மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் அத்தியாயம் - 1. வெற்றி வீரர்களுக்கு வரவேற்பு அன்று கங்கை கொண்ட சோழபுரம் அல்லோல கல்லோலப்பட்டது. அதன் பல்வேறு பகுதிகளான *உட்கோட்டை, மளிகை மேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழ நல்லூர், சுண்ணாம்புக்குழி, குருகை பாலப்பன் கோவில் ஆகியவை தனி அலங்காரத்துடன் விளங்கின. இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீதியும் மாவிலைகளாலும், மகா தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கடை-கண்ணியிலும், சுத்தமாக வாசல் மெழுகப் பட்டு, மாக்கோலம் போடப்பட்டிருந்தது. (*இவை இன்றும் தனித் தனிச் சிற்றூர்களாக இலங்குகின்றன.)
நகரத்து ஆண்களும் பெண்களும், சிறியோரும் பெரியோரும், புத்தாடைகள் புனைந்து, பல்வேறு ஆபரணங்களை அணிந்து, எங்கோ திருவிழாவுக்குப் புறப்பட்டிருப்பவர்கள் போல காணப்பட்டனர். வீட்டுப் பெண்டிர் அதிகாலையிலேயே வீட்டைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, காலை உணவு ஆக்கி வீட்டில் உள்ளோருக்கு அளித்துத் தாங்களும் உண்டுவிட்டு, குழந்தைகளும் தங்களும் நல்ல ஆடை-ஆபரணங்களை அணிந்து கொண்டு, ஆவலுடன் வீட்டுத் திண்ணைகளிலோ, அல்லது உட்கோட்டைக்குச் செல்லும் இராசவீதி முடங்குகளிலோ கூடி நின்றனர். நகரின் வெளிக்கோட்டைக் கிழக்கு வாயிலிலிருந்து உட்கோட்டைக்குச் செல்லும் இராசவீதியின் இரு மருங்கிலும் ஒரே ஜனத்திரள். அனைவரின் கண்களும் கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து வரும் வழியிலே பதிந்திருந்தன. அந்தப் பல்லாயிரக் கணக்கான கண்களிலேதான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை பெருமிதம்! எத்தனை ஆர்வம்! ஆம், அவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது; பெருமிதத்துக்குக் காரணம் இருந்தது; ஆர்வத்துக்கும் காரணம் இருந்தது. சோழநாட்டுடன் பலகாலமாகத் திருமணத் தொடர்பாலும், அரசியல் தொடர்பாலும் இணைந்து, அதை ஒரு பேரரசாக இயங்கச் செய்து வந்த வேங்கி நாட்டைக் கைப்பற்ற முயன்றான் மேலைச் சளுக்கிய மன்னன் ஆகவமல்லன். அவனையும் அவனது படையையும் முடக்காற்றுப் போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி வாகை சூடிய சோழப் படையும், அதனை நடத்திச் சென்ற மாமன்னர் இரண்டாம் இராசேந்திரதேவர், பட்டத்து இளவரசர் இராசமகேந்திரர், அவர்களது இளைய சகோதரர் வீரராசேந்திரர் ஆகியோரும் மற்றும், மிலாடுடையான் நரசிங்கவர்மன் போன்ற பல குறுநில மன்னர்களும், ஜயமுரி நாடாழ்வான், அணிமுரி நாடாழ்வான், சயங்கொண்ட சோழ பிரமாதிராசன் போன்ற படைத் தலைவர்களும், தண்டநாயகர் தலைவரான மதுராந்தகத் தமிழ் பேரரையன் ஆகியோரும் அன்று தலைநகர் திரும்பிக் கொண்டிருந்தனர். பல காலமாகச் சோழப் பேரரசிலிருந்து வேங்கி நாட்டைப் பிரித்து விட முயன்று வருபவர்கள் மேலைச் சளுக்கியர்கள் என்பதும், அதற்காக அவர்கள் தொடுக்கும் ஒவ்வொரு போரிலும் அவர்களை முறியடித்து வரும் வலிமை வாய்ந்த படையே தங்கள் நாட்டுப்படை என்பதும் சோழப் பெருமக்களுக்குத் தெரியும். ஆதலால் ஒவ்வொரு போரும் முடிந்து வெற்றி வாகைசூடித் திரும்பும் தங்கள் வீரப்படைக்கு நகரே திரண்டு வந்து வரவேற்பு அளிப்பது வழக்கம். இதை விட மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி அவர்களுக்கு வேறு என்ன இருக்கிறது? சோழ நாட்டின் வீரம் ஒவ்வொரு தடவையும் முன்னிலும் அதிகமாக நிலைநாட்டப் படும்போது, அந்நாட்டு மக்களிடம் பெருமிதம் எழாமல் இருக்க முடியுமா? ஆனால் அவர்கள் கண்களிலே ததும்பி நின்ற ஆவல்? அது தனிப்பட்டது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக எழுந்து நின்றது. சோழ வேந்தரின் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலட்படை ஆகிய நால்வகைப் படைகளிலும் சோழ நாட்டின் ஒவ்வொரு வீர மகனும் பணி செய்து வந்தான். நாட்டின் பெருமையை நிலைநாட்ட, அதன் வீரத்திறனைப் பகைவருக்கு எடுத்துக்காட்ட, வீடு-வாசல், பெண்டு-பிள்ளை, பெற்றார்-சுற்றம் யாவற்றையும் மறந்து, உயிரைத் துரும்பாக மதித்துப் போர்க்களம் சென்ற அந்த இளங்காளைகளின் நிலை என்ன ஆயிற்று என்பதைப் போர் முடிந்து படை ஊர் திரும்பிய பின்னரே அவர்களைச் சார்ந்தோர் அறிய முடியும். இங்கே இவ்வாறு இராசவீதி நெடுக நகர மாந்தர் ஆவலுடன் காத்திருக்க, உட்கோட்டையில் அரச குடும்பத்துப் பெண்டிர் இவர்களைவிடப் பேராவலுடன் காத்திருந்தனர். உட்கோட்டையில் அமைந்திருந்த சோழகேரளன், முடிகொண்ட சோழன் எனும் பெயருடைய இரண்டு அரண்மனைகளிலுந்தாம் அரச குடும்பதினர் வசித்து வந்தனர். மேன்மாடங்களில் வானளாவும் கம்பங்களில் பெரிய புலிக் கொடிகளைப் பறக்க விட்டுக் கொண்டிருந்த இவ்விரு அரண்மனைகளிலும் வசித்த மாமன்னர் இரண்டாம் இராசேந்திர தேவரின் மனைவியரான கிழானடிகள், திரைலோக்கிய முடையாள், அவருடைய மகள் மதுராந்தகி, இராச மகேந்திரனின் மனைவி அருமொழிநங்கை, அவருடைய மகள் *வானவன் மாதேவி (வானவி) ஆகியோரும், அரண்மனைத் தாதியர், பணிப் பெண்கள், அரசகுலப் பெண்களின் சேடியர் ஆகியோரும் சோழகேரளன் அரண்மனை வாயிலில் கூடியிருந்தனர். போர் களத்திலிருந்து திரும்பும் மன்னரையும் அவரது சகோதரர்களையும் வரவேற்க இருந்த அம்மூவரது மனைவியர்களுக்காகப் பணிப் பெண்கள் ஆத்தி மாலைகளையும், மஞ்சள் நீரடங்கிய தங்கத் தட்டுக்களையும் சுமந்து கொண்டு நின்றனர். (* வீரராசேந்திரனுக்கு ஒரு மகள் இருந்தனளென்றும், அவள் மேலைச் சளுக்கிய மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தனை மணந்தனளென்றும் ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. ஆனால் எந்த நூலிலும் அவள் பெயர் கொடுக்கப்படவில்லை. நம் கதையில் அவள் ஒரு முக்கிய பாத்திரமாதலால், அவளுடைய தந்தை வழிப் பாட்டியார் வானவன் மகாதேவியின் பெயரை நான் சூட்டியிருக்கிறேன். நம் கதையில் அவளை ‘வானவி’ என்று சுருக்கி அழைப்போம்.) இராசவீதி துவங்கும் இடத்தில், அதாவது, வெளிக் கோட்டையின் கீழை வாயிலிலும் புலிக்கொடி ஒன்று கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. அங்கே சோழ நாட்டின் அரசியல் அதிகாரிகளில் ஒருவரான செம்பியன் மூவேந்தான் தலைமையில், இன்னும் பல அரசியல் அதிகாரிகளும், வேங்கி நாட்டு இளவரசன் குலோத்துங்கனும், இரண்டாம் இராசேந்திர தேவரின் புதல்வர்களான இராசேந்திரசோழன், (தந்தையின் பெயரே மகனுக்கும் விளங்குவதைக் காண்க! ) முகையவிழங்கல் முடிகொண்ட சோழன், சோழ கேரளன், கடாரங்கொண்ட சோழன், படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழன், இரட்டப்பாடி கொண்ட சோழன் ஆகிய அறுவரும், வீரராசேந்திரனின் புதல்வர்களாகிய மதுராந்தகன், கங்கை கொண்ட சோழன் ஆகிய இளைஞர்களும், போர்க்களத்திலுருந்து திரும்பும் வேந்தர் மரபினரையும், படையினரையும் வரவேற்க அரசாங்க விருதுகளுடன் காத்திருந்தனர். இப்படி நகரமெங்கும் மக்களும், அரச குடும்பத்தினரும், அரசாங்க அதிகாரிகளும் ஆங்காங்கே வரவேற்புக்குத் தயாராயிருக்கையில், நகரின் வடபால் அமைந்திருந்த கங்கை கொண்ட சோழேச்சுரர் திருக்கோவிலில் அன்று விசேட வழிபாடுகள் நடந்து கொண்டிருந்ததன் அறிகுறியாக ஆலயத்தின் கண்டாமணி நெடுநேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. வெற்றி வீரர்களாகத் திரும்பும் மன்னவரும் மற்றோரும், தலைநகருக்கு அரைக் காத தூரம் வடகிழக்கேயுள்ள *சோழகங்கம் ஏரிக்கரையில் முன்னாள் மாலையே வந்து தங்கியிருப்பதாகவும் மறுநாள் காலையில் நல்ல பொழுதாக இருப்பதால், அப்பொழுதுதான் தலைநகரில் பிரவேசிப்பார்களெனவும் முன்னாள் நகருக்குச் செய்தி வந்திருந்தது. ஆதலால் இரவோடு இரவாக அலங்கார ஏற்பாடுகளும், வரவேற்பு ஏற்பாடுகளும் நடந்தன. இப்பொழுது அனைவரும் வெற்றித் திருவை மருவி வரும் வீரச்சிங்கங்களை வரவேற்க உவகையுடன் காத்திருந்தனர். (*இது பொன்னேரி என்ற பெயருடன் இன்றும் இருக்கிறது.) கீழைக்கோட்டை வாசலிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றது மரங்கள் அடர்ந்த நீண்ட சாலை ஒன்று. அதன் வழியாகத்தான் மன்னரும் மற்றோரும் வரவேண்டும். அவர்கள் காலையில் எந்நேரம் கிளம்பி, எந்நேரம் இங்கு வந்து சேருவார்கள் என்பது திட்டமாகத் தெரியாததால் செம்பியன் மூவேந்தன் முதலானோர் அதிகாலையிலிருந்தே அங்கே வந்து காத்திருந்தனர். கோட்டை வாசலின் மேற்பாகம் ஒரு மும்மாட மண்டபமாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் கீழ்த்தளத்தில் அரசியல் அதிகாரிகளும் அரசகுல இளைஞர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். மும்மாட மண்டபத்தின் மேல் உப்பரிகை மீது சோழ வீரன் ஒருவன் ‘காளம்’ என்ற நீண்ட ஊது கொம்புடன் நின்று கொண்டிருந்தான். அந்த உயரமான இடத்திலிருந்து அவனால் நெடுந்தூரம் காணமுடியும். மன்னரும் மற்றோரும் பார்வைக்குத் தென்பட்டதும் குழலெடுத்து ஊதி எல்லோரையும் தயார்ப்படுத்தவே அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். தூரத்தில் சாலை மரங்களுக்கு மேலே புழுதிப் படலம் தெரிந்தது. மும்மாட மண்டபத்தின் மேலே நின்ற வீரன் தனது கொம்பை உயர்த்தி வாயில் புதைத்து முழங்கினான். உடனே கூடியிருந்தோரிடையே ஒரு பரபரப்பு. மண்டபத்தில் அமர்ந்திருந்தோரும் கோட்டை வாயிலின் முன் கூடினர். புலிக்கொடி தாங்கிய குதிரை வீரன் ஒருவன், அரசகுலப் பெண்டிருக்குச் செய்தி அறிவிக்க உட்கோட்டையை நோக்கி விரைந்தான். சாலை மரங்களிடையே வெயில் புகுந்து சென்றதால் எழுந்த ஒளிப்புள்ளிகளின் இடையே கரும்புளிகளாகப் படைகள் தென்பட்டன. பின்னர் யானைகளின் மணியோசையும் குதிரைகளின் குளம்போசையும் மெல்லெனக் கேட்டன. வான விளிம்பிலிருந்து மேக மண்டலம் ஒன்று திரண்டு வருவது மாதிரி கடல் போன்ற அந்தப் பெரும் படை கோட்டை வாயிலை நோக்கி விரைந்து வந்தது. முதலில் யானைப்படை வந்தது. முகபடாம் தரித்த மலைபோன்ற யானை ஒன்றின் மீது புலிக் கொடியைத் தாங்கியவாறு சோழ வீரன் ஒருவன் முதலில் வர, அவனைத் தொடர்ந்து யானைப் படையும், குதிரைப் படையும், தேர்ப் படையும் வந்தன. தேர்ப் படைக்குப் பின்னால் மூன்று வெண் புரவிகள் ஒரு வரிசையாக வந்தன. அவற்றுள் நடுவிலிருந்த புரவியில் சோழ வேந்தர் இரண்டாம் இராசேந்திர தேவர் அமர்ந்திருந்தார். அவருக்கு இரு புறங்களிலும் பட்டத்து இளவரசர் இராசமகேந்திரனும், வீரராசேந்திரனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னால், போரில் கலந்து கொண்ட குறுநில மன்னர்களும், வீரச் சிங்கங்களான சோழச் சேனாதிபதிகளும் பல குதிரைகளில் வந்தனர். அடுத்ததாகப் போரில் கைப்பற்றிய பல்வேறு படைப்பொருள்களுடன், சிறைசெய்த பகைவர் படைவீரர்களும் இருந்தனர். எல்லோருக்கும் கடைசியாக, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் சோழ நாட்டின் காலாட் படையினர் அணிவகுத்து வந்தனர். ஒவ்வொரு படையும் கோட்டை வாயிலைத் தாண்டி உள்ளே சென்ற போது, கூடியிருந்தோர் “வெற்றி வேல்! வீரவேல்! வாழ்க பரகேசரி இராசேந்திர தேவர்! வாழ்க, வாழ்க!” என்று வாழ்த்தினர். படையினரும்,“வெற்றி வேல்! வீரவேல்!” என்று எதிரொலி செய்தனர். மன்னரும், அவரது சோதரர்களும் அமர்ந்திருந்த புரவிகள் கோட்டை வாயிலை நெருங்கியதும், கூடி நின்றோர் அவர்களை எதிர்கொண்டு சென்றனர். மூன்று குதிரைகளும் நின்றன. இராசேந்திர தேவரும், மற்றுமுள்ளோரும் கீழே இறங்கினர். புரோகிதர்கள் மந்திர கோஷம் முழங்கப் பூர்ண கும்பம் அளித்து மாமன்னரை வரவேற்றனர். பின்னர் சோழேச்சுரர் கோவில் அர்ச்சகர் பொன் தட்டில் வைத்திருந்த ஆத்தி மாலையை மன்னருக்குச் சாத்தி, திருநீறு முதலிய பூசைப் பிரசாதங்களை வழங்கினார். பிறகு எல்லோரும் குதிரைகள் மீது ஏறிக்கொள்ள, ஊர்வலம் கோட்டைக்குள்ளே சென்றது. வழி நெடுகக் கூடி நின்ற நகர மாந்தரின் வாழ்த்தொலியும், ஆனந்த ஆரவாரமும் வானைப் பிளந்தன. இவ்வாறு மக்களின் அன்பு நிறைந்த குதூகல வரவேற்பை ஏற்றுக் கொண்டவாறு அந்த மாபெரும் வெற்றிப் படை ஊர்வலம் உட்கோட்டைக் குள்ளே நுழைந்து சோழகேரளன் அரண்மனை முன்னுள்ள திடலில் வந்து நின்றது. மன்னரும், அரச குடும்பத்து ஆடவரும் மட்டும் தம் குதிரைகளோடு அரண்மனையின் முகப்பு மண்டபம் வரையில் சென்றனர். அங்கே சென்றதும் அவர்கள் குதிரைகளிலிருந்து இறங்கி மேற்கு முகமாக நிற்க, பாங்கிமார் நிறைகுடம், கெண்டி நீர், மஞ்சள் நீர்த் தட்டு, முப்பரி விளக்கு ஆகியவற்றை ஏந்திவர்களாக அவர்களை மும்முறை சுற்றி வந்து *திருட்டி நீக்கினர். பின்னர் போர் சென்ற மன்னவரையும், அவரது சோதரர்களையும் அவரவர் மனைவியர் நெருங்கி, ஆத்தி மாலை அணிவித்து, மஞ்சள் நீரடங்கிய தங்கத் தட்டைச் சுற்றி, நெற்றியில் அந்நீரல் திலகமிட்டு வணங்கினர். (*இதைத் திருஷ்டி கழித்தல் என்றும் சொல்வதுண்டு.) இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் வெளியே போர்ப் படையினரும், பொது மக்களும் “வெற்றி வேல்! வீரவேல்! வாழ்க மாமன்னர் பரகேசரி இராசேந்திர தேவர்! வாழ்க இளவரசர் இராசகேசரி இராச மகேந்திர தேவர்! வாழ்க இளங்கோ வீரராசேந்திரர்!” என்று இடைவிடாமல் வாழ்த்தொலி கூறிக் கொண்டிருந்தனர். மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|
வேதாளம் சொன்ன கதை ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 450.00 தள்ளுபடி விலை: ரூ. 405.00 அஞ்சல்: ரூ. 50.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
விண்ணளந்த சிறகு ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்வகைப்பாடு : சூழலியல் விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|