![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
11 முந்திய இரவு இது நடந்த பின் மறுநாள் காலை டீன், கனகராஜைக் கூப்பிட்டு அனுப்பினார். கனகராஜ் அவரை அதிகாலையில் அவரே கூப்பிட்டனுப்பியபடி வீட்டில் போய்ப் பார்த்தான். “உங்கப்பா கார் அனுப்பி வைக்கிறதாகப் போன் பண்ணினாரு. ஊர்ல போய்க் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் வா.” “அட்டெண்டன்ஸ் போயிடுமே சார்!” “பரவாயில்லை! சுகவனம் எல்லா விவரமும் வந்து சொன்னான். கொஞ்சநாள் நீ இங்கே தனியா ஹாஸ்டல்லே இருக்க வேண்டாம். உன் நன்மைக்குத்தான் சொல்றேன். ஒரு மாறுதலா இருக்கட்டும். ஊர்ப்பக்கம் போயிட்டு வா...” “சார்...” “ஆனா ஊர்ல போயும் இதையே நினைச்சுக் கஷ்டப் படாதே. உனக்கென்ன குறை? நல்ல குடும்பம். பண வசதி-படிப்பு எல்லாம் இருக்கு. இவளை மறந்துடு. ரதியா ஆயிரம் பொண்கள் போட்டி போட்டுக்கிட்டு உனக்குக் கழுத்தை நீட்டுவாங்க. நல்ல அழகியாகவே கிடைப்பாள். கவலைப்படாதே. இவ வெறும் அன்னக்காவடி. யாரோ டிரேட் யூனியன் லீடரோட பொண்ணு. நீ இங்கே திரும்பி வரணும்னு மறுபடி இந்தச் சுலட்சணாவே மனசு மாறி உங்கிட்டப் பல்லை இளிச்சுக்கிட்டு வந்து நின்னாக்கூட, ‘போடீ! உன்னை எவன் கண்டான்?’னு கேட்கிற திமிரோட வரணும்.” அவன் அவரது அந்த வார்த்தைகளுக்கு அஞ்சி மிரண்டு ஓர் ஒப்புக்காகக் கிளிப்பிள்ளை போலத் தலையை ஆட்டினான். “போன் போட்டுத் தரட்டுமா? உங்க அப்பாவோடப் பேசறியா?” “வேண்டாம் சார். நீங்க பேசினதே போதும். கார் வந்ததும் நான் ஊருக்குக் கிளம்பத் தயாராகணுமே...?” “ஆமாம், நேத்து இராத்திரியே சுகவனம் வந்து சொன்னதும் உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணியாச்சு. கார் இப்ப இன்னும் கொஞ்ச நேரத்திலே வந் துடும்.” கனகராஜ் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். அவன் விடுதிக்குத் திரும்பிப் பிரயாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த போது லேடிஸ் ஹாஸ்டல் மெஸ் பையன் அவனைத் தேடிக் கொண்டு ஒரு கடிதத்தோடு வந்தான். உறையிலிருந்த எழுத்திலிருந்து, கடிதம் சுலட்சணாவிடமிருந்து என்று தெரிந்தது. “கொஞ்சம் இருப்பா! நான் சொன்னப்புறம் நீ போகலாம்...” பையன் அறைக்கு வெளியே போய்க் காத்திருந்தான். வேகமாக அடித்துக் கொண்டு பதறும் நெஞ்சுடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானான் கனகராஜ். கடிதம் ரொம்ப ரொம்பச் சுருக்கமாக இருந்தது.
“அன்புள்ள கனகராஜ்! நேற்றுப் பல்கலைக்கழகப் பூங்காவில் சவுக்கு வேலிக்கு இப்பால் நானும் வீராசாமியும் உட்கார்ந்திருப்பது தெரியாமல் நீங்கள் உங்களுடைய ஊர்க்கார நண்பர், எம்.டி. படிக்கும் சுகவனத்திடம் பேசிக் கொண்டிருந்ததை முழுவதும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நான் ஒட்டுக் கேட்க நேர்ந்தது. நான் காதலிக்கிறேன், சுலட்சணாதான் காதலிக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை என்பதாக உங்கள் நண்பரிடம் நீங்கள் அழமாட்டாக் குறையாக முறையிட்டதை நானும் கேட்டேன். இன்னமும் இதற்குப் பதில் சொல்லாமலிருப்பது என் தரப்பில் நியாயமில்லை. இதோ என் பதில். சுலட்சணாவும் காதலித்தாள். காதலிக்கிறாள். காதலிப்பாள். ஆனால் அவள் ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பேதைப் பருவத்துப் பெண் குழந்தை இல்லை. அழகிய பொம்மைகளைக் காதலித்து அவற்றோடு விளையாடும் பருவம் கடந்துவிட்டது. தான் காதலிக்கிறவனின் குணங்களைப் பற்றிய அக்கறையோடும் பிரக்ஞையுடனுமே இனி அவளால் காதலிக்க முடியும். உங்களிடம் அந்தக் குணங்கள் இல்லை. அறவே இல்லை. நண்பரே! சுலட்சணா இன்னும் காதலிக்கிறாள். ஆண்மையை, சமூக ப்ரக்ஞையை, எதிர் நீச்சலிட முடிகிற வீரத்தை, அவளால் இன்னும் காதலிக்க முடியும். இவைகளைக் குணமாகக் கொண்ட ஒரு வீரனே, அவன் அழகனாக இல்லாவிட்டாலும் அவளால் காதலிக்க முடியும். அவனுக்குக் கையோ காலோ இல்லாவிட்டாலும் கூட அவள் அவனைக் காதலிக்க முடியும். கையும், காலும் மூக்கும் முழியுமாக இருந்து ஆண்மையில்லாதவனாயிருந்தால் அவனை அவளால் சாதாரணமாக நேசிக்கக்கூட முடியாது. ‘காதலிக்கப் போதுமான மென்மையான உள்ளமே எனக்கு இல்லை’ - என்று நீங்கள் உங்களது நண்பரிடம் குறைப்பட்டுக் கொண்டிருந்ததை நானே என் செவிகளால் கேட்டேன். ஆம்! உண்மைதான்! கோழையைக் கண்டு சகித்துக் கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. தீமையைக் கண்டு சகித்துக் கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. கோழையை பயந்தாங் கொள்ளியை - அடிதடிக்குப் பயந்து தன் கூட வந்த பெண் பிள்ளையைத் தனியே விட்டுவிட்டு ஓடுகிற அற்பத்தனத்தைச் சகித்துக் கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. நிச்சயமாக இல்லை. இனிமேலும் அப்படி மென்மை என்னிடம் ஏற்படவே ஏற்படாது என்பதும் சர்வ நிச்சயம். என்னிடம் காதலிருக்கிறது. அதை ‘சிவிக் கரேஜ’ உள்ள ஒருவருக்கு - அதாவது உங்களது நண்பரே உங்களிடம் கூறினது போல் சிவிக் ஹானஸ்டி உள்ள ஒருத்கருக்கே சமர்ப்பிக்க நான் விரும்புகிறேன். விரும்புவேன். அன்று பஜாரில் நீங்கள் என்னத் தனியே விட்டுவிட்டு ஒடி ஒளிந்த போது அதிர்ஷ்டவசமாக வேறொருவர் எனக்குக் கிடைத்து விட்டார் என்பதையும் இந்தச் சமயத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது காதலை அந்தத் தீரனுக்கு வழங்கி விட்டேன். உங்களுக்கு என் அநுதாபங்கள். இதற்கு உங்களிடமிருந்து பதில் எதுவும் நான் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து பதில் அனுப்ப வேண்டாம். அது தேவையும் இல்லை . இப்படிக்கு, உங்கள் சிநேகிதியாக இருந்த சுலட்சணா.” “நீ போகலாம்ப்பா” - கனகராஜ் தளர்ந்த குரலில் அறைக்கு வெளியே காத்திருந்த பையனிடம் கூறினான். மெஸ் பையன் தலையைச் சொரிந்தான். கனகராஜ் மணி பர்ஸைத் திறந்து ஓர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். பையன் அதை வாங்கிக் கொண்டு தாராளமாக ஒரு சலாம் வைத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ஏற்கெனவே மறுபடி திரும்பி அங்கே வருகிற நோக்கோடு அரைகுறையாக ஒழித்திருந்த விடுதி அறையை இப்போது முழுமையாக ஒழிக்கத் தொடங்கினான் கனகராஜ். மறுபடி பதினைந்து நாட்களில் திரும்பி அங்கே வருகிற நோக்கம் இனி அவனுக்கு இல்லை. என்ன ரெடியாகிக்கிட்டிருக்கியா? கீழே கார் வந்து நிக்கிது” - என்று சொல்லிக் கொண்டே சுகவனம் வந்தான். சேலத்தில் அவனது வீட்டில் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்ப வேண்டியிருந்தது. அதைக் கனகராஜ் - மூலமே கொடுத்தனுப்பி விட எண்ணிக் கடிதத்தை எழுதி எடுத்துக் கொண்டு வந்திருந்தான் சுகவனம். ஒன்றும். பேசாமல் சுகவனம் தந்த கடிதத்தை வாங்கிக் கொண்டான் கனகராஜ். “மறுபடி எப்போடா திரும்பி வரே?” “...” “உன்னைத்தாண்டா கேட்கிறேன்! மறுபடி எப்போ இங்கே திரும்புவே?” “எனக்கே தெரியாது! வருவேனோ இல்லையோ?” கனகராஜின் குரல் நைந்து உடைந்திருந்தது. கண்களில் நீர் முட்டிக் கொண்டு தளும்பி நின்றது. இன்னும் கொஞ்சம் பேசினால் கூட அழுது விடுவான் போலிருந்தது. சுகவனம் ஆறுதலாக அவனருகே சென்று, “அசடே! இதுக்காகவா இப்படி மனசு உடைஞ்சு போறே? இவள் இல்லாட்டா இன்னொரு விலட்சணாடா, சுலட்சணாவை விட்டா உலகத்திலே வேற அழகான பொம்பளேயே இல்லையாடா?’’ அவனால் அப்படி நினைக்க முடியவில்லை. உள்ளுக்குள் ரொம்ப உறுத்தியது. “டேக் இட் ஈஸி கனகராஜ்! சுலட்சணா இல்லாட்டா இன்னொரு விலட்சணா.” மறுபடியும் சுகவனம் அருகே வந்து கனகராஜின் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னான். நண்பனுக்கு விடைகொடுத்தான். கார் பல்கலைக்கழகக் காம்பஸில் வளைந்து வளைந்து சென்று வெளியே போகும் மெயின் ரோடை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அங்கங்கே ‘ஸ்பீட் பிரேக்கர்கள்’ இருந்ததால் நின்று நின்று போக வேண்டியிருந்தது. உள் சாலையில் ‘வசந்த மண்டபம்’ என்று அவர்கள் செல்லமாக அழைக்கும் போஸ்ட் கிராஜுவேட்ஸ் நூல் நிலையத்தின் அருகில் கார் திரும்பியபோது அதன் படிகளில் வீராசாமியைக் கைதழுவியபடி சுலட்சணா மேலேறிப் போய்க் கொண்டிருந்தாள். வெட்டுண்ட வலது கைக்குப் பதில் அவன் சட்டை பொய்யாய்த் தொங்குவதைக் காரிலிருந்தே பார்த்தான் கனகராஜ். ‘இவளைப் போல ஒரு பேரழகி இப்படிக் கூட நடந்து வருவதாயிருந்தால், கைகள் மட்டுமென்ன, கால்களைக் கூடத் துணிந்து இழக்கலாமே?’ - என்று மனத்தில் தோன்றியது. இன்று நினைப்பிலே தோன்றும் இந்தக் கழிவிரக்கமான, துணிவு அன்று பஜாரில் அந்தச் சம்பவத்தின் போது நிஜமாகவே தோன்றியிருந்தால் சுலட்சணாவே தன்னைக் கைவிட்டிருக்க மாட்டாள் என்றும் சேர்ந்தே தோன்றியது. எல்லாம் கழிவிரக்கமான, இப்போது பயன்படாத வெறும் நினைவு மட்டுமே. இனி இந்த நினைவுகளால் யாருக்கு என்ன பயன்? கார் காம்பஸை விட்டு வெளியேறி ஜி. எஸ். டி. நேஷனல் ஹைவேய்ஸ்-க்கு வந்தபோது பல்கலைக் கழகக் கட்டிடங்களும் மரக்கூட்டங்களும் அவை சார்ந்த காட்சிகளும் பார்வையிலிருந்து விலகி மறைந்தன. அவனுள் ஏதோ பாறையாக உறுத்தி அழுத்தியது. நெஞ்சில் ஒரே வலி. வேதனைக் கனம். கனகராஜ் சட்டைப் பையிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு டிரைவிருக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல மெளனமாக அழுதான். கர்சீப் நணைந்தது. கோழைகள் வேறென்ன செய்ய முடியும்? இப்படி அழத்தான் முடியும் பாவம்! |