10 அரண்மனையின் வெளிவாயிலில் தான் இரதங்கள் வந்து நிற்பது வழக்கம். உள்ளே அந்தப்புர மாளிகைகளுக்குச் செல்லும் முற்றத்தில் பல்லக்கு மட்டுமே வரும். ஆனால் இரதம் உள்ளே வந்திருக்கிறதென்று சொல்லிவிட்டு, "உடனே வர வேண்டும்" என்று அவர் முன்னே விரைந்து நடக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டு நடக்கிறார். கோசலாதேவியின் மாளிகைக்குத்தான் செல்வார். மன்னர் அங்கேதான் இருப்பாராக இருக்கும்... அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மிகவும் கோபமாக இருப்பாரோ என்று உள்ளுணர்வில் ஒரு கலக்கம் படிகிறது. இது... இவர் செய்வது, தமையனின் ஆணையா? தமையனில்லை; கணவர் என்ற உறவும் இல்லை... மன்னர் மாமன்னர் ஆணை... இந்தச் சூழலிலும் அவளுக்குச் சிரிப்பு வரும் போல இருக்கிறது.
அவள் அப்போது அந்தக் குரலை விளையாட்டாகக் கருதிக் கலகலவென்று சிரிப்பாள். ஆனால், சிரிக்கக்கூடிய குரல் அல்ல அது. அவளை அனற்குழியில் இறங்கச் செய்த குரல். ஆணை அது... அதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்போது? அவளை அவர் வெளி வாயிலுக்கு அல்லவோ அழைத்துச் செல்கிறார்? அச்சம் இனம் புரியாமல் நெஞ்சில் பரவுகிறது. முதுகாலைப் பொழுது, மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். வாயிற் காப்பவர்கள், பணிப்பெண்கள், ஏவலர்கள் அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேரம். குஞ்சு குழந்தைகள் முதல் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கும். அவள் வெளியே தென்பட்டால் 'மகாராணிக்கு மங்களம்' என்று வாழ்த்தி வணங்கும் குரல் ஒலிக்கும்... ஆனால் சூழல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விட்டதோ?... துடிப்பு கட்டுக்கடங்காமல் போகிறது. அவரைக் குரலெடுத்துக் கூப்பிடவும் முடியவில்லை. அத்துணை தொலைவில் தன்னை இருத்திக் கொண்டிருக்கிறார். வரிக்கொம்பில் ஒற்றைக் காகம் ஒன்று சோகமாகக் கரைகிறது... வாயில்... வாயிலில் தேர் நிற்கிறது. அதில் பூமாலை அலங்காரங்கள் எதுவும் இல்லை. தேரை ஓட்டும் பாகனாக... மன்னரோ, வேறு எவரோ இல்லை. மன்னர் அதில் அமர்ந்திருக்கவில்லை. நால்வர் அமரும் பெரிய தேர். உச்சியில் மன்னர் செல்லும் போது பறக்கும் கொடியும் இல்லை. ஓரங்களில் கட்டப்பட்ட மணிகள், வெயிலில் பளபளக்கின்றன. அப்போது தான் அவள் கூர்ந்து பார்க்கிறாள். வெண்புரவிகளின் கயிற்றைப் பற்றிக் கொண்டு சுமந்திரர் நிற்கிறார். ஏதோ கனவில் நிகழ்வது போல் இருக்கிறது. அவள் ஏறுவதற்கான படிகள் தாழ்ந்து பாதம் தாங்குகின்றன. "மன்னர் வரவில்லையா?" இளையவர் அதற்கு விடையிறுக்காமல் எங்கோ பார்க்கிறார். "நான் மட்டுமா போகிறேன்?" "தாங்கள் ஆசையைத் தெரிவித்தீர்களே?" "ஆனால் தனிமையில் இல்லையே?" "மன்னரின் ஆணை; நான் செயலாற்றுகிறேன்." "இருக்கட்டும் நான் ராணிமாதாக்களை வணங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டாமா? அதற்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே?" அவள் குரலுக்கு எதிரொலி இல்லை. சுமந்திரர் தேரைக் கிளப்பி விடுகிறார். அவள் முகம் தெரியாதபடி இளையவர் காவல் போல் அமர்ந்திருக்கிறார். மிகப் பெரிய பெட்டியை அவந்திகாவும், விமலையும் சுமந்து கொண்டு விரைந்து வருவது தெரிகிறது. ஆனால் அவளுக்கு ஒலி எழுப்ப முடியவில்லை. நகர வீதிகளைக் கடந்து குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. அவளுக்கு உடலும் உள்ளமும் குலுங்குகின்றன. நெஞ்சம் வாய்க்கு வந்துவிடும் போல் குலுக்கம். ஒரு மிகப்பெரிய இருள் பந்தாக வந்து எந்தக் குலுக்கலுக்கும் அசையாமல் அவளை விழுங்கி விட்டதாகத் தோன்றுகிறது. குதிரைகள் குளம்படி ஓசை மட்டுமே ஒலிக்கிறது. குலுக்கல்... உடல், உள்ளம்... தனக்குள் இருக்கும் உயிர்... அதற்கும் அதிர்ச்சி ஏற்படுமோ? தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக் கொள்கிறாள்... உயிர்த் துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ?... இல்லை... இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றிருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்?... ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ? ஊர்மியும் வருகிறாளோ? சதானந்தர் வந்திருந்தாரே? ஊர்மியை அழைத்துச் செல்லப் போகிறாரா? ஸீமந்த முகூர்த்தம் என்றார்கள்?... ஊர்மிளையின் நினைவு வந்ததும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். இந்தப் போக்கிரிதான் இதற்கெல்லாம் காரணமா?... ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்தத் தேரோட்டி வந்தாற் போல் எதற்கு வருகிறார்? பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்?... சுமந்திரர்... முப்பாட்டன் காலத்து மந்திரி. பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை... செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்து விட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது... பெரிய மன்னருக்கு, சக்கரவர்த்திக்கு - இப்போதைய மன்னருக்கு - இவர் மகனுக்கு இருப்பாரோ? மெய்க்காப்பாளர், அமைச்சர், ஆலோசகர், தேர்ப்பாகன்... அப்போது ஊரே இவர்கள் பின் அழுது கொண்டு வந்தது. ஆற்றின் கரையில் மக்கள் உறங்கச் சென்ற நேரம் பார்த்து இரவுக்கிரவே இவர்களை ஆறு கடக்க ஏற்பாடு செய்தார். அப்போது அதெல்லாம் விளையாட்டுப் போல் உற்சாகமாக இருந்தது. ஆற்றங்கரை தெரிகிறது. ஊர்மியோ, மன்னரோ, எங்கு இருப்பார்கள்? ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கில்லை. ஆற்றின் கரையில் உள்ள வயல்களைக் கடந்து தேர் செல்கையில் ஆங்காங்கு முற்றிய தானியக் கதிர்களைக் கொத்த வரும் பறவைகளின் மீது கவண் கற்கள் எறியும் உழவர் குடிப்பிள்ளைகளை அவள் பார்க்கிறாள். இவர்கள் தேரைப் பார்த்துவிட்டு ஆங்காங்கு தென்படும் சிறுவர்கள், பெண் மக்கள் வியப்புடன் கண்களை அகல விரிக்கிறார்கள். "ஏய்... மகாராணி! மகாராணி! ராஜா...!" நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் சரேலென்று மார்பு மறைய, தலை குனிகிறார்கள். "மகாராணிக்கு மங்களம்..." அரவங்கள் மடிந்து போகின்றன. வானமே சல்லென்று கவிழ்ந்து விட்டாற் போல், தோன்றுகிறது. ரொட்டி விள்ளலும் பாற் கஞ்சியும் நெஞ்சிலேயே குழம்புகின்றன. இத்தனை நேரமாகியும் இத்தனை குலுங்கலிலும் அது சீரணமாக ஏன் குடலுக்கு இறங்கவில்லை? அவள் புளிப்புக் காய்க்கு ஆசைப்பட்ட போது மரங்கள் பூக்கவில்லை. இப்போது பிஞ்சும் காயுமாக மரங்கள். பொன்னிறக் கனிகளைக் குரங்குகள் கடித்துப் போடுகின்றன... அணில்கள் கண்களில் படவில்லை... இளையவரும் சுமந்திரரும் கூடப் பேசவில்லை. "பிள்ளைகளா, பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா?" "இருக்குங்க மகாராசா! நேராகப் போனால் சாமி ஆசிரமங்கள் இருக்கும்..." வேடர் குடிமகன் ஒருவன் விரைந்து வருகிறான். "சாமி, வாங்க... நம்ம பக்கம் நல்ல இடம் இருக்கு. ரா தங்கி, இளைப்பாறிப் போகலாம்..." குதிரைகள் மெதுவாகச் செல்கின்றன. முட்டு முட்டாக வேடர் குடில்கள். மரங்களில் தோல்கள் தொங்குகின்றன. நிணம் பொசுங்கும் வாடை... பறவை இறகுகளின் குவியல்கள்... கண்டியைப் போல் ஒரு குழந்தை அம்மணமாக வருகிறது. தேரைக் கண்டதும் நாய்கள் குரைக்கின்றன. தீப்பந்தங்களுடன் பலர் வருகின்றனர். தேர் நிற்கிறது. பூமகளை ஒரு வேடுவ மகள் கை கொடுத்து, அணைத்து இறங்கச் செய்கிறாள். "மகாராணி! வாங்க! அடிமை ரீமு நான்..." தீக்கொழுந்தின் வெளிச்சத்தில், அவள் முன் முடி நரைத்து, முன்பற்கள் விழுந்து கோலம் இணக்கமாகத் தெரிகிறது. "என்ன சந்தோசமான ராத்திரி... மகாராணி..." மெள்ள அணைத்து அவளை நடத்திச் செல்கிறார்கள். பந்தங்கள் வழி காட்டுகின்றன. ஆடுகள் கத்தும் வரவேற்பொலி குலவையிடும் வரவேற்பு. தோலாடை விரிப்பில் அமர்த்து முன், குடுவையில் நீர் கொண்டு வருகிறார்கள் பெண்கள். இருளில், சுளுந்து வெளிச்சங்களில் இணக்கமான அன்பு முகங்கள்... கால்களைக் கழுவி விடுகிறார்கள். முகம் துடைக்கச் செய்கிறார்கள். புத்துணர்வு கூடுகிறது. இதுதான் என் பிறந்த வீடோ? பிரசவத்துக்கு இந்தத் தாய்வீட்டுக்கு மன்னர் அனுப்பி இருக்கிறாரோ? முகத்தைக் கழுவிக் கொண்ட பின் வாயில் நீரூற்றிக் கொப்பளித்ததை ஏந்த ஒரு மண் தாலம் வருகிறது. ஓங்கரித்து வரும் புரட்டல் அடங்கி, சமனமாகிறது. அங்கிருந்து இதமாகப் புல் பரப்பிய இன்னொரு குடிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கனிகளைச் சுமந்து ஒரு வேடுவப் பெண் வருகிறாள். பிரப்பந்தட்டில், அரிந்த மாங்கனிகள், இருக்கின்றன. அவள் குனிந்து வைக்கையில், வேடுவருக்கே உரிய ஒரு வாடை வீசுகிறது. மன்னர் முன்பு தங்களுக்கு ஒரு வேடுவக் கிழவி, கடித்துக் கடித்து ருசி பார்த்த கனிகளைத் தந்து உபசரித்ததை விவரித்த வரலாறு நினைவில் முட்டுகிறது. இவரும் கிழவிதான். முன்பற்கள் இல்லை. தாடையோரம் ஒரு பல் தொத்திக் கொண்டு இருக்கிறது. முடி உதிர்ந்து முன் மண்டை தெரிகிறது. இழிந்த செவிகள். மார்பகம் பையாகத் தொங்குகிறது. அரையில் அதிகப்படியாக ஒரு நார் ஆடை மானம் மறைக்கிறது. அவள் இவள் பட்டுப் போன்ற கூந்தலைத் தேய்ந்த கரத்தால் மென்மையாகத் தடவி, "தேவி, உங்களுக்கு வணக்கம்" என்று கரைகிறாள். இது வணக்கமா? வாழ்த்தா? பூமகளின் நெஞ்சம் உருகுகிறது. "மகாராணி, பயணத்தில் களைத்திருக்கிறீர்கள். இந்தக் கனிகளை உண்டு இங்கே படுத்து இளைப்பாறுங்கள். எங்கள் குலதெய்வம் வந்தாற் போல் வந்திருக்கிறீர்கள்..." என்று பொருள் பட கொச்சை மொழியில் தழுதழுக்கிறாள் அந்த அம்மை. கனவுகளே இல்லாத உறக்கம். எங்கோ ஆனந்தம் தாலாட்டும் அமைதி. அன்னை மடி என்பது இதுதானோ? என் அன்னை... என் தாய் என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில், எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்தீரோ? தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினீரோ, அதற்காக என்னைத் துறந்தீரோ?... தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே? மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலி போடும், தனிமைப்படுத்தும் முட்கள்... அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான்... என்னை அந்தச் சிறையில் இருந்து மீட்டு வர, தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ?... டகடகடகங்கென்று ஓசை அதிர்கிறது. ஓ... யாரோ அரசகுமாரர் வேட்டைக்கு வந்துள்ளார். நான்கு முழ நீளமுள்ள வேங்கைப் புலி, பெண் புலியை அம்பெய்து வீழ்த்தி விட்டார். அதற்கான வெற்றிக் கொட்டு... யாருக்கு... யாருக்கு வெற்றி! அந்தப் புலி இரையெடுத்துக் குடும்பம் புலர்த்தும்! அது தப்பா?... ஏய்... போதும்... போதுமப்பா! போதும். யாரோ சிரிக்கிறார்கள். பட்டென்று விழிப்பு வருகிறது. அவள் கண்களை மலர மலரக் கொட்டிக் கொண்டும், அங்கையினால் அழுத்திக் கொண்டும் தெளிவு துலங்கப் பார்க்கிறாள். கிழக்கு வெளுத்து உதயவானின் செம்மையும் கரைந்து வருகிறது. "இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்?" "மன்னித்துக் கொள்ளுங்கள், மகாராணி? ராஜா, காலையில் வந்து, கங்கை கடந்து செல்ல வேண்டும் என்று அழைத்தார். தாங்கள் அயர்ந்து உறங்கினீர்கள்..." திரை விலகி, நினைவுகள் குவிகின்றன. அவள் கண்கள் அங்குக் கூடியிருந்த முகங்களில் யாரையோ தேடுகிறது. அந்த அம்மை, அவள் அன்னை போல் இதம் செய்த அம்மை எங்கே? "அவர் எங்கே? எனக்குக் கனிகள் அரிந்து கொடுத்து, இதமாகக் கால்களைப் பிடித்து விட்ட அன்னை, எங்கே?" "இவள் தான்... ரீமு..." "தாயே, நான் தான் கொடுத்தேன்..." முடியுல் பறவை இறகுகளைச் செருகிக் கொண்டு மோவாயில் முக்கட்டி போல் பச்சைக் குத்துடன் ஓர் இளம் பெண் முத்து நகை சிந்துகிறாள். "என் அம்மா... நான் தங்களுக்குக் குடுவையில் குடிக்கப் பானம் கொண்டு வந்தேன்..." அவர்கள் எல்லோரையும் அணைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. "நீங்கள் அன்னை, தமக்கை, தங்கை, எல்லா எல்லா உறவுகளும் எனக்கு இங்கே இருக்கின்றன. நான் இப்போது எதற்கு, எங்குச் செல்ல வேண்டும்!" ஆனால் கேட்க நா எழும்பவில்லை. "மன்னர் ஆணையை, இளையவர் நிறைவேற்றுகிறார். யாரேனும் சடாமுடி முனி வர்க்கங்களைப் பணிந்து ஆசி பெற்று வர வேண்டும்!" அவள் அவர்களிடம் பிரியா விடை பெறுகிறாள். கங்கை... குறுகலாகத் தெரிகிறது. படகோட்டி ஒருவன் சிறு படகைத் தயாராக வைத்திருக்கிறான். அக்கரை கரும்பச்சைக் கானகம் என்று அடர்த்தியாக விள்ளுகிறது. சுமந்திரர் படகில் ஏறவில்லை. இளையவர் மட்டுமே இருக்கிறார். காலை நேரத்து வெளிச்சம் சிற்றலைகளில் பிரதிபலிப்பது வாழ்க்கையின் கருமைகள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையாக உள்ளத்தில் படிகிறது. ஆழங்காணாத கிணற்றில் தன் கையைக் கொண்டு தரைக்காகத் துழாவுவது போல் எதிர்க்கரையை வெறித்துப் பார்க்கிறாள். மிகப்பெரிய ஆலமரம் ஒன்று பெரிய பெரிய விழுதுகளுடன் அங்கே பரந்திருக்கிறது. "ஆகா! ஏதோ மன்னர் அரண்மனை போல் இல்லை?" பூமகள், முதன் முதலாக எழுப்பும் குரல் அது. இளையவர் நிற்கிறார். "ஆம், தேவி! இனி இதுவே தங்கள் அரண்மனை!" பச்சை மரத்தில் ஒரு கத்தி செருகினாற் போன்று அந்த விடை பதிகிறது. அவள் சட்டென்று அந்த முகத்தில், அந்தக் குரலில் செருகப்பட்ட இரகசியத்தைப் பற்றிக் கொள்கிறாள். இதுகாறும் இழைந்த இழை, அறுந்து தொங்குகிறது. "இது மன்னர் ஆணை. தேவி என்னை வேறெதுவும் தாங்கள் கேட்காமல் மன்னித்தருளுங்கள்!" அவள் முகம் இருண்டு போகிறது. திரும்பிச் செல்கிறான். வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|
காயமே இது மெய்யடா ஆசிரியர்: போப்புவகைப்பாடு : மருத்துவம் விலை: ரூ. 160.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
நிமித்தம் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 450.00 தள்ளுபடி விலை: ரூ. 405.00 அஞ்சல்: ரூ. 50.00 |
|