![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முடிவுரை இது வரை துளசிமாடம் கதையை ஆர்வத்தோடு படித்து வந்த வாசகர்களுக்கு இப்போது இங்கே இப்படி ஒரு சிறிய முடிவுரை எழுத வேண்டியதாகிறது. கிழக்கத்திய கலாசாரம் மேற்கத்திய மக்களாலும், மேற்கத்திய கலாசாரம் கிழக்கத்திய மக்களாலும், மாறி மாறி அழுத்தமாகக் கொண்டாடப்படுவதைச் சில சமயங்களில் சிலரிடம் காண்கிறோம். உலகம் சிறியதாகி வருகிறது. மனிதர்களிடையே முரண்டுகளும், வெறுப்புக்களும் தணிந்து வருகின்றன. 'ஆஸ்திகரான' சீமாவையரை விட நாஸ்திகரான இறைமுடிமணி பண்பட்டவராயிருக்கிறார். சங்கரமங்கலத்து இந்துப் பெண்களைவிட அதிக இந்தியத் தன்மையை விரும்பி நேசிக்கிறாள் பிரெஞ்சுப் பெண்ணான கமலி. வைரம் பாய்ந்த காமாட்சியம்மாளின் மனத்தையே கடைசியில் இளகச் செய்து அறவே மாற்றிவிட அவளால் முடிகிறது. நேர் எதிர் இலட்சியங்களுள்ள சர்மாவும், இறைமுடிமணியும் நெருங்கிய நண்பர்களாகப் பழக முடிகிறது. நம்மைச் சுற்றி உலகெங்கும் 'Transfer of values' (மதிப்பீடுகளின் மாறுதல்) மதங்களையும், சமய நம்பிக்கைகளையும் பூர்வீகமான கலாசாரப் பழக்க வழக்கங்களையும் மெல்ல அசைத்துக் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஓரிடத்திலிருந்து பெருகும் நீர்ப் பெருக்கு மற்றோரிடத்தில் சென்று தவிர்க்க முடியாதபடி நனைந்து பாய்ந்து பரவுவது போல் கலாசாரப் பரிமாற்றம் (Cultural Exchange) அல்லது கலாசார மடை மாற்றங்கள் (Cultural transformation) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை யாராலும் அழித்து விடமுடியாது. இக்கதையில் கமலியும், ரவியும் அந்தக் கலாசாரப் பரிமாற்றங்களின் சின்னங்களே. ஆயிரம் வேறுபாடு இருந்தாலும் பாசமும் அரவணைத்து ஏற்றுக் கொள்வதுமே முடிவாக இந்தியத் தாய்மார்களின் நிறைவான பண்பு என்பதைத் தன் வாழ்விலும், மரணத்திலும் ஒருசேர நிரூபிக்கிறாள் காமாட்சியம்மாள். பண்பாடு என்பது பரவலாகும்போது வெறும் தேசீய அடையாளப் புள்ளி (National identity) நீங்கி 'மானிடம்' என்ற சர்வ தேசிய அடையாளம் (Inter-national Identity) உடனே வருகிறது. இந்தக் கதை 'சங்கரமங்கலம்' என்ற ஒரு சின்னக் கிராமத்தில் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அந்தக் கிராமத்தை விடப் பரந்த உலகத்தைப் பாதிப்பவர்கள், பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள். (நிறைந்தது) துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|