பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 11 ...

21. வஞ்சின மாலை

(கலிவெண்பா)

'கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரிய இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய-காண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக 5

முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்; பொன்னிக்
கரையில், 'மணல் பாவை நின் கணவன் ஆம்' என்று,
உரைசெய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர்; உரைசான்ற 10

மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்-
தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின் பின் சென்று,
'கல் நவில் தோளாயோ!' என்னக், கடல் வந்து,
முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக்கொண்டு,
பொன் அம் கொடி போலப் போதந்தாள்; மன்னி, 15

மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி,
கணவன் வரக் கல் உருவம் நீத்தாள்; இணை ஆய
மாற்றாள் குழவி விழ, தன் குழவியும் கிணற்று
வீழ்த்து, ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள்; வேற்றொருவன்
நீள் நோக்கம் கண்டு, 'நிறை மதி வாள் முகத்தைத் 20


வாகை சூடும் சிந்தனை
Stock Available
ரூ.160.00
Buy

நூலக மனிதர்கள்
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

உணவு யுத்தம்
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

அவளது வீடு
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

மர்மயோகி நாஸ்டிரடாமஸ்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

இடக்கை
இருப்பு உள்ளது
ரூ.365.00
Buy

21 ஆம் நூற்றாண்டுக் கான 21 பாடங்கள்
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

பாகீரதியின் மதியம்
இருப்பு உள்ளது
ரூ.675.00
Buy

வெண்கடல்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

ஆலிஸின் அற்புத உலகம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

எலான் மஸ்க்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

இவர்கள் வென்றது இப்படித்தான்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

எழுத்தாளன்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

துணையெழுத்து
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

ஆசியாவின் பொறியியல் அதிசயம்!
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

நீர்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மறக்காத முகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

வலிமிகுதல்
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy
தான் ஓர் குரக்கு முகம் ஆக!' என்று, போன
கொழுநன் வரவே, குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை; 'விழுமிய,
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த
நுண் அறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண் இலேன், 25

வண்டல் அயர்விடத்து, யான் ஓர் மகள் பெற்றால்,
ஒண்-தொடி! நீ ஓர் மகன் பெறின், கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று, யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தை நோய் கூரும், திருவிலேற்கு' என்று எடுத்து, 30

தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய், முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தலையை வணங்கி, தலை சுமந்த
ஆடகப் பூம் பாவை-அவள்; போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்; 35

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ' என்னா, விட்டு அகலா-
'நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின் 40

யான் அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்' என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து, 45

விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்- வட்டித்த
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
'மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள் 50

பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?' என்ன-
'பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க' என்று, காய்த்திய 55

பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே-
நல் தேரான் கூடல் நகர்.

வெண்பா

பொற்பு வழுதியும், தன் பூவையரும், மாளிகையும்,
வில் பொலியும் சேனையும், மா வேழமும், கற்பு உண்ண;
தீத் தரு வெங் கூடல் தெய்வக் கடவுளரும்
மாத்துவத்தான் மறைந்தார் மற்று.

22. அழற்படு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது;
காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன;
அரைசர் பெருமான், அடு போர்ச் செழியன்
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து, ஆங்கு,
இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட, 5

புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசுக்கட்டிலில் துஞ்சியது அறியாது;
ஆசான், பெருங்கணி, அறக்களத்து அந்தணர்,
காவிதி, மந்திரக்கணக்கர்-தம்மொடு,
கோயில் மாக்களும், குறுந் தொடி மகளிரும், 10

ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப-
காழோர், வாதுவர், கடுந் தேர் ஊருநர்,
வாய் வாள் மறவர், மயங்கினர் மலிந்து,
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு, தாம் விடைகொள்ள- 15

நித்திலப் பைம் பூண் நிலாத் திகழ் அவிர் ஒளி,
தண் கதிர் மதியத்தன்ன மேனியன்;
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து,
வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி, என்று
இன்னவை முடித்த நல் நிறச் சென்னியன்; 20

நுரை என விரிந்த நுண் பூங் கலிங்கம்
புலராது உடுத்த உடையினன்; மலரா
வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம்,
கொட்டமோடு அரைத்துக் கொண்ட மார்பினன்;
தேனும், பாலும், கட்டியும், பெட்பச் 25

சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன்;
தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும்,
ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று,
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்;
நண் பகல் வர அடி ஊன்றிய காலினன்; 30

விரி குடை, தண்டே, குண்டிகை, காட்டம்,
பிரியாத் தருப்பை, பிடித்த கையினன்;
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்;
முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ,
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு, 35

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்-
வென்றி வெங் கதிர் புரையும் மேனியன்;
குன்றா மணி புனை பூணினன்; பூணொடு
முடிமுதல் கலன்கள் பூண்டனன்; முடியொடு
சண்பகம், கருவிளை, செங் கூதாளம், 40

தண் கமழ் பூ நீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்,
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்;
அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணம் கொண்ட மார்பினன்; 45

பொங்கு ஒளி அரத்தப் பூம் பட்டு உடையினன்;
முகிழ்த்த கைச்
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி,
ஏலும் நல் சுவை இயல்புளிக் கொணர்ந்து,
வெம்மையின் கொள்ளும் மடையினன்; செம்மையின் 50

பவளச் செஞ் சுடர் திகழ் ஒளி மேனியன்;
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்,
முரைசொடு வெண்குடை, கவரி, நெடுங் கொடி,
உரைசால் அங்குசம், வடி வேல், வடிகயிறு,
என இவை பிடித்த கையினன் ஆகி, 55

எண்-அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி,
மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
கொடுந் தொழில் கடிந்து, கொற்றம் கொண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன 60

அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்-
செந் நிறப் பசும் பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்;
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி, 65

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்;
உரைசால் பொன் நிறம் கொண்ட உடையினன்;
வெட்சி, தாழை, கள் கமழ் ஆம்பல்,
சேடல், நெய்தல், பூளை, மருதம்,
கூட முடித்த சென்னியன்; நீடு ஒளிப் 70

பொன் என விரிந்த நல் நிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்
கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ,
'கொள்' எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு 75

நெல் உடைக் களனே, புள் உடைக் கழனி,
வாணிகப் பீடிகை, நீள் நிழல் காஞ்சி,
பாணி கைக்கொண்டு, முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே; அவனே
நாஞ்சில் அம் படையும், வாய்ந்து உறை துலா முன் 80

சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விளைந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து,
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,
உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் 85

கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பெரும் கடவுளும்-
கருவிளை புரையும் மேனியன்; அரியொடு
வெள்ளி புனைந்த பூணினன்; தெள்ளொளிக் 90

காழகம் செறிந்த உடையினன்; காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய
கோட்டினும், கொடியினும், நீரினும், நிலத்தினும்,
காட்டிய பூவின் கலந்த பித்தையன்;
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்தி, 95

செம்மையின் வரூஉம் சிறப்புப் பொருந்தி,
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்;
ஒண் நிறக் காழகம் சேர்ந்த உடையினன்;
ஆடற்கு அமைந்த அவற்றோடு பொருந்தி,
பாடற்கு அமைந்த பல துறை போகி, 100

கலி கெழு கூடல் பலி பெறு பூதத்
தலைவன் என்போன்-தானும்-தோன்றி,
கோமுறை பிழைத்த நாளில், இந் நகர்
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின், 105

யாம் முறை போவது இயல்பு அன்றோ?' என,
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நாற் பால் பூதமும் பாற்பாற் பெயர-
கூல மறுகும், கொடித் தேர் வீதியும்,
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும், 110

உரக் குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன்
கா எரிஊட்டிய நாள் போல் கலங்க,
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட
கறவையும் கன்றும், கனல் எரி சேரா, 115

அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன;
மற வெங் களிறும், மடப் பிடி நிரைகளும்,
விரை பரிக் குதிரையும், புறமதில் பெயர்ந்தன:
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
மைத் தடங் கண்ணார், மைந்தர்-தம்முடன், 120

செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை
நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித்
துறு மலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங் காழ் ஆரம், பரிந்தன பரந்த 125

தூ மென் சேக்கை, துனிப் பதம் பாராக்
காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர்
குதலைச் செவ் வாய்க் குறு நடைப் புதல்வரொடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி, 130

வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டாப்
பெரு மனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி,
'இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து,
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை 135

கொங்கைப் பூசல் கொடிதோ அன்று' என,
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்-நான்கு இரட்டி இருங் கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி,
தண்ணுமை, முழவம், தாழ்தரு தீம் குழல், 140

பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு,
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
'எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
இந் நாட்டு இவ் ஊர் இறைவனை இழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்று, இவ் 145

ஊர் தீ ஊட்டிய ஒரு மகள்' என்ன
அந்தி விழவும், ஆரண ஓதையும்,
செந் தீ வேட்டலும், தெய்வம் பரவலும்
மனை விளக்குறுத்தலும், மாலை அயர்தலும்,
வழங்கு குரல் முரசமும், மடிந்த மா நகர் 150

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனள்; உயிர்த்து,
மறுகிடை மறுகும், கவலையில் கவலும்,
இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்,
ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன், 155

கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி-என்.

வெண்பா

மாமகளும், நாமகளும், மா மயிடன் செற்று உகந்த
கோமகளும், தாம் படைத்த கொற்றத்தாள்; நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்-
மதுராபதி என்னும் மாது.






சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்