சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி - 8 ... 71
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, 5 நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர! 'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து, தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல் 10 ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய; 'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும் எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல் அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண் 15 எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய; 'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய; 20 என்று, நின் தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு, ஆராத் துவலை அளித்தது போலும், நீ 25 ஓர் யாட்டு ஒரு கால் வரவு. 72
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ, சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி, ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல, புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, 5 மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி, கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர! கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ, பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ 10 'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான், மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை; நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில், 15 ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை; வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை; 20 என ஆங்கு செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று, அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப; கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ 25 இந் நோய் உழத்தல் எமக்கு. 73
அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை, கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான், தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல, வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர! 5 'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி, 'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து, இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்; கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி, 10 'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்; என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி, முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் 15 நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள, கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்; என ஆங்கு மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும் 20 புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின், தோலாமோ, நின் பொய் மருண்டு.
74
பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம், கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 5 'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்; நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்; முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து, 10 பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்; என ஆங்கு 'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, ஊரவர் உடன் நகத் திரிதரும் 15 தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே. 75
'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும் ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி 5 உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், 10 வதுவை நாளால் வைகலும், அஃது யான் நோவேன், தோழி! நோவாய், நீ' என எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென: 'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச் சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, 15 விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்; 'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என ஊடியிருப்பேனாயின், நீடாது, அச்சு ஆறாக உணரிய வருபவன் 20 பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல் 'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான் இகலியிருப்பேனாயின், தான் தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் 25 ஆங்க விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும், ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது, அவ்அவ் இடத்தான் அவைஅவை காண 30 பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவேன், தோழி! கடன் நமக்கு எனவே. 76
'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி: 5 'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ 'கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை; ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு, 10 நெடுங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை; 'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றி, தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ 15 புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை என ஆங்கு, அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு, அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, 20 தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ நாம் செயற்பாலது, இனி. 77
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள் அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல், தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, 5 மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர் அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்: தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் 10 பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்; பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல; தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்; 15 மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல் வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்; ஆங்க 20 'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும், இடையும், நிறையும் எளிதோ நிற் காணின், கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு. 78
பன் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி, உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென, அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் 5 பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப் பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! 10 'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து, நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான் எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை; 'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் 15 தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான் அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல் மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை; 'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான் செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான் 20 மூடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார் தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை; ஆங்க, ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ, வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின் 25 முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே, தண் பனி வைகல் எமக்கு. 79
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர், அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 5 தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்; 'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின் சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ; 10 புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில் பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்; மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ; கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி 15 வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; 'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின் கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ; என ஆங்கு பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, 20 நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி; ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் ஈங்கு எம் புதல்வனைத் தந்து. 80
நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் பவழம் புனைந்த பருதி சுமப்ப, 5 கவழம் அறியா நின் கை புனை வேழம் புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே வருக! எம் பாக மகன்! கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் 10 தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே, 'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார் வளை நெகிழ்பு யாம் காணுங்கால்; ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, 15 உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால்; ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே, நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் 20 அல்குல் வரி யாம் காணுங்கால்; ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும், போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய 25 கோதை பரிபு ஆட; காண்கும். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |