அத்தியாயம் - 7 மார்கழி வெயில் வறட்சியாக இருக்கிறது. சுதா காலையிலேயே இரவு வேலை முடித்து வந்து விட்டாள். ராம்ஜி, பரத் இரண்டு பேருக்கு அப்போது விடுமுறை. ராம்ஜியிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறாள். பரத் வீட்டில் இல்லை. “நான் சுதா ஆன்ட்டியுடன் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். சாயங்காலம் நாலு மணிக்கு வந்துடுவேன். வீட்டைப் பார்த்துக்கறியா?” “நீங்க போங்கம்மா, நான் இப்படியே உக்காந்திட்டு படிச்சிட்டிருப்பேன்...” வெளியில் இறங்கிய பிறகுதான் அவளுக்கு ராம்ஜி, அப்பா வந்தால் அம்மா சுதா ஆன்ட்டியுடன் வெளியில் போனால் என்று சொல்லிவிடுமோ என்று அச்சம் மேலிடுகிறது. தெருக்கோடி சென்று ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக் கொள்கிறார்கள். அது எந்தப் பக்கம் செல்கிறது என்றே புரியாத குழப்பம். அடுக்கு மாடிகளாக உள்ள ஓரிடத்தில் தெருவில் திரும்பி வண்டி செல்கிறது. இந்தப் பகுதிக்கு அவள் வந்ததாக நினைக்கவில்லை. குரு சுவாமிகள் விசேட பூசை நடக்கும் இடங்கள், அல்லது மிகவும் வேண்டப்பட்டவர் வீட்டு விசேடங்கள் என்று புருசனுக்கு நிழலாக வந்து போன இடங்களில் ஒன்று இல்லை இந்த இடம். வாசலில் கூர்க்கா, “யார் வீடம்மா” என்று கேட்கிறான். “என்.கே.ஆர்.” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு சுதா முன்னே சென்று, இரண்டாம் மாடியில் மணியை அழுத்துகிறாள். கதவைத் திறப்பவர்... சிவப்பாக, உயரமாக, நிமிர்ந்து பார்க்கும்படி இருக்கிறார். மேலே கை வைத்த பனியனும் வெள்ளைக் கதர் வேட்டியும் அணிந்திருக்கும் அவர் முகமலர்ந்து, “வாங்க, வாங்க, இப்பத்தான் நினைச்சிட்டேன். உங்களை லஞ்சுக்கே வரச் சொல்லியிருக்கலாமே, நல்ல வெயில் நேரமாக இருக்கேன்னு... வாங்க சுதா... வாங்கம்மா!... உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய கூடம் நீள வாக்கிலும், அகலவாக்கிலுமாக ‘ட’ எழுத்துப் போல இருக்கிறது. நீளவாக்குக் கூடத்தில், ஊஞ்சல்... புதுமையாக... அப்பால் சோபாசெட், தொலைக்காட்சிப் பெட்டி, சுவர்க்கடிகாரம், புத்தகம் தெரியும் கண்ணாடி அலமாரி... “ஊஞ்சல்ல உக்காரலாம்... சுதா... உங்களுக்குப் பிடிக்குமே?...” என்று சொல்பவர், ரேவுவைப் பார்த்து “உங்களுக்கு ஊஞ்சல் பிடிக்காதுன்னா, இப்படி சவுகரியமாக உட்காரலாம்...” என்று சோபா ஒன்றை வசதியாக இழுத்துப் போடுகிறார். “நீங்க எங்களுக்கு லஞ்ச் தயார் பண்ணியிருக்கிறீங்களா, என்.கே.ஆர்.ஸார்...?” “ஓ, ரெடி...!...” “ஹம்... மசாலா வாசனை மூக்கைத் துளைக்குது ஸார்...” என்று சுதா மூச்சை இழுத்து விடுகிறாள். “நீங்க இன்னும் சாப்பிடாமலா காத்திருக்கிறீங்க? மணி ஒண்ணரையாச்சே?” “நான் காலைல பிரேக்ஃபாஸ்ட் எடுத்திட்டே இன்னிக்கு. அப்ப, வாங்க இதோ அஞ்சே நிமிஷத்தில் நான் டேபிள் ரெடி பண்ணிடறேன்...” அவர் உள்ளே செல்கிறார். ரேவு சுதாவிடம் சங்கடத்துடன், “சாப்பிட வரோம்னு சொல்லலியே சுதா? நான் சாப்பிட்டாச்சம்மா, எனக்கொண்ணும் வேண்டாம். அவர்ட்ட சொல்லிடு பாவம்..” என்று கிசுகிசுக்கிறாள். மேசை மீது மூடிய கிண்ணங்கள் மூன்று இருக்கின்றன. தட்டுக்கள் கரண்டி, எல்லாம் இருக்கின்றன. ஆரஞ்சு, வாழைப் பழங்கள். “ஸார், என்ன இது நிசமாவே லஞ்ச் செஞ்சுட்டீங்களா? நான்... நாங்க சாப்பிட்ட பின் தான் வந்தோம்... நீங்க சாப்பிடுங்க ஸார்.” “பரவாயில்லே... நிசமாவே நீங்க சாப்பிட்டீங்களா?... நான் பூரி, சப்ஜி, தயிர் சாதம் பண்ணிருக்கேன்... ஷேர் பண்ணிக்கலாம்...” “ஐ’ம் ஸாரி... நேத்தே பளிச்னு சொல்லாம போயிட்டேன்...” “அதெல்லாமில்ல...!” பூரி, கிழங்கு இரண்டையும் எவர்சில்வர் தட்டில் வைக்கிறார். “வாங்கோம்மா, ரெண்டு பூரி சாப்பிடலாம். நீங்க ரொம்ப மெலிசாத்தானிருக்கீங்க! கை அலம்பிக்குங்க, இதோ வாஷ்பேஸின்...” ரேவு கூசிப் போகிறாள். என்றாலும் அவர் சொல்வதில் ஏதோ மந்திரக் கவர்ச்சி தோன்றுகிறது... பச்சைப் பட்டாணி சிவப்புத் தக்காளி காரட் தெரியும் உருளைக் கிழங்கு கூட்டுடன் பூரியை மிக மெதுவாகச் சுவைக்கிறாள். “உங்க பேரென்னம்மா?...” சுதாதான் பதில் சொல்கிறாள். “ரேவதி, நான் ரேவு மாமின்னு கூப்பிடுவேன். ஆனால், அவ உண்மையில் என்னை விட வயசில் சின்னவங்க. அவளுக்கு முப்பத்தெட்டு; எனக்கு நாற்பது...!” ரேவு சட்டென்று அந்தப் பூரியை முடித்துவிட்டு விடுவிடென்று வாஷ் பேசினில் கழுவித் தட்டை வைத்து விட்டு ஊஞ்சலில் வந்து உட்காருகின்றாள். அவரும் சுதாவும் வயசு வித்தியாசம் பற்றி ஏதேதோ பேசுவதைச் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. இனம் புரியாத பயம், நெற்றி, உள்ளங்கை வேர்க்கிறது. சேலைத் தலைப்பால் ஒத்திக் கொள்கிறாள். “அடடா... என்னம்மா, ரேவதி?... ஒரு கரண்டி இந்த பகாளாபாத் ருசிக்கக் கூடாதா? வாங்க? அதுக்குள்ள அலம்பிட்டீங்க...” “வேண்டாம் எனக்குப் போரும்...” “நோ... ஒரே ஒரு கரண்டி...” வற்புறுத்தலாக இன்னொரு தட்டில் ஒரு கரண்டி - மேலே பச்சைத் திராட்சை, கடுகு, இஞ்சி தெரிய தயிர் சோறு. பச்சைத் திராட்சை போடலாம் என்று ரேவு நினைத்ததில்லை. சாப்பிட்டாக வேண்டி இருக்கிறது. சுதாவே தட்டுக்களைத் தொட்டியில் கொண்டு போடுகிறாள். தண்ணீர் குடித்து வாசனைப் பாக்கையும் எடுத்துக் கொண்டு சுதா ஊஞ்சலுக்கு வருகிறாள். “சாப்பாடு எங்கேன்னாலும் நான் தட்டுவதில்லை. சுருதி சொல்லுவாள் - அம்மா, புது வீட்டு வாசப்படியை நாலடி வச்சது போதாது? ஆறடி வைக்கணும்னு!” ரேவுவுக்கு இப்போதும் சரளமாக இருக்க முடியவில்லை. ஏன் வந்தாள்? எப்போது போகப் போகிறாள்? அவள் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டாற் போல், “அந்த ஊஞ்சல் உங்களுக்கு வசதியாக இல்லையோ? இப்படி சோபாவில் உட்கார்ந்துக்கலாம். எனக்கு ஊஞ்சல் பிடிக்காது. ஸ்திர புத்தி வேணும்ன்னா ஊஞ்சல் சரிப்படாது. ஆனா, சொகுசுக் காரங்களுக்கு ஊஞ்சல், ஒரு சுகம். எங்கம்மா, ஊஞ்சல்லதாம் இருப்பா. எங்க தாத்தா, கேரளத்தில் கப்பல் வியாபாரி. டிம்பர் பிஸினஸ், எங்கம்மா ஒரே பொண்ணு. அப்பா, மாமனார் வீட்டு மாப்பிள்ளையாப் போனார். திருச்சூரில் பெரிய வீடு, வழவழன்னு ஊஞ்சல் - அகலமா இருக்கும். நல்ல கருங்காலி மரம். சங்கிலிக்குப் பித்தளையால் குழாய் போல மூடி போட்டு நிகுநிகுன்னு பாலிஷ் பண்ணிருப்பா. அதுக்கு அளவா மெல்லிசா பட்டு மெத்தை. நல்ல பருமன் சிவப்பு. காதில் ப்ளூஜாகர் வைரத்தோடு, மூக்குத்தி... என்னுடைய பெரிய அக்கா பையன் என்னை விடப் பெரியவன். அவன் அவளை ஊஞ்சல் பாட்டிம்பான். கோபம் வரும் எனக்கு. அவ அம்மா - பாட்டில்லம்பேன். எனக்குப் பத்து வயசில் அம்மா செத்துப் போயிட்டா... எல்லாம் பழைய கதை. இந்த ஃப்ளாட் வாங்கறப்ப, எனக்குத்தான் ஒரு ஊஞ்சல் ஆசை... இப்படிப் போடச் சொன்னேன். சாரதாக்குக் கூடப் புடிக்கல. ‘இருக்கிறதே தொளாயிரம் சதுர அடி. அதுல உங்க புஸ்தக பீரோ வேற அடச்சிட்டிருக்கு. இதுல ஊஞ்சல் வேற எதுக்கு!’ன்னா. ஆனா அவ தான் இதுல எப்பவும் ஆடிட்டிருப்பா...” “எங்கம்மா எனக்குத் தெரிஞ்சே சீக்கா இருந்தான்னு நினைப்பு. டாக்டர் வருவார். நர்ஸ் இருந்தா. நாங்கள்லாம் அப்பாவோட அக்கா, அத்தை சின்ன வயசில் விடோ ஆனவள். அவளிடம் தான் வளர்ந்தோம்... அம்மா போன பிறகு அப்பா அந்த வீடு, அம்மா ஆண்ட சாமான் எல்லாமே வேணான்னு வச்சிட்டார். நான் காலேஜில படிக்கச் சேர்ந்திருந்தேன். திருச்சியில் ஆனர்ஸ் ரெண்டு வருஷம். படிப்பை விட்டுவிட்டு, காங்கிரஸில் சேர்ந்து, நாற்பத்திரண்டுப் படையில் தீவிரவாதியானேன். அப்பதான் அப்பா செத்துப் போனார். ஏழு வருஷம் ஜெயிலில் இருந்து வந்து பிறகுதான் நான் பார்த்த வீடு, உறவுகள் எல்லாமே மாறிப் போச்சு. பெரியக்கா இரண்டு பேரும் டில்லியில் இருந்தார்கள். அவரவர் புருஷன்மாரெல்லாம் டில்லி சர்க்காரில் உயர்ந்த வேலை. எனக்குச் சமமாக இருந்த, அக்கா பையன் ரங்கநாத், ஃபாரின் சர்வீஸ் பரீட்சை கொடுத்திருந்தான். மூணு அண்ணன்களில் இரண்டு பேர் ஓகோன்னு பிஸினஸில் இருந்தாங்க. ஒருத்தன், ரயில்வே ஸர்வீஸில் பெரிய அதிகாரியாக இருந்தான். நான்... இவங்க எல்லாருக்குமே தீண்டப்படாதவனாயிட்டேன். இப்படி நினைச்சுப் பாப்பேன். அப்பாக்கு அம்மா பேரில் வெறுப்பா?... அவள் பணக்காரி, டாமினன்ட் எல்லாம் என்னால் வந்த வாழ்வுதானேடா? நீ ஊட்டுப்புரையில் சாப்பிட்டுப் படிச்ச ஆள்தானேன்னு நினைச்சிருப்பாளோ என்னமோ... அவ, புடைவை, நகை எல்லாமே ஊஞ்சல் பலகை உட்பட, சாரிடீஸுக்குக் கொடுத்திட்டார்னு கேள்விப்பட்டேன்...” ஏதோ கேட்க வந்து, சம்பந்தமில்லாமல் தன் கதையைச் சொல்லிக் கொண்டு போகிறாரே என்று தோன்றவில்லை. ரேவு அவளையும் அறியாமல் அந்தப் பேச்சில் - குரலில் மனம் கொடுக்கிறாள். அவரும் அவளைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார். “அப்புறம் தான் லெஃப்ட் மூவ்மென்ட்ல - டிராமா எழுத ஆரம்பிச்சீங்களோ?...” என்று சுதா கேட்கிறாள். “ஆமாம். அது எவ்வளவு நம்பிக்கையான உலகமா இருந்தது. வந்து படிப்ப முடிச்சு டிகிரி வாங்கினேன். ட்யூட்டோரியல் - எல்லாம் புதிய கண்ணோட்டம். எனக்கும் ஒரு தனி அந்தஸ்து கவுரவம் கூடி வந்தது... கல்யாணம், குடும்பம்... உலகத்தில் வாழ்க்கையில் எத்தனை கத்துக்கலாம்! மாக்ஸிம் கார்க்கி தன் சுயசரிதையில், இளம் பருவம் தாண்டி வெளி உலகில் அநுபவம் பெற்றதையே ‘மை யுனிவர்சிட்டி’ என்று குறிப்பிடுவார். உலக வாழ்க்கைங்கற அநுபவம் பாடமா இருக்கணும்... “என்ன, ரேவதிம்மா, நான் போறடிக்கிறேனோ? சொல்லுவா, ‘நீங்க பிறத்தியார் பேச எங்க இடம் குடுக்கறீங்க!’ன்னு...” சிரிக்கிறார். “இல்ல, நீங்க பேசறது ரொம்ப சரி...” ரேவுவுக்கு, ஆச்சரியமாக இருக்கிறது. அவளே பேசுகிறாள்? “எது சரி? நானே பேசி போரடிப்பதா?...” மீண்டும் சிரிப்பு. கன்னங்களில் குத்துக் குத்தாக, ஏதோ பருத் தழும்பு போல் இருக்கிறது... மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பில், ரேவதிக்கும் சிரிப்பு வருகிறது. “சரி, இப்ப நீங்க பேசுங்க...” “நீங்க ஏன் சார், இப்ப நாடகம் எதுவும் போடறதில்லை?” என்று சுதா தான் கேட்கிறாள். “நாடகமெல்லாம் பொழுது போக்குன்னு வந்த பிறகு எனக்கு ஆர்வமில்லைன்னாயிட்டது. அதுக்கு ஒரு பர்ப்பஸ், இலட்சியம்னு எனக்கு இருந்தது. அதுக்காக, சம்பாதிச்சதெல்லாம் செலவழிச்சேன். நிறைய சினிமா ஆஃபர் வந்தது. இப்போதும் கூட நடிப்பு தொழிலா வச்சுக்கலாம். டி.வி. இருக்கு. நான் அதுக்குப் போகல. இப்ப ரெண்டு வருஷமா, சாரதாவும் பெண்ணுக்கு ஒத்தாசை, பேத்தியைப் பாத்துக்கன்னு போன பிறகு, காலம, சாயங்காலம் ரெண்டு வேளை கூடக் கிளாசுக்குப் போறதில்ல... எனக்கும் வயசு எழுபத்து நாலாகுது... இந்த அந்தி வெளிச்சம், ஏதோ ஒரு உபகாரமா, மனசுக்குச் சாந்தி வரும்படி இருக்கணும்... வயசும் அனுபவமும் ஏற ஏற, வாழ்க்கை நோக்கமும் வெளி உலக ஆரவாரங்களில் இருந்து விடுபட்டு, ஆனால் நம்மைச் சுற்றிய உலகை நம்முடையதாக ஒட்டிக் கொள்ள - என்னைச் சுற்றி நான்னு போட்டுக் கொண்ட வட்டம் அழியும்படி... கரைஞ்சு போகணும், யார் மேலும் தப்போ விரோதபாவமோ வராமல் என்னையே நான் பார்த்துக் கொள்ளும் அநுபவம்...” “இப்பதான் ஸார் போராடிக்கிறீங்க...” “அப்படியா...?” மீண்டும் பூக்கள் கொட்டினாற் போல் சிரிப்பு. “ஜயவந்தி தேவியப் பத்தி... நீங்க சொன்னதைச் சொன்னேன். இவ... பயப்படுறா. டைவர்ஸ், கோர்ட்டு அது இதுன்னு வேண்டாம். ஆனா விடுதலைன்னு குடுத்துட்டு எனக்கு ஏதோ மெயின்டனன்ஸ் குடுத்தாப் போதும்ங்கறா...” “இது ரொம்ப சிக்கலான பிரச்னை. நாடகம், கதைன்னா, ஒரு கிளைமாக்ஸைக் கொண்டு வந்து, ஒருத்தரைச் சாக அடிச்சோ, விலக வச்சோ, முடிச்சிடலாம். ‘தமிழ்ப் பண்பாடு’ இந்தியப் பண்பாடும்பாங்க. கலியாணம் பண்ணிக் குடும்பமாக இருந்தவங்க விலகக்கூடாது. அவதான் விலகிப் போகணும். கோவலனாகிப் போன புருஷனை இவங்கதான் கண்ணகியாக இருந்து ஏற்கணும்...” என்று சிரிக்கிறார். உடனே தீவிரமாக, “இது வாழ்க்கை, ரேவம்மா, உங்களுக்கு என்ன வயசு இருக்கும்? முப்பத்தாறு, முப்பத்தேழு இருக்கும், இல்லையா? உள்ளோடு குடும்பம், புருஷன், பிள்ளைகளை விட்டுத் தனியாக இருக்கும் ஆசை வருமா?... கஷ்டங்களினால், இதுவரை குடும்பத்தில் பெற்ற கசப்பான அநுபவங்களினால், அந்த உணர்ச்சிகளில் முடிவு எடுக்கிறீங்க அப்படி... இது ஊசிமுனை முடிவு. முதலில் நீங்கள் உங்களையே புரிஞ்சுக்க வேணும். நிசமாவே, தனியாக ஒதுங்கினால் அமைதியாக சந்தோஷமாக இருக்கலாம்னு நினைக்கிறீங்களா?” “புரியிது. அவளும் ஒரு மனுஷ ஜீவி - அவளுக்கும் ஆசை, அபிலாஷைகள், வெறுப்புகள், கோபதாபங்கள் இருக்கும் என்று புரிஞ்சு கொள்ளாம இருப்பதே கொடுமை. அதுக்கும் மேல... இம்சை... ரேவதிம்மா, நீங்க கொஞ்ச நாளைக்கு உங்க புருஷரை விட்டு விலகி, உங்க ஸர்வீஸ் - அதாவது உங்களால கிடைக்கும் சுகங்கள் - அவனுக்கு இல்லாம பார்த்துக்குங்களேன்?... அப்படி உங்களுக்குள் பிரிவு இருந்தால் புரிந்து கொள்ளல் வரலாம் இல்லையா?” “எனக்குப் போக எந்த இடமும் இல்லை ஸார்...” இதைச் சொல்லும் போது அழுகையே வந்து விடுகிறது. “ஓ... ஸாரி...” ரேவு தன்னை மறந்து விம்மி விம்மி அழுகிறாள். “ஓ, நோ... ஷ், ரேவு மாமி? என்ன இது...? நாங்கள்ளாம் இருக்கோம். பத்துநாள் உங்களைப் பார்த்துக்க மாட்டோமா?...” “இல்ல... சுதா, நான் எத்தனை நாள் சகிக்கிறது? சுமக்கிறது? நான் எங்கே போக? போக முடியாத ஒரு பெரிய பாரத்தை நான் சுமந்து கொண்டு அவதிப்படறேன். குடும்ப நிழலே அத்துப்போய் இந்த நிழல்ல ஒதுங்கியிருக்கேன். இதை முறிச்சிண்டு நான் போகக் கூடாது. உங்களுக்குத் தெரியாது...” புடைவைத் தலைப்பால் முகத்தை அழுத்திக் கொண்டு ரேவு உணர்ச்சிவசப்படுகிறாள். “நீங்க எங்கும் போக வேண்டாம்... உங்க தம்பி இருக்கிறாரே, அவர் வீட்டில் போய் ஒரு நாலஞ்சு நாள் இருக்கலாமே? புருஷன், குழந்தைகள் - அடுப்பு சமையல், அழுத்தங்கள் இல்லாமல்” என்று சுதா கூறுகிறாள். ரேவதி கெட்டியாக முடிந்து கொள்கிறாள். ‘அக்கா, எப்ப வேணுண்ணாலும் நீ வரலாம்... ஃபோன் நம்பர் தரேன்... என்று வேம்பு சொன்னான். பாயம்மா... சொந்த உறவுகளை எல்லாம் விட்டுப் பெரிய எல்லைக்குள் நிற்கும் ஒரு அம்மா... அவாள்ளாம் எப்படி இருப்பாள்னு பார்க்கலாம். இது தப்பா?...’ “சரி, பார்க்கலாம்...” “அதைச் செய்யுங்க... உங்களுக்கு ஒரு ஆசுவாசம். நிதானமா முடிவெடுக்க ஒரு ஆறுதல் தோணும். இப்படி நாம பிரச்னையை அவனுக்குப் புரிய வைக்கலாம்...” “ஆனால், தம்பி வீட்டுக்குப் போவதை அவர் ஏத்துக்க மாட்டார். என் பிறந்த வீடே சாபம் எனக்கு. அவனையும் வரக்கூடாதும்பார்... நான் போனா, பிறகு திரும்பி வரக்கூடாதும்பார், நிச்சயம்...” “அது ஏன்? ஏன்?...” அவள் பதில் கூறவில்லை. “அப்ப, நீங்களே எந்த முடிவுக்கும் வரவேணாம். கஷ்டப்படுறேன்னு ‘கற்பரசி’ப் பெருமையா நினைக்கிறேளா?” அவள் குரலில் கடுமை இலேசாக இழையோடியது. “வேற வழியில்லை.” “வழியிருக்கு. நீங்க நாலஞ்சு நாள் போயிருங்க. பிரச்னை வரட்டும். கலகம் பிறக்கட்டும். வழி வரும், ரேவம்மா? உங்களை இங்கேயே வந்து இருங்கம்பேன். எனக்கு யாரிடமும், எந்த சமுதாய பயமும் கிடையாது. உங்களுக்கு அது ‘புரட்சி’யாத் தோணும்... உங்களுக்கு அப்படித் தைரியம் வரணும்மா... ‘பயம்’ இருக்கவே கூடாது...” பயம்... பயமாகவே இருக்கிறது அவளுக்கு. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |