|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் அத்தியாயம் - 5. எதிர்பாராத நிகழ்ச்சி
சோழத் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் துயரில் ஆழ்ந்திருந்தது. காலையில் வெற்றிக் களிப்பு எதிரொலித்த அந்நகரில் மாலையில் அழுகை ஓலம் எதிரொலித்தது. காலையில் மகிழ்ச்சி தாண்டவ மாடிய சோழ மக்கள் முகத்தில் மாலையில் துயரத்தின் சாயல் பிழிந்து நின்றது. காலையில் இன்பம் பெருக்கெடுத்தோடிய அந்நாட்டில் மாலையில் துன்பம் மழையாகப் பொழிந்தது.
ஆம்; சோழவள நாடு சிறிதும் எதிர்பாராத துயர நிகழ்ச்சி ஒன்று அன்று பிற்பகலில் நடைபெற்று விட்டது. பட்டத்து இளவரசர் இராசமகேந்திர தேவர் காலமாகிவிட்டார்! முடக்காற்றுப் போர், இதுவரைச் சோழர்களுக்கும் மேலைச் சளுக்கியர்களுக்கும் இடையே நடந்த போர்கள் எல்லாவற்றிலும் பெரியது. இரு நாட்டவரும் மிகத் தீவிரமாகவும், பெரும் தீரத்துடனும் போரிட்டனர். நாள் தோறும் இரு தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் உயிரிழந்தனர்; கணக்கற்ற குதிரைகளும் யானைகளும் மடிந்தன. ஆயினும், வெற்றி எந்நாட்டுக்கு என்பதை நிர்ணயிக்க முடியாதபடி இருந்தது போர் நிலை. போர்க்கலையில் வல்ல சோழப்படைத் தலைவர்களுக்கு இணையாகப் பகைவர்களாகிய மேலைச் சளுக்கியர்களின் படைத்தலைவர்கள் தங்கள் படைகளைப் போரிடச் செய்தனர். இதுவரையில் மேலைச் சளுக்கியர்கள் இத்தனை திறமையுடன் போரிட்டதே இல்லை. எப்படி அவர்களுக்குத் திடீரென்று இத்தனை திறமையும், போர் நுட்பமும் ஏற்பட்டன என்று சோழர்கள் வியந்தனர். ஆனால் விரைவில் அவர்களுக்கு இதன் ரகசியம் வெளியாகியது. மேலைச் சளுக்கர்களின் இந்தத் திடீர்ப் போர் நுட்பத்துக்கும், அதன் காரணமாகப் பிறந்திருந்த திறமைக்குப் பின்னணியில் இருந்தவன் அவர்களது புதிய தண்டநாயகன் வாலாதேவன் என்பது சோழர்களுக்குத் தெரிய வந்தது. வாலாதேவன் சளுக்கியர் படையை நடத்தியதோடு, தானே போர்க்களத்தில் குதித்து, நாள் தோறும் எண்ணற்ற சோழ வீரர்களை நமனுலகுக்கு அனுப்பி வந்தான். ஆதலால் அந்த வாலாதேவனை ஒழித்தாலன்றி, சோழர்கள் முடக்காற்றுப் போரில் வெற்றி கான முடியாது என்ற நிலை ஏற்பட்டது. போர் மும்மரமாக நடந்து கொண்டிருக்கையில் ஒருநாள் இரவு முடக்காற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பாசறையில் மாமன்னர் இரண்டாம் இராசேந்திர தேவர், பட்டத்து இளவரசர் இராச மகேந்திரர், இளங்கோ வீரராசேந்திரர் மற்றும் முக்கியமான சோழப் படைத்தளபதிகள் ஒன்று கூடி, வாலாதேவனை ஒழிப்பது பற்றித் தீவரமாக மந்திராலோசனை நடத்தினர். வாலாதேவன் சளுக்கியப் படையை நடத்துவதில் கவனம் செலுத்த முடியாதவாறு, தங்களுள் யாராவது ஒருவர் அவனுடன் நேர் நின்று போர் செய்வதென அவர்கள் முடிவு செய்தனர். அவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் செய்து வந்தால் பகைவர் படையைச் சிதறி ஓடச் செய்து விடலாமென்பது அவர்கள் கருத்து. வாலாதேவனுடன் நேர்நின்று போர் செய்யும் பொறுப்பை இளையதேவர் இராசமகேந்திரர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு அந்த இரு தனிப்பட்ட வீரர்களிடையே நிகழ்ந்த போரானது இரண்டு நாட்களே நீடித்தது. இரண்டாம் நாள் மாலையில் இளைய தேவரின் வீரவாளுக்கு வாலாதேவன் இரையானான். வாலாதேவன் வீழ்ந்து விட்ட செய்தி பரவியதுமே குந்தள வேந்தன் ஆகவமல்லன், அவன் மகன் விக்கிரமாதித்தன், மற்றும் இருகையன் ஆகியோர் இடிந்து விட்டனர்; இதரப் படைத் தலைவர்களும் மனம் சோர்ந்து விட்டனர். கடைசியில் இம்முறையும் அவர்கள் தோல்வியை எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓட்டம் பிடித்தனர். இப்படி முடக்காற்றுப் போரில் வெற்றியைத் தேடித் தந்த வீரச் சிங்கம் இளையதேவர், அவ்வெற்றியை உடலில் வடுக்கூடப் படாமல் தேடிக்கொண்டுவிடவில்லை. போரில் அசகாய சூரனான வாலாதேவனின் வாளும் அம்புகளும் இளையதேவரின் உடலைப் பல இடங்களில் பதம் பார்த்திருந்தன. போர்க்களத்திலிருந்து திரும்புபவர்களுக்கு இத்தைகய உடற்காயங்களும், அவற்றுக்குரிய சிகிச்சைகளும் சகஜ மானவைதாம். அவ்வாறே இளையதேவரின் உடற்புண்களுக்கும் உடனடியாக மூலிகைகள் வைத்துக் கட்டப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சோழப்படை ஊர் திரும்பும் பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குள்ளே ரணமாற்றும் குணம் மிக்க அந்த மூலிகைகளால் அவரது புண்களில் பெரும்பாலனவை ஆறித் தழும்பிட்டு விட்டன. ஆனால் அவருடைய நெஞ்சின் இடப்பாகத்தில் அம்பு ஒன்று பாய்ந்து ஏற்படுத்தியிருந்த ஆழமான புண் ஒன்று மட்டும் எளிதில் ஆறாமல் இளையதேவருக்கு கொடுந்துன்பம் விளைவித்து வந்தது. அவர் நெஞ்சிலே பாய்ந்த அந்த அம்பானது விஷம் தோய்க்கப்பட்டதாக இருந்ததே அப்புண் ஆறாமைக்குக் காரணம். போர்ப் படையுடன் சென்றிருந்த ராணுவ மருத்துவர் தமது திறமை அனைத்தையும் காட்டி, பல்வேறு மூலிகைகள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும், அந்த ரணம் நாள்படப் புறையோடிப் பெரிதாகி வந்ததேயன்றிக் குணமாகவில்லை. வீரம் செறிந்த இளையதேவர் அப்புண் அளித்த தாங்கொண்ணா வேதனையை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. வேறு எவராகவேனும் இருந்தால், அந்த ரண வேதனையைப் பொறுக்க மாட்டாமல் படுக்கையில் விழுந்து அலறித் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இளையதேவரோ வேதனையை மறைத்துக் கொண்டதோடு நாடு திரும்பும் நெடும் பயணத்தையும் மேற்கொண்டார். இதன் பயனாக அன்று காலையில் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பி, வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்து, தமது அரண்மனைக்கு வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் இளையதேவருக்கு சன்னி கண்டுவிட்டது. உடனே அரசாங்கத்தின் தலைமை மருத்துவர் காலாந்தக மால்வேளார் வரவழைக்கப்பட்டார். சக்தி மிக்க பல மருந்துகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. மாலை நேரத்துக்குச் சற்று முன், சோழப் பேரரசின் வருங்கால வேந்தராக விளங்க வேண்டிய வீரதிலகத்தின் உயிர் உடற்கூண்டைவிட்டுப் பறந்தோடி விட்டது. மணிமுடி தரித்த மன்னரேயாயினும், மண்ணிலே நெளியும் கேவலம் புழுவேயாயினும், உயிரினங்கள் யாவற்றுக்கும் பிறப்பும் இறப்பும் நிலையான நிகழ்ச்சிகள்தாம். ஆனால் சோழப் பேரரசை நிறுவிய விசயாலய சோழர் காலந்தொட்டு, அந்நாட்டில் மணிமுடி தரித்து செங்கோலோச்சிய மன்னர்கள் யாவருக்கும் ஏற்படாத புதுவகை மரணம் இளையதேவரான இராச மகேந்திரருக்கு ஏற்பட்டது. ஆம், அவரது முன்னோர்களில் முதுமையில் மரணமடைந்தோரும் இருந்தனர்; இளமையில் மரணமடைந்தோரும் இருந்தனர். ஆனால் பெரும்பாலும் அவர்களுக்குக் கிட்டிய சாவு வீரச் சாவு. போர்க்களத்தில் வீரச் சமர் புரிந்து பெற்ற சாவு. முதுமை காரணமாக, நீடித்த நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களும் ஓரிருவர் இருந்தனர். எனினும் இத்தனை இளம் வயதில் நோய்ப் படுக்கையில் சாயாமலே ஓர் அம்புப் புண்ணுக்கு இரையானவர்கள், அதிலும் வெற்றி கொண்டு தலைநகர் திரும்பிய சில நாழிகைப் பொழுதுக் கெல்லாம் மரண தேவனை எதிர் கொண்டவர்கள் அன்றுவரைச் சோழப் பரம்பரையில் யாருமே கிடையாது. தவிர, இளையதேவர் சோழ அரச குடும்பத்தினருடையவும், குடிமக்களுடையவும் பேரன்புக்குப் பெரிதும் பாத்திரமாக விளங்கியவர். எவ்வளவுக்கு எவ்வளவு வீரம் செறிந்தவரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அன்புருவாக விளங்கியவர். மாமன்னர் சோழ தேவரையும், இளையதேவர் இராச மகேந்திரரையும் நாட்டு மக்கள் தங்கள் இரு கண்களாகப் போற்றி வந்தனர். ஆதலால் அவரது திடீர் மரணம் நாட்டை ஒரே துயரில் ஆழ்த்திவிட்டது. அது மட்டுமா? எடுத்த எடுப்பிலே மதுராந்தகிக்கு இரு தோல்விகள். ஆனால், தோல்விகளே வெற்றிச் சிகரத்துக்கு ஏறும் படிகள் என்ற கருத்துடைய அவள் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. அன்று தந்தை தனக்கு உணர்த்திய ‘உரிமை அல்லது வீரம்’ என்று இரு தாரக மந்திரங்களை அவள் வலுவாகப் பற்றிக்கொண்டாள். குலோத்துங்கனைப் பொறுத்தவரையில் அவனுக்குச் சோழ அரியணைமீது எவ்வித உரிமையும் இல்லை. ஆதலால் வீரத்தின் மூலந்தான் அவனைத் தன் ஆணையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் கொண்டாள். இளையதேவரின் எதிர்பாராத மரணத்தால் குலோத்துங்கனின் வேங்கிப் பயணம் திட்டமிட்டிருந்தவாறு அன்று மாலையில் தொடங்க முடியாததாயிற்று. அடுத்து வந்த மூன்று நாட்களும் துக்கம் கொண்டாடும் நாட்களாக அமைந்து விட்டமையாலும், அரச குடும்பத்தினர் அந்நாட்களில் பயணத்தை மேற்கொள்வது இயல்பில்லை ஆதலாலும், அந்நாட்களிலும் அவன் புறப்பட இயலாதவனானான். ஆதலால், வெற்றி விழா முடிந்த ஐந்தாவது நாள்தான், குலோத்துங்கன் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட முடிந்தது. அன்று பகலில் இரு சோழ வீரர்களுடன் அவன் புறப்பட இருந்தான். பிரயாணத்துக்கான ஏற்பாடுகள் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது காலை பத்து நாழிகைப் பொழுதிருக்கும், குலோத்துங்கன் அரசகுலப் பெண்டிரிடம் விடை பெற்றுக் கொள்ள சோழ கேரளன் அரண்மனை அந்தப்புரத்துக்கு வந்தான். தன் அத்தை கிழானடிகளிடமும், திறைலோக்கியமுடையாளிடமும் விடைபெற்றுக் கொண்டபின், அவனுடைய கண்கள் மதுராந்தகிக்காக் அந்தப்புரமெங்கும் துழாவின. “யாரைத் தேடுகிறாய், *அபயா?” என்று அவன் நோக்கை உணர்ந்த கிழானடிகள் முறுவலித்தவாறு வினவினாள். (*குலோத்துங்கனுக்கு அபயன் என்ற பெயரும் வழங்கி வந்துள்ளது. S.S.I., Vol. IV.NO.1338) குலோத்துங்கன் மறுமொழி கூறுமுன், அருகில் அமர்ந்திருந்த திரைலோக்கியமுடையாள் ‘கொல்’லென நகைத்து, “இது என்ன கேள்வி அக்கா? அந்தப்புரத்தில் அபயனின் விழிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தால், அவை யாருக்காக அலைபாயும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறிவிட்டுக் குலோத்துங்கனை நோக்கி, “தம்பி அபயா, காதலர் விடைபெறுவதற்குத் தனியிடம் தேவை அப்பா. அதை உணர்ந்துதான் போலும், நீ இங்கே வந்து கொண்டிருப்பதாகப் பணிப்பெண் வந்து அறிவித்ததும், மதுராந்தகி அரண்மனைப் பூங்காவுக்குப் போவதாகக் கூறிச் சென்று விட்டாள். போ, விரைவாக அங்கே போ. உன் காதலி உனக்காக அங்கே காத்திருக்கப் போகிறாள்,” என்று சொன்னாள். குலோத்துங்கன் கிளம்பினான். ஆனால் அச்சமயம், “நில் அபயா!” என்ற கிழானடிகளின் அவசரக்குரல் அவனை நிறுத்தியது. அவன் திரும்புமுன் கிழானடிகளே எழுந்து அவனிடம் நடந்தாள். அன்புடன் அவன் தோள் மீது கைவைத்து, “அபயா, அந்தப் பித்துக் கொண்ட பெண்ணுக்கு நீ தான் அறிவுரை கூற வேண்டும். நம் வானவி விளையாட்டாக ஏதோ கூறியதற்கு இவள் திடுக்கிடும்படியான ஆணை ஒன்றை இட்டிருக்கிறாளாம், ஆணை!...” என்றாள். “ஆணையா?” “ஆம், உன்னை இந்தச் சோழ நாட்டின் வேந்தனாக்குவதாக!” “என்ன?” குலோத்துங்கன் திடுக்கிட்டான். “அசட்டுத்தனமாக அப்படி ஓர் ஆணையிட்டதோடு நில்லாமல், அதனை நிறைவேற்றித் தருமாறு தன் தந்தையிடமும் வெட்கமின்றிக் கேட்டு விட்டாள்!” “இது என்ன கேலிக்கூத்து? மதுராந்தகியா இப்படியெல்லாம் நடந்து கொண்டாள்? என்னாள் நம்ப முடியவில்லையே?” “மாமன் என்ன கூறினார்கள்?” “இந்தச் சோழநாட்டின் அரியணையில் ஒருவன் அமர, ஒன்று அவன் இந்நாட்டின் அரசுரிமை பெற்றவனாக இருக்க வேண்டும்; அல்லது தன் போர் வலிமையால் அதைக் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்றார்கள்.” “நன்கு கூறினார்கள்; நன்கு கூறினார்கள்! அந்த இரண்டும் என்னிடம் கிடையா. நான் இந்தச் சோழ அரியணையை மனத்தால் நினைப்பதற்குக் கூட உரிமையற்றவன். தவிர, வளர்த்த வீட்டையே சூரையாடும் வஞ்சகனுமல்ல நான். அத்தை, நீங்கள் கவலை விடுக. உங்கள் மகளின் பைத்தியக்கார எண்ணத்தில் நான் ஒருபோதும் பங்குகொள்ளமாட்டேன்.” “அது சரிதான், அபயா. உன் மனப்போக்கை நாங்கள் நன்கு அறிவோம். இருப்பினும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே?” என்று இன்னும் ஐயம் நீங்காதவளாக குலோத்துங்கனின் முகத்தை நோக்கினாள் கிழானடிகள். “ஆமாம், அதோடு காதல் கிழத்தி கரைக்கும்போது...?” என்ற இடைச் சொருகலை நுழைத்து முகத்தை நெளித்தாள், அருகில் அமர்ந்திருந்த திரைலோக்கியமுடையாள். குலோத்துங்கனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னை அத்தனை பெரிய பித்தனாகவா எண்ணுகிறீர்கள், அத்தை?” என்று குமுறினான் அவன். “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் துரோகியாக நான் ஒருபோதும் மாற மாட்டேன். என்னை நம்புங்கள் அத்தை; நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தந்தையார் மீது ஆணையாகக் கூறுகிறேன்: இத்தவத் திருநாட்டுக்காக நான் எத்தகைய தியாகமும் செய்யத் தயாரயிருப்பேனேயன்றி, இந்த அரியணையைப் பெற சிறு துரும்பைக்கூட நான் ஒருநாளும் அசைக்க மாட்டேன்.” “நீ கூறுவது மெய்தான், அபயா. ஆயின் இராசரீகமும் நியதிக் கோட்பாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை. தனது அரசைப் பெருக்குவது அரசர்களின் கடமை; அதுதான் அவர்களது வீரத்துக்கு அறிகுறி. அதிலே நியாய வாதங்களைப் பொருத்திப் பின் வாங்குபவனைக் கோழை என்கின்றது இராசரீகம். தவிர, நீ இந்நாட்டின் மீது அழியாப் பற்றுடையவன் என்பது நாடறிந்த உண்மை. அந்தப் பற்று, ஆளும் ஆசையாக உருப்பெறுவது இயற்கையென்றே இந்நாட்டு மக்கள் கருதுவார்கள். அதிலும் என் விந்தை மகள் செய்திருக்கும் ஆணையைப்பற்றி இச்சோணாட்டு மாந்தர் கேள்வியுறும் போது அவர்கள் குமுறுவார்கள்; உங்கள் இருவருக்கும் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டி வெறுப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதை நாங்கள் எங்ஙனம் பொறுப்போம், அபயா?” கிழானடிகள் குரல் கரகரத்தது: அவளது நயனங்களிலே நீர்ப் பொட்டுக்கள் துளிர்ந்தன. மதுராந்தகியின் ஆணையின் விபரீதப் போக்கை உணர்ந்தான் குலோத்துங்கன். அவன் உள்ளம் விம்மிற்று. “ஆம் அத்தை!” என்றான் அவன். “அதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்.” “செய்ய வேண்டியது பெரிதாக ஒன்றும் இல்லை, அபயா. நீ நலமுற நாடு சேர்ந்து, நோயுற்றுள்ள உன் தந்தையாரிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த வீணாசைக் காரியையும் மணந்து அங்கே அழைத்துச் சென்றுவிட வேண்டும். அதுதான் எங்களுக்கு நீ செலுத்தும் நன்றிக் கடன்; அது தான் உன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட இந்தச் சோழ வளநாட்டுக்கு நீ செய்யும் அருந்தொண்டு.” “அப்படியே செய்கிறேன், அத்தை,” என்று உணர்ச்சி பெருகக் கூறினான் குலோத்துங்கன். “மதுராந்தகியின் அசட்டுத்தனத்தால் எங்களையும் உங்களையும் சூழ இருக்கும் அவப்பெயரைத் துடைக்க அவ்வாறே செய்கிறேன், அத்தை. இனி, இந்நாடு உதவி கோரி என்னை அழைத்தாலன்றி, அல்லது நான் நாடிழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை தோன்றினாலன்றி இச்சோழ மண்ணில் அடி எடுத்து வையேன். வருகிறேன் அத்தை. வணக்கம்...!” அவன் அவ்விருவரது பாதங்களையும் தொட்டு வணங்கிவிட்டு விர்ரென நடந்தான். மாமன் மனைவியை மாமி என்று அழைப்பதற்குப் பதிலாக அத்தை என்று அழைக்கும் பழக்கம் அன்று சோழ அரச பரம்பரையினரிடையே இருந்தது. மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
தூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|
© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் |