மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ... தொடர்ச்சி - 14 ... 27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை 'நவை அறு நன் பொருள் உரைமினோ' என சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என 'வேத வியாதனும் கிருதகோடியும் ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர் பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் காண்டல் கருதல் உவமம் ஆகமம் ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 27-10 எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-20 பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது கிட்டிய தேசம் நாமம் சாதி குணம் கிரியையின் அறிவது ஆகும் கருத்து அளவு ஆவது குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை உணரும் தன்மையது ஆகும் மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் பொது எனப்படுவது சாதன சாத்தியம் இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-30 கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன் உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல் எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல் முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு "இது மழை பெய்யும் என இயம்பிடுதல் என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம் தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் 27-40 உவமம் ஆவது ஒப்புமை அளவை "கவய மா ஆப் போலும்" எனக் கருதல் ஆகம அளவை அறிவன் நூலால் "போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல் அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல் இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல் 27-50 அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத் தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல் மீட்சி என்பது "இராமன் வென்றான்" என மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல் எட்டு உள பிரமாண ஆபாசங்கள் சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம் தேராது தௌிதல் கண்டு உணராமை எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் 27-60 நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல் திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல் விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா மையல் தறியோ? மகனோ? என்றல் தேராது தௌிதல் செண்டு வௌியில் ஓராது தறியை மகன் என உணர்தல் கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று அண்டலை முதலிய கண்டும் அறியாமை 27-70 இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல் உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப் புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல் நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள் பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-80 அக்கபாதன் கணாதன் சைமினி மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம் இவையே இப்போது இயன்று உள அளவைகள்' என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் 'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன 'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க் 27-90 கட்டி நிற்போனும் கலை உருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன் 'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர் தேவன் இட்ட முட்டை' என்றனன் காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன் 'கற்பம் கை சந்தம் கால் எண் கண் 27-100 தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் சார்பின் தோன்றா ஆரண வேதக்கு ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு 'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என ஆசீவக நூல் அறிந்த புராணனை 'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என 'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் 27-110 புல்லிக் கிடந்து புலப்படுகின்ற வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும் நிலம் நீர் தீ காற்று என நால் வகையின மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து 27-120 சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத் தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் ஆதி இல்லாப் பரமாணுக்கள் தீதுற்று யாவதும் சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா முது நீர் அணு நில அணுவாய்த் திரியா ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா 27-130 அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் குலாம் மலை பிறவாக் கூடும் பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும் மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம் வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும் 27-140 துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச் சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆய தொழிலை அடைந்திடமாட்டா ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் மாலைப் போதில் ஒரு மயிர் அறியார் சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும் 27-150 பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர் கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் அழியல் வேண்டார் அது உறற்பாலார் இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் அது மண்டலம் என்று அறியல் வேண்டும் பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் 27-160 பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் கருவில் பட்ட பொழுதே கலக்கும் இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும் முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது மற்கலி நூலின் வகை இது' என்ன சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால் புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை, அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன் 27-170 தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும் தீது இல் சீவனும் பரமாணுக்களும் நல்வினையும் தீவினையும் அவ் வினையால் செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும் தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே 27-180 தோற்றமும் நிலையும் கேடும் என்னும் மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம் பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத் தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா அப்படித்தாகி அதன் மாத்திகாயமும் எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 27-190 காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் சீவன் உடம்போடு ஒத்துக் கூடி தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் சீர்சால் நல்வினை தீவினை அவை செயும் வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய் அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல் 27-200 அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின் 'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன் 'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய் மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச் சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண் வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின் 27-210 தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என 27-220 ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த பூத விகாரத்தால் மலை மரம் முதல் ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து வந்த வழியே இவை சென்று அடங்கி அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் 27-230 ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே மெய் வாய் கண் மூக்கு செவி தாமே உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச் செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு 27-240 'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன 'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் சாமானியமும் விசேடமும் கூட்டமும் ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப் பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான் ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் 27-250 சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை மாசு இல் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம் கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின் சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை 27-260 ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 27-270 அவ் அப் பூத வழி அவை பிறக்கும் மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்' என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு 'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின் அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும் 27-280 'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின் தந்தை தாயரை அனுமானத்தால் அலது இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்? மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என் 27-289 28. கச்சி மாநகர் புக்க காதை ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர் கருங் குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும் புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் 28-10 சீல உபாசகர் செங் கை நறு நீரும் அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் என்று இந் நீரே எங்கும் பாய்தலின் கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி தாமரை குவளை கழுநீர் ஆம்பல் 28-20 பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும் கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு கடை காப்பு அமைந்த காவலாளர் மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் 28-30 பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும் செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும் பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும் மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் மாலைக்காரரும் காலக் கணிதரும் 28-40 நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர் என்று இவர் பல் வகை மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும் வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் பால் வேறு ஆக எண் வகைப் பட்ட கூலம் குவைஇய கூல மறுகும் மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் 28-50 போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோர் அருந் தொழில் குறையா மறுகும் அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும் மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும் 28-60 கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் வேணவா மிகுக்கும் விரை மரக் காவும் விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் கோலம் குயின்ற கொள்கை இடங்களும் கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திர விகாரம் என எழில் பெற்று 28-70 நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள 28-80 அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும் சாவக மன்னன் தன் நாடு எய்த தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும் புக்க பின் அந்தப் பொய் உருவுடனே தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் 28-90 சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என் நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத் 'தையல்' கேள் நின் தாதையும் தாயும் செய்த தீவினையின் செழு நகர் கேடுற துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் 28-100 திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும் இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் 28-110 அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின் புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப் பங்கயச் சேவடி விளக்கி பான்மையின் அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை 28-120 இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல் துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள் நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கன் ஆதலின் தாங்க நல் அறம் தானும் கேட்டு முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி தன்னான் இயன்ற தனம் பல கோடி எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய 28-130 வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத் தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் "காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத் தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது இன்னும் கேளாய் நல் நெறி மாதே! "தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும் தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால் ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப் 28-140 பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக் காதலி தன்னொடு கபிலை அம் பதியில் நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும் அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ? தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன் 28-150 ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின் மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள் பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய் பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின் 28-160 கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித் திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக் கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி வட திசை மருங்கின் வானத்து இயங்கித் தேவர் கோமான் காவல் மாநகர் மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு 28-170 நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப் பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது தென்மேற்கு ஆக தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும் வையம் காவலன் தன் பால் சென்று கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் 'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 28-180 தங்காது இப் பதித் தருமதவனத்தே வந்து தோன்றினள் மா மழை போல்' என மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி 'கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம் 28-190 அலத்தல்காலை ஆகியது அறியேன் மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி "உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது 28-200 பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத் தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத் தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் 'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய அங்கு அப் பீடிகை இது என' அறவோன் 28-210 பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து தீவதிலகையும் திரு மணிமேகலா மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும் அங்கையின் ஏந்திய அமுதசுரபியை வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் 28-220 மொய்த்த மூ அறு பாடை மாக்களில் காணார் கேளார் கால் முடம் ஆனோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் 28-230 சீர் பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப வசித் தொழில் உதவி வளம் தந்தது என பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லும்காலை தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண அடிகளும் மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி 'நன்று' என விரும்பி நல் அடி கழுவி 28-240 ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப் போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து 'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் 28-245 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |