இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 12 ... 23. கட்டுரை காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உண் கண் தவள வாள் முகத்தி; கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி; இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 5 வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்; இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும், வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்; வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்; பனித்துறைக் 10 கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன், குல முதல் கிழத்தி ஆதலின், அலமந்து ஒரு முலை குறைத்த திருமா பத்தினி அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் 15 முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக், 'கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என- வாட்டிய திரு முகம் வலவயிற் கோட்டி, 'யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என- 20 'ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்! மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்; கட்டுரை ஆட்டியேன்; யான் நின் கணவற்குப் பட்ட கவற்சியேன்; பைந்தொடி! கேட்டி பெருந்தகைப் பெண்! ஒன்று கேளாய், என் நெஞ்சம் 25 வருந்திப் புலம்புறு நோய் தோழி! நீ ஈது ஒன்று கேட்டி, எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதராய்! ஈது ஒன்று கேள், உன் கணவற்குத் தீதுற வந்த வினை காதில் 30
மணி நா ஓசை கேட்டதும் இலனே; அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் இன்னும் கேட்டி; நல் நுதல் மடந்தையர் 35 மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப்படாஅது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும், ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக் குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கம் தாராது இதுவும் கேட்டி, உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி, புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் "அரைச வேலி அல்லது யாவதும் புரை தீர் வேலி இல்" என மொழிந்து, 45 மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி இன்று அவ் வேலி காவாதோ? என, செவிச் சூட்டு ஆணியில், புகை அழல் பொத்தி, நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று, வச்சிரத் தடக் கை அமரர் கோமான் 50 உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து, இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை இன்னும் கேட்டி, நன் வாய் ஆகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை 55 திரு நிலைபெற்ற பெருநாள் இருக்கை, அறன் அறி செங்கோல், மற நெறி நெடு வாள், புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன், பூம் புனல் பழனப் புகார் நகர் வேந்தன், தாங்கா விளையுள், நல் நாடு-அதனுள், 60 வலவைப் பார்ப்பான், பராசரன் என்போன், குலவு வேல் சேரன் கொடைத் திறம் கேட்டு, 'வண் தமிழ் மறையோர்க்கு வான் உறை கொடுத்த திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு' என, காடும், நாடும், ஊரும், போகி, 65 நீடு நிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு, ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி, ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க 70 நா வலம் கொண்டு, நண்ணார் ஓட்டி, பார்ப்பன வாகை சூடி, ஏற்புற நன் நலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன்- செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்பது ஊரே அவ் ஊர்ப் 75 பாசிலை பொதுளிய போதி மன்றத்து; தண்டே, குண்டிகை, வெண்குடை, காட்டம், பண்டச் சிறு பொதி, பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன்; 'காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி! 80 கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி! விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி! பூந் தண் பொருநைப் பொறையன் வாழி! மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!' என; குழலும், குடுமியும், மழலைச் செவ் வாய், 85 தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி, விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர; 'குண்டப் பார்ப்பீர்! என்னோடு ஓதி, என் பண்டச் சிறு பொதி கொண்டு போமின்' என; சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90 ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன், பால் நாறு செவ் வாய்ப் படியோர் முன்னர், தளர் நா ஆயினும், மறைவிளி வழா அது, உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத, தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95 முத்தப் பூணூல், அத்தகு புனை கலம், கடகம், தோட்டொடு கையுறை ஈத்து, தன் பதிப் பெயர்ந்தனனாக- நன் கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி, வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி, 100 'படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன்' என, இடு சிறைக் கோட்டத்து இட்டனராக, வார்த்திகன் மனைவி, கார்த்திகை என்போள், அலந்தனள்; ஏங்கி அழுதனள், நிலத்தில்; 105 புலந்தனள்; புரண்டனள்; பொங்கினள்; அது கண்டு, மை அறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவாது ஆகலின், திறவாது அடைந்த திண் நிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி 110 'கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்' என, ஏவல் இளையவர் காவலன் தொழுது, வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப, 'நீர்த்து அன்று இது' என நெடுமொழி கூறி, 115 'அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன்' என, தடம் புனல் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர், 120 இரு நில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி, அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே; நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் மலை புரை மாடம் எங்கணும் கேட்ப, கலை அமர் செல்விக் கதவம் திறந்தது 125 'சிறைப்படு கோட்டம் சீமின், யாவதும் கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்மின்; இடு பொருள் ஆயினும், படுபொருள் ஆயினும், உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்' என யானை எருத்தத்து, அணி முரசு இரீஇ, 130 கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் தான் முறை பிழைத்த தகுதியும் கேள், நீ 'ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து, அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண, 135 உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்' எனும் உரையும் உண்டே, நிரை தொடியோயே!- கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு, வடி வேல் தடக் கை வசுவும், குமரனும், தீம் புனல் பழனச் சிங்கபுரத்தினும், 140 காம்பு எழு கானக் கபிலபுரத்தினும், அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்- வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இரு-முக் காவதத்து இடைநிலத்து யாங்கணும், 145 செரு வெல் வென்றியின், செல்வோர் இன்மையின், அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து, கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு, சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும் 150 சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை, முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்- வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன், பரதன் என்னும் பெயரன்; அக் கோவலன் விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்- 155 'ஒற்றன் இவன்' எனப் பற்றினன் கொண்டு, வெற்றி வேல் மன்னர்க்குக் காட்டிக் கொல்வுழி; கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி, நிலைக்களம் காணாள், நீலி என்போள், 'அரசர், முறையோ? பரதர், முறையோ?' 160 மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழு நாள் இரட்டி எல்லை சென்றபின், 'தொழு நாள் இது' எனத் தோன்ற வாழ்த்தி, மலைத் தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில் 165 கொலைத் தலைமகனைக் கூடுபு நின்றோள், 'எம் உறு துயரம் செய்தோர் யாவதும் தம் உறு துயரம் இற்று ஆகுக' என்றே விழுவோள் இட்ட வழு இல் சாபம் பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள் நீ 170 உம்மை வினை வந்து உருத்தகாலை, செம்மையிலோர்க்குச் செய் தவம் உதவாது வார் ஒலி கூந்தல்! நின் மணமகன் - தன்னை ஈர்-ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி, வானோர்-தங்கள் வடிவின் அல்லதை, 175 ஈனோர் வடிவில் காண்டல் இல்' என, மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு விதி முறை சொல்லி, அழல்வீடு கொண்டபின்- 'கருத்து உறு கணவன் கண்டபின் அல்லது, இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலன்' என, 180 கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து, 'கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்; மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு' என, இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒரு கரைக் கொண்டு, ஆங்கு, 185 அவல என்னாள், அவலித்து இழிதலின், மிசைய என்னாள், மிசை வைத்து ஏறலின்; கடல் வயிறு கிழித்து, மலை நெஞ்சு பிளந்து, ஆங்கு, அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல் நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி- 190 பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ், 'ஓர் தீத் தொழில் ஆட்டியேன் யான்' என்று ஏங்கி எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் 'தொழு நாள் இது' எனத் தோன்ற வாழ்த்தி, பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி, 195 வாடா மா மலர் மாரி பெய்து, ஆங்கு, அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த, கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு வான ஊர்தி ஏறினள்-மாதோ- கான் அமர் புரி குழல் கண்ணகி-தான்-என். 200 வெண்பா தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய், மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. கட்டுரை முடி கெழு வேந்தர் மூவருள்ளும் படை விளங்கு தடக் கைப் பாண்டியர் குலத்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம் பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும், விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5 ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம் வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும், பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும், ஆரபடி, சாத்துவதி என்று இரு விருத்தியும், 10 நேரத் தோன்றும் வரியும் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வட ஆரியர் படை கடந்து, தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் 15 புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் அரைசுக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று. 20 வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை (கொச்சகக் கலி) 'குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி, அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன், மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க, முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ?' என-முனியாதே, 'மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை, 5 கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான்' என்றாள். என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி, நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து, குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்; இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின், 10 சிறுகுடியீரே! சிறுகுடியீரே! தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர் தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! 15 தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்; கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்; குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்; பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்; பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20 ஒரு முலை இழந்த நங்கைக்கு, பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே. 1 கொளுச் சொல் ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்: அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல், சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து, இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே. ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி! 'அஞ்சல் ஓம்பு' என்று, நலன் உண்டு நல்காதான் மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே. 2 எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக் கல் தீண்டி வந்த புதுப் புனல்; கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார் உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 3 என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப் புனல்; பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார் முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 4 யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப் போது ஆடி வந்த புதுப் புனல்; போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார் மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 5 பாட்டு மடை உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப, புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின், உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக் குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி! 6 சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே- பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள், சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. 7 அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும், இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே- பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம் மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. 8 சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே- வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து, குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே. 9 பாட்டு மடை 'இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே- கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே, வெறியாடல் தான் விரும்பி, 'வேலன், வருக' என்றாள்! 10 ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே- மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்! வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின் குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். 11 செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே- வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்! வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்; ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின். 12 நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன் மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்! தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன், கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின். 13 பாட்டு மடை வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து, நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால், மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே! 14 கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல் மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்- அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. 15 மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல் குல மலை உறைதரு குறவர்-தம் மகளார், நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்- பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே. 16 குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும், அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்- துறைமிசை நினது இரு திருவடி தொடுநர் பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே. 17 பாட்டு மடை என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி, மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன் சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! 18 'கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி, மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்: அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை; குறமகள் இல்லை; செறி தோள் இல்லை; கடம் பூண் தெய்வமாக நேரார் மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.' 19 பாட்டு மடை என்று, ஈங்கு, அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு, புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்; முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடி, பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுதும் யாம். 20 பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்; பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்; கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்; தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால், மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே. 21 பாடு உற்று, பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே; பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே. 22 வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த, கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே. 23 மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட, பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி! பெற்றி உடையதே, பெற்றி உடையதே, பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப் பெற்றி உடையது, இவ் ஊர். 24 வாழ்த்து என்று, யாம் கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக் கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்- வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே! 25 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |