ரங்கோன் ராதா 7 பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம் எவ்வளவு விபரீதமான நடவடிக்கைகளுக்கு இடம் தருகிறது. என்னைக் கொட்டி வேதனை கொடுத்த தேளை அடிக்க நான் என் அப்பாவின் தடியை எடுத்தேன். எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பியதால், நான் தடியை எடுத்ததும், தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்து, என் தகப்பனாரும், புருஷனும் ஓடினார்கள். என்னால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. மகா சூரர்கள், வீரர்கள் இந்த ஆண்பிள்ளைகள்! எதிலே! பெண்களை மிரட்டுகிற விஷயத்திலே! நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கென்ன பயம் என்று பெருமையாகப் பேசுவார்கள். பெண் என்றால் பயங்காளி, ஆண்களேதான் தைரியசாலிகள் என்று எப்படியோ ஒரு தப்பான எண்ணத்தை நாட்டிலே பரப்பி விட்டார்கள். இரண்டு ஆடவர்கள் ஓடினார்கள், நான் கையிலே தடியை எடுத்ததும்! அவ்வளவு பயம்! பேய் என்ன செய்துவிடுமோ, என்ற பயம்.
என்ன செய்தாலும், ஊரார் என்னைத் தூற்றமாட்டார்கள். "ரங்கம் பாவம் படாதபாடு படுகிறாள்! எவ்வளவு நல்ல பெண். பாழாய்ப் போன பேய் பிடித்துக் கொண்டு அவளை ஆட்டிப் படைக்கிறது" என்று பேசுவார்களே தவிர, என்மீது கோபிக்கமாட்டார்கள். பேயைச் சாக்காக வைத்துக் கொண்டு உன் அப்பாவின் மீது படை எடுக்க முடியும். மிஞ்சிப் போனால், கைகாலைக் கட்டிப் போடுவார்கள். போடட்டுமே! இரண்டு நாட்கள் சும்மா இருப்பது. பிறகு தானாகக் கட்டுகளை அவிழ்த்துவிட்டுவிடுவார்கள். பிறகு ஆரம்பிக்கிறது பேயாட்டத்தை! இதுபோல எண்ணினேன்! எண்ணுவதிலேயே கூட இன்பம் பிறந்தது. சொத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளத் தந்திரமான திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள, நான் ஒருத்தி தடையாக இருக்கிறேன் என்று அறிந்து, என்னைப் பேய் பிடித்துக் கொண்டதாகக் கூறினார், உன் அப்பா. அன்பினால் அவருடையை மனதை என் பக்கம் திருப்ப முயன்றேன், முடியவில்லை. இனி எந்தப் பேயின் பேரில் சாக்கிட்டு அந்தப் பேராசைக்காரர், என்னைக் கொடுமை செய்தாரோ அந்தப் பேயின் சாக்கை வைத்துக் கொண்டே, நான் அவருடைய வாழ்வைக் கொட்டிக் கொட்டி வேதனையை உண்டாக்குவது என்று தீர்மானித்தேன். மகனே, உன் தாய் எப்படி இவ்வளவு கல்நெஞ்சு கொண்டாள் என்று யோசிக்கிறாயா? அப்படி நான் எண்ணினது தவறு என்று கூறுகிறாயா? என் மீது தவறு இல்லையடா, கண்ணா! கிராமத்திலே சில நாட்கள் தங்குவது, பேயோட்டுவதாகச் சொல்லும் புரட்டனின் பூஜை முதலிய வீண் காரியங்களைக் கொஞ்ச நாட்களுக்குச் சகித்துக் கொள்வது, அவனாகப் பார்த்துப் பேய் நீங்கிவிட்டது என்று கூறும்படி ஒழுங்கான முறையிலே நடப்பது, பிறகு வீடு திரும்புவது. அங்கேயும் சில தினங்கள், நிம்மதியடைந்ததாகவே பாவனை செய்வது, பிறகு திடீரென்று உன் அப்பாவின் மீது பழி வாங்கும் காரியத்தைத் துவக்குவது என்று தீர்மானித்தேன். அதாவது, என்னை நீக்கி விட உன் அப்பா என் மீது ஏவிய 'பேய்' இருக்கிறதே, அதனை அவருடைய கொடிய குணத்துக்காக அவரைத் தண்டிக்கும்படி, அவர் மீது, நான் ஏவிவிடுவது என்று திட்டமிட்டேன். இந்த எண்ணத்தால் எனக்கோர் வகையான ஆனந்தம் உண்டாயிற்று. என் அப்பா, "ஒரே நாள் பூஜையிலே, பிரக்யாதிபெற்ற பக்கிரி, குழந்தையின் முகத்திலே, களை வரும்படி செய்துவிட்டான்" என்று கூறிக்கொண்டார், என் முகப் பொலிவைக் கண்டு. "பைத்தியக்கார அப்பா! உன் மகளைப் பேயும் பிடித்துக் கொள்ளவில்லை, பூதமும் தூக்கிக் கொண்டு போகவில்லை; உன் மருமகனின் வஞ்சகம், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது" என்று நான் சொன்னால் அவர் நம்புவாரா? அந்தப் புரட்டன் சொன்ன அத்தனை புளுகுகளையும் நம்பினார். பேயோட்டும் பக்கிரி, முதல் தரமான புரட்டன் என்பது அவனைப் பார்த்த முதல் நாளே எனக்கு விளங்கிவிட்டது. என்னைப்போலப் பேய் பிடித்த பல பெண்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்தக் கிராமத்திலேயே, அவனுடைய வீடுதான் மாடி வீடு, மற்றவை குடிசைகள். பக்கிரி, ஏழைகளுக்கு இலவசமாகப் பேயோட்டுவது, பணக்காரர்களிடம் கூட வற்புறுத்துவதில்லை. இஷ்டப்பட்ட காணிக்கை செலுத்தலாம் என்று கூறுவது, இந்த முறையிலே நடத்தி வந்தான், வியாபாரத்தை. இதிலே, அவன் கையாண்ட தந்திரம் என்னவென்றால், ஏழைகளுக்கு இரண்டொரு நாட்களிலே பேய் ஓடும்படி செய்துவிடுவான். அல்லது, இன்னும் இரண்டு வருஷம் கழித்துவந்தால்தான் இந்தப் பேயை ஓட்ட முடியும், என்று சொல்லி அனுப்பிவிடுவான். பணக்காரர்கள் பேயோட்டிக் கொள்ளச் சென்றாலோ, கொஞ்சத்திலே விடமாட்டான். நாற்பது நாள் முழுக்கு, முப்பது நாள் கோயிலைச் சுற்றுவது, பத்து நாள் பச்சிலைத் தைல ஸ்நானம்; பிறகு பூஜை. அதன் பிறகு விசேஷ பூஜை. இப்படி மாதக்கணக்கிலே கடத்திக் கொண்டே போவான். ஒரு வாரத்துக்கொரு முறை வெள்ளி, பொன் ரட்சைகள் தயாரித்துத் தந்தபடி இருப்பான். இதற்கெல்லாம் பிடிக்கும் செலவு தவிர, வேறு பணம் தானாகக் கேட்பதில்லை என்று கூறி இதன் மூலமாகவே, பத்து காணி நல்ல நஞ்சையும், ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பும் வாங்கிவிட்டான். மாடி வீடு கட்டிக் கொண்டான். மூன்று பெண்களை நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்தான். அந்த மருமகப் பிள்ளைகளைப் பெரிய உத்தியோகஸ்தர்களின் தயவு தேடி நல்ல வேலையில் அமர்த்தி விட்டான். இவ்வளவும் 'பேயோட்டும்' புரட்டிலே சாதித்துக் கொண்டான். மகாராஜாக்களும் மிட்டாதாரர்களும் ஹைகோர்ட் ஜட்ஜுகளும் தந்த சர்டிபிகேட்டுகள் ஒரு கத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். பெயர்தான் பக்கிரியே தவிர, ஆள் ஜமீன்தாரரைப் போலத்தான். கையிலே காப்பு, காதுகளிலே கடுக்கன், கழுத்திலே தங்கத்தால் சங்கிலி, அதிலே ஏதோ ஒரு பெரிய ரட்சை, கல்லிழைத்தது, பூஜை அறையிலே வெள்ளிப் பாத்திரங்கள், இவ்வளவு வைபவம் இருந்தன. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனிடம் "பராசக்தி" பிரசன்னமாகிப் பேசுமாம். அந்தப் பக்கிரி, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மரியாதையுடன் "உட்காரம்மா! உட்கார்!" என்றான், உட்கார்ந்தேன். "இதோ குழந்தை! இதை வாயில் போட்டுக்கொள்" என்று ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்தான். இனிப்பாகத்தான் இருந்தது. "கசப்பு அதிகமாம்மா?" என்று கேட்டான். "இல்லையே! தித்திப்பாகத்தான் இருந்தது" என்று நான் சொன்னேன். பிறகு அவன் அப்பாவைப் பார்த்து, "பயப்பட வேண்டாம். குழந்தைக்குப் பேய் முற்றிவிடவில்லை. சர்க்கரை எப்போது இனிக்கிறதோ, அதிலிருந்து நிலைமை மோசமில்லை என்று தெரிகிறது. சில பெண்களுக்குச் சர்க்கரை கூடக் கசப்பாகிவிடும். பேயின் சேஷ்டையால்" என்று சொன்னான். உன் அப்பாவையே சட்டை செய்யப் போவதில்லை இனிமேல் என்று தீர்மானித்துவிட்ட எனக்கு, இந்தப் புரட்டனிடம் என்ன பயம்? நான் பேசலானேன். "சர்க்கரை இனிப்பாகத்தான் இருக்கும் குழந்தே! ஆனால் அதுகூடக் கசப்பாகிவிடுவதுண்டு." "ஆமாம்! அதற்குப் பேய் பிடிக்கவேண்டியதில்லையே. பல நாள் ஜுரம் அடித்தால் வாய் கசக்கிறது." "ஜுரம் வேறு, பேய் பிடிப்பது வேறு." "ஆமாம்! அதை யார் இப்போது மறுத்தார்கள். பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்குச் சர்க்கரை இனிப்பா, கசப்பா என்று பார்ப்பது ஒரு பரீட்சையா? வேடிக்கையாக இருக்கிறதே!" "குழந்தே! நீ இப்படியே சந்தோஷமாக இருந்தால் போதுமம்மா." "அது கிடக்கட்டும்; எத்தனை நாள் ஆகும் பேய் போக?" "சீக்கிரத்திலேயே முடியும், கவலைப்படாதே." "பேய் ஓடுமா, ஓட்டுவீர்களா?" "ஓடும் பேயும் இருக்கிறது, ஓட்டவேண்டிய பேயும் இருக்கிறது." "ஓட்டினாலும் ஓடாத பேய் கிடையாதோ?" "பக்கிரி ஓட்டினால் ஓடாத பேய் கிடையாதம்மா. பக்கிரியா ஓட்டுகிறான், பராசக்தியல்லவா ஓட்டுகிறாள்." "பராசக்தி, உனக்கு அருளைத் தந்தது ஏன்?" "என் பூஜா பலன்." "என்னைப் பேய் பிடித்துக் கொண்டது ஏன்?" "உன் வினை!" "என் வினையை, உன் பூஜை பலன் தீர்த்துவிடுமா?" இப்படிப் பேச்சு முற்றிக் கொண்டே போயிற்று, எங்கள் இருவருக்கும். பதில் கூற முடியாமல் திணறினான், பக்கிரி. ஆனால், அந்தத் திணறலை மறைக்க, அடிக்கடி 'பராசக்தி, பராசக்தி' என்று உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். பேயோட்டும் பக்கிரியின் வாயை அடைத்துவிட்டோ ம் என்று ஒரு மகிழ்ச்சி எனக்கு. ஆனால், அந்தப் புரட்டன் சாமான்யமான பேர்வழியல்ல. கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு என் தகப்பனாரைப் பார்த்து, "ஐயா உன் மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், இன்னது என்று பராசக்தி கூறிவிட்டாள். மற்றப் பேய்களை ஓட்டுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமுண்டு. மற்றப் பேய்கள் முரட்டுத்தனம் செய்யும். இந்தப் பேய் முரட்டுத்தனம் செய்யாது. எப்போதுமே, முரட்டுத்தனம் செய்கிற பேயைச் சுலபத்தில் ஓட்டிவிடலாம். இது அவ்வளவு சுலபமல்ல" என்றான். "தங்களாலே முடியாது போகுமா?" என்று தயவு கலந்த குரலிலே கேட்டார் அப்பா. "முடியும்! ஆனால் கொஞ்ச நாளாகும்" என்றான் அவன். "என்ன விதமான பேய்?" என்று கேட்டார் அப்பா. "அதைத்தான் கண்டுபிடிக்கக் குழந்தையிடம் பேசிப் பார்த்தேன். எப்படிப் பேசிற்று பார்த்தீர்களா? மளமளவென்று பேச்சு இருந்தது. கேள்விமேல் கேள்வி போட்டுவிட்டது" என்றான் பக்கிரி. "ஆமாம்!" என்றார் என் அப்பா. "அது குழந்தையின் பேச்சா? பேசுமா அப்படி?" என்று கேட்டான் புரட்டன். "துஷ்டப் பேச்சுப் பேசாது. முரட்டுப் பேய்களல்லவா கெட்ட வார்த்தை பேசும். அப்படிப்பட்ட பேய்களை ஒரு மண்டல காலத்திலேயே ஓட்டிவிடலாம். இது சாதுப் பேய்!" என்றான் புரட்டன். "சாதுப் பேய் என்று சாமான்யமாகச் சொல்கிறீர். வீட்டிலே நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?" என்று சோகத்துடன் சொன்னார் அப்பா. "பழமொழியே இருக்கிறதல்லவா, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று, அதுபோல நடந்திருக்கும்" என்று விளக்கம் கூறினான், அந்தப் பூஜாரி. "சாதுப் பேய், கொஞ்ச நாளிலே போகாதா?" என்று கேட்டார் அப்பா. "ஆமாம்" என்றான் பக்கிரி. "அது ஏன்?" என்றார் அப்பா. "முரட்டுப் பேயாக இருந்தால், போக முடியாது, நீ என்ன செய்யமுடியும் என்று கொக்கரிக்கும். உடனே அதற்குத் தரவேண்டிய தண்டனையைத் தந்து, துரத்திவிடலாம் சுலபத்தில். ஆனால், இந்தச் சாதுப் பேய்க்கு ஆயிரம் விதமான சமாதானம் சொல்லி, காரணம் காட்டி, இது கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறி முடிய, நாள் அதிகம் பிடிக்கும் ஐயா! உமது மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், சாது மட்டுமல்ல, சாமர்த்தியமாகப் பேசக் கூடியது. பேய்களிலே பலரகம் உண்டு. கொலைகாரப் பேய், முரட்டுப் பேய், பொய் பேசும் பேய், வயிற்று வலிப் பேய், அழுகிற பேய் என்று இதிலே ஆயிரத்துக்கு மேலே 'ரகம்' இருக்கிறது" என்றான் புரட்டன். "பேயிலே மட்டுந்தானா? மனிதர்களிலும் நீ சொன்ன அவ்வளவும் இல்லையா?" என்று நான் கேட்டேன். "இல்லை என்று யார் சொன்னார்கள்? மனிதர்களில் பல ரகம்; அதுபோலத்தான் பேய்களிலும். மனிதர்கள் இறந்து போய், பேய் உருவடைந்தார்கள் என்பதுதான் எங்கள் சித்தாந்தம். பேய் உருவிலே இருக்கும்போதும், மனிதராக இருக்கும்போது இருந்த சுபாவம் இருக்கும். அதனாலேதான் பேய்களிலே பல ரகம் இருக்கிறது" என்றான் அந்த புரட்டன். "எந்தெந்த ரகமான பேய் பிடித்துக் கொள்கிறதோ அந்தந்த சுபாவம், பேய் பிடித்துக் கொண்ட ஆசாமியிடம் இருக்கும் என்று சொல்கிறீரா?" என்று நான் கேட்டேன். "அதேதான். போன வருஷம் இங்கே ஒரு பெண் வந்திருந்தாள், பேயோட்டிக்கொள்ள. சதா சர்வ காலமும் பாடிக் கொண்டே இருப்பாள்" என்றான் பூஜாரி. "சங்கீதப் பேய் பிடித்துக் கொண்டதோ?" என்று நான் கேலி செய்தேன். "உண்மையாகத்தானம்மா. அந்தப் பெண் இருந்த ஊரிலே, ஒரு பையன் அருமையான சங்கீதம் பாடுவான். அதிருஷ்டம் இல்லாததால் ஆதரிப்பவர் கிடைக்கவில்லை. கடைசியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிட்டான். பேயானான்; பெண்ணைப் பிடித்துக் கொண்டான்" என்று பேயின் சரித்திரமே கூறலானான். "அப்படியானால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய்..." என்று நான் கேட்டேன். "எழுத்துக்கு எழுத்து பொருள் கேட்டு, வாதாடிப் பேசவும், எதிரியின் வாயை அடக்கிப் பேசவும், வக்கீலால்தானே முடியும்" என்றான் அவன். "அப்படியானால், என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டதோ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
குட்பை தொப்பை வகைப்பாடு : மருத்துவம் இருப்பு உள்ளது விலை: ரூ. 390.00தள்ளுபடி விலை: ரூ. 355.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |