பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 2 ...

3. அரங்கேற்று காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில் 10

சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -
இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு, 15

ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை -
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,
கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை -
கூடை செய்த கை வாரத்துக் களைதலும், 20

வாரம் செய்த கை கூடையில் களைதலும்,
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் - 25

யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து 30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35

அசையா மரபின் இசையோன் - தானும் -
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப் பிடித்து, 40

இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும் -
ஆடல், பாடல், இசையே, தமிழே, 45

பண்ணே, பாணி, தூக்கே, முடமே,
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50


செம்பருத்தி
இருப்பு உள்ளது
ரூ.490.00
Buy

வெட்கம் விட்டுப் பேசலாம்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

மருத்துவ ஜோதிடம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

இலக்கற்ற பயணி
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மருந்தில்லா மருத்துவம்
இருப்பு இல்லை
ரூ.190.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஐ லவ் யூ மிஷ்கின்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

பித்தப்பூ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

1984
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ரசிகன்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

புண்ணியம் தேடுவோமே..!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

தொழில் தொடங்கலாம் வாங்க!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சாவித்ரி
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

Animal Farm
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

உடலெனும் வெளி
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

மரப்பாலம்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் - 55

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி, 60

பண் அமை முழவின் கண் எறி அறிந்து,
தண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி,
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு,
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து, வருவது ஒற்றி, 65

இன்புற இயக்கி, இசைபட வைத்து,
வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,
வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் -
ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின் 70

ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,
வன்மையில் கிடந்த தார பாகமும்,
மென்மையில் கிடந்த குரலின் பாகமும்,
மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,
கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத் 75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்து,
கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்வயிற் சேர,
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர,
மேலது உழைஇளி, கீழது கைக்கிளை 80

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,
படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,
குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின், 85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து - ஆங்கு,
இளி முதலாகிய எதிர்படு கிழமையும்,
கோடி, விளரி, மேற்செம்பாலை என
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்,
இணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு - ஆங்கு, 90

யாழ் மேற்பாலை இட முறை மெலிய,
குழல்மேல் கோடி வல முறை மெலிய,
வலிவும், மெலிவும், சமனும், எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன் -
எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது, 95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக, 100

எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,
ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடை நிலம் நாற் கோல் ஆக,
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய, 105

தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த;
பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து ஆங்கு,
ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு; 110

ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;
விருந்து படக் கிடந்த அருந் தொழில் அரங்கத்து -
பேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு, 115

கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் 120

புண்ணிய நல் நீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை
அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,
முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப, 125

அரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும்
தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,
ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து - ஆங்கு -
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130

வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,
வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,
இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க, 135

வாரம் இரண்டும் வரிசையில் பாட,
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் -
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் 140

பின் வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.
ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி, 145

வந்த முறையின் வழிமுறை வழாமல்,
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து, 150

மூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை
ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி,
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கி,
கூறிய ஐந்தின் கொள்கை போல, 155

பின்னையும், அம்முறை பேரிய பின்றை,
பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை, 160

தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி,
விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள் - 'அதுவே
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,
வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை, 165

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு' என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த -
மா மலர் நெடுங் கண் மாதவி மாலை 170

கோவலன் வாங்கிக் கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி - தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் -
வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என். 175

வெண்பா

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,
பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்
போக்கினாள் - பூம் புகார்ப் பொற்றொடி மாதவி, தன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து.

4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?' என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள் 5

முழு நீர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லற் காலை-
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப,
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி, 10

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,
தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு 15

மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென - 20

இளையர் ஆயினும் பகை அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையில் திரியாது பாற் கதிர் பரப்பி, 25

மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து,
செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த 30

நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,
கோலம் கொண்ட மாதவி அன்றியும் -
குட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும் 35

குண திசை மருங்கின் கார் அகில் துறந்து;
வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;
தாமரைக் கொழு முறித்தாதுபடு செழு மலர்,
காமரு குவளை, கழுநீர் மா மலர், 40

பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்;
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,
மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி, 45

காவி அம் கண்ணார் களித் துயில் எய்த -
அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள், 50

கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப, 55

மை இருங் கூந்தல் நெய் அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் -
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
வேனிற் பள்ளி மேவாது கழிந்து, 60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து,
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூஞ் சேக்கை மேவாது கழியத் 65

துணை புணர் அன்னத் தூவியிற் செறித்த
இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது,
உடைப் பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து 70

விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப -
அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு நோதிறம் பாடக் 75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;
புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் - 80

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்.

வெண்பா

கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.






சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்