![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 16 காலை கதிரவன் தன் பொற்கதிர்களைக் கடலில் பரப்பி மேலெழுந்து கொண்டிருந்தான். வெள்ளிக்குழம்பென அள்ளி மேனியில் பூசுவது போன்று கடல் நீர் ஜொலித்துக் கொண்டிருந்த அற்புதமான சூழ்நிலை. கயல்விழி, குகையைவிட்டுக் கடலை நோக்கி நடந்தாள். அவளின் கார் குழல் அசையத் துகில் குலையக் கடற்காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. கடல் அலையின் அருகே வந்து நின்றாள். பக்கத்தில் சிறு குன்று போலப் பெரும்பாறைகள். அந்த மறைப்பின் பக்கத்தில் நின்றாள். கதிரவன் கதிர்கள், இப்போது அவள் மேனியைத் தழுவிக் கொண்டிருந்தன. மார்புக் கச்சையில் உள்ளிருந்த அவள் மேலழகுகள், கதிரொளியின் இதத்தில் மதர்த்து நின்றன. அலைகள், அக்கவர்ச்சி கண்டு ஆனந்தம் தாளமாட்டாமல் மிக உயர எழும்பி அவற்றைத் தொட, ஆனால், அந்த உரிமை உங்களுக்குக் கிடையாது என்பது போலச் சிறிது தள்ளி நின்றாள். ஆனால் அலைகள் விடவில்லை. திரும்பவும் அதிவேகத்துடன் பாய, முழுவதும் நனைந்து நின்றாள். அளவெடுத்துச் செய்யப்பட்ட சிலையாய் அவள் நிற்கப் புரவியில் வந்து கொண்டிருந்த சித்திரமாயன், இதைக் கவனித்தான். அணிமகளோ? ஆய்தொடியோ? என்று வியந்த சித்திரமாயன், புரவியைவிட்டு இறங்கினான். இரவு முழுவதும் பயணம் செய்த களைப்பு... அத்துடன் மனச்சோர்வு... இவையிரண்டும் கயல் விழியைப் பார்த்த மாத்திரத்தில் எங்கோ பறந்தன. ஊனையும் உயிரையும் உலுக்கும் அவள் அழகு காண நெருங்கிச் சென்றான். இனிமேல் நிற்பது வீண் என்று அலைகளின் ஊடே பாய்ந்தாள் கயல்விழி. அந்தப் பாய்ந்த வேகம் தாளாது, தன் மீது ஒரு அழகிய மங்கையா என்று நாணமுற்று அந்த அலை, மிக வேகமாகக் கடலுக்குள் சென்று மறைந்தது. சரியான பைத்தியம்? நல்ல சந்தர்ப்பத்தை இழப்பதா என்று மற்றொரு அலை, வேகமாய் உயர எழும்பிப் பூவண்ண அவள் மெல் உடலைத் தன் அலைக்கரங்களால் ஏந்தித் தழுவிக் கரையில் கொண்டுவிட, முகத்து நீரை வழித்து எழுந்தாள். “கயல்விழி!” தன்னை யாரோ கூப்பிடுகிறார்? வதனத்தில் சரிந்த குழலை ஒதுக்கி, நீரைத் துடைத்துப் பார்க்கும் போது புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் சித்திரமாயன். “சக்கரவர்த்தி, எப்போது மதுரையிலிருந்து வந்தீர்கள்?” “இப்போதுதான்.” “அப்பா?” “காஞ்சிக்குப் போயிருக்கிறார்!” இப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. தன்னையே தன் மலர்ந்த அழகுகளையே சித்திரமாயன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை! நாணமுற்றாள். மென்கைகள் வேகமாய் அதை மறைக்க முயன்றன. “அது தேவையில்லை கயல்விழி?” “ஏன் சக்கரவர்த்தி?” “உரிமை பெற்றவனுக்கு அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது கயல்விழி!” “அப்படியென்றால்?” அவன் நெருங்கி வந்து அவளை அணைக்க முயன்றான். “சக்கரவர்த்தி!” “நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் தர வேண்டாமா?” “நாடாளப் பிறந்த நீங்கள் எங்கே? ஒன்றுமில்லாத நான் எங்கே?” “இந்த இடத்தில்தான் நீயும் சாதாரணப் பெண்களோடு சேர்ந்து கொள்ளுகிறாய்... அறிவும், அழகும் ஒருங்கே திரண்ட உன்னை அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! என்றோ உன்னை நான் மனைவியாக மனதில் வரித்துவிட்டேன்! அதற்குச் சந்தர்ப்பம் இன்றுதான் கூடியது.” “சக்கரவர்த்தி!” “இந்த வானமும், இந்த வையமும் ஒன்றாகத் திரண்டு நம் காதலை எதிர்த்தாலும் நான் உன்னைத் துணைவியாக அடையாமல் விடமாட்டேன்! விரைவில் நீ இக்காஞ்சிக்குப் பட்டத்து அரசியாவாய்!” “என்ன சொல்கிறீர்கள்?” “என்னைக் காஞ்சிக்கு அரசனாக்கப் போகிறார் உன் தந்தை! நான் அரசனானதும் நீதானே பட்டத்து அரசி!” “உண்மையாகவா?” “சத்தியமாக!” உணர்ச்சி வேகத்தினால் பெருமூச்சுவிட்ட அவள், முகிழ்த்து நின்ற தன் மேல்பகுதி அவன் மார்பில் பொருந்தச் சாய்ந்தாள். நிமிர்ந்து தன் நயன விழிகளால் அவன் முகத்தை நோக்கினாள். அதன் சக்தியைத் தாளமாட்டாது அவன் மயங்கி, மெய்மறந்து அவளை மார்புற அணைத்தான். இதுவரை எங்களுக்கே சொந்தமாக இருந்த இவளை நீ பறித்துக் கொண்டாயா? என்பது போல அலைகள் ஒருங்கே திரண்டு அவர்கள் மீது மோதி அந்த இணைப்பைப் பிரிக்க முயன்றன. “சக்கரவர்த்தி!” “என்ன கயல்விழி?” அப்போது- வேகமாய் வந்த பெரிய அலை ஒன்று, உயரக் கிளம்பி இருவரையும் ஜலத்தினால் மூடி, அவர்களின் இணைப்புக்கு வாழ்த்துத் தெரிவிப்பது போல ஆனந்த நர்த்தனம் செய்தது! “முழுவதும் நனைந்துவிட்டோம் கயல்விழி!” “ஆமாம், என் உள்ளங்கூட உங்கள் அன்பென்ற நீரால் கழுவப்பட்டுவிட்டது!” “மகிழ்ச்சி!” இருவரும் கடலை நோக்கிப் பாய்ந்தனர். இதைத் தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த சோமன் கண்கள், ஆத்திரத்தை உமிழ்ந்தன. மீசை துடிக்க, விழிகள் சிவந்தன. கைகளை முடிந்த மட்டும் பிசைந்து கொண்டான். ‘கயல்விழி, எத்தனை நாளாக இந்தத் திருட்டுக் காதல்! இதற்காகத்தான் என்னை வெறுத்து வந்தாயா? வலுவான புளியங்கொம்பாகப் பிடித்துவிட்டதாக நினைப்பா? வஞ்சகி! என் முன்னே அவனுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாளே! இனி நான் என்ன செய்யட்டும்!’ என்று கொப்பளிக்கும் கோபத்துடன் குகையை நோக்கி வேகமாக ஓடினான். ‘யாரோ ஓடி வருகிறார்களே! அது யார்?’ என்று விஜயவர்மன் நிமிர்ந்து பார்க்க, “உனக்கு விடுதலை! என் வாழ்வைப் பாழாக்கிய கயல்விழிக்கு இதுதான் சரியான தண்டனை” என்று விரைந்து விஜயவர்மன் கைகளிலும், கால்களிலும் இருந்த சங்கிலி இணைப்பை நீக்கினான். விஜயவர்மனுக்குத் திகைப்பாய் இருந்தது. “போய்விடு, போ! அந்த வஞ்சகி குகைக்குத் திரும்புவதற்குள் நீ போய்விடு! நான் அவளை பழிவாங்கிவிட்டேன்! ஏ... கயல்விழி! என்னை என்னவென்று நினைத்தாய்?” என்று உரக்கக் கூறிச் சிரிக்கலானான் சோமன். சில கண்ணிமை நேரம் விஜயவர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும், விடுவிக்கப்பட்டதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று அவன் உள்ளுணர்வு சொல்லியது. குகையைவிட்டு வெளியே வந்தான். கையில் வாளும் இருந்தது. தொலைவில் கயல்விழியும், சித்திரமாயனும் இன்ப விளையாட்டில் மூழ்கித் திளைத்தது அவனுக்குத் தென்பட்டது. “ஓ! இதுதான் காரணமா?” என்று புன்னகைத்து, இது எந்த இடம் என்று நிதானித்துப் பார்க்க, மாமல்லையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தான். ‘வடக்குத் திசை நோக்கிச் சென்றால் மாமல்லையையடையலாம்’ என்று எண்ணி, ஏன் பேடியைப் போல் ஓட வேண்டும்? இன்பச் சாகரத்தில் திகைத்து நிற்கும் அந்தக் காதலர்களிடம் சொல்லிவிட்டே செல்வோம்! என்று அவர்களை நோக்கி நடந்தான். என்ன நினைத்தானோ? அவர்கள் கடலில் நீராடி வரும்வரை காத்திருப்போம் என்று தென்னை மரத்தின் கீழ் அமர்ந்தான். “கயல்விழி!” என்றான் சித்திரமாயன். “என்ன சக்கரவர்த்தி?” அவள் விழிகள் அவன் மார்பை ஊடுருவின. அவன் உயிரும் உணர்வும் அந்த ஊடுருவலில் வெளிப்பட்டது போல் மயக்க நிலையுற்ற அவன், என்னது செய்வதென்று புரியாமல் அவளைத் தழுவினான். அவள் எதையோ சொல்ல விரும்பினாள். ஆனால் அந்த மதுரமொழி அவள் வாயிலிருந்து வெளி வரவில்லை. வாள்விழி சிவந்து, வாயிதழ் வெளுத்து, அவன் தழுவலினால் நிலைகுலைந்து போனாள். ஒரு வழியாகச் சுய உணர்வு பெற்றபோது அவன் உற்சாகத்துடன் சொன்னான். “கயல்விழி! இன்னும் கொஞ்ச நாளில் காஞ்சி மன்னர் கொல்லப்படுவார்! அந்த இடத்திற்கு நான் அரசனாவேன்! அப்போது நீதான் பட்டத்தரசி. பாண்டிய வேந்தரும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லிவிட்டார்! உன் தந்தைதான் இதில் பெரும் பொறுப்பு ஏற்று என்னை அரசனாக்கப் போகின்றார். காஞ்சியின் நகரக் கோட்டைக் கொத்தளங்களில் நாம் உலாவி வருவோம்!” என்றான். உணர்ச்சி வேகத்தால் உரத்துப் பேசிக் கொண்டு வந்த சித்திரமாயனிடம், “அதோ பாருங்கள்!” என்றாள். “என்ன?” - அவன் திரும்ப தொலைவில் விஜயவர்மன், தென்னை மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். “தப்பித்துவிட்டானா?” “அப்படித்தான் தெரிகிறது? வாருங்கள் போவோம்” என்று படபடப்புடன் உடலில் ஆடைகளைச் சுற்றிக் கொண்டு வேகமாய் நடந்தாள். சித்திரமாயன் குதிரையின் அருகில் சென்று அங்கிருந்த வாளை உருவிக் கொண்டான். வேகமாக விஜயவர்மனை நோக்கி ஓடினான். “வர வேண்டும்... இனிய காதலர்களே! உங்களிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் இதுவரை நான் காத்திருந்தேன்!” “என்னடா உளறுகிறாய்?” கயல்விழியைப் பின்னுக்குத் தள்ளி, வாளுடன் முன்னே பாய்ந்தான். “இதையும் நான் எதிர்ப்பார்த்தே இங்கே உட்கார்ந்திருந்தேன்!” என்று தன் பின்னால் வைத்திருந்த வாளை எடுத்துக் கொண்டான். இருவர் வாட்களும் மோதின. கயல்விழி சோமனைக் கூப்பிட்டபடி குகையை நோக்கி வேகமாக ஓடினாள். அங்கே - “நானும் பொய்... என் நெஞ்சம் பொய்... இந்த உலகமும் பொய்...” என்று கயல்விழியைப் பார்த்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினான் சோமன். “ஏய்! உனக்கென்ன பைத்தியமா? அவனை ஏன் விடுதலை செய்தாய்?” என்றாள் உரக்க. “இந்தக் கேள்விக்காகவே நான் காத்திருக்கின்றேன் கயல்விழி. விழியில் கவர்ச்சியும் நெஞ்சில் வஞ்சனையும் கொண்ட மாயப் பிசாசே. உன்னைப் பழிவாங்கவே அவனை விடுதலை செய்தேன்! மாமன் நான் இருக்கப் பட்டத்து அரசியாகலாம் என்று பொய்க் கனவு கண்டு, அவனுடன் சரச லீலைகள் செய்தாயே, இது நியாயமா? ஏ வஞ்சகி! என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறதே. எத்தனை ஆசை வைத்திருந்தேன்! எல்லாம் எரி முன்னால் வைத்த பஞ்சு போல் பற்றி அழிந்துவிட்டதே! இனி நீ... இருந்தென்ன! இறந்தென்ன. ஒழிந்து போ! அழி! அழிந்துவிடு! இருவரும் ஒன்றாகவே சாவோம்!” என்று கயல்விழியின் மேல் பாய்ந்து அவள் கழுத்தை அழுத்த ஆரம்பித்தான். மூச்சு இறுகியது... கண்கள் சோர்ந்தன. மார்பு இயக்கம் தடைப்படுவது போலிருந்தது. உடலிலிருந்த வலிமையெல்லாம் ஒன்று திரட்டி அவனைத் தள்ளப் பார்த்தாள். முடியவில்லை... அப்படியே அவள் கீழே சாய, அதே வேகத்தில் அவன் தள்ளி விழுந்தான். கொஞ்சம் பிடி தளர்வது போலிருந்தது. அவனைத் தலை கீழாகப் புரட்டினாள். ஆனால் விழுந்தவன் எழுந்து அவள் மேல் பாய்ந்தான். இருவரும் தரையில் புரளத் திரும்பவும் அவள் கழுத்து அவன் வன் கரங்களில் சிக்கிக் கொண்டது. மூச்சடைக்க, கயல்விழி செய்வதரியாது கைகளைத் துழாவினாள். ஒரு குத்துவாள் ஒன்று அவள் கைக்குத் தட்டுப்பட்டது. எடுத்துக் கொண்டாள். இறுதி நேரம்... சிறிதும் தாமதிக்காமல் அந்தக் குத்துவாள் சோமனின் விலாவில் பாய்ச்சினாள். ‘ஹா!’ என்று சுருண்டு விழுந்த அவனைத் தூக்கித் தள்ளிவிட்டு, ‘அப்பாடா!’ என்று கழுத்தை நீவிவிட்டு மூச்சை இழுத்துச் சரிப்படுத்தினாள். குருதிப் புனலில் துடித்த சோமனின் இறுதி மூச்சடங்கி உடல் அசைவும் நின்றது. வெளியே வந்தாள். தலைகுனிந்தபடி சித்திரமாயன் வந்து கொண்டிருந்தான். வலத்தோளில் இலேசான காயம். “என்ன ஆயிற்று?” “அவன் போய்விட்டான்!” சிலையாய் நின்றாள் கயல்விழி. உள்ளே சோமன் உடல்; இங்கே இவரின் தோல்வி... இதெல்லாம். ஏதோ அபசகுணத்திற்கு அறிகுறி என்பது போல அவளுக்குப்பட்டது. “இனிமேல் நாம் இங்கே இருக்கக் கூடாது சக்கரவர்த்தி!” “ஏன்?” “இதுவும் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது! திரும்பிப் படையுடன் வந்தாலும் வருவார்கள்!” “என்ன செய்யலாம்?” “சில காலம் பாண்டிய நாட்டிற்குப் போய்த் தங்கி இருப்போம்!” சித்திரமாயன் “சரி” என்றான். இருவரும் குகைக்குள் நுழைந்தனர். இதுவரை கயல்விழியும், சித்திரமாயனும் சரசலீலை புரிந்த அந்த இடத்தின் பக்கத்தில் பாறைகள் நிரம்பிக் குன்று போலிருந்த மறைப்பிலிருந்து ஒரு காபாலிகன் வெளிப்பட்டான். கயல்விழியின் கையில் பல்லவமல்லனை வாங்கிக் கொண்டு குதிரையில் பறந்தவன் அவன்தான்! எதையோ முணுமுணுத்த அவன், வேகமாய் நடந்து மறைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரையில் ஏறி மறைந்தான். |