5 பகலும், இரவும், ஒன்றுடன் ஒன்று போர் தொடுத்த வேளை. கண்ணுக்குத் தெரிந்த பகலை, கண்ணுக்குத் தெரியாத இரவு கொரில்லா முறையில், தாக்கிச் சிறுகச் சிறுகத் தலையாட்டிக் கொண்டிருந்த நேரம். சுயம்பு, அந்தப் பல்கலைக் கழக வாசலுக்குள் கண்ணீரும் கம்பலையுமாக நுழைந்தான். அந்த வாசலைப் பார்த்த உடனேயே, உடம்பு முழுவதையும் ஏதோ ஒன்று தாக்குவது போல ஒரு வலி. அந்த வளாகத்திற்குள் வியாபித்த பொறியியல் கட்டிடத் தொகுப்புக்களையும், பட்ட மேற்படிப்பு அடுக்கு மாடிகளையும், கண்கொண்டு பார்க்காமல், கால் பார்த்து நடந்தான். ஆங்காங்கே மங்கிய பகலொளியில், மாணவ மாணவியர் தனித்தனியாகவும், குழுக் குழுவாகவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில மறைவான இடங்களில் “இரட்டை விளையாட்டு”, என்றாலும் கண்ணுக்குப் படும்படியான மைதானத்தில் ஒரு பக்கம் மாணவர்களின் வாலிபால் விளையாட்டு, மறுபக்கம் மாணவியரின் கூடைப்பந்து விளையாட்டு. கூடைப்பந்து வேண்டுமென்றே, வாலிபால் கிரவுண்டுக்குள்ளும், வாலிபால் பந்து, கூடைப்பந்து கிரவுண்டுக்குள்ளும் விழுந்து விழுந்து எம்பின. உடனே ஆண் சிரிப்பு - பெண் சிரிப்பு - அப்புறம் கலவைச் சிரிப்பு.
விழி இழந்தவர்கள், தாங்கள் நடமாடிய இடங்களின் சுவடுகளை வைத்து நடப்பது போல் நடந்து, மாணவர் விடுதிக்கு வந்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், போன்ற பல்வேறு வளைவு போர்டுகள் கொண்ட கட்டிடக் குவியல் வழியாய், பாலைப் போல் தோன்றும் ஒரு கட்டிடத்தை நோக்கி நடந்தான். முதலாவது ஆண்டு மாணவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சேரிக் கட்டிடம் மாதிரி அது... அதில் இரண்டாவது மாடிக்கு வந்து, இடது பக்கம் உள்ள நாலாவது அறைக்குள் வந்தான். எல்லா அறைகளிலும் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம். “யாரு கொடுத்த சேலை இந்தப் பொண்ணு மேலே...” “ருக்குமணி வண்டி வருது... ஓரம்போ...” “கன்னி மேரி தாயே...” சுயம்பு ‘சேலையில்லாத’ அந்த அறைக்குள், ருக்குமணியும், கன்னி மேரியும், காதுக்குக் கேட்காத அந்த இடத்திற்குள் போனான். அங்கே எந்தப் பாட்டுச் சத்தத்தையும், காதில் வாங்காமல், எதையோ பேசிக் கொண்டிருந்த இருவரின் கவனம் கலையும்படி, பெட்டியைச் சத்தம் போட வைத்துக் கீழே போட்டான். ஆனாலும், அந்த இருவரும், அவன் வருகையை அங்கீகரிக்காதது போல் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள். ஒருவன் மெத்தை போட்ட கட்டிலில் காலை விரித்துப் போட்டு கம்பீரமின்றி உட்கார்ந்திருந்தான். என்றாலும் அந்தப் பூஞ்சை உடம்பில், பொறி கலங்க வைப்பது மாதிரியான கண்கள். இன்னொருத்தன், கோரைப் பாயில் சம்மணம் போட்டு இருந்தான். முழுக்கறுப்பு. கட்டிலில் உட்கார்ந்திருந்த மூர்த்தி, படிப்பில் ஏற்பட்ட மேடுபள்ளத்தைப் பணத்தால் நிரப்பியவன். ‘பல்லவன்’ என்ற பெயரோடு அந்தக் காலத்திலேயே கட்டப்பட்டது போன்ற அந்த விடுதிக்குக் கட்டில்கள் கிடையாது. காற்றடிக்கும் மின்விசிறியும் கிடையாது. வாட்டர்கூலருக்குப் பதில், மூடியில்லாத மண் கூஜா, ‘டிஸ்டம்பர்’ சுவருக்குப் பதிலாக, செதிள் செதிளாய்ச் சிதைந்து நிற்கும் சுவர்கள். ஆனாலும், காசு கொடுத்துக் கைமேல் சீட்டு வாங்கிய மூர்த்தி, ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டுக் கொண்டான். பயலுக்கு ‘சைனஸ்’ பிரச்னை. இல்லையென்றால், ஒரு மின்விசிறி கூட வாங்கியிருப்பான். இருவரும், இப்போது ஒரு நடிகையின் படத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டு ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டும் பெற்றுக் கொண்டும் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அப்படியே நின்ற சுயம்புவை, அவனுக்குத் தெரியாமலேயே கண்சிமிட்டிப் பார்த்துக் கொண்டார்கள். வகுப்பிற்குக் ‘கட்’ அடித்தால் கூடத் தேவலை. வாத்தியார்களுக்கு, ஓலை வெடி வைத்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், இந்த அழுமூஞ்சியோ, வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே அங்கே போகும். அவை நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயோ மறையும். பிறகு இரவில் அழுது கொண்டே அறை திரும்பும். அவர்களோடு சேர்ந்து படுக்காமல், வெளியே வராண்டாவில் தூங்கும். இவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார்கள். கேட்டால்தானே? நேற்றுக் கூட ஊருக்குப் புறப்பட்ட அவனை, வழி மறித்தார்கள். அவன் சூட்கேஸைக் கூடப் பறிமுதல் செய்தார்கள். ஆனால் அவனோ, தன்னை விடாவிட்டால், மாடியிலிருந்து கீழே குதிக்கப் போவதாக சவாலிட்டான். ஆகையால், அவனை இப்போது அவர்கள் சகித்துக் கொள்வதே ஒரு பெரிய காரியம் என்று நினைத்துக் கொண்டார்கள். மூர்த்தி குழைந்தபடியே முத்துவிடம் கேட்டான்: “பேராசிரியர் லிங்கையா அறுத்தாரே, ஓம்ஸ் லா... அப்படின்னா என்னடா?” “ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கினே இல்ல... நமக்கும் கொஞ்சம் மால் வெட்டு... பதில் உடனே கிடைக்கும்.” “என் போதாத காலம் சுயம்புகிட்ட கேக்க முடியலை... சொல்லித் தொலைடா... நாளைக்கு அந்த நடிகை சினிமா தியேட்டர்ல தோன்றப் போறாளாம்; கூட்டிட்டுப் போறேன்...” “வகுப்புல பாடத்தைக் கவனிக்காம எவளடா கவனிச்சே?” “கமலாவை... அவள் என்னடான்னா உன்னை சைட் அடிக்காள்... இப்பவாவது உச்சி குளிர்ந்ததா?... இன்னும் நீ சொல்லலன்னா ஒனக்கும் தெரியலைன்னு அர்த்தம்.” முத்து, பேராசிரியர் லிங்கையா போலவே உதட்டைக் கடித்துக் கொண்டு, வயிற்றைக் குலுக்கினான். வாயே இல்லாமல் அந்த இடத்தில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பது போலவும், அதை அவிழ்க்கப் போகிறவன் போலவும், ‘மிமிக்கிரியோடு’ பேசினான். “ஒரு கண்டக்டரில் - அதுதான், மின் கடத்தியில் ஏற்படும் மின் அழுத்தம், அந்த கடத்தியில் ஓடும் மின்னோட்ட அளவையும், அதன் மின் தடை அளவையும் பெருக்கினால் எவ்வளவோ, அவ்வளவு. இதுக்குப் பேருதான் ஓம்ஸ் லா... அதாவது ஓமின் விதி... இதுதான் நம்ம சப்ஜெக்டுக்கே பிள்ளையார் சுழி. ஓம்ஸ் என்பவர் இதைக் கண்டுபிடித்ததால் இதற்கு ஓம்ஸ் லா என்று பெயர்...” மூர்த்தி முத்துவை வியந்து பார்த்த போது, தரையே பேசுவது போல் ஒரு சத்தம் கேட்டது. “அட் கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர்... அதாவது ஒரு நிலையான வெப்ப நிலையில் தான், ஓம்ஸ் லா பொருந்தும். வெப்ப நிலை மாறினால், அது லா இல்ல... கலாட்டா... இந்த லாவுக்கு கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர் என்கிற பிரிகண்டிஷன் ரொம்ப முக்கியம். இதுகூடத் தெரியாத நீங்கள்லாம் ஆம்புளைங்களாடா?” மூர்த்தியும், முத்துவும் அதிர்ந்து போனார்கள். ஆனந்தமான அதிர்ச்சி, பிளஷன்ட் ஷாக். பழைய சுயம்பு, வந்து விட்டான். இனிமேல் அவனிடமே பாடத்தைக் கேட்டு, கேர்ல்ஸ்ஸுக்கு சொல்லிக் கொடுக்கலாம்... மூர்த்தியும், முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே முத்து தரையில் தவழ்ந்தான். மூர்த்தியின் காலை விலக்கும்படி கண் ஜாடை காட்டிவிட்டு, பதில் சொல்வதற்காகத் தூக்கிய தலையை மீண்டும் தரையில் போட்டுக் கொண்டு குப்புறக் கிடந்தவனின் அருகே போய் உட்கார்ந்தான். அவன் கழுத்துக்குக் கீழே, தனது கையைக் கொண்டு போய் அவன் முகத்தை நிமிர்த்தினான். பிறகு அந்தக் கையை மெள்ள மெள்ள நகர்த்தி, சுயம்புவின் மார்புக்குக் கொண்டு போய், அவனை ஒரு கையால் தூக்கி, தன் பக்கமாக கொண்டு வந்தான். சுயம்பு அவன் மடியில் மல்லாந்து விழுந்தான். அவன் கண்களோடு தன் கண்களை நெருடவிட்டான். அவனது உருண்டு திரண்ட தோள்களில் கண்களை அலைய விட்டான். பிறகு தலையைச் சற்று நகர்த்தி, அதை அவன் வயிற்றில் போட்டுக் கொண்டு அண்ணாந்து பார்த்தான். முத்து, அவன் கழுத்தை நீவி விட்டபடியே, “எழுந்திருடா, எழுந்திருடா” என்றான். உடனே கட்டிலில் கிடந்த மூர்த்தி “எதுக்குடா பயப்படுறே... நாங்க இருக்கோம்டா... போடா... போய் முகத்தைக் கழுவிட்டு வாடா” என்று ஆறுதல் குரலில் பேசினான். ஆனால், மூர்த்தி சொன்னது கேட்காதது போல், முத்துவின் மடியில் கிடந்த சுயம்பு, திடீரென்று துள்ளி எழுந்தான். கால்களைத் தரையில் போட்டுத் தாண்டவமாடியபடி, கைகளை அங்குமிங்குமாய் அபிநயம் காட்டியபடி, இருவேறு நிலைகளில் கத்தினான். “டேய் முத்து... எப்படிடா என்னைத் தொடலாம்?... நீ பெரிய ஆணழகனாவே இருந்துட்டுப் போ... அதுக்காக இப்படி என்னைப் பாடாப் படுத்தணுமா?... கேட்கிறதுக்கு ஆள் இல்லன்னு நெனப்பாடா... இனிமே இப்படி தொடுற வேலை வச்சே... அப்புறம் மரியாதி போயிடும்...” சுயம்பு, இரு கரங்களாலும் கண்களை மூடியபடியே அசையாது நின்றான். பிறகு வெறுமையும் வெறியும் கொண்ட பார்வையோடு, அந்த அறைக்கு வெளியே வந்தான். மீண்டும் உள்ளே வந்து செருப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு, வெறுங்காலோடு வாசல்படியைத் தாண்டினான். முத்துவும், மூர்த்தியும் ஓடிப்போய் அவனை இரு பக்கமும் சூழ்ந்தபடி மாறி மாறிக் கெஞ்சினார்கள். “இப்போ என்னடா நடந்துட்டுது... வாடா ரூமுக்குள்ள...” “உன் புத்தி எனக்குத் தெரியும்... போடா...” “டேய் அந்த தடியனுக்காக வராட்டாலும், என் முகத்துக்காவது வாடா...” சுயம்பு சலித்து நின்றான். அவர்களை உஷ்ணமாகப் பார்த்தான். குளிர்காயும் உஷ்ணம். எரிக்கும் உஷ்ணமல்ல... பிட்டத்தை ஆட்டிக் கொண்டு கைகால்களைக் குழைய விட்டு, சிணுங்கியபடி சிரிப்பது போல் பேசி, அழுவது போல் முடித்தான். “தனியாப் போற என்கிட்ட ஏண்டா வம்பு செய்யுறீங்க... என்ன விடுங்கடா... விட்டுத் தொலைங்கடா... இந்த பாரு... கையப் பிடிச்சே அப்புறம் நடக்கிறது வேற...” வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|
விக்கிர மாதித்தன் கதைகள் ஆசிரியர்: ப்ரியா பாலுவகைப்பாடு : குழந்தைகள் விலை: ரூ. 400.00 தள்ளுபடி விலை: ரூ. 380.00 அஞ்சல்: ரூ. 70.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
சிறையில் விரிந்த மடல்கள் ஆசிரியர்: வைகோவகைப்பாடு : அரசியல் விலை: ரூ. 500.00 தள்ளுபடி விலை: ரூ. 450.00 அஞ்சல்: ரூ. 70.00 |
|