உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 7 ... 13. புறஞ்சேரி இறுத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு, புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி, 'கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்; படிந்தில சீறடி பரல் வெங் கானத்து; 'கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா; 5 வாள் வரி வேங்கையும் மான் கணம் மறலா; அரவும், சூரும், இரை தேர் முதலையும், உருமும், சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா- செங்கோல் தென்னவர் காக்கும் நாடு' என, எங்கணும் போகிய இசையோ பெரிதே; 10 பகல் ஒளி-தன்னினும், பல் உயிர் ஓம்பும் 'நிலவு ஒளி விளக்கின், நீள் இடை மருங்கின், இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்' என- குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து, கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல, 15 படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு- 'பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி, தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி, தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீர் இள வன முலை சேராது ஒழியவும், 20 தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல் போது சேர் பூங் குழல் பொருந்தாது ஒழியவும், பைந் தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி செந்தளிர் மேனி சேராது ஒழியவும் மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து 25 புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு பால் நிலா வெண் கதிர் பாவைமேல் சொரிய, வேனில் திங்களும் வேண்டுதி' என்றே பார்மகள் அயா உயிர்த்து, அடங்கிய பின்னர்- ஆர் இடை உழந்த மாதரை நோக்கி 30 'கொடுவரி மறுகும்; குடிஞை கூப்பிடும்; இடிதரும் உளியமும்; இனையாது ஏகு' என, தொடி வளைச் செங் கை தோளில் காட்டி, மறவுரை நீத்த மாசு அறு கேள்வி அறவுரை கேட்டு, ஆங்கு, ஆர் இடை கழிந்து- 35 வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து, கான வாரணம் கதிர் வரவு இயம்ப, வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து- மாதவத்து ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் 40 தீது தீர் சிறப்பின் சிறைஅகத்து இருத்தி, இடு முள் வேலி நீங்கி, ஆங்கு, ஓர் நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன், காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி, 45 உள் புலம்புறுதலின், உருவம் திரிய; கண்-புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான், 'கோவலன் பிரியக் கொடுந் துயர் எய்திய, மா மலர் நெடுங் கண் மாதவி போன்று, இவ் அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து, உடனே, 50 வருந்தினை போலும் நீ, மாதவி!' என்று, ஓர் பாசிலைக் குருகின் பந்தரில் பொருந்தி, கோசிக மாணி கூறக் கேட்டே- 'யாது நீ கூறிய உரை ஈது, இங்கு?' என- 'தீது இலன், கண்டேன்' எனச் சென்று எய்திக் 55 கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் இரு நிதிக் கிழவனும் பெரு மனைக் கிழத்தியும் அரு மணி இழந்த நாகம் போன்றதும்; இன் உயிர் இழந்த யாக்கை என்ன, துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்; 60 'ஏவலாளர்! யாங்கணும் சென்று, கோவலன் தேடிக் கொணர்க' எனப் பெயர்ந்ததும்; 'பெருமகன் ஏவல் அல்லது, யாங்கணும், அரசே தஞ்சம்' என்று அருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல, 65 பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும்; வசந்தமாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள், படர் நோய் உற்று, நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு, ஓர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்; 70 வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு, தாழ் துயர் எய்தி, தான் சென்று இருந்ததும்; இருந் துயர் உற்றோள், 'இணை அடி தொழுதேன்; வரும் துயர் நீக்கு' என, மலர்க் கையின் எழுதி. 'கண் மணி அனையாற்குக் காட்டுக' என்றே, 75 மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்; ஈத்த ஓலை கொண்டு, இடைநெறித் திரிந்து; தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்; வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து- அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி, 80 போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை, மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட, உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக் காட்டியது; ஆதலின் கை விடலீயான், 85 ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன், 'அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்; வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்; குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது, 90 கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்; பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!' என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து, 'தன் தீது இலள்' என, தளர்ச்சி நீங்கி, 'என் தீது' என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு- 95 'என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல், பொற்பு உடைத்தாக, பொருள் உரை பொருந்தியது; மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்; கோசிக மாமணி! காட்டு' எனக் கொடுத்து, 'நடுக்கம் களைந்து, அவர் நல் அகம் பொருந்திய 100 இடுக்கண் களைதற்கு ஈண்டு' எனப் போக்கி- மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு, ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து, 105 செந்திறம் புரிந்த செங்கோட்டு-யாழில், தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து, ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி, வரன்முறை வந்த மூ-வகைத் தானத்து, 110 பாய் கலைப் பாவை பாடல்-பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு, பாடல்-பாணி அளைஇ, அவரொடு- 'கூடல் காவதம் கூறுமின் நீர்' என- 'காழ் அகில் சாந்தம், கமழ் பூங் குங்குமம், 115 நாவிக் குழம்பு, நலம் கொள் தேய்வை, மான்மதச் சாந்தம், மணம் கமழ் தெய்வத் தே மென் கொழுஞ் சேறு ஆடி; ஆங்கு, தாது சேர் கழுநீர், சண்பகக் கோதையொடு, மாதவி, மல்லிகை, மனை வளர் முல்லைப் 120 போது விரி தொடையல் பூ அணை பொருந்தி; அட்டில் புகையும், அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும், மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த அம் தீம் புகையும், ஆகுதிப் புகையும், 125 பல் வேறு பூம் புகை அளைஇ; வெல் போர் விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் அளந்து உணர்வு-அறியா ஆர் உயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி; புலவர் செந் நாப் பொருந்திய நிவப்பின் 130 பொதியில் தென்றல் போலாது, ஈங்கு, மதுரைத் தென்றல் வந்தது; காணீர்! நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்; தனி, நீர் கழியினும் தகைக்குநர் இல்' என- முன் நாள் முறைமையின், இருந் தவ முதல்வியொடு 135 பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர்-பெயர்ந்து, ஆங்கு, அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும், பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும், பால் கெழு சிறப்பின் பல் இயம் சிறந்த காலை முரசக் கனை குரல் ஓதையும்; 140 நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்; மாதவர் ஓதி மலிந்த ஓதையும்; மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்; போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் 145 வாரிக் கொண்ட வயக் கரி முழக்கமும்; பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்; கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்; கார்க் கடல் ஒலியிற், கலி கெழு கூடல் ஆர்ப்பு ஒலி எதிர்கொள, ஆர் அஞர் நீங்கி- 150 குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும், மரவமும், நாகமும், திலகமும், மருதமும், சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும், பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து; குருகும், தளவமும், கொழுங்கொடி முசுண்டையும், 155 விரி மலர் அதிரலும், வெண் கூதாளமும், குடசமும், வெதிரமும், கொழுங் கொடிப் பகன்றையும், பிடவமும், மயிலையும், பிணங்கு அரில் மணந்த கொடுங் கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்து, சூழ்போகியஅகன்று ஏந்து அல்குல் 160 வாலுகம் குவைஇய மலர்ப் பூந் துருத்தி, பால்புடைக் கொண்டு, பன் மலர் ஓங்கி, எதிர் எதிர் விளங்கிய கதிர் இள வன முலை: கரைநின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ் வாய்: அருவி முல்லை அணி நகைஆட்டி- 165 விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங் கயல் நெடுங் கண்: விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்; உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி- வையை என்ற பொய்யாக் குலக்கொடி- 170 தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல், புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து, கண் நிறை நெடு நீர் கரந்தனள், அடக்கி- புனல் யாறு அன்று; இது பூம் புனல் யாறு!' என, அன நடை மாதரும் ஐயனும் தொழுது; 175 பரி முக அம்பியும், கரி முக அம்பியும், அரி முக அம்பியும், அரும் துறை இயக்கும் பெரும் துறை மருங்கில் பெயராது; ஆங்கண், மாதவத்துஆட்டியொடு மரப் புணை போகித் தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி- 180 'வானவர் உறையும் மதுரை வலம் கொளத் தான் நனி பெரிதும் தகவு உடைத்து' என்று, ஆங்கு, அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி; கரு நெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும், தையலும் கணவனும் தனித்து உறு துயரம் 185 ஐயம் இன்றி அறிந்தன போலப், பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி, கண்ணீர் கொண்டு கால் உற நடுங்கப்; போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி, 'வாரல்' என்பன போல், மறித்துக் கை காட்ட; 190 புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ள நீர்ப் பண்ணையும், விரி நீர் ஏரியும், காய்க் குலைத் தெங்கும், வாழையும், கமுகும், வேய்த் திரள் பந்தரும், விளங்கிய இருக்கை; அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப் 195 புறஞ்சிறை மூதூர்; புக்கனர் புரிந்து என். 14. ஊர் காண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) புறஞ்சிறைப் பொழிலும், பிறங்கு நீர்ப் பண்ணையும், இறங்கு கதிர்க் கழனியும், புள் எழுந்து ஆர்ப்ப; புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் வேந்து தலை பனிப்ப, ஏந்து வாள் செழியன் 5 ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப- நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும், மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் 10 அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும், மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும், வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய காலை முரசம் கனை குரல் இயம்ப. கோவலன் சென்று, கொள்கையின் இருந்த 15 கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி, 'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி, நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த, அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து, சிறுமை உற்றேன், செய் தவத்தீர்! யான் 20 தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என் நிலை உணர்த்தி, யான் வரும்காறும், பாதக் காப்பினள் பைந்தொடி; ஆகலின், ஏதம் உண்டோ , அடிகள்! ஈங்கு?' என்றலும் கவுந்தி கூறும்: 'காதலி-தன்னொடு 25 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்! 'மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்' என்று, அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி, நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும், யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; 30 தீது உடை வெவ் வினை உருத்தகாலை, பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்; ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை, கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்; பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும், 35 உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும், புரி குழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது, ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை; பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் கொண்டோ ர் உறூஉம் கொள்ளாத் துன்பம் 40 கண்டனர் ஆகி, கடவுளர் வரைந்த காமம் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு, ஏமம் சாரா இடும்பை எய்தினர் இன்றே அல்லால், இறந்தோர் பலரால்; தொன்றுபட வரூஉம் தொன்மைத்து, ஆதலின் 45 தாதை ஏவலின் மாதுடன் போகி, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ? வல் ஆடு ஆயத்து, மண், அரசு, இழந்து; 50 மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன் காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது 55 வல் வினை அன்றோ? மடந்தை தன் பிழை எனச் சொல்லலும் உண்டேல், சொல்லாயோ? நீ அனையையும் அல்லை; ஆய்-இழை-தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றோ? வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்; 60 பொருந்து உழி அறிந்து போது ஈங்கு' என்றலும்- இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் பெரும் கை யானை இன நிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கில் போகி 65 கடி மதில் வாயில் காவலின் சிறந்த அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு, ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்- குட காற்று எறிந்து, கொடி நுடங்கு மறுகின் 70 கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி, பூம் புணை தழீஇ, புனல் ஆட்டு அமர்ந்து 75 தண் நறு முல்லையும், தாழ் நீர்க் குவளையும், கண் அவிழ் நெய்தலும், கதுப்பு உற அடைச்சி; வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல் கொற்கை அம் பெரும் துறை முத்தொடு பூண்டு; 80 தெக்கண மலயகச் செழுஞ் சேறு ஆடி, பொன் கொடி மூதூர்ப் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு எல் படு பொழுதின் இள நிலா முன்றில், தாழ்தரு கோலம் தகை பாராட்ட, வீழ் பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு 85 அரத்தப் பூம் பட்டு அரைமிசை உடீஇ, குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி, சிறுமலைச் சிலம்பின் செங் கூதாளமொடு நறு மலர்க் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து, குங்கும வருணம் கொங்கையின் இழைத்து, 90 செங் கொடுவேரிச் செழும் பூம் பிணையல் சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக் கலி கெழு கூடல் செவ்வணி காட்ட, 95 கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும்-நூலோர் சிறப்பின், முகில் தோய் மாடத்து; அகில் தரு விறகின் மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து; நறுஞ் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு 100 குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்- வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி, இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர, விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண் மழை அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்- 105 ஆங்கு அது அன்றியும், 'ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும், துகிலும், ஆரமும், வாசமும், தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல் 110 வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்? கோதை மாதவி கொழுங்கொடி எடுப்பக் காவும் கானமும் கடிமலர் ஏந்தத், தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து, 115 மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் இன் இளவேனில் யாண்டு உளன்கொல்?' என்று, உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு பருவம் எண்ணும் படர் தீர் காலை- கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க 120 என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக் காடு தீப் பிறப்ப, கனை எரி பொத்தி, கோடையொடு புகுந்து, கூடல் ஆண்ட வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர, ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்- 125 வையமும், சிவிகையும், மணிக் கால் அமளியும், உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும், தமனிய அடைப்பையும், கூர் நுனை வாளும், கோமகன் கொடுப்ப; பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130 பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து; செம் பொன் வள்ளத்து, சிலதியர் ஏந்திய அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி; பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு 135 இலவு இதழ்ச் செவ்வாய் இள முத்து அரும்ப, புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும்; அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன. 140 செங் கயல், நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்; கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள, திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்; செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு வையம் காவலர் மகிழ்தரு வீதியும்- 145 சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை, வேத்தியல், பொதுவியல் என இரு திறத்து, மாத்திரை அறிந்து, மயங்கா மரபின் ஆடலும், வரியும், பாணியும், தூக்கும், 150 கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து, நால் வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்; வாரம் பாடும் தோரிய மடந்தையும்; 155 தலைப் பாட்டுக் கூத்தியும்; இடைப் பாட்டுக் கூத்தியும்; நால் வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு, ஆங்கு, 160 அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக, தவத்தோர் ஆயினும், தகை மலர் வண்டின் நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும், காம விருந்தின் மடவோர் ஆயினும், ஏம வைகல் இன் துயில் வதியும் 165 பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்- வையமும், பாண்டிலும், மணித் தேர்க் கொடுஞ்சியும், மெய் புகு கவசமும், வீழ் மணித் தோட்டியும், அதள் புனை அரணமும், அரியா யோகமும், 170 வளைதரு குழியமும், வால் வெண் கவரியும், ஏனப் படமும், கிடுகின் படமும், கானப் படமும், காழ் ஊன்று கடிகையும், செம்பின் செய்நவும், கஞ்சத் தொழிலவும் வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும், 175 வேதினத் துப்பவும், கோடு கடை தொழிலவும், புகையவும், சாந்தவும், பூவின் புனைநவும், வகை தெரிவு-அறியா வளம் தலைமயங்கிய, அரசு விழை திருவின் அங்காடி வீதியும்- காகபாதமும், களங்கமும், விந்துவும், 180 ஏகையும் நீங்கி, இயல்பில் குன்றா நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்; ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசு ஆர் மேனிப் பசுங் கதிர் ஒளியவும்; 185 பதுமமும், நீலமும், விந்தமும், படிதமும், விதி முறை பிழையா விளங்கிய சாதியும்; பூச உருவின் பொலம் தெளித் தனையவும்; தீது அறு கதிர் ஒளித் தெண் மட்டு உருவவும்; இருள் தெளித்தனையவும்; இரு வேறு உருவவும்; 190 ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின் இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்; காற்றினும், மண்ணினும், கல்லினும், நீரினும், தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்; சந்திர-குருவே, அங்காரகன், என 195 வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்; கருப்பத் துளையவும், கல்லிடை முடங்கலும், திருக்கு, நீங்கிய செங் கொடி வல்லியும்; வகை தெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப் பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும் 200 சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூ நதம் என ஓங்கிய கொள்கையின் பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து, ஆங்கு, இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்- நூலினும், மயிரினும், நுழை நூல் பட்டினும் 205 பால் வகை தெரியாப் பல் நூறு அடுக்கத்து, நறு மடி செறிந்த அறுவை வீதியும்- நிறைக் கோல் துலாத்தர், பறைக் கண் பராரையர், அம்பண அளவையர், எங்கணும் திரிதர, காலம் அன்றியும், கருங் கறி மூடையொடு 210 கூலம் குவித்த கூல விதியும்- பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும், அந்தியும், சதுக்கமும், ஆவண வீதியும், மன்றமும், கவலையும், மறுகும்-திரிந்து, விசும்பு அகடு திருகிய வெங் கதிர் நுழையாப் 215 பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல், காவலன் பேர் ஊர் கண்டு, மகிழ்வு எய்தி, கோவலன் பெயர்ந்தனன், கொடி மதில் புறத்துஎன். |