சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி - 15 ... 141
அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே, அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன் திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி 5 அணி நலம் பாடி வரற்கு; ஓரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி நீருள் நிழல் போல், கொளற்கு அரியள் போருள் அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல் மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்! 10 பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை, மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் இன்னா இடும்பை செய்தாள்; அம்ம, சான்றீர்! கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ 15 பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு; இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும் கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின் வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள்; வாழி, சான்றீர்! 20 என்று, ஆங்கே, வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட, திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே, பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை போல, கொடுத்தார், தமர். 25 142
புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை, அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண், செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது, நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும் பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும் 5 ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும், உள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல் மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே, 10 பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண் ஆய் இதழ் மல்க அழும்; ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்; காண்பாம் கனங்குழை பண்பு; என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ? 15 நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின் 'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை செய்தான் இவன்' என, 'உற்றது இது' என, 20 எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின், பைதல ஆகிப் பசக்குவமன்னோ என் நெய்தல் மலர் அன்ன கண்; கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே, 25 ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய, காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று மாண் மலர்க் கொன்றையவன் 'தெள்ளியேம்' என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே, 'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலியுறீஇ, 30 உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான் எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள் மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால், தோன்றினனாக, தொடுத்தேன்மன், யான்; தன்னைப் பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய 35 கையுளே, மாய்ந்தான், கரந்து கதிர் பகா ஞாயிறே! கல் சேர்திஆயின், அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித் தருகுவைஆயின், தவிரும் என் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ; 40 மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின், பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை, கைவிளக்காகக் கதிர் சில தாராய்! என் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு சிதைத்தானைச் செய்வது எவன்கொலோ? எம்மை 45 நயந்து, நலம் சிதைத்தான் மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ? மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன் நன்று தீது என்று பிற; 50 நோய் எரியாகச் சுடினும், சுழற்றி, என் ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே நோய் உறு வெந் நீர்: தெளிப்பின், தலைக் கொண்டு வேவது, அளித்து இவ் உலகு; மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின் சான்றீர்! 55 நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ் வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை நலியும் விழுமம் இரண்டு; எனப் பாடி, இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்; 60 எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்லிரா நல்கிய கேள்வன் இவன் மன்ற, மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள், 65 நல் எழில் மார்பனைச் சார்ந்து. 143
'அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின், பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று நல் நுதல் நீத்த திலகத்தள், "மின்னி மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல் கணிகாரம் கொட்கும்கொல்?" என்றாங்கு அணி செல 5 மேனி மறைத்த பசலையள், ஆனாது நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா, அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி என் செய்தாள்கொல்?' என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன் மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, 10 அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச, பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும் நிறை உடையேன் ஆகுவேன்மன்ற மறையின் என் மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் 15 சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு; 'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே, 'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின் இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை 20 என் உயிர் காட்டாதோ மற்று; 'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண் கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை 25 ஒழிய விடாதீமோ என்று; அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார் தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப; வாஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின், யாஅம் தளிர்க்குவேம்மன்; 30 நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல் தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில் சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல பல வல்லன் தோள் ஆள்பவன்; 35 நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப; இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற; சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப; போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய; காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை 40 மாலையும் வந்தன்று, இனி; இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்; அருள் இலை; வாழி! சுடர்! ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின், மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து 45 வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின், யாண்டும், உடையேன் இசை, ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப் பீர் அலர் போலப் பெரிய பசந்தன நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று, 50 பேர் அஞர் செய்த என் கண் தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும் என் உயிர் காவாதது; 55 என ஆங்கு, மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர, தென்னவன் தெளித்த தேஎம் போல, இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே. 60 144
நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா, என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண் நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும் கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி, அன்ன இடும்பை பல செய்து, தன்னை 5 வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல் தெருளும் மருளும் மயங்கி வருபவள் கூறுப கேளாமோ, சென்று; 'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்? நின் உற்ற அல்லல் உரை' என, என்னை 10 வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன், 'குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று, மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு; 15 எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்! எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ? காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்; 20 வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த என் அல்லல் தீராய்எனின்; என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக் 25 கண்ணோடினாய் போறி, நீ; நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள் ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும் நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்? ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம் 30 கோதை புனைந்த வழி; உதுக் காண், சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும் பாவை கொண்டு ஓடியுழி; உதுக் காண் தொய்யில் பொறித்த வழி உதுக் காண் 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறனில்லான் 35 பைய முயங்கியுழி; அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து, விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத் தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும் வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று 40 ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ; காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என் கண்ணீர் அழலால் தெளித்து; பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் 45 பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப் புறங்காலின் போக இறைப்பேன்; முயலின், அறம் புணையாகலும் உண்டு; துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று பாடுவேன், என் நோய் உரைத்து; 50 புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் எல்லி ஆக, 'எல்லை' என்று, ஆங்கே, பகல் முனிவன்; எல்லிய காலை இரா, முனிவன்; யான் உற்ற அல்லல் களைவார் இலேன்; ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து, 55 'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என் நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய் செய்யும், அறனில்லவன்; ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள் நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ 60 ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ நீருள் புகினும், சுடும் ஓஒ! கடலே! 'எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்?' என்று, இந் நோய் உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை 65 அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு; ஆங்கு, கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர, கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி, அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் 70 திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் நல் அவையுள் படக் கெட்டாங்கு, இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே. 145
'துனையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும் கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி உயிர்க்கும்; உசாஅம்; உலம்வரும்; ஓவாள், கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார, 5 பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற, பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத் துறந்தானை உள்ளி, அழூஉம்; அவனை மறந்தாள்போல் ஆலி நகூஉம்; மருளும்; சிறந்த தன் நாணும் நலனும் நினையாது, 10 காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண, நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது, மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும், நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும், ஊழ் செய்து, இரவும் பகலும்போல், வேறாகி, 15 வீழ்வார்கண் தோன்றும்; தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட்கு எல்லாம் வரும்; தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என் 20 கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ, கொண்மூக் குழீஇ முகந்து; நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம் கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது 25 கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே! எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின், புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக் கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான் 30 செல்லாது நிற்றல் இலேன்; ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலைநாள், போதரின் காண்குவேன்மன்னோ பனியொடு மாலைப் பகை தாங்கி, யான்; இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி 35 ஒள் வளை ஓடத் துறந்து, துயர் செய்த கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி பெருங் கடல் புல்லென, கானல் புலம்ப, இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற, விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான், 40 யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்; தான் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது? வானும், நிலனும், திசையும், துழாவும் என் ஆனாப் படர் மிக்க நெஞ்சு ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என் 45 ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப, அளி புறம் மாறி, அருளான் துறந்த அக் காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார் எல்லாரும் தேற்றர், மருந்து; 50 வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்! எனைத்தானும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்; நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே ஏமராது, ஏமரா ஆறு; கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல் 55 உறையொடு நின்றீயல் வேண்டும், ஒருங்கே நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் இறை இறை பொத்திற்றுத் தீ; எனப் பாடி, நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி, 60 'யாவிரும் எம் கேள்வற் காணீரோ?' என்பவட்கு, ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்; பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு, மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர, ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என் 65 ஆயிழை உற்ற துயர் 146
உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர, அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன் துன்னி அகல, துறந்த அணியளாய், 5 நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு, பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன், கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர, தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை கூறுப கேளாமோ, சென்று; 10 'எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று, உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது கேட்டீமின், எல்லீரும் வந்து; வறம் தெற மாற்றிய வானமும் போலும்; நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் 15 சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து, என்மேல் நிலைஇய நோய்; 'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும் தக்கவிர் போலும்! இழந்திலேன்மன்னோ மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும், 20 அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன! உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக, செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான் நக்கது, பல் மாண் நினைந்து கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் 25 புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்! வரைபவன் என்னின் அகலான் அவனை, திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம், நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும் உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் 30 யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று; மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும் மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய் பாடுவேன், பல்லாருள் சென்று; 35 யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும் யாமம்! நீ துஞ்சலைமன்; எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண் முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின், கதிர்கண் மழுங்கி, மதியும் அதிர்வது போல் 40 ஓடிச் சுழல்வதுமன்; பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே! நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின் கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது போலாது, என் மெய்க் கனலும் நோய்; 45 இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே, வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்; அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி, பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச் செல்வேன், விழுமம் உழந்து; 50 என ஆங்குப் பாட, அருள் உற்று; வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன் நல் எழில் மார்பன் முயங்கலின், அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே. 55 147
ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய, தேறுகண் நறவு உண்டார் மயக்கம்போல், காமம் வேறு ஒரு பாற்று ஆனதுகொல்லோ? சீறடிச் சிலம்பு ஆர்ப்ப, இயலியாள் இவள் மன்னோ, இனி மன்னும் புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக, 5 வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு, ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன் நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்: தோழி! ஓர் 10 ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ? இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ? ஓஒ! அமையும் தவறிலீர் மற்கொலோ நகையின் மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம்மா புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார் 15 மதி மருள நீத்தக்கடை; என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர் சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை விலை வளம் மாற அறியாது, ஒருவன் 20 வலை அகப்பட்டது என் நெஞ்சு வாழிய, கேளிர்! பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த கொலைவனைக் காணேன்கொல், யான்; 25 காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி, ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே! எம் கேள்வன் யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல், வானத்து எவன் செய்தி, நீ? ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல, 30 நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ் வழித் தேரை தினப்படல் ஓம்பு நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை, பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டீமோ செல் கதிர் ஞாயிறே! நீ; 35 அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான் கறாஅ எருமைய காடு இறந்தான்கொல்லோ? உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான்கொல்லோ? செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப் 40 பெறாஅது யான் நோவேன்; அவனை எற் காட்டிச் சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும், உறாஅ அரைச! நின் ஓலைக்கண் கொண்டீ, மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று; அறாஅ தணிக, இந் நோய்; 45 தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல், யாவர்க்கும் அன்னவோ காம! நின் அம்பு; கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால் பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்; ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல் 50 ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை மெய்யாகக் கள்வனோ என்று; வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும் அடாஅ நறவு உண்டார் போல, மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் 55 படாஅமை செய்தான் தொடர்பு கனவினான் காணிய, கண் படாஆயின், நனவினான், ஞாயிறே! காட்டாய் நீஆயின், பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன் கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு 60 என ஆங்கு, கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்; தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்; அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல் மெல் நடைப் பேடை துனைதர, தற் சேர்ந்த 65 அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல் காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி, தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக, 70 நல் எழில் மார்பன் அகத்து. 148
தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு, வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல், கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர; அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; 5 இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப; செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை! மாலை நீ, இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்; அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய 10 துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு? மாலை நீ, கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்; நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண் அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? 15 மாலை நீ, எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை; பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி, திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு? என ஆங்கு 20 ஆய் இழை மடவரல் அவலம் அகல, பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல, போய் அவர் மண் வௌவி வந்தனர் சேய் உறை காதலர் செய் வினை முடித்தே. 149
நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்: கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், 5 ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்; கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால், சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் 10 வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்; ஆங்கு அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்: சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த வினை வரு பருவரல் போல, 15 துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே. 150
அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும், கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல் மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென, 5 விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்; இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால், அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர் பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ? 10 கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம், 'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர், உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின் உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ? கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால், 15 'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர், புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின் கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ? ஆங்கு அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த 20 பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் மை ஈர் ஓதி மட மொழியோயே! |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |