9 அவளுடைய உடலில் புதிய சக்தி வந்து விட்டாற் போலிருக்கிறது. பட்டாடைகள், அணிபணிகள் வைத்திருக்கும் மரப்பெட்டிகளைத் திறக்கிறாள். வண்ண வண்ணங்களாகக் கண்களுக்கு விருந்தாய்க் கலைப்படைப்புகள்... பெருந்தேவி அன்னைக்கு, இந்தப் பட்டாடை; இந்தக் கம்பளிப் போர்வை. நந்த முனிவருக்கு ஒரு கம்பளி ஆடை. வேடுவப் பெண்களுக்குச் சில ஆடைகள். கஞ்சுகங்கள். இங்கே இந்தப் பெண்களைப் போலில்லாமல்... அவர்கள் சுதந்தரமானவர்கள்... கானகம் செல்கையில், மன்னரைக் காண மீனும் தேனுமாக உபசரித்த படகுக்காரன், அவன் மனைவியின் குஞ்சு குழந்தைகள் கண்முன் பவனி வருகிறார்கள்... சிறை மீண்டு வருகையில் வேடுவப் பெண்கள் - தோலாடையும் மணிமாலையும் அணிந்து வந்த காட்சி தெரிகிறது. ஒரு குழந்தை வெண்முத்துப் பற்களைக் காட்டச் சிரித்த வசீகரத்தில் அவள் அருகே சென்று தொட்டணைத்தாள். அந்த மக்கள் கூட்டத்துக்கே உரித்தான வாடை - மறந்து போயிற்று. மூக்கில் ஒரு வளையத்துடன் அந்தப் பெண் குழந்தையின் முகம் தெரிகிறது. மகாராணி தொட்டதை எண்ணி, அவர்கள் மேலும் மேலும் பரவசப் பட்டதை நினைத்தவாறே, ஆடைகளை, அணிகலன்களைப் பொறுக்கி எடுத்துச் செல்லவிருக்கும் பெட்டியில் வைக்கிறாள்... "அவந்திகா, நான் விரைந்து நீராட வேண்டும். மன்னர் அருகில் இப்படி உறக்க சோம்பேறியாக இருந்தால் பரிகசிப்பார்..." அவந்திகா வாசனைப் பொடிகள், தைலம், சீப்பு, ஆகியவற்றுடன் நீராடும் முற்றத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள். பூமகளுக்குப் பரபரப்பில் என்ன பேசுகிறாள் என்பதே உணர்வில் படியவில்லை. சொற்கள் தன்னிச்சையாக நாவில் எழும்பி உயிர்க்கின்றன. சுடுநீரில் போதுமான வெம்மை ஏறவில்லை. "போதும் அவந்திகா! கூந்தலை நனைக்க வேண்டாம்!" எல்லாம் விரைவில் முடிகிறது.
செண்பக மலர்களைக் கொண்டு வந்து கொட்டுகிறாள். "செண்பகச் சரங்கள் சுற்றும் கூந்தல் சிங்காரமா? அவந்திகா, இதற்கு வெகுநேரம் ஆகுமே? அவந்திகா வேண்டாம்... ஒவ்வொரு காலிலும் மலர்களைச் செருகி பின்னல்களை நாகபட வடிவில் எடுத்துக் கட்டுவதற்குள் பொழுது போய்விடும்..." "தேவி, மன்னர் பார்த்து மகிழ வேண்டாமா? இந்த அலங்காரங்களை, நான் எப்போது யாருக்குச் செய்து காட்ட முடியும்?..." "போதும். நாங்கள் இப்போது, புனிதப் பயணம் போல் முனி ஆசிரமங்களுக்குப் போகிறோம். கொலு மண்டபத்துக்குப் போகவில்லை. இப்போது தவசிகளின் மனவடக்கம் பாலிக்க வேண்டும்! இப்படியெல்லாம் அலங்கரித்துக் கொண்டு போனால், மன்னர் என்னைத் தீண்டக் கூட மாட்டார்..." "தேவி!" என்று அவந்திகா உரக்கக் கூவுகையில் பூமகள் நாவைக் கடித்துக் கொள்கிறாள். ... உடல் குலுங்குவது போல் ஓர் அதிர்ச்சி. அவளையும் மீறி விழுந்து விட்ட சொல்லா அது?... "அவந்திகா? என்ன சொன்னேன்? எதற்காக அப்படி அலறினீர்?" "அலறினேனா? இல்லை. நீங்கள் அசைந்தீர்கள். சீப்பின் கூரிய பல் முனைப்பட்டு வருந்தப் போகிறதே என்ற அச்சத்தால் உரத்துக் கூவிவிட்டேன்." "மன்னர் தீண்டமாட்டார் என்ற சொல் எப்படி வந்தது?..." என்று பேதையாகப் புலம்புகிறாள். "அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது மன்னருடன் ஆசைப்பட்டதற்கு ஏற்பப் போகப் போகிறீர்கள். அந்த வருத்தமெல்லாம் ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து விடும்; எழுந்திருங்கள், குலதெய்வத்தைத் தொழுது உணவு கொள்ளச் சித்தமாகுங்கள். தேர் வந்துவிடும். மன்னர் உணவு கொண்டு தான் வருவாராக இருக்கும்... ராதை உணவு கொண்டு வருவாள். நான் சென்று தாங்கள் கொண்டு செல்லும் பொருட்கள், ஆடைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு வருகிறேன்!" பூமை, குலதெய்வமாகிய தேவன் இருக்கும் மாடத்தின் முன், தாமரை மலர்களை வைத்துக் கண்மூடி அருள் வேண்டுகிறாள். வணங்குகிறாள். தூபம் புகைகிறது; தீபம் சுடர் பொலிகிறது. "தேவனே, இந்தக் குலக்கொடிக்குத் தங்கள் ஆசியை அருளுங்கள். வம்சம் தழைக்க, ஒரு செல்வனை அருளுவீர்!" பட்டாடை சரசரக்க, ஊஞ்சலில் போடப்பட்ட இருக்கையில் வந்து அமருகிறாள். முன்றிலில் இரண்டு அணில்கள் கீச்சுக் கீச்சென்று கூவிக்கொண்டே ஒன்றை ஒன்று துரத்துகிறது. கிளிக்கூண்டுகளில் கிளிகள் இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் திறந்து விடுவாள். அவை விருப்பம் போல் வந்தமர்ந்து பணிப்பெண்கள் வைக்கும் பால்-பழம் அருந்தும். இவளுடைய தத்தம்மா இல்லை... அது இருக்கும். பூனை கவ்வியது அவள் தத்தம்மா இல்லை... அப்போது அங்கே கண்டி வந்து எட்டிப் பார்க்கிறது. இடையில் வண்ணம் தெரியாத ஒரு சிறு துண்டு ஆடை அழுக்கும் சளியும் துடைக்கப் பெறாத முகம். பிரிந்த தலை. "குழந்தை இங்கு வா!" இவள் அழைத்த குரல் கேட்டதுதான் தாமதம், அவள் விரைந்து உள்ளே சமையற்கட்டுக்குள் மறைகிறாள். ராதை தட்டில், உணவுக் கலங்களை ஏந்தி வருகிறாள். நெய் மணக்கும் அப்பம் போல் சேர்த்த பொரிக்கஞ்சி, இனிய கனிகள்... இலை விரித்து, அதில் அப்பங்களை, ஆவி மணக்கும் இனிய பண்டங்களை எடுத்து வைக்கிறாள். "ராதை, உன் மகள் கண்டியைக் கூப்பிடு? எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது. நான் கூப்பிட்டால் பயமா?" "தேவி, நீங்கள் மன்னருடன் புறப்படும் நேரம். அவள் எதற்கு? அந்தச் சோம்பேறியை மீனைத் தேய்த்துக் கழுவச் சொன்னேன். ஒரு வேலை செய்வதில்லை. இங்கே வேடிக்கை பார்க்க முற்றத்துக்கு வருகிறாள். தேவி, இது கிழங்குமாவில் செய்த அப்பம். ருசி பாருங்கள்!" பூமகள் அப்பத்தை விண்டு சிறிது சுவைக்கிறாள். "மிக ருசியாக இருக்கிறது. நீ குழந்தையை இங்கே கூப்பிடு!" அவள் சொல்வதற்கு முன் கண்டி, அவசரமாக முகத்தை நீரில் துடைத்துக் கொண்ட கையுடன் சிரித்த வண்ணமாக வருகிறாள். "அடி தரித்திரம்! போடி! இங்கே ஏன் வந்தாய்? மனசுக்குள் பெரிய அரசுகுமாரி என்ற நினைப்பு?" என்று ராதை குழந்தையை அடித்து விரட்ட, அவள் அழும் குரல் செவிகளில் துன்ப ஒலியாக விழுகிறது. "ராதை?" என்று கடுமையாக பூமை எச்சரிக்கிறாள். "எதற்கு உன் கோபத்தைக் குழந்தையின் மீது காட்டுகிறாய்? இந்த, உன் அப்பமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்! என் முன் உனக்கு இத்துணை கடுமை காட்ட, உன் மனசில் ஏன் அவ்வளவு வெறுப்பு?" "தேவி!" என்று நிலந்தோய ராதை பணிந்து எழுகிறாள். அவள் மேலே போட்டிருக்கும் துண்டு ஆடை நிலத்தில் வீழ்கிறது. "மன்னிக்க வேண்டும். தாங்கள் அவளிடம் காட்டும் அன்பும் சலுகையும் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டி விடும்! ஏழை அடிமைகளுக்குப் பெருந்தன்மை கிடையாது!" அவளுடைய சொற்கள் சுருக்சுருக்கென்று ஊசிகள் போல் தைக்கின்றன. "ஏழையாவது, அடிமையாவது? என் செவிகள் கேட்க, இந்த அரண்மனையில் இப்படிப் பேசாதே ராதை! அப்படிப் பார்க்கப் போனால் நானும் குலம் கோத்திரம் அறியாத அநாதையே!" "சிவ சிவ... நான் மகாராணியைக் குற்றம் சொல்வேனா? அவரவர் அவரவர் இடத்தில் பொருந்தி இருப்பதே உகந்தது. ஊர்க்குருவி, ஊர்க்குருவிதான். கருடப்பறவை கருடப்பறவைதான். உயர்ந்த குலத்தில் உதித்த, சாம்ராச்சிய அதிபதியின் பட்டத்துராணி தாங்கள். தங்களுக்குப் பூரண சந்திரன் போல் ஒரு மகன் பிறக்க வேண்டும். இந்த அழுக்குப் பண்டத்தை மடியில் வைத்துக் கொஞ்சுவது பொருந்துமா? இந்த ஏழைகளின் நெஞ்சில், பட்டாடைகள், முத்துக்கள், பாலன்னங்கள், பஞ்சணைகள் என்றெல்லாம் ஆசைகளை வளரவிடலாமா? கல்திரிகையில் கலம் தானியம் கட்டி இழுத்து மாவாக்க வேண்டும்... மணி மணியாக தானியம் குற்றி உமி போகப் புடைத்து வைக்க வேண்டும்... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?..." அவளுடைய நெஞ்சை இனந்தெரியாத சுமை அழுத்துகிறது. அந்தப் பருவத்தில், அரண்மனைத் தோட்டத்தில் தான் ஆடிப்பாடி மகிழ்ந்ததை நினைவூட்டிக் கொள்கிறாள். உணவு இறங்கவில்லை. "உனக்கு எத்தனை குழந்தைகள்?" "இரண்டு பிள்ளைகள்..." "அவர்கள் குருகுல வாசம் செய்கிறார்களா?" "எங்களுக்கேதம்மா குருகுல வாசம்? அப்பனுடன் உழுவதற்குப் போகிறான். இளையவன் ஆறு வயசு. கொட்டில் சுத்தம் செய்யும். ஆடு மேய்க்கும். இவள் அவனுக்கும் இளையவள். வீட்டில் தனியாக இருந்தால் ஓடிப் போய்விடும்." "ஏன் ராதை, உங்கள் பிள்ளைகள் குருகுல வாசம் செய்யக்கூடாதா?" அவள் சிரிக்கிறாள். வெறுமை பளிச்சிடுகிறது. "மன்னர் ஆட்சியில் வாழ்கிறோம். நேரத்துக்குச் சோறு, ஏதோ பணி கிடைக்கிறது. மந்திரக் கல்வியும் தந்திரப் போரும் உயர்ந்த குலத்தோருக்கே உண்டு..." பூமை கைகழுவவும் மறந்து சிந்தையில் ஆழ்கிறாள். எத்துணை உண்மை? மந்திரக் கல்வி... தந்திரப் போர்... இதெல்லாம் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற? மன்னர்கள் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற வில்லும் அம்பும் சுமந்து திரிய வேண்டும்? இவள் பிள்ளைக்கும் வில் வித்தை பயிற்றுவிப்பார்கள். நீ உன் அரசைக் காப்பாற்றப் பகைவர்களை அழிக்க வேண்டும். யார் பகைவர்கள்? பகைவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள். முனிவர்களுக்கு அரக்கர்கள் எப்படிப் பகைவர்களானார்கள்? சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் வந்து நிற்கிறாள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை. திடீரென்று ஓர் அச்சம் புகுந்து கொள்கிறது. இப்போது மன்னரும் இவளும் மட்டும் கானகத்துக்குச் செல்லும் போது, முனிவர்களின் ஆசிரமங்களில் தங்கும் போது, ஆபத்து நேரிடாது என்பது என்ன நிச்சயம்? பகைமை கொடியது... ஒரு கால் யாரேனும் மன்னரைத் தூக்கிச் சென்றால் அவள் என்ன செய்வாள்? இவளுக்கு இளைய ராஜாமாதா போல் தேரோட்டத் தெரியாது. அம்பெய்யத் தெரியாது. ஈ எறும்பைக் கூடக் கொல்ல மாட்டாள்... ஆனால் அந்த அன்னை அவ்வளவு தேர்ந்தவளாக இருந்ததாலேயே மாமன்னரைக் காப்பாற்றினாள். அதுவே பல குழப்பங்களுக்கு அடித்தலமாயிற்று. இரண்டு வரங்கள்... புத்திர சோக சாபம்... கையில் வில்லும் அம்பும் இருந்தாலே கொலை வெறி வந்து விடுமோ? இல்லாது போனால், அந்த மாமன்னர் கண்ணால் பார்க்காத ஒரு விலங்கை, அது தண்ணீர் குடிப்பதாக அநுமானித்து, ஓசை வந்த இடம் நோக்கிக் கொலைகார அம்பை எய்வாரா? அந்த யானையைக் கொல்லலாகாது என்று ஏன் நினைக்கவில்லை? தெய்வம் தந்த கானகம்; தெய்வம் தந்த நீர்நிலை; தெய்வம் தந்த உயிர். இன்னாருக்கு இன்ன உணவு இயற்கை நியதி. இதெல்லாம் மெத்தக் கல்வி பயின்றிருந்த மாமன்னருக்கு ஏன் தெரியவில்லை? குருட்டுப் பெற்றோரின் ஒரே மகனை அந்த அம்பு கொலை செய்தது. எந்த ஒரு கொலைக்கும் பின் விளைவு இல்லாமல் இருக்காது!... இப்போது... ஏன் மனம் குழம்புகிறது? "அம்மா? ஏனிப்படி வாட்டமாக அமர்ந்திருக்கிறீர்கள்? அரச மாதாக்களை வணங்கி ஆசி பெற வேண்டாமா?.. அவந்திகா இன்னமும் பெட்டிகளைச் சித்தமாக்குகிறார். பிறகு என்னைக் கோபிப்பார். மன்னர் வந்துவிட்டார் என்றால்..." இவள் சொல்லி முடிக்கு முன், நிழல் தெரிகிறது. பட்டாடை அசையும் மெல்லொலி... இளையவர்... தம்பிதான். கோபமா, அல்லது துக்கமா? முகம் ஏன் கடுமை பாய்ந்த அமைதியில் ஆழ்ந்து போயிருக்கிறது? சினம், துயரம், இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த முகத்தில் காண முடியாது. "தேவி, இரதம் முற்றத்தில் வந்து நிற்கிறது. வந்து ஏறுங்கள்!" அவள் உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் வண்ணமிழக்கின்றன. "இதோ..." அவள் எழுந்து அவனைப் பின் தொடருகிறாள். வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|
Why I Killed the Mahatma: Understanding Godse’s Defence ஆசிரியர்: Dr Koenraad Elstவகைப்பாடு : Politics விலை: ரூ. 495.00 தள்ளுபடி விலை: ரூ. 450.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
ஆரோக்கியத் திற்கான அக்குபிரஷர் ஆசிரியர்: டாக்டர் இராம. அரங்கநாதன்வகைப்பாடு : மருத்துவம் விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|