![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’ |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி - 3 ... 21
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, பொருள்வயிற் பிரிதல் வேண்டும்' என்னும் அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; 5 நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே! 'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள்தான், 10 பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்; அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று இமைப்புவரை வாழாள் மடவோள் அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே. 22
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே புலனுடை மாந்திர்! தாய் உயிர் பெய்த பாவை போல, 5 நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால், ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை; நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் 10 பறி முறை பாராட்டினையோ? ஐய! நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல் செய்வினை பாராட்டினையோ? ஐய! குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் 15 இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில் தளர் முலை பாராட்டினையோ? ஐய! என ஆங்கு, அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட, சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண் 20 படர் கூற நின்றதும் உண்டோ ? தொடர் கூர, துவ்வாமை வந்தக்கடை. 23
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல் நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: 5 இனி யான், உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன் தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்; நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10 அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்; கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓரன்னர்; என ஆங்கு, யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது, 15 கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே. 24
'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும்'என்னும் சொல் இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், 'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, 5 மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், பாயல் கொண்டு என் தோள் கனவுவார், 'ஆய் கோல் தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள், கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் 10 நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்றெஞ், செய் பொருள் முற்றும் அளவு?' என்றார்; ஆயிழாய்! தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின், 'தொய்யில் துறந்தார் அவர்' என, தம்வயின், 15 நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு போயின்று, சொல், என் உயிர். 25
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா, கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, 5 முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் 10 குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம் இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்: மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறிது நீர் தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ சிறப்புச் செய்து உழையராப் புகழ்போற்றி, மற்று அவர் 15 புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்; ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர் நீங்குங்கால், நெகிழ்பேகும் வளை எனவும் உள அன்றோ செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர் ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு போல்; 20 ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர் பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்; என ஆங்கு, 25 யாம் நிற் கூறுவது எவன் உண்டு எம்மினும் நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! வானம் துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின் அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே. 26
'ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, 5 தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல, போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற, நோ தக வந்தன்றால், இளவேனில் மேதக பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து, தொல் கவின் தொலைந்த வென் தட மென் தோள் உள்ளுவார் 10 ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர் திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை, வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம் 15 இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்; அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி, திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்' 20 என, நீ தெருமரல் வாழி, தோழி! நம் காதலர், பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் செரு மேம்பட்ட வென்றியர்; 'வரும்' என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே 25 27
'ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த; பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப; காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு 5 தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற; பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில் நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; 10 கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய, புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? கன்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க; ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, 15 வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்? மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள, பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க; தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்;' 20 என ஆங்கு, நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி! நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின், காமவேள் விழவாயின், 'கலங்குவள் பெரிது' என, ஏமுறு கடுந் திண் தேர் கடவி, 25 நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே. 28
'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும் நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண் தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற, செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, 5 தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான் விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின், பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின், அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது 10 வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ? புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின், அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின், மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ? 15 தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின், மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின், பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?' என ஆங்கு, 20 ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர், பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே. 29
'தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர; வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள; 5 இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார; மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல், ஆய் இதழ்ப் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர; மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்; சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி! 10 நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன் நிறை நீவி, வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி, நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்; போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச் சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன் கைநீவி 15 வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்; தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர் வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மண் வலிப்பவும், நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட 20 கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்' என ஆங்கு, வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப் பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம் அருந் துயர் களைஞர் வந்தனர் 25 திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே. 30
'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி, புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும், இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்; துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி, 5 மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ 'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில் குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளராயின்; பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ 10 'ஆனார் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை, தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளராயின்; உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ 'பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து, 15 அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்' என ஆங்கு, தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற, அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின் காமர் கழல் அடி சேரா 20 நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே. |