25 அந்த ஆட்டோவுக்குள், மேலும் நான்குபேர் தங்களை திணித்துக் கொண்டார்கள். ஏதோ பேசப் போன பச்சையம்மாவை, ஒருத்தர் முட்டிக் காலாலே இடித்தார். அந்த வாகனம், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முன்னால் போய் நின்றதும், இரண்டு மப்டிகள் இருக்கையில் இருந்தபடியே, அவர்களைக் கீழே தள்ளி விட்டார்கள். இருவரும் தரையில் விழப்போன வேளை. ஆனாலும், பச்சையம்மாவும் சுயம்புவும் ஒருவரை ஒருவர் ஆதரவாகப் பிடித்தபடி கீழே விழாமல் சமாளித்தார்கள். அது போதாதென்று அந்தப் போலீஸ்காரர் பச்சையம்மாவின் பிட்டத்தில் வலதுகால் பூட்ஸின் அடையாளத்தைப் பதிய வைத்துவிட்டு, அவர்கள் இருவரையும் ஆடுமாடுகளைப் போல் போலீஸ் துரைத்தன முகப்பிற்குள் தள்ளி விட்டார்.
“மென்னும் கிடையாது. கன்னும் கிடையாது. முகமூடிக்கொள்ளைய குறைடான்னா எப்படிக் குறைக்கறது... வேற பக்கமா போயிடுங்க சாமின்னு கொள்ளக்காரன் காலுல விழுந்து கும்பிட முடியுமா... காலையில சாப்பிட்டதப்பா... நீயாவது சட்டம் ஒழுங்கு... ஜாலி வேல...” அந்த ‘எல் அன்ட் ஓ இன்ஸ்பெக்டர்’ ஏதோ பதில் சொல்லப் போனபோது, அந்தப் பக்கமாக பச்சையம்மாவும் சுயம்புவும் கொண்டு வரப்பட்டார்கள். சுயம்பு அங்கேயிருந்த போலீஸ்காரர்களைக் கண்டு பயந்து விட்டான். கையில் துப்பாக்கி. அதுக்கு மேலே சூரிக்கத்தி. என்ன செய்யப் போறாங்களோ... அப்போதும் பச்சையம்மா ஆறுதல் சொன்னாள். “மகளே... அழாதே என் மகளே! நம்ம இன்ஸ்பெக்டர்தான் மகளே! மாமூலான மனுஷர்...!” அந்த கிரைமும், பச்சையம்மாவைப் பார்த்து சிரிக்கப் போனார். அவள் முன்கை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு கோபப்படப் போனார். இதற்குள் அவர்களைக் கொண்டு வந்த போலீஸாரில் ஒரு வயிற்றுவலிக்காரர் சலூட்டோடு விவரம் சொன்னார். “இந்தப் பொட்டை நம்ம ராக்கப்பன்கிட்ட நம்மை போலீஸ் நாயிங்கன்னு சொல்லியிருக்கான் சார். போலீஸும் பொறுக்கியும் ஒன்றுதானாம். தனியாச் சொன்னாக்கூட பரவாயில்ல சார். பொட்டப்பயலுக ஊர்வலத்துல அவனுக கைதட்டுறதுக்காக அப்படிப் பேசி யிருக்காள்... இவள விட்டுட்டு வந்தால் அப்புறம் எந்தப் பொட்டை நம்மள மதிக்கும் சார். நாமும் பொட்டன்னுதானே அர்த்தம்...!” இன்ஸ்பெக்டர், சுயம்புவின் மீது படர்ந்த பார்வையை விலக்கி, பச்சையம்மாமேல் வியாபிக்க வைத்து, அவளை மேலும் கீழுமாகப் பார்த்தார். அந்த ஏச்சு எந்த செக்ஷனில் வரும் என்பது மாதிரி நினைத்தார். இதற்குள் வெளியேயிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டே ஒரு கான்ஸ்டபிள் வந்து, சலூட் அடித்தார். அதற்கு எதிர் விகிதாசார விகிதத்தில் பச்சையம்மாவைப் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் அவர் பேசினார். “சார். ஒன் மினிட் சார். நான் போன வாரம் கஞ்சா கேஸ் சம்பந்தமாய், இவள் ஏரியாவுக்கு போனப்போ, ஒரு வளைவுப் பாதையில நடந்துட்டே இருக்கேன். அப்போ இதே இந்த பொட்டைப் பயதான் ‘வந்துடுவானுவ போலீஸ்... வாங்கிக் குடிக்கன்னு’ பொட்டப் பயல் கிட்ட பேசிட்டிருக்காள் சார். நான்தான் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக திரும்பி நடந்து பத்து நிமிஷம் கழிச்சுப் போனேன்...” “திட்டுனதுக்காக மட்டும்தான் பிடித்திங்களா?” இப்போது, பச்சையம்மாவே தன்னம்பிக்கையோடு பதிலளித்தாள். “இல்லிங்க சார்! வழக்கம்போல பீச்ல ஒருத்தனோட... ஆனால் அவன் அடுத்துக் கெடுத்த ராக்கப்பன்...” இன்ஸ்பெக்டர் எழுந்தார். நிதானமாக நின்றார். ஏதோ ஒரு நன்னம்பிக்கையோடு பார்த்த பச்சையம்மாவைப் பார்த்து நடந்தார். உயரத்தில் ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. பருமனில் முப்பத்தேழு அங்குலத்திற்கு ஒன்று அதிகம். அவர் பார்த்த பார்வையில், நடந்த நடையில் சுயம்பு பயந்துபோய் பச்சையம்மாவின் முதுகுப் பக்கம் ஒளிந்தபோது - இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் ஒரு எகிறு எகிறினார். “எம்மா போனேனே” என்று அலறியபடியே பச்சையம்மா கீழே விழுந்து, சுயம்புவையும் விழத்தட்டினாள். அந்த இன்ஸ்பெக்டர், சுயம்புவை கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். அவரது கைகளே வாயாகி அவன் கழுத்தைக் கவ்வின. அப்படியே அவனைத் தூக்கி பச்சையம்மா மேலே போட்டார். சுயம்பு ஒலமிட்டான். “எக்கா, எக்கா. நான் என்ன பாடு படுறேன்னு பாருக்கா... பாருக்கா...” அக்கா மட்டும் இதைப் பார்த்தால்... இன்ஸ்பெக்டரை சும்மா விடுவாளா? எக்கா... எக்கா... இங்க வாக்கா இங்க வந்து பாருக்கா... ‘மரகதக்கா...’ இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்களை, ‘சம்திங்காக’ பார்த்துக்கொண்டு, “இந்த மைனர் பொட்டை சொல்லுற மேஜர் பொட்டைய ஏன் விட்டீங்க?” என்றார். உடனே ஒரு போலீஸ் இன்னொரு சலூட் அடித்துக் கொண்டு “சத்தியமா ரெண்டே ரெண்டுதான்” என்றார். இப்படித் தன்னை வம்பில் சிக்க வைத்த சுயம்பு கவனிக்கப் படவேண்டிய விதத்தில் கவனிக்கப் படுவான் என்பதுபோல் அந்த போலீஸ்காரர் அவனை பயமுறுத்திப் பார்த்தார். பச்சையம்மா, வாயில் ஊறிய ரத்தத்தை துடைத்துக் கொள்ளாமல் சுயம்புவின் வீங்கிப்போன நெற்றிப் பொட்டைத் தடவிவிட்டாள். பிறகு ஏங்கி ஏங்கி அழுதாள். அந்த அவல ஒலியின் பின்னணியில் இன்ஸ்பெக்டர் போர்க்குரல் கொடுத்தார். “ஏண்டா பொட்டை! அமைச்சருங்க. ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க நடமாடுற இடத்துல நடமாடக்கூடாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ அரவானுக்கு அறுக்கதுமாதிரி நான் அமைச்சருக்கு தாலி அறுக்கணுமா... பாரிமுனை பாலத்துக்குப் போக வேண்டியதுதானடா... ஒனக்கு புத்தி சொல்ற போலீஸ்காரங்க நாயா...? அந்த அளவுக்கு ஒனக்கு திமுரு! போலீஸ், மாமா மச்சான்னு நெனச்சிட்டே... இந்தாப்பா. இவங்கள கவனிக்கிற விதமா கவனியுங்க...” பச்சையம்மாவையும், அவள் மேல் கிடந்த சுயம்புவையும், காலால் ஒரு எத்து எத்தி, மறுபக்கம் தள்ளிப்போட்டு விட்டு, இன்ஸ்பெக்டர் வெளியே புறப்பட்டார். அதற்குமேல் அவர்களை அடிக்கவில்லை. அவருடைய அந்தஸ்துக்கு அவ்வளவுதான் முடியும். இதற்குமேல் துப்பாக்கிதான் அவருடைய அந்தஸ்து! ஆகையால் லத்திக் கம்பிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சுயம்பு, “மரகதக்கா, மரகதக்கா...” என்று மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி அழுதான். ஒரு தொப்பி மிரட்டியது. “ஏண்டா... மரகதக்கா எங்கடா இருக்காள்? எங்க இருந்தாலும் அந்தப் பொட்டப் பயல நான் சொன்னேன்னு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லணும்... தெரிஞ்சுதா...” சுயம்பு துடித்துப் போனான். கையைக் கட்டிய விலங்கை வைத்தே அவரை அடிக்கப் போவதுபோல் உடம்பை ஆட்டினான். இதைப் பார்த்து ஏதோ ஒன்றைப் புரிந்துகொண்ட ரைட்டர், தலையைக் கவிழ்த்தி, எழுதியபடியே யோசனை சொன்னார். ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார். “கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து. மாத்திச் சொல்லுறீங்க...” “ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க... மூள இருக்காய்யா ஒனக்கு. சீரியஸ் சமாசாரம் பேசறேன்னு தெரியல...” “எஸ் சார்...” இதற்குள், இந்தக் காவில் நிலையத்தின் பின் கதவு திறக்கப்பட்டது. மூன்று கான்ஸ்டபிள்கள் லத்திக் கம்புகளோடும், ரூல்தடியோடும் பச்சையம்மாவையும் சுயம்புவையும் தள்ளிவிட்டார்கள். பிறகு இவர்களும் துள்ளிக் குதித்து அங்கே போய் கதவைத் தாழிட்டார்கள். திறந்த வெளி. சுற்றுமுற்றும் சுவர். நான்கைந்து மரங்கள். ஒரு பெஞ்சில் ஒரு லுங்கிக்காரன் குறட்டை போட்டுத் தூங்கினான். அவன் தலைமாட்டில் ஒரு பெண். அவளும் தூக்கம். ஒரு போலீஸ் சுயம்புவின் சேலையை அவிழ்த்தார். ஜாக்கெட்டைக் கிழித்தார். பிறகு அவனை உற்றுப் பார்த்து, “பூ... இதுக்குத்தான் இவ்வளவு அமர்க்களமா...” பாவாடையைக் கீழே கொண்டு வந்தார். மெல்லக் கண்ணைத் திறந்தார். அவருக்கும் பொட்டைக எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு ஆசை. ஆனால், அவன் ஜட்டி போட்டிருந்தான். அதற்காகவே, அவனை அடித்தார். லத்திக் கம்பால் குத்திவிட்டார். முட்டியைப் பிடித்து இழுத்து முட்டிக்கு முட்டி தட்டிவிட்டார். அவன் வலி பொறுக்காமல் அலறியபோது, பச்சையம்மா, “ஏற்கெனவே சூடுபட்ட பிறவிய்யா... அடிபட்ட உடம்புய்யா... அடிக்கணுமுன்னா அவளுக்கும் சேர்த்து என்ன அடியுங்கையா” என்று மருவினாள். மன்றாடினாள். கும்பிட்டாள். கும்பிட்ட கரங்களை எடுக்காமலே நின்றாள். போலீஸார் அந்தச் சவாலை, ஏற்றுக்கொண்டார்கள். ஒருவர் தோளைப் பிடித்து அவளை உட்கார வைத்தார். இன்னொருத்தர் முட்டிக்கால்கள் வரைக்கும் அவள் புடவையை மடித்துவிட்டார். பிறகு இரண்டு கால்களை நெருக்கி வைத்துக்கொண்டு, கால் பாதங்களை வளைத்துப் பிடித்துக்கொண்டார். ரூல்தடிக்காரர், அந்தக் கால்களில் அந்தத் தடியை வைத்து உருட்டினார். நிலத்தை ஏர்க்கலப்பை உழுவது மாதிரியான உருட்டல், உழுத நிலத்திலிருந்து வருவது போன்ற கசிவு. நீர் கொண்ட மண். ரத்தம் உண்ட சதை. பிராணனை பிடுங்கும் வலி. “எம்மா... எம்மா... முர்கே மாதா... இவனுவ வீட்லயும் ஒரு பொட்டை விழ! ஐயோ, என் கண்ணு போச்சே! ஐயோ என் காது போச்சே...!” அந்த இரவு முழுவதும், பச்சையம்மா வலி பொறுக்க முடியாமல் அலறினாள். சுயம்பு, அக்காவைப் பற்றி அவர்கள் சொன்ன சொல் பொறுக்க முடியாமல், முடங்கிக் கிடந்தான். காவலுக்கு இருந்த போலீஸாரும் அடித்த களைப்பில் தூங்கிவிட்டார்கள். அந்த, இருவரும் மாடுகள் கட்டப்பட்டதுபோல், சுவரில் உள்ள இரும்பு வளையங்களில், விலங்கோடு சேர்த்து கட்டப்பட்டி ருந்தார்கள். அந்த விலங்கோ சுயம்புவுக்குத் தலையணை... நாய்ச் சங்கிலி... ஆனால் நாய்கள் குலைக்கலாம். இவர்கள் குலைத்தால், அவர்கள் கடிப்பார்களோ... பச்சையம்மா, முனங்குவதைக்கூட, மெதுவாய் முனங்கினாள். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
அவரவர் பாடு வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 80.00தள்ளுபடி விலை: ரூ. 75.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |