![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
9 “இவனுக்கு என்னப்பா குறை? மன்மதன் மாதிரி இருக்கான், படிப்பிலேயும் ஃபர்ஸ்ட் ரேங்க். இவனை விட்டு விட்டு யாரோ ஒரு கை நொண்டியாப் போன பயலுக்குப் பின்னாடி அந்தக் கழுதை சுத்தறான்னா அதுக்குப் போய் இவன் ஏன் உருகணும்? அவ குடுத்து வைக்கலே. அவ்வளவு தான்” - என்று சுகவனத்திடம் கூப்பாடு போட்டார் டீன். இதில் சுகவனம் அவரோடு இசையவில்லை. வெளிப் படையாகக் கருத்து வேறுபட்டான். “நீங்க எல்லோருமே தப்புக் கணக்குப் போடறீங்க சார் ஒரு பெண்ணை ஆண் கவர்ந்து அவள் மனதில் இடம் பிடிக்கப் படிப்பு, முகவசீகரம், பணம் இதெல்லாமே மட்டும் போதாது சார். பொது இடத்திலே பொது விஷயத்திலே பலர் கொண்டாடும் வீரத்தை அவன் காட்டினால்தான் அவனால் அவள் அதிகம் கவரப்படுகிறாள். பேரழகனான இராமனே சீதையின் மனதில் இடம் பிடிக்கப் பலர் மெச்சும்படி ஒரு கனமான வில்லை எல்லார் முன்னிலையிலும் எடுத்து ஒடிக்க வேண்டியிருந்தது. முரட்டுக் காளை ஒன்றைப் பலர் முன்னிலையில் தனியாக ஒர் ஆண் மடக்கிப் பிடிக்கும் ஏறுதழுவுதல் போன்ற திருமண நிபந்தனைகள் கூடப் பழைய நாளில் இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் சார். தன்னுடைய ‘சிவிக் கரேஜி’னால் தான் ஓர் ஆண் ஒரு பெண்ணின் மனத்தில் இடம் பிடிக்கிறான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த முதுகுளத்தூர்ப் பையன் அப்படி ஒரு ‘சிவிக் கரேஜ்’ மூலம்தான் சுலட்சணாவைக் கவர்ந்திருக்கிறான். காதலில் அந்தக் கவர்ச்சியைச் சாதாரணமானது என்று நீங்கள் சொல்லிவிட முடியாது சார்!” “ஏதேது இந்த விஷயம்பற்றி என்னிடம் ஓரலாக ஒரு ரிஸர்ச் தீஸிஸே ஸப்மிட் செய்து விடுவாய் போலிருக்கிறதே...” சுகவனம் இதைக் கேட்டுச் சிரித்தான். டீன் சேலத்திலிருக்கும் கனகராஜின் தந்தையோடு எஸ்.டி.டி. போட்டுப் பேசுவதற்காக உள்ளே சென்றார், சுகவனம் அவரிடம் விடை பெற்றுத் தன் அறைக்குத் திரும்பினான். சுலட்சணாவைப்போல ஓர் அழகிய பெண்ணை வீராசாமியோடு சேர்த்துப் பார்ப்பது அவனுக்கும் கூட என்னவோ போல்தான் இருந்தது. ஆனால் அது தவிர்க்க முடியாதது என்றும் கூடவே மனத்திற்குள் உறைத்தது. சற்றுமுன் பல்கலைக்கழகப் பூங்காவில் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்துவிட்ட எதிர்பாராத அதிர்ச்சியின் போது கூட அவள் சகஜமாக ‘ஹலோ’ என்று கனகராஜைப் பார்த்து முகமலர்ந்து சமாளித்ததையும், கனகராஜ் அவளைப் பார்க்க விருப்பமின்றி முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டதையும் சுகவனம் கவனித்திருந்தான். கனகராஜின் இந்தக் குணம் சுகவனத்துக்கே எரிச்சலூட்டியிருந்தது! பொதுவில் தனக்கு உவப்பில்லாத சாதகமாகாத சூழ்நிலையை எதிர்கொள்ளவே பயந்து கூசும் குணமுள்ள இவன் எதிர்காலத்தில் எப்படித் தன் தந்தை இன்று நிர்வகித்து வரும் தொழில் நிர்வாகங்களையும் நிறுவனங்களையும் தான் பொறுப்பு ஏற்று நடத்தப் போகிறான்? இந்தத் தொட்டால் சிணுங்கி மனப்பான்மை பொதுவாழ்க்கைக்கே பயன்படாத மைனஸ் பாயிண்ட் ஆயிற்றே? எதிர்பாராததை எதிர்கொள்ள நேர்ந்தாலே பயந்து கலவரப்பட்டு ஒதுங்கி ஓடிவிடும் இந்தக் குணத்தோடு இவன் எப்படி வாழ்வில் வெற்றிபெறப் போகிறான்? பெண்கள் -அதுவும் மிக மிக ஸ்மார்ட்டான இளம் பெண்கள் இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியை, அவன் எவ்வளவுதான் நன்றாகப் படித்தாலும் எத்தனை அழகாயிருந்தாலும் என்னதான் ரேங்க் வாங்கினாலும் எப்படி விரும்புவார்கள்? பெண் விரும்பி ஆசைப்பட்டு வசியமாவதற்கு ஒருவன் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. வல்லவனாகவும் இருக்கவேண்டும். கனகராஜ் நல்லவன். பயந்த சுபாவமுள்ளவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று கச்சிதமாக இருப்பவன். ஊர் விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு வீணில் பெயரைக் கொடுத்துக் கொள்ளாதவன். இவை எல்லாம் பொதுவாகப் பார்த்தால் மிக மிக நல்ல குணங்களாயிருக்கலாம். ஆனால் சமூகப் பிரக்ஞை நிறைந்த சுலட்சணாவைப் போன்ற நவீன காலத்து இளம்பெண் ஒருத்தி ஒருவனை வெறும் அம்மாஞ்சித் தனமானவனாக நினைப்பதற்கு இந்தக் குணங்களே போதுமானவை - என்று யோசிக்கும் வேளையில் சுகவனத்துக்குத் தெளிவாகவே விளங்கியது. கோழைகள் காதலிக்கவும் முடியாது. காதலிக்கப் படவும் முடியாது. கரையில் தயங்கி நிற்பவர்களை விடப் பயப்படாமல் நீரோட்டத்தில் குதித்து ஆழங்களில் அநாயாசமாக முக்குளித்து எதிர்நீச்சலடித்து மேலெழுபவர்களையே பெண்கள் முகமும் அகமும் மலரப் பார்க்கிறார்கள். நீரில் இறங்கப் பயந்து ஆழங்களில் மூழ்க அஞ்சி ஒதுங்கி நிற்பவர்களை அவர்கள் ஆண்களாகவே பொருட்படுத்துவது இல்லை. கனகராஜைப் போல உடம்பில் அழுக்குப்படாமல் வாழ விரும்பும் சொகுசு இளைஞன் சுலட்சணாவைக் கவராமல் போனதில் எந்த வியப்புமில்லை. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி நிற்கிற அப்பாவி இளைஞனை எந்தப் பெண்ணும் ஆசைப்பட மாட்டாள்தான். சுயமரியாதையுள்ள ஆண்பிள்ளையைத்தான் தன்மானமுள்ள ஒவ்வொரு புதுமைப் பெண்ணும் காதலிக்கிறாள். காதலிப்பாள். காதலிக்கவும் முடியும். இன்றைய சமூக வாழ்வின் அடிப்படைத் தேவையான ‘சமுதாயத் துணிச்சல்’ என்கிற ஸிவிக் கரேஜ் இல்லாதவனை ஆண்கள், பெண்கள் யாருமே இலட்சியம் செய்வதில்லை என்று கனகராஜின் நிலையை வைத்துப் புரிந்து கொண்டான் சுகவனம். டீன் டெலிஃபோனில் பேசி ஒருவாறு நிலைமையைப் புரிய வைத்தபின் கனகராஜின் தந்தை, “அப்படியானால் நீங்கள் அவனைத் தனியே அனுப்ப வேண்டாம். நானே இங்கிருந்து டிரைவரைக் காரோடு அனுப்பிவைக்கிறேன். லிவு கொடுத்துப் பக்குவமாக எடுத்துச் சொல்லிச் சமாதானப் படுத்தி இங்கு அனுப்பி வைத்து விடுங்கள்” - என்று ஃபோனிலேயே பதில் சொன்னார். கேவலம் ஒரு பெண் விஷயம் தன் மகனை இத்தனை துாரம் பாதித்துவிட்டது என்பதை இரண்டாவது தடவை நினைக்கக் கூடக் கஷ்டமாயிருந்தது அவருக்கு. அதற்காகக் கவலையும் வருத்தமும் அடைந்தார். அந்தப் பணக்காரத் தந்தை. |