சா? உன் அத்தை பெரிய லங்கிணி. உன் அப்பா கை நிறைய தங்கமாச் சம்பாதிச்ச காலம் எனக்குத் தெரியும். அத்தனையும் அவதான் அமுக்கிண்டா...”

     இதெல்லாம் மைத்ரேயிக்கு இப்போது கேட்கப் பிடிக்கவில்லை.

     “போனால் போகட்டுமே, மாமா. அக்காதானே? அவளுக்கு எங்களை விட்டால் வேறு யாரிருக்கா? குழந்தை கூட இல்லையே?”

     “இவளுக்கு இல்லாட்டா என்ன? அந்த டில்லிக்காரன் வாரிசெல்லாம் கொண்டு போகும். அவா வந்து குலா வலியா?”

     “போயிட்டுப் போறா மாமா, எனக்கு அவாளாக் கொடுக்காதது வேண்டாமே?”

     அவர் அங்கிருந்து எழுந்து போனால் போதும் என்றிருக்கிறது.

     “இப்படி எதுக்கு விடணும்? நீ கடைசி. ஏதோ வயதுக் கோளாறு. நடந்திடுத்துன்னு பார்க்காமல் அடிச்சு விரட்டியிருக்கா. உன் பங்கை ஏன் விடணும்? கேஸ் போடச் சொல்லு!”

     “சரி, சொல்றேன் மாமா...”

     “நானே, வந்தான்னா இருந்து சொல்லிட்டுப் போவேன்...”

     “நானே சொல்லிடறேன் மாமா...”

     காற்றுக்குச் சறுகிலைகள் விர்ரென்று சுழலுவது போல் மனசுக்குள் தோன்றுகிறது. பொடிப்பொடியாக நொறுங்க, தென்னந் துடைப்பத்தின் சந்துகளிடையே சேர்ந்து குப்பையாய் குவிந்து ஒதுங்கும் தோற்றம்.

     ஏனிப்படிச் சருகிலேயே காட்சிகளில் தெரிகின்றன?

     அவன் புதிய படக் கம்பெனியில் பாட்டெழுதி, நூறும் ஆயிரமுமாகச் செக்குகளாகவே கொண்டு வர, காரில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் பறக்க, பட்டும் வயிரமும் பச்சையும் மேனியில் மினுமினுக்க, அறுசுவை உண்டியுடன் பாலும் பழமும் உண்டு குளுமையாகச் சிரிக்க... ஏன் அத்தகைய கற்பனைகள் தோன்றவில்லை?

     “அப்ப... நான் வரட்டுமாம்மா? நாலு மணிக்குப் பஸ்ன்னான்...” எங்கே என்று கூட அவள் கேட்காமல் “சரி மாமா...” என்று விடை கொடுக்கிறாள்.

     “மாம்பாக்கம் போகலாமா, நேரே ராத்திரி போட்மெயிலுக்குப் போயிடலாமான்னு பார்க்கறேன்... அப்ப, கோயமுத்தூர் போனதும் கடிதாசி போடறியா?”

     “சரி, மாமா...”

     “அட்ரஸ் தெரியுமோல்லியோ?”

     மாமா சிரித்துக் கொண்டு கேட்கிறார். “தெரியும் தெரியும்...” என்று தலையை ஆட்டிவிட்டு அவருக்கு விடை கொடுக்கிறாள்.ரோஜா இதழ்கள் : முன்னுரை 1 2 3சமகால இலக்கியம்

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


உடம்பு சரியில்லையா?

ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு : மருத்துவம்
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உடலுக்கு நேரக்கூடிய பலவித பாதிப்புகளையும், நோய்களையும் எளிய முறையில் இந்த நூல் உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன பிரச்னைக்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்பதை ஒரு டாக்டர் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் அந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவதுடன், அவற்றைத் தடுக்கவும், தவிர்க்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நூலில் அறியலாம். மிக முன்னேறிய தொழில்நுட்பக் கருவிகள் மருத்துவ உலகில் அறிமுகமாகி வருகின்றன. சந்தோஷம். என்றாலும் உடல் பாதிப்புகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவற்றைத் தீர்ப்பதிலும் ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் என் மனதில் உள்ளது. ஆயுளை அதிகரிக்க முடிகிறது. ஆனால் அப்படி ஆயுளை அதிகரித்துக் கொள்ளும்போது உயிர்ப்புடன் வாழ முடிகிறதா? இந்தச் சூழலில் நம்மை நாமே அறிந்து கொள்வதும் முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்பதும் மிக அவசியம். அதற்கு உதவும் ஒரு பாதையே இந்த நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)