மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.
கயவாகு மன்னனின் கி. பி. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை. மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்தம் திறம் (கோட்பாடு) பற்றிக் கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்த சமயம். ஆக கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய சமயங்கள் பத்து எனத் தெரியவருகிறது. (1. ஆசீவகவாதி, 2. சாங்கியவாதி, 3. சைவவாதி, 4. நிகண்டவாதி, 5. பிரமவாதி, 6. பூதவாதி, 7. பௌத்தவாதி, 8. வேதவாதி, 9. வைசேடிகவாதி, 10. வைதிகவாதி) நூல் கடவுள் வாழ்த்து இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி தென் திசைப் பெயர்ந்த இத் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு தன் கீழ் நின்று மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு வெந் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற சம்பு என்பாள் சம்பாபதியினள் செங்கதிர்ச் செல்வன் திருக் குலம் விளக்கும் கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட 0-10 அமர முனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை செங் குணக்கு ஒழுகி அச் சம்பாபதி அயல் பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற ஆங்கு இனிது இருந்த அருந் தவ முதியோள் ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு ஆணு விசும்பின் ஆகாயகங்கை வேணவாத் தீர்த்த விளக்கே வா என பின்னிலை முனியாப் பெருந் தவன் கேட்டு ஈங்கு 'அன்னை கேள் இவ் அருந் தவ முதியோள் 0-20 நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந் நாள் என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர் 0-30 நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப் பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான் வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும் மணிமேகலை தான் மா மலர் கொய்ய அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும் ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப் பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் 0-40 பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன் துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம் ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள் தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும் உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப் பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் 0-50 உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி 'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும் தீபதிலகை செவ்வனம் தோன்றி மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும் பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும் அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் 0-60 மற்று அப் பாத்திரம் மடக்கொடி ஏந்தி பிச்சைக்கு அவ் ஊர்ப் பெருந் தெரு அடைந்ததும் பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும் அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே கொங்கு அலர் நறுந் தார்க் கோமகன் சென்றதும் அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி 0-70 மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன் ஆய் இழை தன்னை அகலாது அணுகலும் வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியின் தௌிந்த வண்ணமும் அறை கழல் வேந்தன் 'ஆய் இழை தன்னைச் சிறை செய்க' என்றதும் சிறைவீடு செய்ததும் 0-80 நறு மலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும் உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் 'நவை அறு நன்பொருள் உரைமினோ' என சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும் ஆங்கு அத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும் 0-90 புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு 'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும் இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என். 0-98 1. விழாவறை காதை உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப் பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று 'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள் மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின் 1-10 மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும் சமயக் கணக்கரும் தம் துறை போகிய அமயக் கணக்கரும் அகலார் ஆகி கரந்து உரு எய்திய கடவுளாளரும் பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும் வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள் கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் 1-20 மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப் புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும் மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க' என வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை 1-30 முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன் 'திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி 'வானம் மும் மாரி பொழிக! மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக! தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள் இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப் 1-40 பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பல உடன் பரப்புமின் காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் 1-50 பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின் கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின் தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின் ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் 1-60 பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும் தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும் தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்தி அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் 1-72 2. ஊரலர் உரைத்த காதை நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள் காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் மணிமேகலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி வயந்தமாலையை 'வருக' எனக் கூஉய் 'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' என வயந்த மாலையும் மாதவி துறவிக்கு 2-10 அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின் மணிமேகலையொடு மாதவி இருந்த அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி 'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்! உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்? "வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக் கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும் 2-20 தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும் கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும் சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும் பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் காயக் கரணமும் கண்ணியது உணர்தலும் கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் கோலம் கோடலும் கோவையின் கோப்பும் காலக் கணிதமும் கலைகளின் துணிவும் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த 2-30 ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும் கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை நல் தவம் புரிந்தது நாண் உடைத்து" என்றே அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி 'நயம்பாடு இல்லை நாண் உடைத்து' என்ற வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் 'காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு போதல்செய்யா உயிரொடு நின்றே பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து 2-40 நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன் காதலர் இறப்பின் கனை எரி பொத்தி ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர் நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள் 2-50 மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள் ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய் ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் மற வணம் நீத்த மாசு அறு கேள்வி 2-60 அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி காதலன் உற்ற கடுந் துயர் கூறப் "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக!" என்று அருளி ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி "உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன் மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த 2-70 சித்திராபதிக்கும் செப்பு நீ என ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என் 2-75 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
தலித்துகள் - நேற்று இன்று நாளை மொழிபெயர்ப்பாளர்: பாலு மணிவண்ணன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 200 எடை: 230 கிராம் வகைப்பாடு : தலித்தியம் ISBN: 978-93-5135-041-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது? · அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன? · பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன? பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? · அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை? · அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன? பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? · இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறதா? · தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக இன்று இருக்கிறார்களா? மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா? · தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை? ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது நேரடியாக வாங்க : +91-94440-86888
|