மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ... தொடர்ச்சி - 2 ... 3. மலர்வனம் புக்க காதை வயந்தமாலைக்கு மாதவி உரைத்த உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின் தந்தையும் தாயும் தாம் நனி உழந்த வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர் இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட 3-10 தாமரை தண் மதி சேர்ந்தது போல காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி 'தூ நீர் மாலை தூத்தகை இழந்தது நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும் மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும் சுதமதி கேட்டு துயரொடும் கூறும் 'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும் மணிமேகலை தன் மதி முகம் தன்னுள் 3-20 அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் படை இட்டு நடுங்கும் காமன் பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ? பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்? ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய் ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம் பாராவாரப் பல் வளம் பழுநிய காராளர் சண்பையில் கௌசிகன் என்போன் இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் 3-30 ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி 3-40 நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான் தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர் இலவந்திகையின் எயில் புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள் மண்ணவர் விழையார் வானவர் அல்லது பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் 3-50 "கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும் தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார் அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் 3-60 பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின் அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் 3-70 ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும் நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின் "ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல் "சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும் வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் "செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும் எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும் பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட மயன் பண்டு இழைத்த மரபினது அது தான் அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள் 3-80 செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள் 'மணிமேகலையொடு மா மலர் கொய்ய அணி இழை நல்லாய்! யானும் போவல்' என்று அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன் நாணமும் உடையும் நன்கணம் நீத்து காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி உண்ணா நோன்போடு உயவல் யானையின் 3-90 மண்ணா மேனியன் வருவோன் தன்னை 'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன் எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே! உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன் 3-100 உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று 'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும் கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத் ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன் வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப் பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் 3-110 தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி நீடலும் நீடும் நிழலொடு மறலும் மையல் உற்ற மகன் பின் வருந்தி கையறு துன்பம் கண்டு நிற்குநரும் சுரியல் தாடி மருள் படு பூங் குழல் பவளச் செவ் வாய் தவள வாள் நகை ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல் காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை 3-120 அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும் வம்ப மாக்கள் கம்பலை மூதூர் சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும் மை அறு படிவத்து வானவர் முதலா எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய 3-130 கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில் பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை ஐயவி அப்பிய நெய் அணி முச்சி மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ் பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில் தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர 3-140 தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி 'ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோ' என கண்டு நிற்குநரும் விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி 'அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் 3-150 மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின் நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை? மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்? பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல' என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல் குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் 3-160 திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் பிடவமும் தளவமும் முட முள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத் தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என் 3-171 4. பளிக்கறை புக்ககாதை 'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில் குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்! மாசு அறத் தௌிந்த மணி நீர் இலஞ்சி பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப 4-10 கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு கம்புள் சேவல் கனை குரல் முழவா கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்! இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்! மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின் 4-20 அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்!' எனப் பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன் உரு கெழு மீது ஊர் மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து 4-30 கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி மயங்கு கால் எடுத்த வங்கம் போல காழோர் கையற மேலோர் இன்றி பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர் ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது 4-40 பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக் காலவேகம் களி மயக்குற்றென விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன் மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி கார் அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் 4-50 நாடக மடந்தையர் நலம் கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண் சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான் கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை 'மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்! யாது நீ உற்ற இடுக்கண்!' என்றலும் 4-60 ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு எட்டிகுமரன் எய்தியது உரைப்போன் 'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல் தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமேகலையொடு கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது 4-70 இது யான் உற்ற இடும்பை' என்றலும் மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி 'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி ஈங்கு யான் வருவேன்' என்று அவற்கு உரைத்து ஆங்கு ஓடு மழை கிழியும் மதியம் போல மாட வீதியில் மணித் தேர் கடைஇ கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத் தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும் "சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்" என 4-80 வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை! ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு?' என அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல் பளிக்கறை மண்டபம் பாவையைப் 'புகுக' என்று ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை நீங்காது நின்ற நேர் இழை தன்னை 4-90 கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல் பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம் அரசு இளங் குமரன் 'ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன் வளர் இள வன முலை' மடந்தை மெல் இயல் தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ? விளையா மழலை விளைந்து மெல் இயல் முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்? 4-100 செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்? மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப் பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும் 'இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ? 4-110 அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இது என உணர்ந்து 4-120 மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்' என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின் இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் 4-125 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |